Thursday, September 25, 2008

வர்ஷ், ஹஃப்ஸ் காரீகளின் ஓதல்.

குர்ஆனை மனனம் செய்து அழுத்தமான உச்சரிப்புடன் நீட்டி, நிறுத்தி ஓதுபவரை ''காரீ'' என்று சொல்வார்கள். இன்றைய காரீகளுக்கு முன்னோடியாக இருப்பவர்கள் 'வர்ஷ். ஹஃப்ஸ்' என்ற இரு பிரபல்யமான காரீகளாவர். இன்று உலகிலுள்ள அனைத்துக் காரீகளும் இவ்விருவரின் மாணவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்று ஓதப்படும் கிராஅத்துகளில் சுமார் 30 சதவிகிதம் காரீகள் ''வர்ஷ்'' என்பவரின் கிராஅத் ஸ்டைலை பின்பற்றுகின்றனர். 70 சதவிகிதத்தினர் ''ஹஃப்ஷ்'' என்பரிவரின் கிராஅத் ஸ்டைலைப் பின்பற்றுகின்றனர்.

குர்ஆனைத் திறந்து வைத்துக் கொண்டு, அன்றிலிருந்து இன்றுவரை மாற்றப் படாத ஒரே வசனத்தை பொருள் மாறாமல் பலவாறு (7வகை என்பது குறைவு) ஓதுவதை ஹஃப்லா என்பர்.

பிரபல காரீகள் முஹம்மது ஸித்தீக் அல்மின்ஷாவீ, அப்துல் பாஸித் முஹம்மது அப்துஸ் ஸமத், மஹ்மூதுத் தப்லாவீ ஆகியோரின் ஹஃப்லாக்கள் கேட்டுப் பார்த்தால் ஒரே வசனத்தைத் திரும்பத் திரும்பப் பலமுறை பலவாறு ஓதிக் கொண்டிருப்பார்கள். இதற்கு அர்த்தமே அசல் ஒன்று; ஸ்டைல்கள் பல என்பதுதான்.

காரீகள் வசனங்களின் பின்னணிக்கேற்றவாறு குரலில் உணர்ச்சியைக் கொண்டு வந்துவிடுவார்கள். முக்கியமாக வரலாற்று வசனங்களை ஓதினால் சம்பவங்களை காட்சியாக குரலில் பிரதிபலித்துவிடுவார்கள். நாம் இங்கு விவாதிக்கவிருக்கும் மர்யம் - 019வது அத்தியாயம் முழுக்க உயர் கவி நடையில் அமைந்த அத்தியாயமாகும். ஓர் அற்புதத்தை நிறைவேற்ற மர்யம் என்றப் பெண்ணை இறைவன் தேர்ந்தெடுக்கிறான். இதனால் மர்யம் படும் துன்பம், ஊரிலுள்ளவர்களின் சந்தேகப்பார்வை, இடித்துரைப்பு, அவதூறு போன்ற இன்னல்களுக்கு அப்பெண் ஆளாகிறார். இந்தச் சுழ்நிலையை உணர்ச்சிப்பூர்வமாக காரீகள் ஓதுவார்கள்.

மர்யம் கையில் குழந்தையுடன் ஊருக்குள் நுழைகின்றார் அப்போது: ''யா உக்த ஹாரூன...'' ஹாரூனின் சகோதரியே! உன் தந்தை கெட்டவரில்லை. உன் தாயும் நடத்தை கெட்டவர் இல்லை. (நீ ஏன் இப்படியாகிவிட்டாய்) என்பது போல் சந்தேகக் கணைகளைத் தொடுக்கின்றனர் ஊர்மக்கள். இந்த வசனத்தை காரீகள் ஓதக்கேட்டால் சூழ்நிலை மிளிரும். இவ்வசனத்திலும் ''வர்ஷ், ஹஃப்ஸ்'' இரு காரீகளின் உச்சரிப்பு உள்ளதால் இது போன்ற வித்தியாசமான உச்சரிப்புகள் கொண்ட வசனங்களை மட்டும் ஒலியாக - ஆடியோவாக பதியும் முயற்ச்சி முடிந்தபின் ஒலியைக் கேட்கலாம். அதற்கு முன்,

''வர்ஷ், ஹஃப்ஸ்'' காரீகளின் வித்தியாசமான உச்சரிப்புகளை எழுத்தில் பார்க்கலாம்.

இங்கு படமாக இணைத்துள்ள பிடிஎஃப் ஃபைலின் சுட்டி

(படங்களின் மீது சொடுக்கினால் தெளிவாக வாசிக்கலாம்)

படம் 1 வர்ஷ் & ஹஃப்ஸ் இரு கிராஅத்தும் சேர்ந்தது.



படம் 2



படம் 3 வர்ஸ் கிராஅத் மட்டும்



படம் 4




பிடிஎஃப் படம் 1, 2ல் திருக்குர்ஆன் மர்யம் அத்தியாயம் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் கருப்பு எழுத்துக்கள் வர்ஷ் கிராஅத்தாகும், ரோஸ் வண்ண எழுத்துக்கள் குர்ஆனிலிருந்து வித்தியாசமான காரீ ஹஃப்ஸின் உச்சரிப்புகள். பார்க்க படம் 2 கீழே: ரோஸ் வண்ண வட்டத்தில் அடிக்குறிப்பு.

படம் 1ல் முதல் வசனம் கருப்பு எழுத்துக்களில் உள்ள வர்ஷ் கிராஅத் முறைப்படி ''ஸகரிய்யா'' என்று முடிகிறது, முடிந்த இடத்திலேயே (ரோஸ் எழுத்தில் ஹஃப்ஸ் கிராஅத்) அ என்ற உச்சரிப்பைத் தரும் அம்சு என்ற எழுத்து ரோஸ் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது (படம் 1, 3ல் நாம் பச்சை வண்ணத்தில் சிறிய கோடிட்ட இடத்தைப் பார்க்கவும்)

அதாவது, முதல் வசனம் (வர்ஷ் கிராஅத் கருப்பு எழுத்து) ஸகரிய்யாயாயாயா... என்ற நீட்டலுடன் முடிந்து, ''இஃத்னாதா ரப்பஹு...'' என அடுத்த வசனம் ஓதப்படும். இது காரீ வர்ஷின் கிராஅத் ஸ்டைல்.

ரோஸ் எழுத்து, ஸகரிய்யாயாயாயா... என்ற நீட்டலுடன் முடிந்து, ''அ இஃத்னாதா ரப்பஹு...'' என்று அடுத்த வசனம் ஓதப்படும். இங்கு இரு கிராஅத்துக்கும் உள்ள உச்சிரிப்பு வித்தியாசம் ''அ'' என்ற எழுத்து மட்டுமே ஹஃப்ஸ் கிராஆத்தில் சேர்த்து ஓதப்படுகிறது இது ஹஃப்ஸ் கிராஅத் ஸ்டைல்.

ஏன் இவ்வாறு ஓதுகிறார்கள்? என்றால் வித்தியாசமாக ஓதும் காரீகளே அதற்கு விளக்கம் சொல்கிறார்கள்: ''வித்தியசமான உச்சரிப்பில் ஓதினாலும் குர்ஆன் வசனங்களின் பொருள் மாறாது'' என்று காரீகளே சவால் விடுக்கிறார்கள்! இந்த உச்சரிப்புகளின் வித்தியாத்தை வைத்து,

//ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?!

Quran or Qurans?!//

என்று அறியாமையில் வாதம் செய்யும் பிறமத நண்பர்களுக்கு - ''நாங்கள் எப்படி ஓதினாலும் குர்ஆன் வசனங்களின் பொருள் மாறாது'' என்ற காரீகளின் சவாலையே - இங்கு சொல்லிக்கொள்வோம்.

இன்னும், மர்யம் அத்தியாயத்தின் 4வது வசனம் (ஹஃப்ஸின் படி 3வது வசனம்) வர்ஷ் கிராஅத் முறைப்படி, ''வலம் அகும்பி'' என்று ஓதப்படும். (பார்க்க படம் 4ல் கருப்பு வட்டம்)

இதுவே, ஹஃப்ஸ் கிராஅத் முறைப்படி, ''வலம கும்பி'' என்று ஓதப்படும் (பார்க்க படம் 1ல் கருப்பு வட்டம்)

ஓதுதலில் உள்ள உச்சரிப்பு வித்தியாசங்கள் மர்யம் அத்தியாயத்தில் மட்டுமில்லை, திருக்குர்ஆனின் பல அத்தியாயங்களில் இது போன்ற வித்தியசமான கிராஅத்துகள் உள்ளன. இதனால் வசனங்களின் பொருள் சிதைந்து விடுவதில்லை, பொருள் மாறிவிடுவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதனடிப்படையிலேயே ''பல குர்ஆன்களா!?'' என்று பிறமத நண்பர்கள் விமர்சனம் எழுதியுள்ளனர்.


நான் என்ன சொல்லவருகிறேன்?

சூரா மர்யம் என்ற குர்‍ஆன் சூராவிலிருந்து மூன்று எடுத்துக் காட்டுக்களைக் காணலாம் வாருங்கள்.

1. எடுத்துக்காட்டு ஒன்று: சூரா மர்யம் 19:19
[English translation based on the one done by Rashad Khalifa]

* ஹஃப்ச் இவ்விதமாக படிக்கிறார்:

He said, "I am the messenger of your Lord, to GRANT (who does grant?: the angel) you a pure son."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: li'ahiba

* நஃபா, அபோம்ரோ, கலன், வர்ஷ்... படிக்கிறார்கள்:

He said, "I am the messenger of your Lord, to GRANT (who does grant?: Lord) you a pure son."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: liyihiba

* அல்பஹர் அல்மொஹித், "Alkishaf" a book for Alzimikhshiry:

He said, "I am the messenger of your Lord, HE ORDERED ME TO GRANT YOU a pure son."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: amarani 'n 'hiba


இங்கு பிறமத நண்பர்கள் ஆங்கில உச்சரிப்பில் சுட்டியுள்ள வார்த்தைக்கு மூலமொழி அரபியை வைப்பார்கள் என்று நம்புவோம்.

அவர்கள் எழுப்பியுள்ள மேற்கண்ட விமர்சனத்தில் திருக்குர்ஆன், 019:019வது வசனத்தில் இடம் பெறும் ''லி அஹப'' என்ற வார்த்தையை காரீகள் வித்தியாசமான உச்சரிப்பில் ஓதியிருக்கிறார்கள் என்பது உண்மையே, இதனால் வசனத்தில் பொருள் மாறிவிடுவதில்லை என்பதே ஏதார்த்தம். கண்ணுக்குத் தெரியாத ஒரு நுண்ணியப் பொருளை இவர்கள் பூதக்கண்ணாடியை வைத்து பெரிதாக்கிக் காட்டுவதுதான் இவர்களின் உண்மை சொரூபத்தை அடையாளம் காட்டிவிடுகின்றது.

அடுத்த பதிவில் ''லி அஹப'' என்பது குறித்து இங்கு பதிவு செய்வோம் இறைவன் நாடட்டும்.

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

ஏழு வட்டார மொழியில் குர்ஆன்!

குர்ஆன் பிரதிகளில் பிழைகளும், திருத்தமும்!

1 comment:

சவூதி தமிழன் said...

அற்புதமான விளக்கம்.

அபூமுஹை அவர்களே,

இங்கு நீங்கள் யாருக்கு விளக்கம் சொல்லுகிறீர்களோ அவர்கள் இதையெல்லம் விளங்கித் தான் விவாதிக்கிறார்களா என்ன? எல்லாம் எங்கோ எவனோ எடுத்த வாந்தி தான். அவர்கள் எழுதியிருப்பதே அவர்களுக்கு விளங்குமா என்றால் அதுகூட ஐயம் தான்.

கூலிக்கு மாரடிக்கும் அந்தக் கும்பல் உண்மையில் விளங்கித் தான் எழுதினார்கள் என்றால் தாங்கள் இதுவரை எழுதிய பதிலடிகளுக்கு ஒன்றும் பதிவிடவில்லையே.

அவர்கள் எடுத்த வாந்தியின் மூல வாந்திக் காரருக்கு ஆங்கிலத்தில் தங்கள் பதிவை மொழிபெயர்த்து எழுதிக் கேட்கட்டும்.

பார்ப்போமே இவர்களின் நேர்மையையும்!!

அல்லாஹ் தங்கள் முயற்சிகளுக்கு நற்கூலி தரப் பிரார்த்திக்கிறேன்.