Wednesday, September 10, 2008

இது துவக்க அடிதான்!அடிமேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும் என்பார்கள். தினச் செய்தியை மக்களின் கவனத்திற்கு வைக்கும் ஒரு நாளேடு உண்மைச் செய்திகளை மட்டும் அச்சிலேற்ற வேண்டும். செய்திகள் என்ற பெயரில் விஷமத்தை விளம்பரப்படுத்திய தினமலரின் பாஸிசக் கொள்கைக்கு விழுந்த முதல் அடி இது.

- அபூ முஹை

*****

தினமலருக்கு முதல் அடி!

புதன், 10 செப்டம்பர் 2008

கடந்த 01.09.2008 அன்று தினமலரின் வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம் பதிப்புகளில் இலவச இணைப்பாக வெளியிடப் பட்ட கம்ப்யூட்டர் மலரில், உலக முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும், அவர்களின் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து டென்மார்க்கின் யூல்லண்ட் போஸ்ட்டன் வெளியிட்டிருந்த கேலிச் சித்திரத்தை வெளியிட்டிருந்தது.

கொதித்தெழுந்த முஸ்லிம்கள், தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கள் எதிர்ப்புகளைக் காட்டத் தொடங்கினர்.

இது குறித்து விபரமாக இரு தினங்களுக்கு முன்னர் (08.09.2009) தலையங்கம் எழுதி இருந்தோம்.

அத்தலையங்கம், "உப்புப் போட்டுச் சோறு தின்னும் ஒவ்வொரு முஸ்லிமும் இனி, தினமலரை ஒழித்துக் கட்டுவதற்குத் தன்னால் எதுவெல்லாம் சாத்தியமோ அதையெல்லாம் செய்வான்" என்று முடிந்திருந்தது.

உப்புப் போட்டுத்தான் முஸ்லிம் சோறு தின்னுகிறான் என்பதை உறுதிப் படுத்தும் விதமாக இன்று தினமலருக்கு முதல் அடி விழுந்திருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகங்களில் தினமலரின் இணைய தளம் இன்று முதல் தடை செய்யப் பட்டுள்ளது. தினமலர் விதைத்த வினைகளின் அறுவடையைத் தான் தடை செய்யப் பட்டப் படத்தில் பார்க்கின்றீர்கள்.

இது தொடக்கம்தான் ...

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

11 comments:

Ennangal said...

Insha Allah they will get more loss in near future.

சும்மா அதிருதுல said...

இது தொடக்கம்தான் ...

//yes yes

Joe said...

It deserves that punishment.

But then it's a free site, it would not face any losses, because it's banned in some countries/regions.

You need to think of other ways to punish that organization!

அபூ முஹை said...

நண்பர் ஜோ உங்கள் கருத்திற்கு நன்றி!

சில நாடுகளில் தளத்தை தடை செய்வதால் எந்த பாதிப்பும் இல்லை. மாறாக தடை ஏற்படுத்த முடியாத நாடுகளில் இன்னும் முனைப்புடன் விஷமக் கருத்துகள் விதைக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது அப்போது என்ன செய்வீர்கள்? என்று கேட்டால் அதற்கும் நம்மிடம் பதிலில்லை!

ஏதோ இயன்ற எதிர்ப்பைக் காட்டி விட்டோம் என்ற திருப்தி அவ்வளவுதான். இதைத் தவிர ஜனநாயக அரசில் வேறென்ன செய்து விட முடியும்?

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று காத்திருப்பதைத் தவிர அரசியல், நீதித்துறை, காவல்துறையின் செல்வாக்கு பெற்ற ஒரு சக்தியுடன் சிறுபான்மையினர் மோதி ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை.

இதுவே குற்றம் இழைத்தவர் பக்கத்தில் சிறுபான்மையினர் இருந்திருந்தால் இந்நேரம் குறைந்தது 50 முஸ்லிம்களாவாது கம்பி எண்ணிக்கொண்டிருப்பார்கள்!

நல்ல ஜனநாயக அரசு :(

Unknown said...

தினமலர் நிர்வாகம் மன்னிப்புக் கேட்ட பின்னும் அதற்கு பாதிப்பு உண்டாக்க வேண்டும் என்று செயல்படுவது சரிதானா. சட்டப்படி புகார் கொடுத்திருக்கிறீர்கள்.உங்கள் எதிர்ப்புகளை காட்டி விட்டீர்கள்.
வழக்கும் பாதிவாகி, நீதிமன்றத்தின் அவர்கள் முன் ஜாமின் பெற்றுள்ளனர்.இதற்குப் பின்னும் இத்தனை வெறுப்பு தேவைதானா?
‘இதுவே குற்றம் இழைத்தவர் பக்கத்தில் சிறுபான்மையினர் இருந்திருந்தால் இந்நேரம் குறைந்தது 50 முஸ்லிம்களாவாது கம்பி எண்ணிக்கொண்டிருப்பார்கள்! '

இந்தியாவில் முஸ்லீம்களுக்கு உள்ள
உரிமை எத்தனை இஸ்லாமிய நாடுகளில் முஸ்லீம்கள் அல்லோதோருக்கு இருக்கிறது.
இஸ்லாமிய நாடுகளில் இந்தியாவில்
நீங்கள் நடந்து கொண்டது போல்
பிறர் நடந்து கொண்டிருந்தால்
சும்மா விட்டிருப்பார்களா.

US said...

நண்பர் ஜோ
தினமல இணைய தளம் தடை செய்யப்பட்டதால் இனி இணையதள விளம்பர வருவாய் குறையும்

அபூ முஹை said...

ab க்கு,

தடை செய்ய வேண்டும்,

தொடர்ந்து மதக் கலவரங்களை தூண்டும் இந்த விஷம நாளேடைத் தடை செய்ய வேண்டும்.

மதக் கலவரங்களைச் செய்யும் ஒரு தனி மனிதனை அமைப்போடு இணைத்து அந்த அமைப்பை தடைசெய்வதில்லையா, அது போல் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கத் தூண்டுதலாக இருக்கும் இந்த பாஸிச நாளேடைத் தடை செய்ய வேண்டும்.

//இந்தியாவில் முஸ்லீம்களுக்கு உள்ள உரிமை எத்தனை இஸ்லாமிய நாடுகளில் முஸ்லீம்கள் அல்லோதோருக்கு இருக்கிறது.// - ab

அப்படிப் போடு,

இப்படிக் கேட்பவர் எவராக இருந்தாலும் அவருக்கு சொல்லிக்கொள்வது இதுதான்!

இந்திய எந்த மதத்தைச் சார்ந்தவனுக்கும் உரிமையானதல்ல. ஒரு மதத்தை சார்ந்தவனின் அப்பன், பாட்டன், முப்பாட்டன், முன்னோர்கள் எவரும் விவசாயம் செய்து சம்பாதித்த சொத்தல்ல இந்தியா. அதனால் எந்த மதத்தவரும் இந்தியாவை சொந்தம் கொண்டாட முடியாது. மதசார்ப்பற்ற நாட்டில் எல்லா மதத்தவரும் சமம்.

இது ''பொது வழியல்ல'' என்று எழுதியிருந்தால் அது தனியாருக்குச் சொந்தமான இடம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இந்நிலையில் முஸ்லிம் நாடுகளுடன் இந்தியாவை முடிச்சிப்போட்டுப் பேசுவது பைத்தியக்காரத்தனம். வேண்டுமானால், உங்கள் மதம் சார்ந்த பெயரில் ஒரு நாட்டை உருவாக்கி அங்கு முஸ்லிம்கள் வாழ்ந்தால் அவர்களிடம் கேளுங்கள் உங்கள் கேள்வியை! அதுவரை அறுகதையற்ற கேள்விகளை எழுப்ப வேண்டாம்.

//நிர்வாகம் மன்னிப்புக் கேட்ட பின்னும் அதற்கு பாதிப்பு உண்டாக்க வேண்டும் என்று செயல்படுவது சரிதானா.//

பாஸிசக் கொள்கை பத்திதிரிகை மன்னிப்புக் கேட்ட விட்டதாம், யார் சொன்னது?

தெரியாமல் தவறு செய்கிறானே அவனைத்தான் மன்னிக்க வேண்டும்!

தெரிந்தே தொடர்ந்து செய்பவரை தண்டிக்க வேண்டும்! அது மற்றவருக்குப் பாடமாக இருக்க வேண்டும்!!

வருகைக்கு நன்றி!

vivek said...

who told that india is for all religion? the law make it shows the broad mind of us,even though we gave our land to pakistan in name of religion.every one knows the truth.

புதுகை.அப்துல்லா said...

who told that india is for all religion?
//

நண்பர் விவேக்,

இந்தியா அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது தான். இங்குள்ள ஹிந்து மதம் தவிர்த்த அனைத்து மதத்தினரும் ஓரு காலத்தில் ஹிந்து சமயத்தை சார்ந்தவர்களாக இருந்து பின் மதம் மாறியவர்கள்தான். இஸ்லாமிய மதம் தான் அரேபியாவில் இருந்து வந்தது. இஸ்லாமியர்களான நாங்கள் அரேபியாவில் இருந்து வரவில்லை. இஸ்லாம் இங்கு வந்த போது ஹிந்து மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி விட்டோம்.கிருத்துவ மதம் தான் ஐரோப்பாவில் இருந்து வந்தது. இங்குள்ள கிருத்துவர்கள் ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள் அல்ல. நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். இந்த மண்ணின் மேல் அளவற்ற உரிமையும், எல்லையற்ற காதலும் கொண்டவர்கள்.இந்திய பூமி இந்த மண்ணின் பூர்விக மைந்தர்களான அனைவருக்கும் சொந்தமானது. அவர்கள் ஹிந்து,முஸ்லிம்,கிருத்துவம்,சீக்கியம்,புத்தம் என எந்த சமயத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி.

//the law make it shows the broad mind of us,//

மேற்கு பகுதியில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் பாக்கிஸ்தான் என்ற நாட்டைப் பெற்ற போது அதை எதிர்த்து அங்கு செல்ல மறுத்து அவரவர் சொந்த மண்ணிலேயே,ஊரிலேயே நம் அன்னை இந்தியாவிலேயே இருந்துவிட்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை பாக்கிஸ்தான் என்ற நாட்டைப் பெற்ற இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை விட அதிகம். அதனால் தான் நம் அன்னை பூமி மதச்சார்பற்ற நாடாக கட்டமைக்கப் பட்டதே தவிர உங்கள் பரந்த மனத்தினால் அல்ல. என் பாட்டன் முப்பாட்டன் அவனுக்கும் முப்பாட்டனுக்குச் சொந்தமான என் மண்ணில் நான் இருப்பதை ஏதோ எங்களுக்கு பிச்சை போட்டது போல பரந்த மனம் என்கிறீர்களே? நியாயமா?

//every one knows the truth.
//

அனைவருக்கும் அறிந்த இந்த உண்மை எப்படி உங்களுக்கு தெரியாமல் போனது?

Shankaran er said...

தங்களைப் போன்ற இஸ்லாமியர்கள் இந்தியாவில் இருப்பது எதுவும் பிரச்சினை இல்லை. ஆனால், ஹிந்துக்களுடன் இணைந்து வாழ முடியாது என்று கூறி விட்டு தனி நாடு 'கேட்டுப்' பெற்ற பிறகும் இங்கு தொடர்ந்து பிரச்சினைகளை உண்டாக்கினால் ஹிந்துக்கள் என்ன செய்வது. தினமலர் மீது தங்களின் கோபம் நியாயமானது. இதே கண்ணோட்டத்துடன் ஓவியர் ஹுசைனின் படைப்புகளின் மீதான விமர்சனங்களையும் பாருங்கள். பிறகு புரியும் உண்மை.

புதுகை.அப்துல்லா said...

ஓவியர் ஹுசைனின் படைப்புகளின் மீதான விமர்சனங்களையும் பாருங்கள். பிறகு புரியும் உண்மை.
//

ஓவியர் உசேன் என்ற காமக் கிழவனை எனக்குத் தெரிந்து ஓரு இஸ்லாமியர்களும் வலைத்தளத்தில் ஆதரித்ததாக தெரீயவில்லை. தயவு செய்து சுட்டி தாருங்களேன். அப்படியாராவது அந்த மடையனை ஆதரித்து இருக்கிறார்களா என அறிய ஆவலோடு காத்து இருக்கிறேன்.