Showing posts with label நபி. Show all posts
Showing posts with label நபி. Show all posts

Wednesday, December 04, 2013

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்!

அல்லாஹ்வின் பண்புகளுக்கு நிகராக ஒப்பிட்டு எவரையும் சொல்ல இயலாது. மனிதனின் பண்புகளோடு இறைவனின் பண்புகளையும் சமமாகக் கருதிடக்கூடாது. அன்பு, கருணை, இரக்கம், பரிவு, மன்னிக்கும் தன்மை இவை மனிதர்களுக்கும் உண்டு என்றாலும் இறைப் பண்புகளின் உயர் நிலைக்கு நிகராக இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட, அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன் என்று தமிழில் கூறுகிறோம்.

அன்பு, பாசம், கருணை, இரக்கம், பரிவு என இவ்வாசகங்களுக்கெல்லாம் நூலிழை வித்தியாமேயன்றி இவை நெருக்கமான ஓர் அர்த்தத்தைத் தரும் பல சொற்களாகும்.
 
(நபியே) நிச்சயமாக பூமியில் உள்ளவற்றையும், அவனது கட்டளைப்படியே கடலில் செல்லும் கப்பலையும் அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? தனது கட்டளையின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடாதவாறு அதனை அவனே தடுத்துக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணையாளன், நிகரற்ற அன்புடையவன். (அல்குர்அன் 022:065)

தனது அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடக்கூடாது என்று வானத்துக்குக் கட்டளையிட்டு இறைவன் தடுத்து வைத்திருக்கிறான். இவ்வாறு தடுத்து வைத்திருப்பது மனிதர்களின் மீதான அளவற்ற கருணையினாலும், நிகரற்ற அன்பினாலுமே என்று விவரித்து இறைமறை வசனங்கள் கூறகின்றன.

இவ்வசனத்தில் அன்பும், கருணையும் சேர்ந்தாற்போல் சொல்லப்பட்டாலும், கருணையைவிட அன்புக்கு ஒருபடி உயர்வுண்டு என்பதை வரும் நபிமொழிகளிலிருந்து விளங்குகிறோம்,

அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்துவிடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தன்னுடைய குட்டியைவிட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்கள்: (புகாரி 6000, முஸ்லிம் 5310, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத், தாரமீ)

தாயின் கால்களுக்கிடையில் விளையாடும் குட்டியை மிதித்து விடுவோமோ என்கிற உள்ளுணர்வில், உயிரினப் பிராணிகளும் கால்களை உயர்த்திக்கொள்வதும், தன் குஞ்சுகளுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என அன்னியப் பறவைகள் குஞ்சுகளின் அருகில் வந்தால் தாய்ப் பறவை சீறிப் பாய்ந்து போரிடுவதும் அன்பு எனும் பாசத்தினால் ஏற்படும் உள்ளுணர்வாகும். இது உயிரினங்களின் உறவினால் ஏற்படும் இயல்பு. அல்லாஹ் இரட்சகனாக இருப்பதால் மனிதர்களிடம் அன்பு செலுத்துவது இறைவனின் நியதி எனலாம்.
தாய்மையின் அன்புக்கு நிகராக எவரையும், எவற்றையும் ஒப்பிட்டுச் சொல்லிட இயலாது. தாயின் அன்பைவிட அடியார்கள் மீது அல்லாஹ் மிகுந்த அன்பு வைத்துள்ளான்:

(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது 'எங்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!' என்றார்கள். நாங்கள், 'இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது' என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப் (ரலி) நூல்கள்: புகாரி 5999 முஸ்லிம் 5315)

இறைவன் பூமியில் இறக்கிய நூறில் ஒரு பங்கு அன்பிற்கே உயிரினங்கள் உறவுகளிடம் இவ்வளவு அன்பு செலுத்துகின்றது என்றால் மீதம் தொண்ணூற்றொன்பது பங்கை தன்னிடம் வைத்திருக்கும் அல்லாஹ்வை நிகரற்ற அன்புடையவன் என்று சொல்லுவதே பொருத்தமாகும்.

கருணை

(நபியே) உம்மை அவர்கள் பொய்ப்பித்தால், ''உங்களுடைய இறைவன் விசாலமான கருணையுடையவன் என்றும், குற்றவாளிகளான கூட்டாத்தாரை விட்டும் அவனது தண்டனை தடுக்கப்பட மாட்டாது'' என்றும் நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 006:147)

''இறைவன் விசாலமான கருணையுடையவன்'' என்பதை ''இறைவன் விசாலமான அருளுக்குரியவன்'' என்றும் சொல்லலாம். அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், மிகப் பெரும் கருணையாளன் என்பதால், குற்றவாளிகளுக்கு அவன் அளிக்கவிருக்கும் தண்டனையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது என்பதையும் மேற்கண்ட வசனத்தின் வாயிலாக அறிவிக்கப்படுகின்றது. ஆகவே, குற்வாளியின் மீது நீதிபதிக்கு அன்பு ஏற்பட்டால் சட்டத்தை வளைப்பான் என்பது பூமியிலுள்ள நீதிபதிகளுக்குப் பொருந்துமேயன்றி, வானத்திலுள்ள தன்னிகரற்ற தனி நீதிபதி இறைவனுக்குப் பொருந்தாது.

...நிச்சயமாக உமது இறைவன் தண்டிப்பதில் தீவிரமானவன். மேலும், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்புடையோனுமாவான். (அல்குர்ஆன் 6:165)
பாவத்தை மன்னிப்பவனும், மன்னிப்புக் கோரலை ஏற்றுக் கொள்பவனும், தண்டிப்பதில் கடுமையானவனும், அருளுக்குரியவனுமாவான். அவனையன்றி வணங்கப்படத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை! அவனிடமே மீளுதல் உள்ளது. (அல்குர்ஆன் 040:003)

''அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்'' என்கிற இக்கருத்திலமைந்த ஏராளமான வசனங்களை இறைமறையில் காணலாம். இறைவன் தீர்ப்பளிப்பதில் மேலான நீதிபதி:
 
..தீர்ப்பளிப்போரில் நீ மிகச் சிறந்த தீர்ப்பளிப்பளிப்பவனாவாய்... (அல்குர்ஆன் 011:045) 

அல்லாஹ் தீர்ப்பளிப்போர்களிலெல்லாம் மிகச் சிறந்த தீர்ப்பளிப்பாளன் இல்லையா? (அல்குர்ஆன் 095:008)

இறைவனின் பண்புகள் அனைத்தும் அளவற்றவையே ஆனாலும் அவனது பண்புகள் அவனுடைய தீர்ப்புக்கு எவ்வித இடையூறாக அமையாது.
மனிதர்களிடையே எவ்வாறு அன்பு ஏற்படுகின்றதோ அதுபோல் மனிதர்கள் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நபிமொழி வலியுறுத்துகிறது.

''மக்கள் மீது கருணை காட்டாதவருக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) நூல்கள்: புகாரி 7376, முஸ்லிம் 4638,  திர்மிதீ, அஹ்மத்)

''என் மீது அன்பு செலுத்து''
''அல்லாஹ்வின் மீது அன்பு செலுத்துங்கள்'' என்று இஸ்லாம் எங்கும் கூறவில்லை என்பது சரியான புரிதல். ஏனெனில் ''அல்லாஹ் (எவ்வித) தேவையுமற்றவன்" (112:002) அன்பு, கருணை எதுவுமே அவனுக்குத் தேவையற்றதாக இருக்க அல்லாஹ்வின் மீது அன்பு செலுத்துங்கள் எனச் சொல்வதும் பொருத்தமாக இல்லை! - தேவையற்றவனுக்கு அன்பு தேவை இல்லை!. ஆனால் அல்லாஹ்வை நேசிக்க வேண்டும் என்று இறைமறை கூறுகின்றது:

அல்லாஹ் அல்லாதவர்களை (அவனுக்கு) இணையாளர்களாக எடுத்து அல்லாஹ்வை நேசிப்பது போன்று அவர்களை நேசிப்போரும் மனிதர்களில் உள்ளனர். ஆனால், நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் மிக உறுதியானவர்கள்... (அல்குர்ஆன் 002:165)

நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான்... (அல்குர்ஆன் 003:031)

அல்லாஹ்வை நேசித்தல் என்றால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றி இஸ்லாம் வழங்கியுள்ள வணக்க வழிபாடுகளை நிறைவேற்றி, இஸ்லாமின் வழிகாட்டல்படி வாழ்க்கை நெறியினை அமைத்துக் கொள்வதுமாகும். இவ்வாறு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவர்களை அல்லாஹ்வும் நேசிப்பான்.

விரிவஞ்சி இத்துடன் முடிக்கின்றோம்.

முழுமை பெற்ற ஆதாரம் அல்லாஹ்விடமே உள்ளது. (006:149)
(இறைவன் மிக்க அறிந்தவன்)

குர்ஆனில் இருக்கிறதா?

ஐயம்:
"பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்" எனும் வசனத்தை தமிழில் "அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்" என்று மொழி பெயர்க்கின்றனர். அல்லாஹ் நிகரற்ற அன்புடையவன் எனும் அர்த்தம் இந்த வசனத்திலோ அல்லது திருக்குரானிலோ இருக்கிறதா? - சாணக்கியன்.

தெளிவு:

பி, இஸ்மு, அல்லாஹ், அல்-ரஹ்மான், அல்-ரஹீம் ஆகிய ஐந்து அரபுச் சொற்கள் இணைந்து, அரபு மொழியின் சந்தி இலக்கணத்துக்கு இயைந்து, 'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' என்று வழங்கப்படுகிறது. அந்த ஐந்து அரபுச் சொற்களுக்கும் தனித் தனியான தமிழ்சொற்கள் முறையே:

பி=ஆல்
இஸ்மு = பெயர்
அல்லாஹ் = வணக்க-வழிபாடுகளுக்குரிய கடவுள்
அர்ரஹ்மான் = அளவற்ற அருளாளன்
அர்ரஹீம் = நிகரற்ற அன்புடையவன்

அன்பு, அருள், பரிவு, கருணை, இரக்கம் போன்ற பல பொருள்களைத் தன்னகத்தே கொண்ட 'அர்ரஹீம்' எனும் செறிவுச் சொல்லானது 'ரஹிம' எனும் வேரடி வினையிலிருந்து பிறந்த பண்புப் பெயராகும். 'ரஹீம்' எனும் சொல்லோடு இணைந்த 'அல்' எனும் பெயர்ச் சொல், குறிப்பாக உணர்த்துவதற்குப் பயன் படுத்தப்பட்டதாகும். அதாவது குறிப்பாகு பெயர். 'அல்-ரஹீம்' எனும் சொல், அரபு மொழியின் புணர்ச்சி இலக்கணப்படி 'அர்ரஹீம்' என மொழியப்படும்.

எனவே, 'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' என்னும் அரபுச் சொற்றொடருக்கு, "அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்" எனும் தமிழ் மொழி பெயர்ப்பு, சரியானதே!

இந்தச் சொல், இறைமறையின் 113 அத்தியாயங்களின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், இறை வசனங்கள் சிலவற்றின் உள்ளும் இடம்பெற்றுள்ளது. அவையாவன:

"மேலும், உங்கள் கடவுள் ஒரேயொருவன்தான்; அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்" 002:163.

"வணக்க வழிபாட்டுக்குரியவன் அல்லாஹ். அவனையன்றி வேறு கடவுள் இல்லை. வெளிப்படையானவற்றையும் மறைவானவற்றையும் அறிபவன். அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன்" 059:022.

"(இவ்வேதம்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிமிருந்து இறக்கியருளப்பட்டது" 041:002.

"திண்ணமாக நான் மிக்க மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையவன் என்பதை (நபியே!) என் அடியார்களிடம் அறிவித்துவிடுவீராக!" 015:049.

oOo


ஐயம்:

திருக்குரானிலே இறைவன் தன்னைப்பற்றி "அனுவளவும் நீதி தவறாத நீதிமான்" என்று சொல்கிறான். "தீமை செய்தால் நரகம், நன்மை செய்தால் சுவர்க்கம்" என்று செயலும் அதன் விளைவையும் பற்றி தெளிவாக சொல்கிறான். எந்த இடத்திலும் "என் மீது அன்பு செலுத்து" என்று சொல்லவில்லை. நீதிபதிக்கு பயந்தால்தான் சட்டத்தை மனிதன் மதிப்பான். நீதிபதிக்கு அவன் மீது அன்பு வந்துவிட்டால் சட்டத்தை வளைப்பான். "அன்பே சிவம், God is love" போன்ற சிந்தனையெல்லாம் இஸ்லாத்தில் கிடையாது. "கண்ணன் மீது காதல் வரலாம். அல்லாஹ் மீது பயம் வரவேண்டும்" என்பதுதான் இஸ்லாம்.

அல்லாஹ் நிகரற்ற கருணையாளன் என்பதுதான் சரி. இதைப்பற்றி உங்கள் கருத்தென்ன? - சாணக்கியன்.

தெளிவு:

"என் மீது அன்பு செலுத்து" என்று அல்லாஹ் தன் அடியார்களுக்கு எந்தக் கட்டளையும் இடவில்லைதான். மாறாக, "என்னை அஞ்சி வாழுங்கள்" என்பதாகவே இறைமறை நெடுகிலும் கட்டளையிடுகின்றான். அதேவேளை, "பசியுடன் உணவு கேட்டு உங்களிடம் வருபவருக்கு அன்புடனும் பரிவுடனும் உணவளிப்பது என்னிடம் நீங்கள் காட்டும் அன்புக்கு ஒப்பாகும்" என்று அல்லாஹ் கூறுவதாக அவனுடைய தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் (முஸ்லிம் ஹதீஸ் 4661 கருவின் சுருக்கம்).

"அல்லாஹ் நிகரற்ற கருணையாளன் என்பதுதான் சரி" என்பதை 'அர்ரஹீம்' எனும் சொல்லுக்குத் தமிழாக்கம் என்று நீங்களாக நினைத்துக் கொண்டால், முதல் ஐயத்துக்கான தெளிவைப் படித்துக் கொள்ளுங்கள். "அல்லாஹ், நிகரற்ற கருணையாளன் என்பது மட்டுமே சரி" என்று ஒற்றைப்படுத்தினால் அது பிழையாகும். "அல்லாஹ், நிகரற்ற கருணையாளன்" என்பதும் சரி. போலவே, அன்பாளன், மன்னிப்பவன், கொடையாளன், நீதிபதி ஆகிய அவனுடைய எல்லாப் பண்புப் பெயர்களுக்கும் நிலைமொழியாக 'நிகரற்ற' வரும். ஏனெனில் அவனே நிகரற்றவன்தான்.

முழுமை பெற்ற ஆதாரம் அல்லாஹ்விடமே உள்ளது... (006:149).

(இறைவன் மிக்க அறிந்தவன்).

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

மேலதிகமாக ஹதீஸ்களின் விளக்கம்: ''அளவற்ற அருளாளனன், நிகரற்ற அன்புடையோன்''

Monday, December 02, 2013

தியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது?

ஐயம்:

தியாகப் பெருநாளின் முக்கியத்துவம் பற்றி பேசும்பொழுது "ஒரு பக்தனின் பக்தியை சோதிக்க அவனுடைய பிஞ்சுக்குழந்தையை பலியிடுமாறு அளவற்ற அருளாளனும் நிகரற்ற கருணையாளனுமான உங்கள் அல்லாஹ் கட்டளையிடுகிறானே.... இவ்வளவு ஈவு இரக்கமற்ற கடவுள் தேவையா?

அல்லாஹ்வின் பெயரால் ஆட்டை அறுத்து சாப்பிட்டுவிட்டால் பெரிய தியாகமாகி விடுமா?" என்று எனது பிராமின் நண்பர் கேட்கிறார். தயவு செய்து விளக்கம் தரவும். நன்றி. - சாணக்கியன்.

தெளிவு:

இணை தெய்வங்களுக்கு நரபலி கொடுப்பது எல்லாக் காலத்திலும் நிகழ்ந்திருக்கின்றன. இன்றும் நரபலி பற்றிய நிகழ்வுகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்தேறி வருவதாக ஊடகத் செய்திகளில் வாசிக்கிறோம். இறுதி வேதம் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்திலும் நரபலிகள் கொடுக்கப்பட்டன. நரபலியைக் கண்டித்து அருளப்பட்ட வசனம்:

"இவ்வாறே இணைவைப்போரில் அதிகமானோருக்கு, தமது குழந்தைகளைக் கொலை செய்வதை (நன்மை போல்) அவர்களது இணை தெய்வங்கள் அலங்கரித்துக் காட்டின. இது அவர்களை அழிவுக்குட்படுத்துவதற்கும் அவர்களுடைய மார்க்கத்தை அவர்களுக்குக் குழப்புவதற்குமேயாகும்..." (அல்குர்ஆன் 006:137).

"அறிவில்லாமல் மடத்தனமாகத் தமது குழந்தைகளைக் கொலை செய்தவர்களும்..." (அல்குர்ஆன் 006:140)

அரபியர்கள் ஏக இறைவனின் மீது நம்பிக்கை கொண்டிருந்தாலும், எவர் தயவும் தேவையற்ற இறைவன் தன்னைப் பற்றிக் குர்ஆனில் எவ்வாறு குறிப்பிடுகின்றானோ, அந்தப் பொருளில் இறைவனை அவர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை! எவ்வாறு அவனை வணங்கிட வேண்டுமோ அவ்வாறு வணங்காதவர்களாகவும், இறைவனை எவ்வாறு கண்ணியப்படுத்த வேண்டுமோ அவ்வாறு கண்ணியப்படுத்தாதவர்களாகவும் இருந்ததோடு, இறைவனுக்கு இணைகற்பிக்கும் பல தெய்வ வழிபாடுகளையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. ஏக இறைவனை நம்புகிறோம் என்று சொல்லிக்கொண்டு, அவர்களின் சமயச் சடங்குகள், மத ஆச்சாரங்கள், சித்தாந்தங்கள் அனைத்திலும் ஷைத்தானின் அடிச் சுவடுகளைப் பின்பற்றி வந்தனர்.

அரபியர்களின் பல தெய்வக் கொள்கையைப் பற்றிக் குர்ஆனில் பல வசனங்கள் அறிவிக்கின்றன. இணை தெய்வங்கள் மீது அவர்கள் கொண்டிருந்த பக்தியானது, அவர்களின் ஆண் குழந்தைகளை அவற்றிற்காக நரபலி கொடுத்திடவும் அவர்களைத் தூண்டியது. அவர்களின் இந்தச் சீர்கேடுகளையும், குழப்பங்களையும் பற்றித்தான் குர்ஆன் ஆறாவது அத்தியாயத்தின் 136-140 வசனங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இஸ்லாம் நரபலியை ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை. மாறாக, நரபலியைக் கொலை என்றே உறுதிப்படுத்துகின்றது.

தியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது?

இது நல்ல கேள்வி, தியாகத் திருநாள் என்று சொல்லி, அனுமதிக்கப்பட்டப் பலிப் பிராணிகளை இறைவனின் பெயரால் அறுத்து, அதன் இறைச்சியை சமைத்துச் சாப்பிட்டுவிட்டால் அது தியாகம் ஆகிவிடுமா? இதில் எங்கே தியாகம் இருக்கிறது? என்கிற கேள்வி நியாயமாக இருந்தாலும், ஹஜ்ஜுப் பெருநாளுக்கு, ''தியாகத் திருநாள்'' எனும் பெயர் ஏன் நிலைப்பெற்றது? என்பதை அறிய இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் இது தொடர்பாக நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் படித்தால் தெளிவு பெறலாம்!

"என் இறைவா! நல்லெழுக்கமான குழந்தையை எனக்குத் தந்தருள்வாயாக! (என்று பிரார்த்தனை செய்தார்). எனவே, சகிப்புத் தன்மை மிக்க ஒரு மகன் குறித்து அவருக்கு நாம் நற்செய்தி கூறினோம்" (அல்குர்ஆன் 037:100-101)

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தொடர் பிரார்த்தனையின் விளைவாக அவரின் சந்ததியாக ஒரு மகன் பிறந்தார். அவரது பெயர் இஸ்மாயீல்.

இஸ்மாயீல் வளர்ந்து தந்தையுடன் இணைந்து செயற்படும் பருவத்தை அடைந்தபோது, "என்னருமை மகனே! உன்னை நான் அறுப்பதாக நிச்சயமாகக் கனவில் கண்டேன். உனது அபிப்பிராயம் என்ன?'' எனக் கேட்டார். அ(தற்க)வர், "'என்னருமைத் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதை நீங்கள் செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ், சகித்துக் கொள்ப(வர்களுள் ஒரு)வனாக என்னைக் காண்பீர்கள்" என்று கூறினார்.

அவ்விருவரும் (அல்லாஹ்வுக்குக்) கட்டுப்பட்டனர். இன்னும் அவர் (தம் மகனாகிய) இவரை முகம் குப்புற நிலத்தில் கிடத்தியபோது,

"யா இப்ராஹீம்! நிச்சயமாக நீர் கனவை உண்மைப்படுத்தி விட்டீர்'' என நாம் அவரை அழைத்தோம். நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம். நிச்சயமாக இது ஒரு தெளிவான சோதனையேயாகும். அவருக்குப் பகரமாக, மகத்தான பலிப் பிராணியை ஆக்கினோம். பின்வருவோரில் அவர்மீது
(புகழ்) நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது சாந்தி உண்டாகட்டும். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி வழங்குவோம்
(அல்குர்ஆன் 037:102-110).

நபிமார்களின் கனவு இறைச் செய்திகளின் முன்னறிவிப்பாகும். அக்கனவு நிறைவேறும் அல்லது நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற ரீதியில், மகனை அறுப்பதாக நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கண்ட கனவு இறைவனின் கட்டளை என அதைச் செயல்படுத்திட தந்தையும், மகனாரும் முன்வருகின்றனர். நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு நீண்ட காலம் குழந்தையில்லாமல் இருந்து, பின்னர் குழந்தை பிறந்தது. (மகன் இஸ்மாயீலை அறுக்க முயன்ற நிகழ்வுக்குப் பின்னரே நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த மகனாரின் பெயர் இஸ்ஹாக் 037:112).

ஒற்றைக்கு ஒற்றையான இஸ்மாயீல் என்ற அந்த ஒரு மகனைத் தம் கையாலேயே அறுக்க தந்தை ஆயத்தமாகிறார். அருமை மகனை இழக்க நேரிடுமே என்கிற தயக்கம் ஏதுமின்றி இறைக்கட்டளையே முக்கியம் எனச் செயல்பட முன்வந்த ஒரு தந்தையின் இந்தத் தியாகத்துக்கு ஈடாக எந்தச் செயலையும் குறிப்பிட்டுச் சொல்லிட இயலாது.

இது ஒருபுறமிருக்க:

''இறைவன் உங்களுக்குக் கட்டளையிட்டதை நிறைவேற்றுங்கள்'' என்று தந்தையிடம் மகன் கூறி, 'இறைக் கட்டளைக்கு மிஞ்சியது எதுவுமில்லை' என உயிர் துறக்க முன்வரும் மகனார் இஸ்மாயீலின் உயிர்த்தியாகமோ ஈடு இணையற்றது என்று சொல்லுமளவுக்கு உயர்ந்த தியாகமல்லவோ!

இறை அன்பர் என இறைவனால் போற்றப்பட்ட, வாய்மை தவறாத நபி இப்ராஹீம் (அலை) என்கிற நல்லடியாருக்கும், தியாக உள்ளம் படைத்தவரும் சகிப்புத் தன்மை மிக்கவருமான மகனார் இஸ்மாயீலுக்கும் வைக்கப்பட்ட சோதனையாகும் என்றே இறைமறை வசனம் குறிப்பிடுகின்றது. இறைக் கட்டளைக்கு முன்னால் ஈடு செய்ய இயலாத உயிரிழப்பும் துச்சமென மதித்து செயலில் இறங்கிய இரு நல்லடியார்களின் தியாகச் செயல்கள் இடையில் தடுக்கப்பட்டு, அந்த இடத்தில் ''பெரும் பலியாக'' பலிப் பிராணியை தியாக மகன் இஸ்மாயீலுக்குப் பகரமாக்கினான் இறைவன்.

நபி இஸ்மாயீல் (அலை) அவர்களைச் சிறப்பிக்கும் வண்ணம் இரு வசனங்களை இறைவன் தன் வேதத்தில் அருளிப் பதித்தான்:

"(நபியே) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நீர் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார். மேலும், அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார்.

மேலும், அவர் தமது குடும்பத்தாருக்குத் தொழுகையையும் ஸகாத்தையும் ஏவக்கூடியவராக இருந்தார். இன்னும் அவர் தன் இறைவனிடம் பொருந்திக் கொள்ளப்பட்டவராகவும் இருந்தார்"
(அல்குர்ஆன் 005:054-055).

இம்மாபெரும் சம்பவத்தின் தியாக வரலாறு மறுமை நாள்வரை நம்பிக்கையாளர்களின் உள்ளத்தில் பசுமையாக நிலைத்திருக்க வேண்டும் என இத்தியாக தினத்தை இஸ்லாமிய மரபாக ஆக்கினான் இறைவன். உலகம் முழுவதும் உள்ள நம்பிக்கையாளர் அனைவரும் அந்நாளில் அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அறுத்து பலியிட்டு அதன் இறைச்சியை தாமும் புசித்து மற்றவருக்கும் உண்ணக் கொடுப்பார்கள்.

அவ்வாறு செய்வதால் ஒவ்வொரு முஸ்லிமும் தியாகம் செய்வதாகவும் பொருளில்லை! மாறாக, படைத்தவனுக்கு அவனின் படைப்புகள் எப்படி கட்டுப்பட வேண்டுமென்பதை நினைவுறுத்தும் விதமாக செயற்கரிய மகத்தான தியாகத்தைச் செய்த இரு நல்லடியார்களின் தியாகங்கள் பிராணிகளின் பலியின் மூலம் எடுத்து சொல்லப்படுகிறது! தியாகத் திருநாள் என்பதன் மூலம் வேண்டுவதும் அதுவே!

மற்றபடி இத்தியாக நாளில் எந்த முஸ்லிமும் தியாகம் செய்திட வேண்டும் என்கிற பொருள் ''தியாகப் பெருநாளில்'' இல்லை! தியாகம் செய்வதற்கென ஒரு தினத்தை இறைவன் நிர்ணயிக்கவில்லை. எந்த நாளும் எந்த நேரமும் இறைவழியில் தியாகம் செய்திட வேண்டும் என்பதே மேற்காணும் நிகழ்விலிருந்து முஸ்லிம்கள் பெறும் படிப்பினையாகும்!

(இறைவன் மிக்க அறிந்தவன்)

நன்றி: சத்தியமார்க்கம்.காம்
             

Friday, September 19, 2008

வளர்ப்பு மகன் பெற்ற மகனாக முடியுமா?

shankaran E R has left a new comment on your post "மாற்றாரால் காமுகராகச் சித்தரித்த நபி - ஸைனப் திரும...":

தங்களின் பதிவு கண்டேன். விரிவாக விளக்கியுள்ளீர்கள். ஆயினும் என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. ஏன் நபி தனக்கு மருமகள், அதிலும் தனது வளர்ப்பு மகனின் மனைவியை, விவாகரத்தே ஆனாலும்,மருமகள் முறையிலுள்ள பெண்ணை மீண்டும் திருமணம் செய்ய வேண்டும்? இது அந்நாளைய பொதுவான வழக்கமா? இக்கேள்விக்கு சரியான பதில் தாங்கள் அளித்த சுட்டியிலும் இல்லை.

இக்கேள்விக்கு தங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.

*****

நண்பர் சங்கரன்,

ஒரு பக்கமாக வாசித்து விளங்கியுள்ளீர்கள். மறு பக்கத்தை உள்வாங்கவில்லை என்பதே உங்களால் முழுமையாக புரிந்து கொள்ளாமல் போனதற்குக் காரணம் எனலாம். நபியவர்களின் வளர்ப்பு மகனைத் திருமணம் செய்த ஸைனப் (ரலி) அவர்கள், நபியவர்களின் தந்தையுடன் பிறந்த சகோதரியின் மகளாவார். அதாவது நபியவர்களின் மாமி மகள் என்பதைக் கவனிக்கத் தவறி விட்டீர்கள்!

தந்தையுடன் பிறந்த சகோதரியின் மகள் - மாமி மகள், ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ள அதிகம் உரிமையுள்ளவர்கள். உதாரணமாக: ராஜா என்பவரின் தந்தையுடன் பிறந்த சகோதரியின் மகள், ராஜாவுக்கு முறைப் பெண்ணாவார். அந்தப் பெண்ணுக்கு ராஜா முறைப் பையனாவார். மாமியின் மகளான முறைப்பெண் வெறொருவருக்கு மனைவியாக இருந்தால் தவிர இவ்விருவருக்குமிடையே திருமண உறவு தடுக்கப்பட்டதல்ல.

நபியவர்களுக்கு ஸைனப் முறைப் பெண்ணாவார், ஸைனப்புக்கு நபியவர்கள் முறை மாப்பிள்ளையாவார். இவ்வுறவை யாரும் விரும்பித் தேர்ந்தெடுக்க முடியாது. இது இரத்த சம்பந்தப்பட்ட உறவினால் ஏற்படுவது. இதை மாற்றிடவோ மறுத்திடவோ இயலாது. மறுத்தாலும் அது வெறும் வார்த்தையாக இருக்குமேயன்றி மறுப்பு உண்மையாகிவிடாது.

வளர்ப்பு மகன், வளர்ப்புத் தந்தை என்று சொல்லிக்கொள்வது இரத்த உறவால் ஏற்படுவதில்லை. அதனால்தான் மகன், தந்தை என்று சொல்லாமல் வளர்ப்பு மகன், வளர்ப்புத் தந்தை என்று அடைமொழியோடு அழைக்கப்படுகிறது. வளர்ப்பு மகன் என்று சட்டபூர்வமாக ஆவணங்களில் பதிவு செய்து கொண்டாலும் இரத்த உறவு ஏற்பட்டுவிடாது. ஏனெனில் தந்தை, மகன் உறவு வெறும் வார்த்தைகளால் ஏற்படுவதில்லை.

பெற்ற மகன், வளர்ப்பு மகன் இவ்விரண்டுக்கும் என்றும் ஒற்றுமையில்லாத பெருத்த வேறுபாடு உள்ளது, வளர்ப்பு மகன் ஒருபோதும் பெற்ற மகனாகிவிட முடியாது.

ஸைதை வளர்ப்பு மகன் என்று நபியவர்கள் அறிவிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்போது ஸைத் மணமுடித்து விவாகரத்து செய்த பெண்ணை நபியவர்கள் திருமணம் செய்ய எந்தத் தடையும் இல்லை என்று ஒப்புக்கொள்பவர்கள், வளர்ப்பு மகன் என்று வாயால் சொல்லி விட்டதால் ஸைது மணமுடித்தப் பெண் நபியவர்களுக்கு எவ்வாறு மருமகளாகிவிடுவார்? என்பதையும் சிந்திக்க வேண்டும்.

''உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது'' (திருக்குர்ஆன், 004:023)

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம், பெற்ற மகனின் மனைவியே மருமகள் என்ற தகுதியைப் பெறமுடியும் என்ற கருத்தில் மகனின் மனைவியை திருமணம் செய்வதைத் தடைவிதிக்கிறது. வளர்ப்பு மகனுக்கு இந்தச்சட்டம் பொருந்தாது.

வளர்ப்பு மகனை சொந்த மகனாகக்கருதி இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளைப் புறக்கணிக்கும் முறை அன்றைய காலத்தில் இருந்தது. இன்னாருக்கு இன்னார் மகன் என்பதைத் தீர்மானிப்பது இறைவனின் அதிகாரத்தில் உள்ளது. இன்னொருவரின் மகனைத் தன் வளர்ப்பு மகன் என்று சொல்லி வளர்க்கலாமே தவிர, பெற்ற மகனாகக் கருதுவது போலியான உறவு. அந்த வெற்று உறவைத் தகர்க்கவே வளர்ப்பு மகனின் மனைவி விவாகரத்து செய்யப்பட்டால் அந்தப் பெண்ணை வளர்ப்புத் தந்தை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற சட்டத்தை இறைவன் தன் நபியின் வழியாக நிறைவேற்றினான்.

இவையெல்லாம் ஆக்கத்தில் சொல்லப்பட்டிருந்தும் நீங்கள் கவனிக்கவில்லையோ என்று தோன்றுகிறது. இனியும் உங்களுக்குச் சந்தேகம் உள்ளது எனில், இரத்த சம்பந்தமான உறவில் ஸைனப் (ரலி) அவர்கள் நபியவர்களுக்கு எவ்விதத்தில் மருமகளாகிறார்? என்பதை நீங்கள் விளக்க வேண்டும் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Sunday, September 14, 2008

குர்ஆன் பிரதிகளில் பிழைகளும், திருத்தமும்!

குர்ஆனில் எழுத்துப் பிழைகள் உள்ளது. இது உலக முஸ்லிம்கள் ஒப்புக்கொண்ட ஒரு விஷயம். குர்ஆனில் எழுத்துப் பிழை இல்லை என்று ஒரு முஸ்லிம் வாதிப்பாரேயானால் அவருக்கு குர்ஆனோடு சிறுதும் பரிச்சயமில்லை என்று சொல்லி விடலாம்.

கருத்து வேறுபாடு இல்லாத அளவுக்கு, குர்ஆனில் எழுத்துப் பிழைகள் உள்ளது என்று ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் அதைக் குறிப்பிட்டு எழுதியும் இருக்கிறார்கள்.

(படத்தின் மீது சொடுக்கினால் தெளிவாகப் படிக்க முடியும்)



*****



*****



''குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்'' என்று விமர்சிக்கும் பிறமத நண்பர்கள், குர்ஆன் பிரதிகளில் உள்ள எழுத்துப் பிழைகளை குர்ஆனில் உள்ள பிழையாக்க முயலுகின்றனர். அதற்கான குறுக்கு வழிதான், ''குரான் பாதுகாக்கப்பட்டதா?'' என்று ஒரு தடத்தில் எழுதிக்கொண்டு, இன்னொரு சாட்கெட்டில் ''குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்'' என்று எழுதிவிட்டால் ''குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை'' என்று அப்பாவிகளை நம்பவைத்து விடலாம் பாருங்கள்!

ஆனால், குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. வானவர் ஜிப்ரீல் குர்ஆனை எழுதிக்கொடுத்துச் சென்றிருந்தால் குர்ஆன் பிரதிகளில் உள்ள எழுத்துப் பிழைகளை இறைச் செய்தியில் (நவூதுபில்லாஹ்) உள்ள பிழையாகக் கொள்ளலாம். ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறைச் செய்தியைக் கொண்டு வந்து, நபி (ஸல்) அவர்களுக்கு ஓதிக் கற்றுக் கொடுத்தாரே தவிர எழுதிக் கற்றுக் கொடுக்கவில்லை. குர்ஆன் பிரதிகளில் உள்ள எழுத்துப் பிழைகள், குர்ஆனை எழுதிக்கொண்ட மனிதர்களால் எற்பட்ட எழுத்துப் பிழைகளாகும்.

வஹி ஓசையாக அருளப்பட்டதால் குர்ஆன் என்பது அதை ஓதும் ஓலியாகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்..

எந்த மனிதருக்கும் எழுத்துப் பிழைகள் ஏற்படவே செய்யும். குர்ஆனை எழுதும் போதும் எழுத்துப் பிழைகள் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் சமுதாயம் அந்த எழுத்துப் பிழைகளையும் திருத்தாதாமல் தொடர்ந்து எழுத்துப் பிழைகளுடனேயே மறு பிரதிகளை அச்சடித்து வருகிறது.

குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பில்,

அச்சேற்றும் போது ஏற்படும் பிழைகளும் உள்ளன. மூன் பப்ளிகேஷன் வெளியீடு தமிழ்மொழி குர்ஆனில் மூலமொழியில் ஒரு வசனத்தை மேலும், கீழுமாக மாற்றி அச்சடித்து விட்டார்கள். இது சதாரணமாக மனிதருக்கு ஏற்படும் கவனக்குறைவு அவ்வளவுதான். இதற்காக பொருட்செலவு, உடல் உழைப்பு ஆகியவற்றை வீணாக்கி ஆயிரக்கணக்கான குர்ஆன் பிரதிகளை வெளியிடாமல் இருக்க வேண்டிய அவசியமில்லை.



வசனத்தைத் தனி ஸ்டிக்கரில் அச்சடித்து தவறராகப் பதியப்பட்ட வசனத்தின் மேல் ஒட்டிக்கொள்ளும்படி தனி ஏற்பாடு செய்தார்கள்.

ஏற்கெனவே வெளியிட்ட குர்ஆனில் அச்சுப் பிழைகள் ஏற்பட்டு, படிப்பவர்கள் அதைச் சுட்டிக்காட்டினால் அடுத்த பதிப்பில் திருத்திக்கொள்வார்கள். ஆனால் பிழையாக அச்சடிக்கப்பட்ட குர்ஆன் அப்படியேதான் இருக்கும். அதனால் குர்ஆனை மாற்றி எழுதி விட்டார்கள். அல்லது திருத்திவிட்டார்கள் என்று அர்த்தமல்ல.

குர்ஆன் பலவகையில் உள்ளது என்று பிறமத நண்பர்கள் எடுத்து வைக்கும் வாதங்களில் ஒன்று 019:019வது வசனமாகும். இந்த வசனத்தை குர்ஆன் பிரதிகளில் மாற்றி எழுதியுள்ளனர் என்பது அவர்களின் குற்றச்சாட்டு. இது குறித்து பிறமத நண்பர்களின் விமர்சனத்தை தனியாக எழுதுவோம். இங்கு நாம் சொல்ல வருவது,



0019:019வது வசனத்தில் ''லிஅஹப'' என்று இருக்க வேண்டும். மூன் பப்ளிகேஷன் வெளியிட்ட குர்ஆனில் ''லஅஹப'' என்று அச்சடித்துள்ளனர்.

இது குர்ஆனில் உள்ள பிழை இல்லை. அச்சேற்றும் போது கவனக்குறைவினால் ஏற்பட்ட தவறாகும். இதை அடுத்த பதிப்பில் திருத்திக்கொள்ள முடியும். இது போன்ற ஓரெழுத்து பிழைகளை மையமாக வைத்தே பிறமத நண்பர்களின் விமர்சனங்கள் அமைந்துள்ளது.

இப்படி உலகில் பல குர்ஆன் பிரதிகளில் அச்சுப் பிழைகள் ஏற்பட்டு அது திருத்தம் செய்யாமல் இருந்தால் அது மனிதர்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட பிழைகளே தவிர, குர்ஆனில் உள்ள பிழைகள் இல்லை!

இறைவன் ஓசையாகவே குர்ஆனை அருளினான். என்பதால் குர்ஆன் பிரதிகளை, குர்ஆன் ஒலியோடு ஒப்பிட்டுப் பார்ப்பது மிக அவசியம்!

Friday, September 12, 2008

7 வட்டார மொழியில் குர்ஆன் அருளப்பட்டது!

இஸ்லாத்தை விமர்சிக்கும் பிறமத நண்பர்கள் ஒரு குர்ஆனா பல குர்ஆன்களா!? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?!

Quran or Qurans?!

இக்கட்டுரையை அரபியில் படிக்க: النسخة العربية

இந்த கட்டுரைக்கான விவரங்கள் கீழ் கண்ட புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது:

The reading ways of Quran dictionary: (moa'agim alqera'at alqura'nia):

இது ஒரு அரபி மொழியில் எழுதப்பட்ட புத்தகம் மற்றும் இதனை இஸ்லாமிய அறிஞர்கள் எழுதினார்கள். குவைத் பல்கலைக்கழகம்(Kuwait University) இதனை 8 பாகங்களாக வெளியிட்டது. இதன் முதல் பதிப்பு 1982ம் ஆண்டு (அரபியில்) வெளியிடப்பட்டது, இதன் ஆசிரியர்கள்:

டாக்டர். அப்துல் அல் சலாம் மக்ரெம் (Dr. Abdal'al Salem Makrem)
டாக்டர். அஹமத் மொக்தார் ஒமர் (Dr. Ahmed Mokhtar Omar)

இவர்கள் இருவரும் குவைத் பல்கலைக் கழகத்தில் அரபி மொழி பேராசிரியர்களாக இருக்கிறார்கள்.
புத்தக பதிப்பாளர்: ஜத் அல்சலாசல்-குவைத் (Zat Alsalasel – Kuwait)

முன்னுரை:

உத்மான் இபின் அஃபான் காலம் வரைக்கும் பல குர்‍ஆன்கள் [massahif] எழுதப்பட்டது. இவர் இதர குர்‍ஆன்களை எரித்துவிட்டார் மற்றும் ஒரு குர்‍ஆனை ஆதிகாரபூர்வமான பிரதி என்று வைத்துக்கொண்டார்.

உதாரணத்திற்கு, கீழ்கண்ட குர்‍ஆன் வகைகள்:

1. அலி பின் அபி தலிப் என்பவரின் படி குர்‍ஆன் (Quran according to Ali bin abi talib)
2. இபின் மஸூத் என்பவரின் படி குர்‍ஆன் (According to Ibn Mass'oud)
3. அபி பின் கப் என்பவரின் படி குர்‍ஆன் (According to Aobi bin ka'ab)

இதன் பொருள் இவர்கள் குர்‍ஆனை எழுதினார்கள் என்று பொருளில்லை; இதன் பொருள் அவர்கள் குர்‍ஆனை எப்படி படிக்கவேண்டும் என்ற விவரங்களை கொண்டு இருந்தனர்.

குர்‍ஆனை 7 வகையில் படிக்கலாம்(ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்‍ஆன் வசனத்தின் படி [alssib' ailmithani]) + 3 இதர வழிகள் (mokimila) + 4 கூடுதலான வழிகள், இதை இயல்புக்கு மாறான முறை[shaza] என்பார்கள்.

ஏழு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:

1. நஃபா: கலன் + வர்ஷ் (Nafaa': Qalon + Warsh)
2. இபின் கதிர்: அல்பிஜி + கோன்பில் (Ibn Kathir: Albizi + Qonbil)
3. அபி அம்ரொ: அல்தோரி + அல்சோசி (Abi amro: Aldori + Alsosi)
4. இபின் அமிர்: இபின் அபன் + இபின் த்வான் (Ibn Amer: Ibn Aban + Ibn Thkwan)
5. அச்செம்: அபோ பைகர் + ஹஃபஸ் (Assemm: Abo Biker + Hafas)
6. அல் கெஸ்ஸய்: அலித் + அல்தோரி (Alkessa'i: Allith + Aldori)
7. ஹம்ஜா: அல்பிஜாஜ் + அபோ ஈஸா அல்சிர்பி (Hamza: Albizaz + Abo Isa Alsirfi)


இங்கு பதிவு செய்துள்ள குழப்பமான கருத்துகளில் பிறமத நண்பர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று முழுதும் புரியவில்லை என்றாலும் ''குர்ஆன் ஒன்றல்ல, ஏழு வகையான குர்ஆன் உள்ளது'' என்று சொல்கின்றனர் என்று விளங்குகிறது. எடுத்து வைக்கும் சான்றுகளில் இவர்களுக்கே நம்பிம்கையில்லை என்பதை இவர்களின் தடுமாற்றம் தெளிவுபடுத்துகிறது. இவர்கள் பதியும் கருத்துக்கள் இவர்களுக்கேப் புரியாமல் போய் விடுகிறது என்பதை அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்,

//நான் இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்பது மிகவும் தெளிவாக உள்ளது; அதாவது ஒரே ஒரு குர்‍ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்லமுடியாது.//


தெளிவில்லாத விமர்சனத்தைப் பதிவு செய்கிறோம் என்பது அவர்களுக்கே உறுத்தலாக இருப்பதால் ''மிகவும் தெளிவாக உள்ளது'' என்று சான்றிதழ் வழங்கிக் கொள்கிறார்கள்.

நண்பர்களே! உலகில் ஒரே ஒரு குர்ஆன் உள்ளதாக யாரும் சொல்ல மாட்டார்கள்! உலகம் முழுதும் உள்ள குர்ஆன் பிரதிகளை கணக்கிட்டால் பல கோடி குர்ஆன் பிரதிகளை கண்டெடுக்கலாம். விஷயத்துக்கு வருவோம்,

வட்டார மொழி

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாநில மக்களும் பேசுவது தமிழ் என்றாலும் ஒவ்வொரு இடத்திலும் பேசும் தமிழில் வித்தியாசமிருக்கும். இதை வட்டார மொழி என்று சொல்வார்கள். பேசு பொருள் ஒன்றாக இருந்தாலும் பேசும் ஒலியில் ஏற்ற இறக்கமிருக்கும். ஒருவர் தமிழ் பேசுவதை வைத்தே அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறிவிடலாம். இதில் இலங்கைத் தமிழ் வித்தியாசமான தனித் தமிழ் பேச்சாக இருக்கும். பயிற்சி எடுத்தாலே தவிர ஒரு வட்டாரப் பேச்சை இன்னொரு வட்டாரத்தைச் சேர்ந்தவர் பேசுவது கடினம். அந்த அளவுக்கு வட்டார மொழி ஒருவரின் பேச்சில் ஊறிப்போனதாகும்.

''ஒரேயொரு (வட்டார) மொழிவழக்குப்படி ஜிப்ரீல்(அலை) அவர்கள் (குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத்தந்தார்கள். அதை இன்னும் பல(வட்டார) மொழிவழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத்தருமாறு அவர்களிடம் நான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க) எனக்கு அவர்கள் அதிகப்படுத்திக்கொண்டே வந்து இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறால்கள். (புகாரி, 3219, 4991)

திருக்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டது. அரபு மொழியில் ஏழு வட்டார மொழியில் ஓதுவதையே பிரபலமான ''ஏழு கிராஅத்துகள்'' - ஏழு வகையான ஓதும் முறைகள் - என்று சொல்வார்கள்.

ஏழு வகையான ஓதும் முறைகளையே மாறுபட்ட ஏழு வகையான குர்ஆன்கள் இருக்கின்றன என்று புரிந்து கொண்டு, //''ஒரே ஒரு குர்‍ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்லமுடியாது.''// என்ற தவறான விமர்சனத்தை வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வைத்துள்ள ஆதாரங்கள் மறு ஆய்வுக்குரியவை என்பதை இங்கு கூறிக்கொள்கிறேன்.

ஏழு வகையான ஓதுதல்

''இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம்(ரலி) 'அல்ஃபுர்கான்' எனும் (25 வது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை செவியுற்றேன். அவரின் ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்டபோது எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அதை அவர் ஓதிக்கொண்டிருந்தார். தொழுகையில் வைத்தே நான் அவரைத் தண்டிக்க முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும்வரை பொறுத்துக் கொண்டேன்.

(அவர் தொழுது முடித்த) பிறகு அவரின் மேல் துண்டைக் கழுத்தில் போட்டுப் பிடித்து, 'நீர் ஓதியபோது நான் செவியுற்ற இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக் காண்பித்தது யார்?' என்று கேட்டேன். அவர், 'இதை எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் ஒதிக் காண்பித்தார்கள்' என்று பதிலளித்தார். உடனே நான், 'நீர் பொய் சொல்லிவிட்டீர்! ஏனெனில், நீர் ஓதியதற்கு மாற்றமாகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை எனக்கு ஓதிக்கொடுத்தார்கள்' என்று கூறியபடி அவரை இழுத்துக் கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்களிடம், '(இறைத்தூதர் அவர்களே!) தாங்கள் எனக்கு ஓதிக்கொடுக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் 'அல்ஃபுர்கான்' அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன்' என்று சொன்னேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவரை விடுங்கள்!' என்று கூறிவிட்டு (ஹிஷாம் அவர்களை நோக்கி), 'ஹிஷாமே, நீங்கள் ஓதுங்கள்!' என்றார்கள். அவர் என்னிடம் ஓதியது போன்றே நபி(ஸல்) அவர்களுக்கு முன்னாலும் ஓதிக் காட்டினார். (இதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது' என்று கூறினார்கள்.

பிறகு (என்னைப் பார்த்து), 'உமரே, ஓதுங்கள்!' என்று கூறினார்கள். எனக்கு அவர்கள் ஓதிக்கொடுத்திருந்த முறைப்படி நான் ஓதினேன். (அதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது. இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள்.'' என்று உமர் பின் கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, 4992, 5041, 6936, 7550)

நபி (ஸல்) அவர்களின் காலத்தில், இரு நபித்தோழர்கள் குர்ஆனை இரு வகையாக ஓதியிருக்கிறார்கள். இரு ஓதலையும் நபி (ஸல்) அவர்கள் சரி என அங்கீகரித்துள்ளார்கள் என்றால் இருவரும் குர்ஆன் வசனங்களை மாற்றி ஓதினார்கள் என்று பொருள் கொள்ள முடியுமா? என்றால் இல்லை. உதாரணமாக:

நபித்தோழர் ஹிஷாம் (ரலி) அவர்கள் திருக்குர்ஆனில் அல்ஃபுர்கான் எனும் 25வது - அத்தியாயத்தை ஓதியதாக அறிவிப்பில் உள்ளது. ஃபுர்கான் அத்தியாயத்தின் தொடக்க வசனம்:

''(சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியவான்'' என்று கூறுகிறது. தொழுகையில் முன்னின்று ஓதும் இமாம் இதை பிழையாக ஓதினாலோ, அல்லது மறதியாக ஒரு வார்த்தையை விட்டுவிட்டாலோ, அவருக்குப் பின்னின்று தொழுபவர்கள் தவறைத் திருத்தியும், மறந்த வசனத்தை நினைவு படுத்தியும் எடுத்துச் சொல்வார்கள்.

இந்த அடிப்படையில், ஹிஷாம் (ரலி) அவர்கள் அல்ஃபுர்கான் அத்தியாய வசனங்களை மாற்றியோ, தவறாகவோ ஓதியிருந்தால் தொழுகையிலேயே அவர் திருத்தப்பட்டிருப்பார். ஹிஷாம் (ரலி) அவர்களின் குர்ஆன் ஓதலை, பின்னின்று தொழுத மற்ற நபித்தோழர்கள் ஆட்சேபிக்கவில்லை. உமர் (ரலி) அவர்களும் அவர் ஓதி முடிக்கும் வரை ஆட்சேபிக்கவில்லை என்பதிலிருந்து ஹிஷாம் (ரலி) அவர்கள் குர்ஆன் வசனங்களை சரியாகவே ஓதியுள்ளார்கள் என்பது தெளிவு!

ஹிஷாம் (ரலி) அவர்கள் சரியாக ஓதியிருந்தால் அதை உமர் (ரலி) அவர்கள் ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு, ஓதிய வகையில் மாற்றமிருந்தது. அதாவது ஓதிய வட்டார மொழி வித்தியசமாக இருந்ததால் உமர் (ரலி) அவர்களுக்கு அது குர்ஆன் ஓதும் முறையாக இல்லையே என்று தோன்றியிருக்கிறது, குர்ஆனை மாற்றி வேறு முறையில் ஓதிவிட்டதாகக் கருதி, அதைக் கண்டிப்பதற்காக ஹிஷாம் (ரலி) அவர்களின் கழுத்தில் துண்டைப் போட்டு இழுத்து, நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படுகிறார்.

நபி (ஸல்) அவர்கள், இருவரும் ஓதியது சரிதான் என்று கூறிய பின் உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொண்டதிலிருந்து, ஹிஷாம் (ரலி) அவர்கள் குர்ஆனை ஓதிய முறையும் நபி (ஸல்) அவர்களால் அங்கீகரிக்கப்பட முறைதான் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருந்தது. தெரிந்த பின் ஏற்றுக்கொண்டார்கள் என்று விளங்கலாம்.

குர்ஆன் ஓதும் முறை

''குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக!'' (திருக்குர்ஆன், 073:004)

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ''குர்ஆனை எனக்கு ஓதிக்காட்டுங்கள்'' என்று சொன்னார்கள். நான் ''தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க , தங்களுக்கு நான் ஓதிக்காட்டுவதா?'' என்று கேட்டேன். அவர்கள் ''பிறரிடமிருந்து அதை நான் செவியேற்க விரும்புகிறேன்'' என்று சொன்னார்கள். என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, 5049)

நபி (ஸல்) அவர்களின் ஓதுதல் முறை எப்படி இருந்தது என்று கேட்டேன். அதற்கவர்கள், ''நீட்டி ஓதுதலே அவர்களின் வழக்கம் என்று கூறிவிட்டு பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் எப்பதில் ''பிஸ்மில்லா...ஹ் என நீட்டுவார்கள், அர்ரஹ்மா...ன் என்றும் நீட்டுவார்கள், அர்ரஹீ...ம் என்றும் நீட்டுவார்கள்'' என்று பதிலளித்தார்கள். (புகாரி, 5046)

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் (தமது ஒட்டகத்தின் மீதர்ந்தபடி) 'அல்ஃபதஹ் (48வது) அத்தியாத்தைத் 'தர்ஜீவு' செய்து (ஓசை நயத்துடன்) ஓதிக்கொண்டிருந்தார்கள். (புகாரி, 4281, 4835)

''தர்ஜீவு'' என்பதற்கு மீட்டுதல் என்று பொருளாகும். ஒரு எழுத்தைத் திரும்பத் திரும்ப தொண்டைக்குக்கொண்டு வந்து ஓசை எழுப்பி ஓதுவதாகும். ஆ எழுத்தை ஆ ஆ ஆ என்று இழுத்து ஓதும்போது ஒரே எழுத்தின் ஒலி நீண்டு ஓசை நயத்துடன் ஓதும் முறைக்கு தர்ஜீவு எனப்படும்..

பாங்கொலியில் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்... தொழுகையின் அழைப்பை குரல் வளமிக்கவர் நன்றாக நீட்டிச் சொல்லும் போது கேட்க இனிமையாக இருக்கும். எடுத்துக்காட்டாக: நாகூர் ஹனீஃபா என்ற முஸ்லிம் பாடகர் ஒரு பாடலில் பாங்கு சொல்லியிருப்பார் அவரின் கனத்த குரலுக்கு நீட்டி நிறுத்தி சொல்லியிருக்கும் பாங்கை தர்ஜீவு என்று சொல்லலாம்.

குர்ஆனை மனனம் செய்தவர்கள் வெவ்வேறு முறைகளில் நீட்டி இழுத்து ஓதியிருக்கிறார்கள். ''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்'' என்ற தொடக்க வசனத்தை ஓதி நிறுத்திவிட்டு பின்னர் அல்ஹம்துலில்லாஹி... என்று தொடங்குவது ஒருவகை ஓதல்.

''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீமில்ஹம்துலில்லாஹி...'' என்று ஒன்றாகச் சேர்த்து நீட்டி இழுத்து ஓதுவதும் ஒருவகை ஓதல்.

ஒரு வசனத்தையே திரும்பத் திரும்ப ஓதுவதும் ஒருவகை. குரல் வளமிக்கவர்கள் குரலை உயர்த்தி, தாழ்த்தி நீட்டி நிறுத்தி வெவ்வேறு வகையிலும் ஓதிக்கொள்ளலாம் என்பதே பல வகையான ஓதுதல் எனப்படும். ஏழுவகையான ஓதுதல் என்பது ஓர் அளவுதானே தவிர குர்ஆனை இனிமையாக ஓத முடியுமென்றால் ஏழு முறைக்கும் அதிகமான வட்டார மொழியில் ஓதலாம். அதற்கு தடையேதும் இல்லை. குர்ஆன் இனிமையாக ஓதப்பட்டால் செவி தாழ்த்திக் கேட்பவர்களை அது ஊக்கப்படுத்தும்.

இதற்கு உதாரணமாக: 12 வயது எகிப்து சிறுமி சுமையா, இன்று தன் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதில் சிறப்புப் பெற்று வருகிறார். இவருடைய ஓதல், அப்படியே குர்ஆன் ஓதுவதில் பிரபல்யமான அப்துல் பாசித் அவர்களின் ஓதலை நினைவூட்டுகிறது. சுமையாவின் குர்ஆன் ஓதலைக் கேட்பதற்காக மக்கள் திரளாக வந்து கண்ணியத்துடன் காத்திருக்கிறார்கள் என்றால் ராகத்துடன் ஓதும் சுமையாவின் இனிமையான குரல் மக்களை ஈர்க்கிறது.

ஏழு வட்டார மொழி

நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட ஏழு வட்டார மொழி இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்ல எந்த ஆதாரமும் இல்லை. ஒலியைப் பதிவு செய்ய முடியாத காலத்தில் இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்தது என்பதால் அன்று குர்ஆனை ராகமிட்டு ஓதிய முறை இது என்று தீர்க்கமாக சொல்ல இயலாது. குர்ஆனை ஓதும் முறை பற்றி வசனத்திலும் சில அறிவிப்புகளிலும் ஆதாரங்கள் இருப்பதால் குர்ஆனை இனிமையாக ராகமிட்டு ஓதலாம் என்கிறோம்.

ஏழு வட்டார மொழியை பிரபல்யமான ஏழு வகையான கிராஅத் - ஓதல் என்று சொன்னாலும் அறிஞர்களிடையே ஏழு வட்டார மொழி குறித்து கருத்து வேறுபாடுகள் உண்டு. இவற்றை அறிஞர்களின் கருத்தாகவே கொள்ளலாமே தவிர அறிஞர்களின் கருத்துக்களை வலுசேர்க்க நபிவழி அறிவிப்புகளில் சான்று எதுவும் இல்லை.

குர்ஆனை இனிமையாக பல ராகத்துடன் ஓதிக்கொள்ளலாம் என்பதையே ஏழு வட்டார மொழி வழக்கு என்ற அறிவிப்பு அனுமதிக்கிறது. குர்ஆன் வசனங்களை ஏழு விதமாக மாற்றி ஓதினார்கள் என்பதைக் குறிப்பிடவில்லை. இதற்கு மேற்கண்ட உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பில் தக்க சான்றுகள் உள்ளன.

மேலும்,

''நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள்'' (திருக்குர்ஆன், 073:020)

''இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்'' (மேற்கண்ட உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பு, புகாரி, 4992, 5041, 6936, 7550)

குர்ஆனில் சுலபமானதை ஓதுங்கள் என்று - (கூட்டுத் தொழுகையில் முன்னின்று தொழ வைப்பவர் அல்லாத) - ஒருவர் குர்ஆனை நீட்டியும் ஓதலாம், சுருக்கியும் ஓதலாம் என்பதை அனுமதிக்கிறது. ''உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்'' என்பதும் ஒரே ஒரு குர்ஆனையேக் குறிப்பிடுகிறது. ஏழு வகையான குர்ஆனைக் குறிப்பிடவில்லை.

எம்மிடம் உள்ளது இதுவே!

இனி...

குர்‍ஆனை 7 வகையில் படிக்கலாம்(ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்‍ஆன் வசனத்தின் படி [alssib' ailmithani]) + 3 இதர வழிகள் (mokimila) + 4 கூடுதலான வழிகள், இதை இயல்புக்கு மாறான முறை[shaza] என்பார்கள்.


ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தின்... என்று விளக்கியிருக்கும் பிறமத நண்பர்களே!

ஏழு வித்தியசாமான குர்ஆன்கள் உண்டு என்ற உங்களின் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, வித்தியாசப்பட்ட குர்ஆன் வசனங்களை சான்றுகளுடன் களத்தில் வையுங்கள்!

அதாவது, ''ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தின் படி'' இந்த ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தையும், +3 +4 இதர மற்றும் கூடுதலான, இதில் இயல்புக்கு மாறான முறை என்ன? என்பதையெல்லாம் சற்று விளக்கிச் சொல்வீர்களாயின் முஸ்லிம்களும் புரிந்து கொள்வார்கள், விளக்குவீர்களா...?

சம்பந்தப்பட்ட பதிவில், நீங்கள் சரித்திரங்களைத் திரித்துள்ளீர்கள். ஆதாரங்களுடன் அடுத்து சந்திப்போம்.

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Friday, September 05, 2008

குர்ஆனில் பிழைகண்ட அசத்தியவான்களுக்கு!

இஸ்லாம் மார்க்கத்தின் இறைவேதம் திருக் ''குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்'' என்று சில பிற மத நண்பர்கள் திருக்குர்ஆனில் பிழையை (!?)க்கண்டு பிடித்துள்ளனர். திருக்குர்ஆனில் சில எழுத்துப் பிழைகள் உண்டு! அந்த எழுத்துப் பிழைகளை திருத்தம் செய்யாமலேயே கால காலமாக குர்ஆனில் நீடிப்பது அதிலும் திருத்தலும் செய்யக்கூடாது என்ற எண்ணத்திலேயே திருக்குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் தொடர்ந்து நீடித்து வருகிறது.

திருக்குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் பற்றி வரும் பதிவுகளில் தெரிந்து கொள்வோம்.

தற்போது, பிற மத நண்பர்கள் ''குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்'' என்று திருக்குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகளுக்கு சம்பந்தமில்லாதவற்றை குறிப்பிட்டுள்ளனர் அவற்றை இங்கு பார்ப்போம்,


குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்

Scribal errors in the Qur'an

கீழ் கண்டவற்றில் (1) என்று உள்ள பத்தியில்(Column) இருக்கும் வார்த்தைகள் இப்போது உள்ள குர்‍ஆனில் உள்ளவைகள் ஆகும். அதே போல (2) என்று உள்ள பத்தியில் இருக்கும் வார்த்தைகள் உண்மையில் அவ்வார்த்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்றும் மற்றும் அரபியில் அதனை எப்படி சரிபடுத்தினார்கள் எனபதையும் குறிக்கும்.
(2) (1) (2) (1)


மேலே குறிப்பிடப்பட்ட சில எழுத்து பிழைகள் பற்றி கீழ் கண்ட கட்டுரைகளில் விவாதிக்கப்படுகிறது.

மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 11ல் உள்ள குர்‍ஆன் வசனம் 21:88 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: page 141, section 3 (a).

மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 15ல் உள்ள குர்‍ஆன் வசனம் 27:21 பற்றிய
விவரங்கள் அறிய படிக்கவும்: page 96f, second last paragraph.

மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 17ல் உள்ள குர்‍ஆன் வசனம் 5:29 ஐ பற்றிய
விவரங்கள் அறிய படிக்கவும்: page 18f and page 133, section (d).

மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 19ல் உள்ள குர்‍ஆன் வசனம் 51:47 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: the middle of page 19 and the last half of page 125.

மேலே உள்ள வார்த்தைகளில் எழுத்துபிழைகள்(Scribal Errors) உள்ளது என்று இபின் கல்தன்(Ibm Khaldun – Classical Scholar) என்பவர் அங்கீகரித்துள்ளார் மற்றும் இவைகள் பிரச்சனைகள்(Problems) என்று ஹமிதுல்லா(Hamidullah – Modern Scholar) என்ற அறிஞரும் அங்கீகரித்துள்ளார்.


பிற மத நண்பர்களே!

விமர்சனம் எதைப் பற்றி என்றாலும் அது அறிவுப்பூர்வமாக நன்கு நீங்கள் அறிந்ததை எடுத்து வைத்து விமர்சனம் செய்யுங்கள், அது வரவேற்கத்தக்கதாக அமையும். நீங்கள் அறியாதவற்றை இது இப்படித்தான் இருக்கும் என்று கோணலாக சிந்தித்து விமர்சிக்காதீர்கள், அது உங்களை கோமாளி பட்டியலில் சேர்த்துவிடும்.

மொழி எழுத்துக்களின் உருமாற்றம்

மொழி எழுத்துக்கள் எல்லாக் காலங்களிலும் ஓர் உருவ அமைப்பில் இருந்ததில்லை.

ஆங்கில எழுத்தின் உருமாற்றங்கள் மற்றும் எழுத்துக்களின் பிற்சேர்க்கையும் அறிய, இங்கு சொடுக்கவும்.

தமிழ் எழுத்துக்களின் உருமாற்றங்கள் படத்தில்:



பண்டைய தமிழ் எழுத்துக்கள் பண்டைய கால மக்களுக்க பழக்கமாகியிருந்தது. இன்று நமக்கு அது குழந்தையின் கிறுக்கலாகத் தோன்றுகிறது. நம் காலத்தில், ''இப்படிக்கு'' என்று எழுதும் போது ''க்கு'' என்பதை முன்பு சேர்த்து எழுதுவோம். ''யானை'' என்று எழுத இந்த ''னை'' யை எழுத மாட்டோம் யானை தும்பிக்கையைத் தூக்கிப் பிளிரும் ஸ்டைலில் யானையின் தும்பிக்கை வடிவோடு ''ன'' வை சேர்த்து எழுதுவோம். இந்த முறை தமிழ் உருமாற்ற எழுத்துக்கள் மறைந்து, எழுத்தில் புதிய உருமாற்றங்கள் தோன்றுகின்றன.

இது எல்லா மொழி எழுத்துக்களுக்கும் உள்ள பொதுவான விதி. எழுத்துரு மாறும் போது சமூகம் அதை எதிர்ப்பதில்லை. பழையன கழிதல் புதியன புகுதல் என எழுத்துருவில் மட்டும் மாற்றங்கள் ஏற்படுவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். இன்று நாம் எழுதும் தமிழ் எழுத்துக்கள் நாளை மாறலாம். எனவே எழுத்துக்களில் மாற்றம் ஏற்படுவது தவறைத் திருத்துவதல்ல, எழுத்துருவில் தோற்றுவிக்கும் முன்னேற்றம் என்று சொல்லலாம்.

பிற மத நண்பர்கள் சுட்டியுள்ள படத்தைப் பார்க்கலாம்,



மேலே படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 11ல் உள்ள குர்‍ஆன் வசனம் 21:88 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: page 141, section 3 (a).


பிற மத நண்பர்கள் குறிப்பிட்டுள்ள, படத்தில் இடதுபுறம் 11 வது வரிசையில் நாம் கட்டம் வரைந்துள்ள வாசகத்தின் உச்சரிப்பு ''நுன்ஜி'' இரண்டு கட்டத்திலும் உள்ள வார்த்தை ''நுன்ஜி'' என்பது சிறிது அரபி அறிந்திருந்தாலும் புரிந்து கொள்ளலாம். இதற்கு பெரிய அரபுப்புலமை பெற்றிருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

ن+ن+ج+ي=ننجي

ந, ன, ண ஆகிய உச்சரிப்புக்கு அரபியில் ن நூன் என்ற உச்சரிப்பில் இந்த ஓர் எழுத்து மட்டுமே உள்ளது. ந, நா, நி, நீ, ன, னா, ணா, னி, னீ, ணி, ணீ தமிழ் எழுத்துக்களில் நெடில் குறில்கள் இடும்போது எவ்வாறு உச்சரிப்புகள் மாறுகிறதோ அதுபோல், நூன் என்ற மேற்கண்ட அரபி எழுத்தில் தேவையான நெடில் குறில்களை இட்டால் ந, ந் நா, நி, நீ, நு. நூ என்ற உச்சிப்பைப் பெறலாம்.

அரபு எழுத்துகளில் இரண்டு நூன், ஒரு ஜீம், ஒரு ய இந்த நான்கு எழுத்துக்களை நெடில் குறிகளுடன் எழுதினால் نُنْجِي - ''நுன்ஜி'' என்ற வாசிக்கலாம். நுன்ஜி என்ற பதங்கள் இடம்பெற்ற திருக்குர்ஆன் வசனங்கள் படத்தில்:

திருக்குர்ஆன், 010:103வது வசனம்



திருக்குர்ஆன் 019:072வது வசனம்



திருக்குர்ஆன் 021:088வது வசனம்



*****

திருக்குர்ஆன் 010:103



திருக்குர்ஆன் 019:72



திருக்குர்ஆன் 021:088



பிறமத நண்பர்கள் எடுத்துக் காட்டியுள்ள படத்தில் 11வது வரிசையில் நாம் வட்டமிட்ட இரண்டிலும் நுன்ஜி என்று சரியான அரபி எழுத்துக்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றுக்கொன்று எழுத்துருவின் மாடல் - ஸ்டைல் பழசே தவிர, புதிய மாடலில் - புதிய ஸ்டைலில் நுன்ஜி என்று குர்ஆன் வசனப் படங்களில் சிவப்பு, கருப்பு வண்ணத்தில் நாம் வட்டமிட்டுள்ள எழுத்துகளுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.

இதை அறிவுக் குருடுத்தனமாக - //உண்மையில் அவ்வார்த்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்றும் மற்றும் அரபியில் அதனை எப்படி சரிபடுத்தினார்கள்// - என்று விமர்சிக்கும் சத்தியவான் என்ற பெயரில் கயமைத்தனம் செய்யும் அசத்தியவான்கள் உணர வேண்டும். இறை வேதத்தில் கைவரிசையைக் காட்டும் கயமைத்தனத்தை தங்கள் வேதத்தோடு நிறுத்திக் கொள்ளட்டும்.

எங்கே பார்க்கலாம்,

மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 11ல் உள்ள குர்‍ஆன் வசனம் 21:88 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: page 141, section 3 (a).


உங்கள் படத்தில் 11ம் வரிசையில் உள்ள 021:088வது குர்ஆன் வசனத்தை அரபியில் ஏற்கெனவே இருந்ததை பிற்காலத்தில் என்ன சரிபடுத்தினார்கள்? என்பதை மக்களுக்கு விளக்கி, உங்களை யோக்கியர்கள் என்பதை நிறுவுங்கள் பார்க்கலாம். இல்லையேல் உங்களை இஸ்லாத்திற்கு எதிரான ''வைரஸ்'' பட்டியலில் எழுதிவிடுவார்கள்.

மீண்டும்,

உங்கள் அயோக்கிய அசத்தியவான்கள் குறித்து அடுத்த பகுதியில்...

அன்புடன்,
அபூ முஹை

Tuesday, August 19, 2008

தகாதவர்கள் கையில் ஊடகங்கள்!

ஊடகங்களில் தொடரும் தனிமனிதத் தாக்குதல்கள்

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008

ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றத் தக்கவை ஊடகங்கள் என்றால் மிகையில்லை. ஆனால், அவையே தகாதவர்களின் கரங்களில் சிக்கும்போது விளைவு படுமோசமடைவதையும் மறுப்பதற்கில்லை.

ஒரு சமுதாயம் முன்னேற்றம் பெறுவதற்கும் தலைநிமிர்ந்து நடப்பதற்கும் அச்சமுதாயத்தின் இளவல்கள்தாம் பெரும் பங்காற்றக் கூடியவர்கள். அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்தினால் சாதித்துக் காட்டுவார்கள். அவர்களை நெறிப் படுத்தத் தவறினால் தங்களுக்கும் தம் தலைவர்களுக்கும் தம் சமுதாயத்திற்கும் அவர்களால் விளையும் தீங்குகள், அவமானங்கள் எல்லை மீறிவிடும்.

காட்டுப்பாடற்ற இணைய வசதியான மின்னஞ்சல் என்ற ஊடகம் இயக்க வெறிபிடித்த இளைஞர்களிடம் சிக்கியபோது தம்மை மறந்தனர்; தரம் தாழ்ந்தனர். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் சில முஸ்லிம் இயக்கங்களின் இளவல்களின் கரங்களில் மின்னஞ்சல் வசதி சிக்கிப் படாத பாடுபட்டது. மாற்றி மாற்றித் தூற்றிக் கொள்வற்கும் அவற்றைப் பெறுபவரது அனுமதியின்றிப் பலருக்கும் அனுப்பி வைப்பதுமாக ஃபித்னாக்களைப் பரப்புவதில் இயக்க இளவல்கள் படு உற்சாகத்துடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது நமக்குக் "குரங்கு கையில் பூமாலை" பழமொழிதான் நினைவுக்கு வந்தது.

நிலைமை மாறுதலடைந்தது; அதாவது மிக மோசமடைந்தது! இலவச வலைப்பூக்கள் இணையத்தில் கிடைக்கத் தொடங்கியதிலிருந்து இளவல்கள் ஆளுக்கொன்றாய் எடுத்துக் கொண்டு, ஷைத்தானின் குணங்களை ஆவணப் படுத்தத் தொடங்கினர்.

இஸ்லாமியப் பிரச்சாரத்துக்கும் கொள்கை விளக்கங்களுக்கும் அருமையாகப் பயன் படத்தக்க வகையில் அல்லாஹ் வழங்கியுள்ள அற்புதமான ஊடகங்களான மின்னஞ்சலையும் வலைப்பூக்களையும் "முகத்திரையைக் கிழிப்போம்", "தோலுரித்துக் காட்டுவோம்", "வேஷத்தைக் கலைப்போம்" போன்ற கொள்கை(?) முழக்கங்களோடு கட்டற்ற இணைய வசதியை எதிர்க் கருத்துக் கொண்டவர்களை நோக்கி இளவல்கள் திருப்பினர். தாக்குதல்-எதிர்த் தாக்குதல் ஆகிய பாவங்களில் சிந்தனையைச் செலவு செய்து, தங்களது பொன்னான நேரத்தை வீணடிப்பதில் வீறு கொண்டு எழுந்தனர்.

"இளவல்களின் ஆர்வக் கோளாறுக்குத் தலைவர்கள் என்ன செய்வார்கள்?" என்று நாம் நல்லெண்ணம் கொண்டிருந்ததைக் கடந்த 17ஆம் தேதி (17.08.2008) இரவு விண் தொலைக்காட்சி நிகழ்ச்சி உடைத்துப் போட்டது.

ரமளான் பிறை, ஈதுப் பெருநாள் ஆகியவற்றுள் மாற்றுக் கருத்துகள் கொண்டிருக்கும் ஓர் அமைப்பின் நிர்வாகிகளை, "இறையச்சம் அற்றவர்கள்", "கருத்தில் தெளிவில்லாதவர்கள்", "தனித்துக் காட்டுவதற்காகத் தவறுகளைச் செய்யச் கூடியவர்கள்" என்றெல்லாம் அவைப் பண்பாடுகளை மறந்து நிகழ்ச்சி நடத்தியவர்கள் திட்டித் தீர்த்தது மட்டுமின்றி, எதிர்க் கருத்துக் கொண்டவர்களின் உள்ளங்களுக்குள் ஊடுருவிப் பார்த்ததுபோல் "உள்நேக்கம் தெரிகிறது" என்றார்கள்.

உதிரத்தை வியர்வையாக்கிக் காசு சம்பாதித்து அனுப்புபவனிடம் ஓயாமல் நிதி வேண்டிக் கோரிக்கை வைப்பவர்கள், அந்தக் காசு எதற்காகச் செலவிடப் படவேண்டும் என்பதைச் சற்றே சிந்தித்துப் பார்த்து, தங்களது கருத்துகளைச் சான்றுகளின் அடிப்படையில் வலியுறுத்துவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மாற்றுக் கருத்துகளில் வலுவில்லை என்றால், அதையும் - அதாவது கருத்தை மட்டும் - விமர்சனம் செய்ய வேண்டும்.

அதை விடுத்துத் தனிநபர் தாக்குதலைத் தொலக்காட்சியில் நடத்தித் தங்கள் இளவல்களுக்குப் போலி உற்சாகம் அளிக்க வேண்டாம் என்பது சம்பந்தப் பட்ட இயக்கத் தலைவர்களுக்கு நாம் முன்வைக்கும் வேண்டுகோளாகும்.

அமைப்புகளுக்கு நிதியுதவி செய்பவர்கள் தஃவாவுக்கென்று தருகிறார்கள்; ஒருவரை ஒருவர் தரம் தாழ்ந்து தாக்கிக் கொள்வதற்கல்ல என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும் என்பதை இங்கு அழுத்தமாகப் பதிவு செய்கிறோம். தலைவர்கள் பண்பாட்டைச் சிறிது கைவிட்டால், இளவல்கள் முழுவதுமாகக் கைவிடுவர் என்பதையும் நினைவுறுத்துகிறோம்.

நல்லதை எடுத்துச் சொல்வது மட்டுமே நமது கடமை; எடுப்பதும் விடுப்பதும் அவரவர் உரிமை.

அனைத்து நிகழ்வுகளையும் தீர்ப்புக்காகக் கணக்கெடுத்து வைப்பது அல்லாஹ்வின் தனியுரிமை. இதை உணர்ந்து செயல் பட்டால் அனைவர்க்கும் பெருமை!

"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நீதியை நிலைநாட்டுவதற்கு நீங்கள் சாட்சியாளர்களாக இருங்கள். ஒரு கூட்டத்தார் மீது உங்களுக்கிருக்கும் வெறுப்பு, நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்டக் கூடாது. நீதி செய்வீர்; அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள்! நீங்கள் செய்பவை அனைத்தையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிந்தவனாவான்" (அல்-குர் ஆன் 005:008).

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Monday, August 11, 2008

இஸ்லாத்தை மறைத்தல்

இஸ்லாம் மறைக்கப்படாத, மறைக்கக்கூடாத, மறைக்க முடியாத மார்க்கம். இறுதி வேதம் திருக்குர்ஆன் மற்றும் குர்ஆனுக்கு விளக்கவுரையாக இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மறைக்கப்படாத வாழ்க்கை குறித்த அறிவிப்புகளும் எவரும் எளிதில் நெருங்கும் அளவுக்குத் திறந்த நூல்களாகவுள்ளது. இணைய வசதி உள்ளவர் விரல் நுனியின் சொடுக்கில் தேவைப்படும் திருக்குர்ஆன் வசனங்களையும், நபிவழி அறிவிப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இறை மார்க்கம் இஸ்லாத்தை முஸ்லிம்கள் மறைத்தார்கள் என்று கூறுவது ஒன்றும் அறியா அப்பாவித்தனமாகும். இவ்வளவு வெளிப்படையான மார்க்கத்தை மறைத்திடவும் முடியாது. ஒன்றை மறைத்தல் என்று சொன்னால் அது யாருக்கும் கிடைக்கவேக்கூடாது. மறைத்து விட்டார்கள் என்று சொல்பவர்கள் மறைத்தது கிடைக்கப் பெற்றதால் தான் மறைத்து விட்டார்கள் என்று சொல்ல முடியும். எனவே மக்களின் பகிரங்கப் பார்வையில் உள்ளதை யாரும் மறைக்க முயலமாட்டார்கள்.

எவரும் எளிதில் அணுகும் வகையில் வெளிப்படையாக இருக்கும் இஸ்லாத்தை, முஸ்லிம்கள் மறைத்து விட்டனர் என்ற பிற மத நண்பர்களின் குற்றச்சாட்டு தவறானது!


(அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)

முன்னுரை: இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்று முஸ்லீம்கள் ஏகமாக சொல்கிறார்கள். ஆனால், முகமது மற்ற நாட்டு மன்னர்களுக்கு எழுதிய கடிதங்களே போதும், நமக்கு இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பதை அறிந்துக்கொள்வதற்கு. மற்ற நாட்டு மன்னர்களுக்கு முகமது கடிதங்கள் மூலம் அழைப்பு விடுத்தார், அபுமுஹை அவர்கள் அக்கடிதங்களின் தமிழ் மொழியாக்கத்தை பதித்துள்ளார். இக்கடிதங்களை ரஹீக் என்ற புத்தகத்திலிருந்து பதித்ததாக, அபுமுஹை அவர்கள் குறிப்பு எழுதியுள்ளார்கள்.

இக்கட்டுரையில் நாம் கீழ் கண்ட இரண்டு விவரங்களைக் காணப்போகிறோம்.

1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்பதை காட்ட‌ முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்.

2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா?


(இஸ்லாம் வளால் பரவிய மார்க்கமா? என்பதுப் பற்றி அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.)

மார்க்கத்தை மறைத்தல்

இஸ்லாத்தை மறைப்பது குறித்து இஸ்லாம் வன்மையாகக் கண்டித்துள்ளது. முஸ்லிம்கள் சத்தியத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை.

''அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.'' (திருக்குர்ஆன், 002:042)

''நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் உண்மையுடன் உம்மை நாம் அனுப்பியுள்ளோம். நரகவாசிகளைப் பற்றி உம்மிடம் கேட்கப்படாது'' (திருக்குர்ஆன், 002:119)

இறைவன் உண்மையுடன் அனுப்பிய இஸ்லாமியத் தூதுத்துவத்தை முஸ்லிம்கள் மற்றவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளையும் அறிவியுங்கள். அதனால் குற்றமில்லை. எவன் என் மீது (நான் சொன்னதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும். (புகாரி)

உண்மையை மறைக்கக்கூடாது!

உண்மையுடன் பொய்களையும் சேர்க்கக்கூடாது!

உண்மையை எடுத்துக்கூறி மக்களை எச்சரிக்க வேண்டும்!

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களைக் குறித்து அறிந்த ஒரேயொரு செய்தியையும் மற்றவருக்கு எடுத்துச் சொல்லிட வேண்டும்!

முக்கிய கவனத்திற்கு: நபியவர்கள் கூறாததை கூறியதாகவும், கூறியதை கூறவில்லை என்றும் நபி (ஸல்) அவர்களின் மீது வேண்டுமென்றே பொய்யுரைப்பவன் நரகத்தில் தன் இருப்பிடத்தைச் சித்தப்படுத்திக்கொள்கிறான்! என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை முன் வைத்துள்ளது இஸ்லாம்.

எதை வேண்டுமென்றே மறைக்கக்கூடாது என்று இஸ்லாம் எச்சரிக்கின்றதோ, அதைக் குறித்து ''இஸ்லாமிய அறிஞர்கள் வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்தார்கள்'' என்ற பிற மத நண்பர்களின் விமர்சனம் மிகவும் பரிதாபத்திற்குரியதாகவுள்ளது.

ஓமன் நாட்டு அரசனுக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-8

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, அல் ஜுலந்தாவின் மகன்களான ஜைஃபர் மற்றும் அப்துக்கு எழுதுவது. நேர்வழியை பின்பற்றுபவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! நான் உங்களிருவருக்கும் இஸ்லாமிய அழைப்பு விடுக்கின்றேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள். நான் மக்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். உயிருடன் இருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்கும், அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுக்கு நிச்சயம் வேதனை உண்டு என்பதை அறிவிப்பதற்கும் அல்லாஹ் என்னைத் தூதராக அனுப்பியிருக்கின்றான். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.''

ஓமன் நாட்டு மன்னருக்கு நபியவர்கள் எழுதிய கடிதத்தின் மேற்கண்ட தமிழ் மொழிபெயர்ப்பு மூலமொழியிலிருந்து நேரடியாக தமிழுக்கு மொழிபெயர்த்தது. தமிழில் மொழிபெயர்க்கும் போது இஸ்லாமிய அறிஞர்கள் வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்தார்கள் என்று பிற மத நண்பர்கள் விமர்சிக்கும் நபியவர்களின் கடிதம் இதுதான்.

இஸ்லாமிய அறிஞர்கள் மறைத்தார்கள் என்று பிற மத நண்பர்கள் குற்றப்படுத்துவது மூலமொழி அரபியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து, பின்னர் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குத் தழுவியதாகும். ஆங்கிலமும், தமிழும் வருமாறு

//ஓமன் நாட்டு அரசருக்கு முகமது எழுதின கடிதம்

"Peace be upon the one who follows the right path! I call you to Islam. Accept my call, and you shall be unharmed. I am God's Messenger to mankind, and the word shall be carried out upon the miscreants. If, therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if you refuse to accept Islam, your power shall vanish, my horses shall camp on the expanse of your territory and my prophecy shall prevail in your kingdom."

ஓமன் நாட்டு அரசருக்கு முகமது எழுதின கடிதம் - தமிழாக்கம்

நேர்வழியில் நடப்பவன் மீது சாந்தி உண்டாகட்டும்! இஸ்லாமிற்கு நான் உங்களை அழைக்கிறேன். என் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் சேதமாகாமல் இருப்பீர்கள். நான் மனித இனத்திற்காக வந்த இறைவனின் தூதுவன்(தீர்க்கதரிசி) ஆவேன், தீமை செய்பவர்கள் மீது இறைவனின் வார்த்தையை காட்டுவதற்காக வந்தேன். எனவே, நீங்கள் இஸ்லாமை அங்கீகரித்தால், என் வலிமையை(POWER) உனக்குத் தருவேன். ஆனால், நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்தால், உன் வலிமை(POWER) அழிக்கப்படும். என் குதிரைகள் உன் நாட்டின் நிலத்தில் பாளயமிறங்கும், என் தீர்க்கதரிசனம் உன் நாட்டின் மீது வெற்றிக்கொள்ளும்.//

பிற மத நண்பர்கள் ஆங்கிலத்தை தமிழில் மொழிபெயர்த்தது சரியா? என்பது வாதமல்ல. ஏனெனில் நபியவர்கள் ஆங்கிலத்தில் கடிதம் எழுதி அனுப்பவில்லை! ஆங்கிலம் ஒரு மொழிபெயர்ப்புதானே தவிர, ஆங்கிலம் மூலமொழி அல்ல. அரபியிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திருந்து தமிழ், இவ்வாறு மொழிபெயர்ப்பிலிருந்து மொழிபெயர்க்கும்போது மூலமொழியில் சொல்லப்பட்ட கருத்தில் சிதைவு ஏற்படும்.

அதற்காக மொழிபெயர்ப்பு கூடாது என்று நாம் சொல்லவில்லை. விவாதம் என்று வந்தால் மொழிபெயர்ப்பில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளில் ''எது சரி?'' என்பதை மூலமொழியோடு ஒப்பிடுவதே முறையாகும். அண்டை நாட்டு அரசர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதிய அரபிமொழி கடிதத்தை இஸ்லாமிய அறிஞர்கள் தமிழுக்குத் தழுவிய கடிதமும், இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்கள் மூன்றாம் மொழி தமிழுக்குத் தழுவிய கடிதமும் மேலே இடம் பெற்றுள்ளன.

இங்கு,

''இஸ்லாமிய அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்க்கும் போது வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து விட்டார்கள்'' என்று கூறும் பிற மத நண்பர்கள், தங்கள் விமர்சனத்தை உண்மைப்படுத்த, இஸ்லாமிய அறிஞர்கள் மறைத்த வார்த்தைகள் எது? என்பதை மூலமொழியிருந்து எடுத்துக்காட்ட கடமைப்பட்டுள்ளனர்.

பிற மத நண்பர்களின் இன்னொரு கேள்வி?

முடிவுரை: இஸ்லாமிய நண்பர் அபூமுஹை அவர்களுக்கு, நீங்கள் எழுதிய கட்டுரைகள் ஒரு குறிப்பிட்ட புத்தகத்திலிருந்து எடுத்து எழுதினீர்கள் என்று சொல்லியுள்ளீர்கள். நான் கேட்க விரும்பும் கேள்வி: அப்புத்தகத்திலே இப்படி உண்மையை மறைத்து இஸ்லாம் ஒரு அமைதி மதம் போல காட்டித் தான் எழுதியிருந்ததா? அல்லது நீங்கள் அதனை மறைத்து எழுதினீர்களா?


பிற மத நண்பர்களே!

கேள்வி எழுப்பியதோடு ''மறைத்த உண்மை எது?'' என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருக்கலாமே!

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Thursday, July 31, 2008

யஹ்யாவும், யோவானும் ஒரே பெயரா?

இஸ்லாம் மார்க்கத்தின் இறைவேதம் திருக்குர்ஆனில் முரண்பாடுகளை ஆய்வுக்குட்படுத்தும் சில பிற மத நண்பர்கள். திருக்குஆனில் சரித்திரத் தவறைக் கண்டு பிடித்து விட்டதாகக் கூறி சில ஆவணங்களைப் பதிவு செய்துள்ளனர். திருக்குர்ஆனை அருளிய அகிலத்தின் இறைவனை பொய்பித்து விட வேண்டும் என்ற தணியாத தாகத்தில் ஆய்வறிவையும் இழக்கத் தயாராகி விட்டனரோ என்று எண்ணுமளவுக்கு திருக்குர்ஆனில் பிழை தேடும் இவர்களின் ஆய்வு மிகப் பலவீனமாக உள்ளது.

திருக்குர்ஆனில் பிற மத நண்பர்கள் கண்டுபிடித்த சரித்திர தவறு !?

குர்‍ஆனின் சரித்திர தவறு: யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)

முன்னுரை: இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட குர்‍ஆனின் வசனங்கள் பற்றி நாம் சிந்தித்துக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறோம். குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 1ஐ தொடர்ந்து, இப்போது இரண்டாம் பாகமாக, அல்லா செய்த ஒரு சரித்திர தவறை காணப்போகிறோம்.

குர்‍ஆன் 19:7ல் அல்லா சொல்கிறார்:

குர்‍ஆன் 19:7

'ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்).

யஹ்யா ( யோவான் or John ) என்ற பெயர் கொண்ட நபர்களை அல்லா, யோவான் ஸ்நானனுக்கு முன்பு ஒருவரையும் உருவாக்கவில்லையாம். அதாவது, யோவான் என்ற பெயர் கொண்ட ஒருவரும் யோவானுக்கு முன்பு வாழவில்லையாம். இப்படி அல்லா சொல்வதினால், அவருக்கு சரித்திரம் பற்றிய‌ விவரம் தெரியவில்லை என்று
புலனாகிறது. சரித்திரத்தை நாம் புரட்டிப்பார்த்தாலும், மற்றும் பைபிளின் பழையை ஏற்பாட்டை புரட்டிப்பார்த்தாலும், யோவான் (John) என்ற பெயர் கொண்டவர்கள் அனேகர் இருப்பதாக நாம் கண்டுக்கொள்ளமுடியும். குர்‍ஆனில் உள்ள பல பிழைகளில் இதுவும் ஒன்று.


(இங்கு பிற மத நண்பர்கள் விமர்சிக்கும் கரு இதுதான். இத்துடன் பிற மத நண்பர்கள் இணைத்துள்ள கி.மு சான்றுகள் சில கீழே இடம்பெறும்)

முக்கியமான ஓர் அடிப்படையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இயேசு தான் ஈஸா என்று முஸ்லிம்களும், முஸ்லிம் அறிஞர்களும் கூறி வந்தாலும், இயேசு என்ற பெயர் தான் ஈஸா என்பதை திருக்குர்ஆன் ஒப்புக் கொள்ளவில்லை.

''மர்யமின் மகன் ஈஸா'' என்றே திருக்குர்ஆனும் நபிமொழிகளும் குறிப்பிடுகின்றன. மர்யம், ஈஸா இது இடுகுறிப் பெயர்கள். இன்னார் மகன் இன்னார் என ஒருவரை அடையாளப்படுத்துவதற்காக அவர் குழந்தையாக இருக்கும் பொழுது சூட்டப்படும் பெயராகும். இந்த இடுகுறிப் பெயரை எந்த மொழியில் எழுதினாலும் மர்யம், ஈஸா என்றே
எழுத வேண்டும். இல்லையேல் ஆவணங்கள் குழப்பமாகிவிடும்.

''நான் இவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்'' (திருக்குர்ஆன், 003:036)

குழந்தை பிறந்ததும் குழந்தையின் தாயாரால் மர்யம் என்று பெயரிடப்படுகிறது.

''அவரது பெயர் மர்யமின் மகன் ஈஸா என்பதாகும்'' (திருக்குர்ஆன், 003: 045)

தாயின் கருவறையில் ஜனிக்கும் முன்னரே இறைவனால் ஈஸா எனப் பெயரிடப்பட்டவர்.

(சற்று வித்தியாசத்துடன், 'அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக' என்று பைபிள் கூறுகிறது)

எல்லாக் குழந்தைகளுக்கும் பெயரிடப்படுவது போல் குழந்தையை அடையாளப்படுத்துவதற்காக மர்யம், ஈஸா என பேரிடப்பட்டார்கள். பெயரின் உச்சரிப்பு மர்யம், ஈஸா என்பதில் திருக்குர்ஆன் பார்வையில் எந்த சந்தேகமும் இல்லை. முந்தைய வேதங்களும் இறைவன் அருளியது என்ற அடிப்படையில் முந்தைய வேதத்தில் மரியம், மரியமின் மகன் ஈஸா என்று பெயரிட்டபடியே திருக்குர்ஆனும் மர்யம், மரியமின் மகன் ஈஸா என்று அழைக்கிறது.

இறைவன் இட்ட ஈஸா என்ற பெயர் பின்னர் இயேசு Jesus என மருவியது. இது ஈஸா என்ற பெயருக்கு மட்டும் ஏற்பட்டதில்லை. (இப்ராஹீம் ஆப்ராஹாம். சுலைமான் சாலமோன் என) பல தீர்க்கத்தரிசிகளின் பெயர்களும் வேறு பெயராக மருவியுள்ளது. (இல்லை என்று மறுப்பவர்கள் தங்கள் வேதத்தின் மூலமொழியிருந்து நிரூபிக்கட்டும்)

ஓர் அசல் பெயர் வேறு பெயராக மருவுவதற்கான உதாரணத்தை பிற மத நண்பர்களின் எழுத்திலிருந்தே எடுத்துச் சொல்ல முடியும்: அல்லாஹ் என்பதை இவர்கள் அல்லா என்றும் முஹம்மது என்பதை முகமது என்றும் குறிப்பிட்டு எழுதுகின்றனர். 'ஹ' வடமொழி எழுத்து என்பதால் அதைத் தவிர்க்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது. வடமொழி எழுத்தாக இருந்தும் கிறிஸ்து, ஸ்தானம் என்று குறிப்பிட 'ஸ' எழுத்தை இவர்கள் எழுதுகின்றனர். அல்லாஹ், முஹம்மது இந்தப் பெயர்களை எப்படிச் சிதைத்தாலும் ஒப்பிட்டுப் பார்க்க மூலமொழி இருப்பதால் எதிர்காலத்தில் இவர்கள் எழுதுவது போல் அப்படியே மருவி விடாது. ''யஹ்யா'' என்ற பெயரும் இப்படித்தான்
மருவியுள்ளது வேறு வகையில்.

'ஸகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்). (திருக்குர்ஆன், 019:007)

கருவறையில் ஜனிப்பதற்கு முன்னரே மர்யமின் மகன் ஈஸாவுக்கு பெயரிடப்பட்டது போல் ஸக்கரிய்யாவின் மகனும் கருவறையில் ஜனிப்பதற்கு முன்னரே இறைவனால் ''யஹ்யா'' என்று பெயரிடப்படுகிறார். இதற்கு முன்னர் யஹ்யா என்ற பெயரிட்டவரை நாம் ஏற்படுத்தவில்லை என்றும் மேலதிகத் தகவலை இறைவன் இங்கு குறிப்பிடுகிறான்.
யஹ்யா என்ற பெயருடையவரை இதற்கு முன் நாம் ஏற்படுத்தவில்லை என இறைவன் கூறுவது, முழு மனித குலத்திலும் இதற்கு முன்னர் யஹ்யா என்ற பெயருடையவர் இருந்ததில்லை என்பதைக் குறிக்கின்றதா? அல்லது இதற்கு முன்னர் யஹ்யா என்ற பெயரில் தீர்க்கத்தரிசி யாரையும் நாம் ஏற்படுத்தவில்லை என்று குறிப்பிடுகின்றதா? இதற்கு ஆலு இம்ரான் - 003வது அத்தியாயத்தில் விளக்கம் கிடைக்கிறது.

அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து ''நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகன்) பற்றி நற்செய்தி கூறுகிறான். அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்'' எனக் கூறினர். (திருக்குர்ஆன், 003:039)

ஸகரிய்யாவின் மைந்தர் கருவறையின் ஜனனத்திற்கு முன்பே யஹ்யா என்று பெயரிடப்பட்டு, நபியாகவும் நியமிக்கப்படுகிறார். என இறைவாக்கு நற்செய்தி கூறுவதிலிருந்து, இதற்கு முந்தைய நபிமார்களில் யஹ்யா என்ற பெயரில் தீர்க்கத்தரியை நாம் ஏற்படுத்தவில்லை என்பதே இறைமொழியின் கருத்தாகும். எனவே ''இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" என்ற திருக்குர்ஆன் வசனம் தவறு என்று எதிர் கொள்பவர்கள், ஸகரிய்யாவுக்கு முந்தைய சரித்திரத்தில் யஹ்யா என்ற பெயரில் நபி இருந்ததை நிரூபித்தாக வேண்டும்.

முற்காலத்தில் ''யஹ்யா'' என்ற பெயரில் உள்ளவர்கள் என்று சரித்திரச் சான்றுகள் சிலவற்றை பிற மத நண்பர்கள் வைத்துள்ளனர்.


சரித்திரத்தில் யோவான்(JOHN) பெயர்களைக் கொண்ட நபர்கள்

1) ஜான் ஹிர்கானஸ் John Hyrcanus (Yohanan Girhan):

இவர் கி.மு. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த "ஹாஸ்மொனியன்" நாட்டு அரச‌னாவார். ஆட்சிகாலம் கி.மு. 134 - 104, மரித்த ஆண்டு : கி.மு. 104. மேலும் விவரங்களுக்கு : பார்க்க John Hyrcanus - Wikipedia John Hyrcanus- Brittanica John Hyrcanus - Jewish Encyclopedia

2) "ஜான்" எஸ்ஸன் - John Essenes:

ஒரு கலகம் செய்த குழுவிற்கு தலைவராக இருந்த "ஜான்" எஸ்ஸன் என்வரைப்பற்றி ஜொஸெபாஸ் சொல்கிறார். "ஜான்" எஸ்ஸன் கி.மு. வில் வாழ்ந்தவர். பார்க்க: "ஜான்" எஸ்ஸன் - John Essenes

3) 1 மக்காபீஸ் 2:1

மக்காபீஸ் என்ற நூல் ( கி.மு 100) சொல்கிறது. மத்ததியாஸ் "ஜானின்" மகன், ஜான் சிமியோனின் மகன். மற்றும் அதிகாரம் 2 வசனம் 2 சொல்கிறது, மத்ததியாஸுக்கு "ஜான்" என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான் என்று. பார்க்க: 1 மக்காபீஸ் 2:1 :மற்றும் 1 மக்காபீஸ் 16:19 ல் கூட ஒரு முறை "ஜான்" என்ற ஒருவரைப்பற்றி சொல்கிறது. பார்க்க : 1மக்காபீஸ் 16:19

மேல் சொல்லப்பட்ட எல்லா "ஜான்" களும், பைபிளின் யோவான் ஸ்நானகனுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யோவானுக்கு முன்பு யோவான் என்ற பெயர் கொண்ட பழைய ஏற்பாட்டு நபர்கள்:
இந்தப்பெயர் "யோகனான்"(எபிரேய மொழியில்-"யோகனான்") என்று பல முறை (27 க்கு அதிகமாக) பழைய ஏற்பாட்டில் வருகிறது. ( பார்க்க 2 இராஜா 25:23, 1 நாளா 3:15,24, 6:9,10, 12:4, 12:12, 26:3, 2 நாளா 17:15, 23:1, 28:12, எஸ்றா 8:12, 10:6, 10:28, நெகே 6:18, 12:13, 12:22,23,42, எரே 40:8 இன்னும் பல இடங்களில்.)


பிற மத நண்பர்களின் இந்த விமர்சனம், திருக்குர்ஆனில் ''யஹ்யா'' குறித்து இடம் பெற்றுள்ள சிறு வசனத்தையும் இவர்கள் முறையாக விளங்கிக் கொள்ளவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது. வசனத்தை விளங்காமலேயே தீர்க்கத்தரிசி அல்லாத மற்றவர்கள் பெயரையும் இங்கு குறிப்பிட்டுள்ளனர். இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத
நண்பர்களின் இந்த அநேக சான்றுகளில் எங்கும் ''யாஹ்யா'' என்ற உச்சரிப்பில் உள்ள இடுகுறிப் பெயர் உள்ளதா? என்பது வாசகர்களின் கவனத்திற்கு.

யஹ்யா, யோவான்

பைபிள் புதிய ஏற்பாடு: தூதன் அவரை நோக்கி சக்கரியாவே பயப்படாதே உன் வேண்டுதல் கேட்கப்பட்டது. உன் மனைவியாகிய எலிசபெத்து உமக்கு ஒரு குமாரரைப் பெறுவாள். அவருக்கு யோவான் என்று பேரிடுவாயாக. (லூக்கா, 1:13)

யாஹ்யாவை யோவான் என்று பைபிள் குறிப்பிடுவதால் யோவானுக்கு முந்தைய காலத்தில் யோவான் என்ற பெயரில் பலர் இருந்துள்ளனர் என்பதைப் பட்டியலிடுவது திருக்குர்ஆனை எதிர் கொண்டதாகுமா? சிந்தியுங்கள்.

தமிழில் இயேசு, ஆங்கிலத்தில் ஜீஸஸ் என்று சொல்லிக்கொண்டால் அது திருக்குர்ஆன் கூறும் ஈஸா என்ற பெயராகிவிடும் என்று வாதிப்பது எப்படித் தவறான வாதமோ அது போன்றே யோவான், ஜான் என்ற பெயர்களை திருக்குர்ஆன் கூறும் யஹ்யா என்ற பெயரோடு ஒப்பிடுவதும் தவறான வாதமாகும்.

நபி (ஸல்) அவர்களின் விண்ணகப் பயணம்,

...நான் அங்கு சென்று சேர்ந்தபொழுது அங்கு யஹ்யா (அலை) மற்றும் ஈஸா (அலை) ஆகியோர் இருந்தனர். அவர்கள் இருவரும் ஒன்று விட்ட சகோதரர்கள். (ஒருவருக்கொருவர் சின்னம்மா பெரியம்மா மகன்கள்) ஜிப்ரீல்(அலை) அவர்கள், 'இது யஹ்யாவும் ஈஸாவும் ஆவர். இருவருக்கும் ஸலாம் சொல்லுங்கள்' என்று கூறினார். அவ்வாறே நான் சலாம் சொன்னேன். அவர்கள் இருவரும் ஸலாமுக்கு பதிலுரைத்தார்கள். பிறகு 'நல்ல சகோதரரே!
நல்ல நபியே! வருக!" என்று கூறி (வாழ்த்தி) னார்கள்.
(புகாரி, 3207, 3430, 3887)

யஹ்யா என்ற பெயர் எக்காலத்திலும் யோவான், ஜான் என்று மருவிடவில்லை - மறுமை நாள்வரை யஹ்யா என்ற பெயரே நிலைத்திருக்கும் என்பதை மேற்கண்ட அறிவிப்புகள் உறுதிப்படுத்துகின்றது. யஹ்யா என்ற பெயருக்கு பதிலாக வேறு பெயர்களை ஆவணமாக வைக்கும் உங்கள் விமர்சனத்தில் நேர்மையுள்ளதா?

பிற மத நண்பர்களே! இதை நன்கு சிந்தனையில் பதிவு செய்து, இஸ்லாத்தை விளங்கி விமர்சனம் செய்யுங்கள்!

மொழி பெயர்ப்பு,

பிற மத நண்பர்கள் தமது கருத்துக்கு வலு சேர்க்க திருக்குர்ஆன் 019:007 வசனத்தின் தமிழ் மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்புகளை வைத்துள்ளனர். மூலமொழி உயிருடன் வழக்கில் இருக்க விமர்சனத்தை மூலமொழியுடன் உரசிப் பார்க்காமல் மொழி பெயர்ப்புகளுடன் ஒப்பிடுவது புத்திசாலித்தனம் இல்லை. யஹ்யா என்ற பெயரை எந்த மொழியில் சொன்னாலும், எழுதினாலும் யஹ்யா என்று தான் சொல்ல வேண்டும், எழுத வேண்டும். யஹ்யாவை ஆங்கிலத்தில் ஜான் என்று மொழி பெயர்ப்பாளர்கள் குறிப்பிட்டால் அதற்கு திருக்குர்ஆன் பொறுப்பேற்க வேண்டும் என்ற அவசியமில்லை.

முக்கியக் கவனத்திற்கு,

திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்று தவறானப் பிராச்சாரம் செய்பவர்கள், பைபிளிலிருந்து திருக்குர்ஆன் எவ்வாறு தனித்தன்மையில் வேறுபடுகிறது என்பதை விளங்கிக்கொள்வீர்களா? யஹ்யா என்ற தீர்க்கத்தரிசியின் பெயர் மாறி மருவிப் போனதால் அவருடைய உண்மைப் பெயரைத் திருக்குர்ஆன் தூசித் தட்டி வெளிப்படுத்துகிறது. திருக்குர்ஆன் பைபிளின் நகலாக இருந்திருந்தால் ஸகரிய்யாவின் குமாரரை யோவான் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்!

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Wednesday, July 23, 2008

முஹம்மது நபி பொய்யரா?

இஸ்லாம் எனும் இறை மார்க்கத்தை மக்களுக்குப் போதிக்க வந்த நபிமார்கள் அனைவரும் ''பொய்யர்'' என்றே முத்திரைக் குத்தப்பட்டார்கள். இதற்கு இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விதிவிலக்கல்ல.

பொய்யர்
குறிகாரர்
சூனியக்காரர்
பைத்தியக்காரர்
இட்டு கட்டுபவர்

இவையெல்லாம் வழக்கம் போல் நபி (ஸல்) அவர்களுக்கும் சமகால மக்கள் வழங்கிய பட்டங்கள். முஹம்மது நபி இட்டுக்கட்டுபவராக இருந்திருந்தால் தம்மைப் பற்றிய அறியாமை மக்களின் இந்த அடைமொழிகளை மறைத்திருக்கலாம் என்பது சிற்றறிவுடையோருக்கும் விளங்கும். ஆனால் இறை வேதத்தில் இவை கால காலத்திற்கும் இடம்பெற்றிருப்பது திருக்குர்ஆன் மாற்ற முடியாத, மாற்றத்திற்குள்ளாகாத இறைவேதம் என்பதற்கு சான்றாக
அமைந்துள்ளது.

இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்களின் முனை மழுங்கிய சிந்தனையைப் பார்ப்போம்.

இஸ்லாமிய நபியாகிய முகமது பற்றி, அவர் காலத்து மக்களின்(முஸ்லீமல்லாதவர்களின்) கருத்து என்ன? என்று குர்‍ஆன் சொல்லும் சாட்சியைப் பற்றிய ஓர் அலசல்.

இக்கட்டுரை "Muhammad as Al-Amin (the Trustworthy) How His Enemies Really Viewed Him" என்ற கட்டுரைக்கு மேலதிக விவரங்களுக்காக இணைக்கப்படுகிறது.

முகமது அவர்கள் நபித்துவம் பெறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, தன் ஊர் மக்களிடம் ஒரு நேர்மையான மனிதராகவும், குற்றமில்லாத மனிதராகவும் பெயர் பெற்று இருந்தார் என்று இஸ்லாமிய தாவா செய்யும் அறிஞர்கள் கூறுவது வழக்கம். இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள், முகமது ஒரு நேர்மையானவர் என்றும், குற்றம் குறை இல்லாதவர் என்றும் தன் சமகாலத்து மக்கள் அறிந்து இருந்தார்கள் என்று கூறுவதை நாம் கண்டுயிருப்போம். இன்னும் சொல்லப்போனால், முகமது காலத்தவர்கள் முகமதுவிற்கு "அல்-அமீன் (Al-Amin)" அல்லது "நேர்மையானவர்-(Trustworthy)" என்றும் பெயர் சூட்டி இருந்தனர் என்றும் கூறுவார்கள், இப்படி பலவிதமாக கூறுவார்கள்.

முஸ்லீம்கள் இப்படியெல்லாம் சொல்வதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், இவர்களின் இந்த கூற்று, கண்களால் கண்டு சாட்சி சொன்னவர்களின் கூற்றின் மீது ஆதாரப்பட்டு இருக்கவில்லை, அதற்கு மாறாக முகமதுவின் மரணத்திற்கு பின்பு ஒரு சில நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டவைகளாகும். இன்னும் சொல்லப்போனால், இவைகள் அனைத்தும் முஸ்லீம்களின் கை மற்றவர்களின் மீது ஓங்கி இருக்கும் போது(இஸ்லாமிய அரசர்கள்/கலிபாக்கள் ஆட்சி செய்தபோது) எழுதப்பட்டவைகளாகும், மற்றும் அவர்கள் சரித்திரத்தை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப திரும்ப எழுதினார்கள். அந்த கால்த்தில் முஸ்லீம்கள் தாங்கள் எந்த கண்ணோட்டத்தில் முகமதுவின் வாழ்க்கையை படிக்கவிரும்பினார்களோ அந்த நம்பிக்கையின் படி எழுத ஆரம்பித்தார்கள்(The Muslims were pretty much free to read back into the life of Muhammad their specific theological
views and beliefs concerning their prophet.)

முக்கியமாகச் சொல்லவேண்டுமானால், முஸ்லீம்கள் முகமதுவிற்கு கொடுக்கும் இந்த புகழாரங்களுக்கு எதிராக‌ அவர்களின் வேதமே எதிர் சாட்சியாக அமைந்துள்ளது. நாம் குர்‍ஆனை ஆராய்ந்துப் பார்த்தால், முகமது ஒரு உண்மையின் களங்கரை விளக்காகவோ அல்லது ஒரு முழுமையான‌ நேர்மையான மனிதராகவோ இருந்தார் என்று அவரைச் சுற்றியிருந்த மக்கள் கருதவில்லை அல்லது நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை நாம் அறியலாம். அம்மக்களின் சாட்சி முகஸ்துதி செய்வதாக கூட இருக்கவில்லை, குறைந்தபட்சம் சொல்லவேண்டுமானால், முகமதுவிற்கு பிறகு சேகரிக்கப்பட்ட விவரங்களாகிய‌ , முகமதுவை அவரது எதிரிகள் புகழ்வதாக உள்ள விவரங்கள் அனைத்தும் வெறும் கட்டுக்கதைகளாகவும், மாயையாகவும் இருக்கிறது.


நபித்துவ வாழ்வுக்கு முன், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பண்புகள் பற்றி,

மனிதாபிமானம் உடையவர்
அமானிதம் பேணுபவர்
வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவர்
எளியோருக்கும், சிரமத்தில் தவிப்போருக்கும் உதவுபவர்
விருந்தினரை உபசரிப்பவர்
உயர் பண்பு, சிறந்த ஒழுக்கமுடைய நற்பண்பாளர்
''நம்பிக்கையாளர்''

இப்படி உயர் பண்புகளைக் கொண்டவராக நபியவர்கள் திகழ்ந்தார்கள். இது நபியவர்களை அறிந்த மக்காவில் வாழ்ந்த மக்களின் கருத்தாகும். சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் நம்பி ஒப்படைத்தப் பொருட்களைத் திரும்பப் பெற முடியாத அக்காலத்தில் நபியவர்களிடம் கொடுத்துப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படி மக்கள் தமது பொருட்களை நம்பி ஒப்படைத்துத் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.

ஒரு சம்பவம்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மலைக்குன்றின் மீதேறி, மக்காவின் மக்களையும், மற்றும் மக்கள் தலைவர்களையும் மலையடிவாரத்துக்கு அழைத்தார்கள். அழைத்து, அவர்களிடம் ''இந்த மலைக்கப்பால் உங்களைத் தாக்குவதற்கு ஒரு படை வருகிறது என்று நான் கூறினால் அதை நீங்கள் நம்புவீர்களா?'' என்று கேட்டார்கள். ''ஆம் நம்புவோம்'' என்று அந்த மக்களும் தலைவர்களும் பதிலளித்தனர். (கருத்து) இச்சம்பவத்திலிருந்து மக்களும் தலைவர்களும் - நபித்துவ வாழ்வுக்கு முன் - நபியவர்களை ''உண்மையாளர்'' என்று ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பது தெளிவு.

பொதுவாக, எந்த மனிதரையும் அவரின் இயல்பான நடைமுறை வாழ்க்கையைக் கவனித்து வந்தால் அதைக் கொண்டு அவரின் பண்புகளைக் கணித்து விடலாம். ஒருவரை உண்மையாளர் அல்லது பொய்யர் என்று சொல்வதற்கு அவரின் செயல்பாடுகள் கண் முன்னே நிகழ்கிறது என்பதால் கணிப்பது எளிது.

நபி (ஸல்) அவர்களை ''உண்மையாளர்'' என்று கூறிய அதே மக்கள் பின்னர் ''பொய்யர்'' என்று உரைத்தது நபியவர்களின் ஆன்மீகக் கொள்கையை நோக்கியே தவிர, நடை முறை வாழ்க்கையில் நபியவர்கள் யாரையும் ஏமாற்றிப் பொய்யுரைத்தாகக் கொள்வது தவறு. நபியவர்களை பொய்யர், குறிகாரர், சூனியக்காரர், பைத்தியக்காரர், இட்டுக்கட்டுபவர் என்றெல்லாம் விமர்சனம் எழுந்தது அந்த மக்களின் அறியாமை என்று அடித்து கூறி
விடலாம். ஏனெனில்,

ஓரிறைக் கொள்கை, மறுமை, சுவனம், நரகம், இறந்த பின் உயிர்ப்பித்து எழுவது இது போன்ற தங்களுக்கு அறிவில்லாதவற்றையே அம்மக்கள் பொய் என்று கூறினர். நபியவர்களை பொய்யரென்று கூறிய அதே வேளையில் பொய்யர் என்பதை நிரூபிக்க எவ்வித சான்றுகளையும் சமர்ப்பிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஒரு கொள்கையை நம்பாதது வேறு, அந்தக் கொள்கையை பொய்யென்று உரைப்பது வேறு.
முந்தையதில் அது பற்றிய அறிவு இல்லாததால் அதை நம்பவில்லை. பிந்தையதில் அது பற்றிய எந்த அறிவுமின்றி அதைப் பொய்யென்று பொய்யுரைப்பது. இந்த அறியாமை அன்றைய விமர்சகர்களிலிருந்து இன்று வரை நீடிக்கிறது நாளையும் இது தொடரும்.

(ஓரிறைக் கொள்கை, மறுமை, சுவனம், நரகம், இறந்த பின் உயிர்ப்பித்து எழுவது இவற்றை முஸ்லிம்கள் நன்கு அறிந்து கொண்டு தான் இஸ்லாத்தை நம்பிக்கை கொள்கிறார்களா? என்று இங்கு கேள்வி எழலாம். இவற்றைக் கண் கூடாகக் காண்பதற்கான அவகாசம் இருக்கிறது என்பது தான் இஸ்லாத்தின் பதில்)

தகவல்

நபியவர்கள் கொண்டு வந்த கொள்கையை அறியாமையினால் பொய் என்றும், குறிகாரச் சொல் என்றும், சூனியம் என்றும், பைத்திக்காரத்தனம் என்றும், கட்டுக்கதை என்றும் விமர்சித்த அதே மக்கள் பின்னாளில் நபியவர்களின் முன்னிலையிலேயே அதேக் கொள்கையை உளமாற ஏற்றுக் கொண்டனர் என்பது யாரும் அறியாமல் மறைக்கப்பட்ட வரலாறல்ல.

நபிமார்களைப் பொய்யர் என்று உரைத்தது முஹம்மது நபிக்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல. எல்லாக் காலத்திலும், எல்லா மக்களும், எல்லா நபிமார்களையும் நோக்கி ''இவர் பொய்யர்'' என்று கூறினர் என பிறமத நண்பர்கள் வைத்துள்ள திருக்குர்ஆன் வசனமே கூறுகிறது.

இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும். (குர்‍ஆன் 35:4)

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முந்தைய நபியாகிய ஈஸா நபி (அலை) அவர்களையும், அவர்கள் காலத்து மக்கள் ''பொய்யர் சூனியக்காரர்'' என்றே கூறினார்கள்.

அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், 'இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை' என்று கூறிய வேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும். (திருக்குர்ஆன், 005:110)

மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: 'இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும் எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்' என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் 'இது தெளிவான சூனியமாகும்' என்று கூறினார்கள். (திருக்குர்ஆன், 061:006)

இறை வேதமும், இறை வேதத்தை மக்களிடம் அறிமுகப்படுத்தும் இறைத்தூதர்களையும் சுலபத்தில் மக்கள் ஏற்றுக்கொண்டதில்லை. பெண் சுகத்தில் திளைத்தவனிடம் விபச்சாரம் செய்யாதே என்று இறைவனின் கட்டளையைக் கூறினால் அதை அவன் எளிதாக ஏற்றுக் கொள்ள மாட்டான். தனது இன்பங்கள் பறிக்கப்படுகின்றன என்பதால். மக்கள் மனம் விரும்பாத செய்திகளை இறைத்தூதர்கள் கொண்டு வந்ததால் இறைத்தூதர்கள் இம்சிக்கப்பட்டார்கள். கொலை செய்யப்பட்டார்கள். முந்தைய நபிகள் கொல்லப்பட்டார்கள் என்ற தகவலோடு ஒப்படும் போது பொய்யர்.. இத்யாதி விமர்சனம் மிகச் சாதாரணம்.

ஆகவே, மூஸா அவர்களிடம் நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது, அவர்கள்: 'இது இட்டுக் கட்டப்பட்ட சூனியமே அன்றி வேறில்லை இன்னும் நம்முடைய முன்னோர்களான நம் மூதாதையர்களிடத்திலும் இதைக் கேள்விப்பட்டதில்லை' என்று கூறினார்கள். (திருக்குர்ஆன்,028:036)

இறைத்தூதர் மூஸா (அலை) அவர்கள் மக்களால் எவ்வாறு விமர்சிக்கப்பட்டார்களோ அதைப் போன்றே இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்)அவர்களும் மக்களால் விமர்சிக்கப்பட்டார்கள். இதில் முஹம்மது நபியை மக்கள் விமர்சித்ததை மட்டும் பிற மத நண்பர்கள் தூக்கிப் பிடிப்பது மழுங்கிய சிந்தனைக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறது.

விபரீத சிந்தனை

குர்‍ஆன் என்பது முகமதுவின் வாழ்நாட்களில் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது என்றும், அதில் சம காலத்து நிகழ்வுகளைப் பற்றிய விவரங்கள் உண்டென்றும் முஸ்லீம்கள் நம்புகின்றனர். மக்காவில் வாழ்ந்த மக்கள் முகமதுவை ஒரு நல்ல நேர்மையான, நம்பத்தகுந்த நபர் என்றுச் சொன்னார்கள் என்று இஸ்லாமிய ஹதீஸ்கள் சொல்லும் விவரங்களுக்கு எதிராக இந்த குர்‍ஆனின் சாட்சி உள்ளது. முஸ்லீம்களின் வேதமாகிய குர்‍ஆன், முஸ்லீம்கள் சொல்வதற்கு எதிராகச் சொல்கிறது, அதாவது முகமதுவின் சமகாலத்து மக்கள் முகமதுவை.

ஒரு பொய்யராகக் கண்டனர்,

அவர் ஒரு ஏமாற்றுக்காரராகக் கண்டனர்,

கட்டுக்கதைகளை இட்டுக்கட்டுபவராகக் கண்டனர்.


இங்கு குறிப்பிட்டிருப்பது பிற மத நண்பர்களின் விபரீத சிந்தனைக்கு மற்றும் ஓர் எடுத்துக்காட்டு. திருக்குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டது நபித்துவம் பெற்ற பின்னர். அதாவது நபியவர்களின் 40ம் வயதில் திருக்குர்ஆன் அருளத் துவங்கியது. முஹம்மது நேர்மையாளர், உண்மையாளர், நம்பிக்கையாளர் என மக்கள் சிலாகித்துக் கூறியது நபித்துவம் பெறுவதற்கு முன்னர். அதாவது நபியவர்களின் 40ம் வயது வரை. இதன் பிறகும் நபியவர்களின் நேர்மையில் எந்தக் குறைவும் ஏற்படவில்லை.

நபித்துவம் பெற்று திருக்குர்ஆன் அருளத் துவங்கிய பின்னரே மக்கள் நபியவர்களைப் பொய்யர் என்று கூறினர் என்றால் இது நபியவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட பின்னர், அவர்கள் கொண்டு வந்த ஓரிறைக் கொள்கையை, நபியவர்களின் நபித்துவத்தைப் பொய் என்றுப் புறக்கணித்தனர் என்று பொருள் கொள்வதில் எதுவும் சிரமம் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்,

திருக்குர்ஆன் சொல்வதும் உண்மை.

ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் சொல்வதும் உண்மை.

அன்புடன்,
அபூ முஹை