Thursday, September 28, 2006

யூத, கிறிஸ்தவ மதங்களின் தழுவலா இஸ்லாம்?

யூத, கிறிஸ்தவ மதங்களிலிருந்து இரவல் பெற்றவைதான் இஸ்லாம் மார்க்கம். என்று கூறுபவர்களின் கூற்று சரியா..? ஓர் ஆய்வு.


//இவற்றிலும், பெரும்பான்மையானவை அன்றைய உயர்வர்க்கமாக(மத ரீதியில்) கருதப்பட்ட யூதர்களிடமிருந்து இரவல் பெற்றவையே. முகமது சிறுவயதிலிருந்தே வியாபார விஷயமாக அண்டைநாடுகளின் யூத செட்டில்மெண்டுகளுக்கு சென்று பார்த்துக் கேட்டது, முதல் மனைவி கதீஜா அவர்களின் கிறித்துவப் பிண்ணனி போன்றவை காரணமாக அவருக்கு யூத-கிறித்துவ கோட்பாடுகளின், சித்தாந்தங்களின், பிரச்சாரங்களின் பரிச்சியம் இருந்திருக்கும் என்று இன்றைய ஆய்வாளர்கள் யூகிக்கின்றனர் (இது சம்பந்தமாக விரிவாக அறிய நான் மொழிபெயர்த்த டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்டின் தொடர் கட்டுரைகளைப் பார்க்கலாம்.//

ஆய்வாளர்கள் யூகிக்கின்றனர், எப்படி யூகிக்கின்றனர்? யூத-கிறித்துவ கோட்பாடுகளின், சித்தாந்தங்களின், பிரச்சாரங்களின் பரிச்சியம் இருந்திருக்கும் என்று இன்றைய ஆய்வாளர்கள் யூகிக்கின்றனர் - அதாவது, யூத, கிறிஸ்தவ மதங்களிலிருந்து ''நகல்'' எடுக்கப்பட்டவை இஸ்லாம்'' என்று யூகிக்கின்றனர்! 15.09.2006 அன்று நேச குமார் திண்ணையில் பிரசவித்த கட்டுரையின் மேற்கண்ட வரிகளில் இப்படித்தான் சொல்லப்பட்டுள்ளது. இதே கருத்தையே -

- //இவற்றிலும், பெரும்பான்மையானவை அன்றைய உயர்வர்க்கமாக(மத ரீதியில்) கருதப்பட்ட யூதர்களிடமிருந்து இரவல் பெற்றவையே.// - நேசத்துடன் திருவாய் மலர்ந்துள்ளார்.

''இவர்களின் அறிவு, இஸ்லாத்தின் வாடையைக்கூட நுகரவில்லை'' என்று அடித்துச் சொல்லி விடலாம். முந்தய வேதங்களின் சம்பவங்களும், முந்தயத் தீர்க்கத்தரிகளின் பெயர்களும் இஸ்லாத்தில் இடம்பெறுகிறது, அதனால் முன் சென்ற யூத, கிறிஸ்தவ மதங்களின் ''நகல்'' இஸ்லாம் என்பது, இவர்கள் முந்தய வேதங்களையும் அறிந்திருக்கவில்லை, இஸ்லாத்தையும் அறியவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்டின் சிந்தனையை சிபாரிசு செய்யும் நேசகுமார் தனது கருத்துக்கு வலு சேர்க்க குருவை வழிமொழிந்திருக்கிறார்.

கொள்கை ரீதியாகவே யூத, கிறிஸ்தவ மதங்களிலிருந்து இஸ்லாம் வேறுபட்டு நிற்கிறது என்பதை பிறகு பார்ப்போம். அதற்கு முன் இவர்களின் கூற்று சரிதானா? என்பதை அறிந்து கொள்ள வாருங்கள் திருக்குர்ஆன் வசனங்களை பரிசீலிப்போம்.

2:41. இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள், இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது, நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள். இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி (ஒழுகி) வருவீர்களாக.

2:89. அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது. இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் முலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்த போது, அதை நிராகரிக்கின்றார்கள். இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது!

2:101. அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள்.

2:146.எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள். ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.

2:89. அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது. இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் முலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்த போது, அதை நிராகரிக்கின்றார்கள்;. இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது!

7:157. எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்.

மேற்கண்ட வசனங்கள் யாவும், இஸ்ராயீலின் மக்களே, அல்லது வேதம் வழங்கப்பட்டோரே என்று அழைத்துப் பேசுகிறது. இந்த வசனங்களும் இன்னும் இது போன்ற பல வசனங்களும், திருக்குர்ஆன் முந்தய வேதங்களை மெய்ப்பிக்கிறது என்று சான்று பகர்கிறது. மெய்ப்பிக்கிறது என்றால் முழுக்க, முழுக்க ஓரிறைக் கொள்கை, மற்றக் கடமைகள், மற்றும் வழிகாட்டல்களின் அடிப்படைகள் முந்தய வேதங்களில் சொல்லியுள்ளதை இஸ்லாம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

உதாரணமாக:

2:83. இன்னும் (நினைவு கூறுங்கள்,) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், ''அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் - எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது. (உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் (களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள். மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள். ''ஜக்காத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்'' என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்.

2:43. தொழுகையைக் கடைப் பிடியுங்கள். ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள். ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.

(2:43வது வசனத்திலுள்ள சட்டங்கள் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அருளப்பட்டது. இதை, 2:40வது வசனத்தில் ''இஸ்ராயீலின் மக்களே!'' என்று இறைவன் அழைப்பதிலிருந்து விளங்கலாம்.)

//அன்றைய நம்பிக்கையாளர் முகமதுவை ஒரு இறைத்தூதர் என்று நம்பி, அவருக்கு கீழ்ப்படிந்து ஜகாத் எனும் வரியை கொடுக்கும் ஒரு குழு-அங்கத்தினர் அவ்வளவே.// - 15.09.2006 திண்ணைக் கட்டுரையில் நேசகுமார் எழுதியது.

அதாவது, இறைத்தூதர் (ஸல்) அவர்களை எற்றுக் கொண்ட நம்பிக்கையாளர்கள், கப்பம் கட்டுவது போல் - ஜகாத் எனும் வரியைக் கட்ட வேண்டும் அவ்வளவுதான் என்று எழுதியிருக்கிறார். இது கலப்படமில்லாத பொய், ஆய்வறிவற்ற மட்டரகமான விமர்சனம். டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்டின் பக்தரிடம் இதை விடக் கூடுதலாக எதிர்பார்க்க முடியாது.

2:43,83 வசனங்களில், ''ஜகாத்'' எனும் வரி முந்தய வேதங்களிலேயே, முந்தய சமூகத்தார்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை திருக்குர்ஆன் அறிவித்துக் கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே இறைத்தூதர்களால் முந்தய வேதங்களில் சட்டமாக்கப்பட்ட மார்க்க வரியை, முந்தைய இறைத்தூதர்களைப் பின்பற்றியே இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்களும் ஜகாத் வரியை தமது சமூகத்தின் மீது கடமையாக்கினார்கள் என்பது வெள்ளிடை மலை. எனவே இஸ்லாத்தின் எதிரிகள் சொல்வது போல ஜகாத் வரி முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்தார்கள் என்பதில் நேர்மையில்லை.

அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்கக் கூடாது.
பெற்றோர்கள், உறவினர்கள், அனாதைகள், மற்றும் ஏழைகளுக்கு நன்மை செய்வது, மனிதர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்.
தொழுகையை நிறைவேற்றுவது
ஜகாத் வரி கொடுப்பது.(2:83
)

இவையெல்லாம் முந்தய இறைத்தூதர்களின் வழியாக முந்தய வேதங்களில் அருளப்பட்ட சட்டங்களைத்தான் இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவர்களின் சமூகத்தார்களும் பின்பற்றும்படி இறுதி வேதமான திருக்குர்ஆன் வழியாக இறைவன் அருளினான்.

2:183. ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.

உண்ணா நோன்பு நோற்பதும் முந்தய சமூகத்தாருக்கு விதியாக்கியது போல, இறுதி நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்துக்கும் விதிக்கப்பட்டிருக்கிறது.

22:26. நாம் இவ்றாஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து ''நீர் எனக்கு எவரையும் இணைவைக்காதீர் என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சற்றி வருவோருக்கும், அதில் ருகூஃ, ஸுஜூது செய்(து தொழு)வோருக்கும், அதைத் தூய்மையாக்கி வைப்பீராக'' என்று சொல்லியதை (நபியே! நினைவு கூறுவீராக).

22:27. ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்).

ஹஜ்ஜிற்கான அழைப்பு இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் அறிவித்தது. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பே மக்கள் ஹஜ் செய்து வந்தார்கள் என்பதை வரலாற்றில் அறியலாம்.

முந்தய வேதங்களையும் முந்தய நபிமார்களையும் திருக்குர்ஆன் உண்மைப்படுத்துகிறது. என்பது மட்டுமல்ல, முந்தய நபிமார்கள் போதித்த சட்டங்களையேத் திருக்குர்ஆனும் அடிப்படை சட்டமாக ஏற்றுக் கொண்டுள்ளது என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. அதாவது இங்கு குறிப்பிட்டிருக்கும் இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படை சட்டங்கள் ஏற்கெனவே முந்தய வேதங்களில் அருளப்பட்டதையே பின்பற்ற நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் மூலம் அருளப்பட்டது.

இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது, என்று முந்தய வேதங்கள் வழங்கப்பட்டவர்களை நோக்கி திருக்குர்ஆன் கூறுகிறது! முந்தய வேதங்களை திருக்குர்ஆன் எவ்வாறு உண்மைப்படுத்துகிறது என்ற கருத்தை திருக்குர்ஆன் வசனங்களிலிருந்து விளக்கியுள்ளோம். அன்றைய யூதர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களை ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதை உண்மைப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியை இங்கு நாம் அறிந்து கொள்வது மிக அவசியம். நபித்தோழர் உமர் (ரலி) அவர்களுக்கும், யூதர்களுக்குமிடையை நடந்த ஒரு விவாத உரையாடலைப் படிப்போம்.

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: யூதர்கள் வேதப் பாடம் படிக்கும் நாளில் அவர்களுடன் நான் இருந்ததுண்டு. அப்போது தவ்ராத் வேதம், குர்ஆனை எந்த அளவுக்கு உண்மையாக்குகிறது என்றும், அதைப் போன்றே குர்ஆன் தவ்ராத் வேதத்தை எந்த அளவிற்கு உண்மையாக்குகிறது என்றும் ஆச்சரியம் அடைவேன்.

இந்நிலையில் ஒருநாள் நான் அவர்களுடன் இருந்தபோது, ''கத்தாபின் மகனே! உம்முடைய தோழர்களில் உம்மைவிட எங்களுக்கு மிகவும் பிரியமானவர் வேறு யாரும். இல்லை'' என்று கூறினார்கள். அதற்கு நான், 'அது எதனால்'? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''நீர் எங்களிடம் வந்து எங்களுடனேயே ஆழ்ந்து போய்விடுகிறீர்'' என்று கூறினார்கள்.

அப்போது நான், ''தவ்ராத் வேதம் குர்ஆனை எந்த அளவிற்கு உண்மையாக்குகிறது என்றும், அதைப் போன்றே குர்ஆன் தவ்ராத் வேதத்தை எந்த அளவிற்கு உண்யாக்குகிறது என்றும் ஆச்சரியம் அடைகிறேன் இதனாலேயே நான் உங்களிடம் வருகிறேன்'' என்று கூறினேன். இவ்வாறு அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அந்த வழியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே யூதர்கள், ''கத்தாபின் மகனே! ''அதோ உம்முடைய தோழர் (செல்கிறார்) அவருடன் சென்று சேர்ந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.

அப்போது நான், ''யாரைத்தவிர வேறு இறைவன் இல்லையோ அந்த அல்லாஹ்வை முன்னிறுத்திக் கேட்கிறேன், அவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் நீங்கள் எதைப் பேணிக்காக்க வேண்டும் என்று உங்களைப் பணித்துள்ளானோ அதை முன் வைத்துக் கேட்கிறேன், தன் வேதங்களில் எதை உங்களிடம் அல்லாஹ் அமானிதமாகத் தந்தானோ அதை முன் வைத்துக் கேட்கிறேன், ''அவர்தாம் அல்லாஹ்வின் தூதர் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' என்று அந்த யூதர்களிடம் கேட்டேன் அப்போது அவர்கள் மெளனமாக இருந்தார்கள்.

அவர்களில் ஞானமுள்ள பெரியவர் ஒருவர் '' உமர் உங்களிடம் காட்டமாகக் கேள்வி கேட்டிருக்கிறார். அவருக்கு (தக்க முறையில்) பதில் கூறுங்கள்'' என்று கூறினார். அதற்கு அவர்கள், ''நீங்கள்தாம் எங்களில் அறிஞரும், வயதில் மூத்தவரும் ஆவீர் எனவே, உமருக்கு நீங்களே பதிலளியுங்கள்'' என்றனர்.

உடனே அவர், ''(உமரே!) நீங்கள் எதை முன்வைத்து எங்களிடம் கேட்டீர்களோ, அதை முன்வைத்துக் கூறுவதானால், அவர் அல்லாஹ்வின் தூதர்தாம் என்பதை நாங்கள் அறிந்தே இருக்கிறோம்'' என்றார்.

உடனே ''உங்களுக்குக் கேடுதான்! அப்படியானால் நீங்கள் அழிவுக்குள்ளாவீர்கள்'' என்று நான் கூறினேன். அதற்கு அவர்கள் ''நாங்கள் அழிய மாட்டோம்'' என்றனர். நான், ''அதெப்படி முடியும்? அவர்தாம் அல்லாஹ்வின் தூதர் என்பதை நீங்கள் நன்றாகத் தெரிந்திருக்கிறீர்கள். ஆனால், அவரை உண்மையாளரென ஏற்பதில்லை, அவரைப் பின்பற்றுவதில்லையே!'' என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ''எங்களுக்கு வானவர் வானவர்களில் ஒரு விரோதி இருக்கிறார். அதைப் போன்றே ஒரு நேசரும் உள்ளார். வானவர்களின் எங்களின் விரோதி யாரோ அவருடன் முஹம்மத் தமது நபித்துவத்தை இணைத்துக் கொண்டுள்ளார்'' என்றனர்.

அப்போது நான், ''உங்களின் விரோதி யார்? உங்களின் நேசர் யார்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''எங்களின் விரோதி ஜிப்ரீல் ஆவார். எங்களின் நேசர் மீகாயீல் ஆவார்'' என்றனர்.

''ஜிப்ரீல் முரட்டுத்தனம், கடுகடுப்பு, கஷ்டம், வேதனை போன்றவற்றின் பொறுப்பு வழங்கப் பெற்ற வானவராவார். மீகாயிலோ அன்பு, அருள், சலுகை போன்ற பொறுப்பு வழங்கப் பெற்ற வானவராவார்'' என்றும் கூறினர். உடனே நான், வலிவும் மாண்பும் மிக்க இறைவனிடம் அவ்விருவரின் தரம் என்ன?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''அவ்விருவரில் ஒருவர் இறைவனின் வலப் புறத்திலும், மற்றொருவர் இறைவனின் இடப் புறத்திலும் உள்ளனர்'' என்று கூறினார்கள்.

அப்போது நான், ''யாரைத்தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீது ஆணையாக! அவ்விருவரையும் யார் பகைத்துக் கொண்டாரோ அவருக்கு அவ்விருவர் மட்டுமல்ல, அவ்விருவரிடையே இருக்கும் அல்லாஹ்வும் விரோதிகள்தாம். அதைப் போன்றே அவ்விருவரையும் யார் நேசித்தாரோ அவருக்கு அவ்விருவருமே நேசர்கள்தாம். மீகாயிலின் விரோதியிடம் நேசம் பாராட்ட, ஜிப்ரீலுக்கு எந்த அவசியமும் இல்லை. அதைப் போன்றே, ஜிப்ரீலின் விரோதியிடம் நேசம் பாராட்ட மீகாயிலுக்கு எந்தத் தேவையுமில்லை'' என்று கூறினேன்.

பின்னர் நான் (அந்த இடத்திலிருந்து) எழுந்து வந்து, நபி (ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் இன்ன கூட்டத்தாரது (வீட்டின் நுழைவாயிலில் உள்ள) சிறிய கதவு வழியாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''கத்தாபின் மகனே! சற்று முன்பு அருளப்பெற்ற வசனங்களை உமக்கு ஓதிக்காட்டவா?'' என்று கேட்டார்கள். பின்னர் (2:97,98) இரு வசனங்களையும் ஓதிக்காட்டினார்கள்.

அப்போது நான், ''என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் தூதரே! உண்மையான (மார்க்கத்)துடன் தங்களை அனுப்பிய (இறை)வன் மீது சத்தியமாக! (யூதர்களுடன் நான் உரையாடிய) இந்தச் செய்தியைத் தங்களிடம் தெரிவிக்கத்தான் நான் வந்தேன். அதற்குள் எல்லாம் அறிந்த அல்லாஹ் எனக்கு முன்பே தங்களுக்கு அறிவித்து விட்டதைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்'' என்று கூறினேன். (இப்னு கஸீர்)

அன்றைய யூதர்கள் முஹம்மது (ஸல்) அவர்களை ''அல்லாஹ்வின் தூதர்'' என்று நன்கு அறிந்து வைத்திருந்தனர். நபி (ஸல்) அவர்கள் பற்றி முன்னறிவிப்பை முந்தய வேதங்களிலிருந்து அறிந்திருந்தும், வானவர் ஜிப்ரீலைக் காரணம் காட்டி இறைத்தூதர் (ஸல்) அவர்களை மறுத்தார்கள்
வானவர்கள் எவரும் இறைவனுக்கு மாறு செய்யமாட்டார்கள்.

19:64. (மலக்குகள் கூறுகிறார்கள், நபியே!) ''உமது இறைவனின் கட்டளையில்லாமல் நாம் இறங்க மாட்டோம்.

வானவர்கள், இறைவனின் கட்டளை எதுவோ அதை மட்டுமே நிறைவேற்றுவார்கள். யூதர்கள் வானவர் ஜிப்ரீலை பகைவராகவும், வானவர் மீக்காயிலை நேசராகவும் கருதியதற்கு, பதிலடியாகத் திருக்குர்ஆன் இப்படிக் கூறுகிறது...

2:97. யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதி யாவான்) என்று (நபியே!) நீர் கூறும், நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார். அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது. இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.

2:98. எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.

மேற்கண்ட இரு வசனங்களும், யூதர்களின் கூற்றை மறுப்பதோடல்லாமல், அவர்களின் முரண்பட்ட கொள்கையையும் கண்டிக்கிறது. மனிதனுக்கு ஒரு வானவர் பகைவராகவும், இன்னொரு வானவர் நேசராகவும் ஒருகாலும் இருக்க முடியாது. ஒரு வானவர் பகைவரென்றால், வானவர்கள் அனைவரும் அவனுக்குப் பகைவராகி விடுவார்கள். அவன் அல்லாஹ்வுக்கும், அவனின் தூதர்களுக்கும் பகைவனாகி விடுவான், அது போல, ஒரு வானவர் நேசரென்றால் அவனுக்கு அனைத்து வானவர்களும் நேசராக இருப்பார்கள். அல்லாஹ்வும், அவனுடைய தூதர்களும் அவனை நேசிப்பார்கள். என்று இறை மார்க்கத்தின் ஏதார்த்தத்தை, இறை வேதம் எடுத்துக் கூறுகிறது.

ஒரு செம்பு பாலில், பாதி பால் நஞ்சு, பாதி பால் நஞ்சில்லை என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அதே அபத்தம் - ''எங்களுக்கு வானவர் ஜிப்ரீல் பகைவராகவும், வானவர் மீக்காயில் நேசராவும் இருக்கிறார்'' என்று - யூதர்கள் சொல்லியதிலும் நிறைந்திருக்கிறது. யூதர்களின் இந்த ''வானவர் கொள்கை'' முந்தய வேதங்களில் சொல்லப்படாத, முந்தய தூதர்களாலும் போதிக்கப்படாத யூதர்களாக தமக்குத் தோன்றியதை கொள்கையாகச் சொல்லிக் கொண்டார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களை ''அல்லாஹ்வின் தூதர்'' என்று நன்கு அறிந்திருந்தும், ஏற்றுக் கொள்ளத் தயங்கியதற்கு யூதர்கள் சொன்ன ''வானவர் கொள்கை'' வெறும் சப்புக்கட்டு என்பதை இதிலிருந்து விளங்கலாம். இப்படிச் சொன்னதன் மூலம் அவர்கள் முந்தய வேதங்களையும், முந்தய நபிமார்களையும் பின்பற்றவில்லை என்பது தெளிவு.

(தொடரும் இன்ஷா அல்லாஹ்)

அன்புடன்,
அபூ முஹை

Tuesday, September 26, 2006

ஹிந்த்(ரலி)பற்றிய உண்மைச் செய்திகள்.

ஹிந்த் (ரலி) அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை தழுவிய நிகழ்ச்சி திரிக்கப்பட்டிருந்தது. இது பற்றி சென்ற பதிவில் எழுதியிருந்தோம். ஹிந்த் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய செய்தி அவர் தனியொருவராக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நிகழ்ச்சியல்ல. மாறாக, நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்டபோது மக்காவாசிகள் இஸ்லாம் மார்க்கமே உண்மை மார்க்கம் எனப் புரிந்து இஸ்லாத்தைத் தழுவினார்கள். அந்த செய்தியின் உண்மை நிலை இதுதான்...

அல்லாஹ் இஸ்லாமை ஓங்கச் செய்து, நபியும் முஸ்லிம்களும் மக்காவை வெற்றி கொள்ளும்படி செய்தான். இதைப் பார்த்த மக்காவாசிகள் இஸ்லாமே உண்மை மார்க்கம், வெற்றி பெற இஸ்லாமைத் தவிர வேறு வழியில்லை என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டனர். எனவே, இஸ்லாத்தை ஏற்று நபி(ஸல்) அவர்களிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் (பைஆ) செய்வதற்கு ஒன்று கூடினர்.

நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலைக் குன்றுக்கு மேல் அமர்ந்து கொண்டு இதற்காக தயாரானார்கள். கீழே உமர் (ரலி) அவர்கள் அமர்ந்து கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்களிடமிருந்து இஸ்லாமிய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். தங்களால் இயன்ற அளவு செவி மடுப்போம் கட்டுப்படுவோம் என மக்கள் ஓப்பந்தம் செய்தனர்.

'அல்மதாரிக்' என்ற நூலில் வருவதாவது: நபி (ஸல்) அவர்கள் ஆண்களிடம் ஒப்பந்தம் பெற்ற பின்பு, பெண்களிடம் வாங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஸஃபாவின் மீதும், அதற்குக் கீழே உமர் (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தனர். நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு விஷயமாகக் கூற அதனை உமர் (ரலி) அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்நேரத்தில் அபூ ஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்தார் உஹத் போரில் வீரமரணம் எய்திய ஹம்ஸா (ரலி) அவர்களின் உடலை சின்னா பின்னமாக்கிய தனது செயலுக்கு நபி (ஸல்) அவர்கள் என்ன செய்வார்களோ என்று அஞ்சியதால் தன்னை முழுதும் மறைத்துக் கொண்டு வந்தார்.

நபி (ஸல்) அவர்கள் ''நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டீர்கள் என்று எனக்கு வாக்குத் தர வேண்டும்'' என்று கூற, உமர் (ரலி) அவர்கள் பெண்களுக்கு அதை எடுத்துரைத்தார்கள். அடுத்து, ''நீங்கள் திருடக் கூடாது என்றார்கள். அதற்கு ''அபூ ஸுஃப்யான் ஒரு கஞ்சன் நான் அவருடைய பொருளில் கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாமா?'' என்று ஹிந்த் (ரலி) வினவினார். ''நீ எதனை எடுத்துக் கொண்டாயோ அது உனக்கு ஆகுமானதே'' என்று அபூ ஸுஃப்யான் கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் இவர்களின் உரையாடலைக் கேட்டு புன்னகை புரிந்து ''கண்டிப்பாக நீ ஹிந்த் தானே'' என்றார்கள். அதற்கவர் ''ஆம்! நான் ஹிந்த் தான் சென்று போன என்னுடைய பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வும் தங்களைப் பொறுத்துக் கொள்வான்'' என்று கூறினார்.

நபி (ஸல்): ''நீங்கள் விபச்சாரம் செய்யக்கூடாது''

ஹிந்த் (ரலி): ''ஒரு சுதந்திரமானவள் விபச்சாரம் செய்வாளா?''

நபி (ஸல்): ''உங்கள் பிள்ளைகளை நீங்கள் கொல்லக்கூடாது''

ஹிந்த் (ரலி): நாங்கள் எங்கள் பிள்ளைகளை நன்றாக வளர்த்தோம், அவர்கள் பெரியவர்களானதும் நீங்கள் அவர்களைக் கொன்று குவித்தீர்களே! என்ன நடந்தது என்று உங்களுக்கும் அவர்களுக்கும் தான் தெரியும்''

உமர் (ரலி) அவர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து மல்லாந்து விழுந்தார். அதைக்கண்டு நபி (ஸல்) அவர்களும் புன்னகைத்தார்கள். ஹிந்த் (ரலி) இவ்வாறுக் கூறக் காரணம்: பத்ரு படைக்களத்தில் அவருடைய மகன் ஹன்ளலா இப்னு அபூ ஸுஃப்யான் கொல்லப்பட்டிருந்தார். அடுத்து..

நபி (ஸல்): ''நீங்கள் அவதூறு கூறலாகாது''

ஹிந்த் (ரலி): ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவதூறு கூறுவது மிகக் கெட்ட பண்பாகும். நீங்கள் நல்லவற்றையும் நற்குணங்களையுமே எங்களுக்கு கூறுகிறீர்கள்''

நபி (ஸல்): ''நீங்கள் நல்ல விஷயங்களில் எனக்கு மாறு செய்யக் கூடாது''

ஹிந்த் (ரலி): ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! தங்களுக்கு மாறுபுரியும் எண்ணத்தில் நாங்கள் இங்கு அமர்ந்திருக்கவில்லை''

இந்நிகழ்ச்சிக்குப் பின் வீடு திரும்பிய ஹிந்த் (ரலி) வீட்டினுள் வைத்திருந்த சிலைகளைப் பார்த்து ''நாங்கள் இதுவரை உங்களால் ஏமாற்றப்பட்டிருந்தோம்'' எனக் கூறியவாறு அவற்றை உடைத்தெறிந்தார். (மதாரிகுல் தன்ஜீல் என்ற நூலிலிருந்து, ரஹீக்)

(மேலான செய்தி, பத்ரு போர்க் களத்தில் ஹிந்த் (ரலி) அவர்களின் தந்தை உத்பாவும் கொல்லப்பட்டிருந்தார்)

மேற்கண்ட செய்தியைப் படிக்கும் எவருக்கும், ஹந்த் (ரலி) அவர்கள் பலவந்தமாக இஸ்லாத்தில் சேர்க்கப்பட்டார் என்பதற்கோ, வேறு வழியில்லாமல் நிர்ப்பந்தமாக இஸ்லாத்தைத் தழுவினார் என்பதற்கோ எள்ளளவும், எள் முனையளவும் சந்தேகம் ஏற்படாது, அறியாமை நிறைந்தவர்களைத் தவிர.

ஹிந்த் (ரலி) அவர்கள் கூறிய ஒவ்வொரு வாசகங்களும், இஸ்லாத்தை களங்கப்படுத்தி விடலாம் என தனது விமர்சனத்தில் கயமைத்தனத்தை மேற்கொள்பவர்களின் செவிட்டில் அறைந்தாற் போல் அமைந்தள்ளது. நபி (ஸல்) அவர்களிடம் உறுதி பெற்று தம்மை இஸ்லாத்தின் இணைத்துக் கொண்ட ஹிந்த் (ரலி) அவர்கள் வீடு சென்றதும் வீட்டிலிருந்த சிலைகளை உடைத்தெறிந்தது அவர் ஓரிறைக் கொள்கையை மனப்பூர்வமாகவே ஏற்று இஸ்லாத்தைத் தழுவினார் என்பதைப் பறைசாற்றுகிறது.

இந்த உண்மையான செய்தியை தனது கற்பனையையும், கயமைத்தனத்தையும் கலந்து, நேசகுமார் இப்படித் திரித்து எழுதியிருக்கிறார்...

//இதில், தமக்கு அங்கீகாரம் கிட்டவேண்டும் என்பதற்காக முந்தய நபிமார்களின் வழியில் தாம் வருவதாக தெரிவித்தார், அப்போதைய சிந்தனாவாதிகள் மத்தியில் ஏற்பட்டிருந்த சில கருத்துக்களை தாம் உள்வாங்கி அதை கடவுளின் கருத்தாக முன்வைத்தார், அங்கீகாரம் வேண்டி சமூக ஒழுங்கீணங்களுக்கெதிராக பிரச்சாரம் செய்தார். இதன் நல்ல உதாரணம் - ஹிந்தாவுடன் அவருக்கு நிகழ்ந்த உரையாடல். அபூ சு·பியானின் மனைவியான ஹிந்தா, மக்கா நகரை முஸ்லிம் படை கைப்பற்றியவுடன் வேறு வழியின்றி முஸ்லிமாக மாற நேர்ந்தது. அப்போது முஸ்லிமாவதற்கு இந்திந்த உறுதிமொழிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முகமது சொல்வார். விபச்சாரம் செய்யக் கூடாது என்றவுடன் ஹிந்தா கேட்பார் - சுதந்திரமான எந்தப் பெண்ணாவது விபச்சாரம் செய்வாளா என்று. குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்றவுடன் - என் குழந்தைகளையெல்லாம்தான் நீங்கள் கொன்றுவிட்டீர்களே என்று முகமதுவிடம் வேதனையுடன் சொல்வார்(இப்படி அவர் சொல்லும்போது சஹாபாக்கள் (நபித்தோழர்கள்) எக்காளமாகச் சிரிப்பர்).// -

- நடந்த சம்பவம், எப்படித் திரிப்பட்டிருக்கிறது என்பது வாசகர்கள் கவனத்திற்கு.
********************************

நபி (ஸல்) அவர்களை, இறைத்தூதர் என்ற அந்தஸ்தில் வைத்து, ஹிந்த் (ரலி) வழங்கி வந்த மேலானக் கண்ணியம் பற்றி கீழ்காணும் செய்தியில் விளங்கலாம்.

ஹிந்த் பின்த் உத்பா, (நபி (ஸல்) அவர்களிடம்) வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (நான் இஸ்லாத்தை எதிர்த்து வந்த பொழுது) பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் இழிவடைவதையும் விட உங்கள் வீட்டார் இழிவடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்து வந்தது. (நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட) பிறகு இன்று பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் கண்ணியம் பெறுவதையும் விட உங்கள் வீட்டார் கண்ணியம் பெறுவதே எனக்கு அதிக விருப்பமானதாக மாறிவிட்டது' என்று கூறினார்கள்.

(இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (இந்த உன்னுடைய விருப்பம்) இன்னும் (அதிகமாகும்)'' என்று பதிலளித்தார்கள். ஹிந்த் பின்த் உத்பா, 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் மிகவும் கருமியான ஒருவர். எனவே, அவருக்குரிய பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல் எடுத்து) எங்கள் பிள்ளை குட்டிகளுக்கு நான் உண்ணக் கொடுத்தால் என் மீது குற்றமாகுமா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நியாயமான அளவிற்கு எடுத்(து உண்ணக் கொடுத்)தால் குற்றமில்லை'' என்று பதிலளித்தார்கள். (புகாரி, 3825)

அன்புடன்,
அபூ முஹை

Sunday, September 24, 2006

நபிமார்களிடையே வேற்றுமை இல்லை.

இஸ்லாம் மார்க்கத்தை விமர்சிக்கப் புறப்பட்டவர் 15.09.2006 நாளில் திண்ணைக் கட்டுரையில் கீழ்கண்டவாறு திருவாய் மலர்ந்திருக்கிறார்.

//(இயேசுவையும் விட உயர்ந்த நபியாக முகமதுவை இஸ்லாம் சித்தரிக்கின்றது. உதாரணமாக இறுதித்தீர்ப்பு நாளில் எல்லா நபிகளையும் விட உயர்ந்த ஸ்தானம் முகமதுவுக்கு அல்லாஹ்வால் வழங்கப்படும். அவரே சிபாரிசு செய்யும் வல்லமை கொண்டவராகத் திகழ்வார். இந்த சிபாரிசின் மூலம் இந்த சிபாரிசின் மூலம் முகமதுவை ஏற்பவர்கள் எவ்வளவு கொடூரங்களைச் செய்திருந்தாலும், அதை அல்லாஹ் மன்னிப்பார். ஆனால், முகமதுவை ஏற்காதவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் முஸ்லிமாக இல்லாமல் போனதற்காக - முகமதுவின் மூலம் வெளிப்பட்ட ஏக இறைவனின் கட்டளைகளை ஏற்காது போனதற்காக நரகத்தீயில் வாட்டப்படுவர் - தவித்த வாய்க்கு தண்ணீர் கூட அங்கு தரப்படமாட்டாது- கொதிக்கும் எரிக்குழம்பே வாயில் ஊற்றப்படும் என்று தெரிவிக்கின்றது இஸ்லாம்).//

''இயேசுவையும் விட உயர்ந்த நபியாக முகமதுவை இஸ்லாம் சித்தரிக்கின்றது.'' எப்படி இருக்கிறது பாருங்கள். இதைப் படித்து விட்டு நாலு கிறிஸ்தவர்கள் ''அப்படியா'' என்று வரமாட்டார்களா என்ற தொனி தெரியவில்லையா? பின்னே நபிமார்களிடையே வேற்றுமை பாராட்டக்கூடாது என்று சொல்லியிருக்கும் இஸ்லாத்தின் மீது இப்படி ஒரு அவதூறைச் சுமத்துவதால் எதை எதிர்பார்க்கிறார் கட்டுரையாளர்..?

நபிமார்கள் அனைவரையும் நம்புவது நம்பிக்கையோடு தொடர்பு கொண்டதாக இஸ்லாம் கூறுகிறது.

2:4. (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள். இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.

இங்கே, திருக்குர்ஆனை நம்புவதோடு மட்டும் நம்பிக்கை முடிந்து விடவில்லை. மாறாக திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன் அருளப்பட்ட எல்லா வேதங்களையும் நம்ப வேண்டும் என்று திருக்குர்ஆன் கட்டளை இடுகிறது. முந்திய வேதங்களை நம்ப வேண்டும் என்ற கட்டளையில், முந்திய வேதங்கள் அருளப்பட்ட நபிமார்களையும் நம்ப வேண்டும் என்ற கட்டளையும் அடங்கி விடுகிறது.

நபிமார்களிடையே பாகுபாடுக் காட்டக்கூடாது, திருக்குர்ஆன் இப்படி சொல்கிறது...

2:136. (முஃமின்களே!)''நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம். இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்'' என்று கூறுவீர்களாக.

2:285. (இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார். (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர், இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். ''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம். (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம். எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம், (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்'' என்று கூறுகிறார்கள்.

3:84. ''அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம். நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக.

நபிமார்களைப் பற்றிய நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் என்று எவ்வளவு அழுத்தமாகச் சொல்லித் தருகிறது மேற்கண்ட வசனங்கள். இறைத்தூதர்கள் என்ற பதவியில் அனைவரும் ஒரே தகுதியுடையவர்களே அதில் எந்த ஏற்றத் தாழ்வும் இல்லை. இறைத்தூதர்களுக்கு வழங்கப்பட்ட தூதுப் பணிகளை அவர்கள் எவ்வித குறைபாடுமின்றி நிறைவேற்றினார்கள். தூதுப் பணிக்காக மக்களிடம் எவ்விதக் கூலியும் பெறவில்லை, எவரிடமும் விலை போகவில்லை. என்று நபிமார்கள் அனைவரையும் ஒரே தட்டில் வைத்து, ஆழமான நம்பிக்கை கொள்ள வேண்டும்.

இறைத் தூதர்கள், குடும்பம், உறவினர்கள், தோழர்கள், ஊர் மக்கள் மட்டுமல்ல, தெரிந்தவர், தெரியாதவர் என்ற பேதங்கள் இல்லாமல் இறைத் தூதுச் செய்திகளை எத்தி வைத்தார்கள். - (தூதுச் செய்தியை எத்தி வைக்கும் ஒரு பகுதிதான், அயல் நாட்டு மன்னர்களுக்கு இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பக்கம் அழைத்து எழுதிய கடிதங்களாகும். இது பற்றி வேறு பதிவுகளில்... இன்ஷா அல்லாஹ்) - பிற சமூகத்தவர்களுக்கும் இறைச் செய்தியை எடுத்துச் சொல்லி அழைப்பு விடுத்தார்கள். ஆகவே நபிமார்களிடையே எவ்வித பாகுபாடுமில்லை என்பதே இஸ்லாம் கற்றுத்தரும் நம்பிக்கை.

நபி (ஸல்) அவர்களும் ''எல்லா நபிமார்களையும் விட என்னைச் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள்'' என்று இதைத்தான் முஸ்லிம்களுக்குக் கற்றுத் தந்தார்கள்.

நபிமொழிகள்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது யூதர் ஒருவர் வந்து, 'அபுல் காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(அந்தத் தோழர்) யார்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'அன்சாரிகளில் ஒருவர்'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவரைக் கூப்பிடுங்கள்'' என்று உத்திரவிட்டார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன், 'இவரை நீர் அடித்தீரா?' என்று கேட்டார்கள். அந்த அன்சாரி, 'இவர் கடைவீதியில், 'மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று ஆணையிட்டுக் கூறிக் கொண்டிருந்ததை செவியுற்றேன்.

உடனே நான், 'தீயவனே! முஹம்மதை விடவா (மூஸா மேன்மை வாய்ந்தவர்)?' என்று கேட்டேன். என்னைக் கோபம் ஆட்கொண்டு விட, இவரின் முகத்தில் அறைந்து விட்டேன்'' என்று கூறினார். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரை விட உயர்த்திப் பேசாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள். அப்போது, பூமி பிளந்து வெளிப்படுத்துபவர்களில் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது, நான் மூஸாவை அர்ஷின் (இறை சிம்மாசனத்தின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பவராகக் காண்பேன். 'மூர்ச்சையடைந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தாரா அல்லது (தூர்சீனா மலையில் இறைவனின் ஒளியை அவர் கண்டபோது அவர் அடைந்த) முதல் மூர்ச்சை கணக்கிலெடுக்கப்பட்டு (அதுவே போதுமென்று, இப்போது மூர்ச்சையடையத் தேவையில்லையென்று அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டு)விட்டதா என்று எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள். (புகாரி, 2411, 2412, 3398, 3408, 3414)

''ஒருவர் மனிதர், (என்னைப் பற்றி) நான் யூனூஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது'' (புகாரி, 3413, 3415, 4630.)
-----------------------
மேலும், இறைவன் நபிமார்களில் சிலரை, சிலரை விட மேன்மையாக்கியிருப்பதாவும் கூறுகிறான்.

17:55. உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான். நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்றோம். இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.

2:253. அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம், அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான். அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான். தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம். இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்.

இறைத்தூதர்களில் சிலரைவிட சிலருக்கு சிறப்பை வழங்கியிருப்பதாக இறைவன் சொல்வது, உதாரணமாக: நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் பற்றியும் அவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கிய பாக்கியங்கள் பற்றியும் அல்லாஹ் சிறப்பித்து திருக்குர்ஆனில் கூறியுள்ளான்.

நபி மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வுடன் பேசியிருக்கிறார்கள்.

ஈஸா (அலை) அவர்கள் தந்தையின்றி பிறந்தார்கள், தொட்டிலில் பேசினார்கள், இன்றுவரை மரணிக்காமல் வாழ்கிறார்கள்.

நபி சுலைமான் (அலை) அவர்களுக்கு வழங்கியது போன்ற ஆட்சியை யாருக்கும் வழங்கவில்லை என்றும் அல்லாஹ் கூறிகிறான்.

இது போன்ற நபிமார்களின் சிறப்புகளில் ஒன்றாக, இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மறுமையில் பரிந்துரை செய்யும் தகுதியை அல்லாஹ் வழங்கியிருக்கிறான்.

//இந்த சிபாரிசின் மூலம் முகமதுவை ஏற்பவர்கள் எவ்வளவு கொடூரங்களைச் செய்திருந்தாலும், அதை அல்லாஹ் மன்னிப்பார்.// - 15.09.2006 திண்ணைக் கட்டுரை.

இதையும் கோணலாகவே விளங்கி எழுதியிருக்கிறார். மறுமையில் முஸ்லிம்களுக்குத்தான் கேள்வி கணக்குக்காக துலாக்கோல் நிறுவப்படும். உலக வாழ்க்கையில் எப்படி வாழ்ந்தார், என்பதை கணக்கிட்டு இவர் சொர்க்கம் செல்லத் தகுதியானவரா? என்பது அங்கு பரிசீலிக்கப்படும்.

அவர் ஓரிறைக் கொள்கையை ஏற்றவராக இருந்தாலும் செய்த குற்றத்திற்காக நரகத்தில் தங்கும் தண்டனைப் பெற்று, தண்டனை முடிந்து பிறகு சொர்க்கத்தில் சேர்க்கப்படுவார். யாரும் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் சொர்க்கத்தில் நுழைந்த விட முடியாது.

மேலும், எவ்வளவு கொடூரங்கள் இழைத்திருந்தாலும் முஸ்லிம்கள் தண்டனையின்றி மன்னிக்கப்படுவார்கள் என்றால் தொழுகை, உண்ணா நோன்பு, போன்ற வணக்க வழிபாடுகளை செய்வது தேவையற்றாகிவிடும். மற்றும் மனிதனுக்கு செய்யும் அநீதங்களையும் இஸ்லாம் கண்டிப்பாகத் தவிர்க்கச் சொல்வது அர்த்தமற்றதாகிவிடும் எனவே...

மறுமையில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை பற்றியும், எவ்வளவு கொடூரங்கள் செய்திருந்தாலும் முஸ்லிம்களை அல்லாஹ் மன்னிப்பான் என்பது பற்றியும் தனிப் பதிவுகள் எழுத வேண்டும். - அந்த அளவுக்கு கட்டுரையாளரால் இவைகள் திரிக்கப்பட்டிருக்கிறது. - இன்ஷா அல்லாஹ் எழுதுவோம்.

ஒரு நபிமொழி
...பிறகு, 'அறிந்துகொள்ளுங்கள், மறுமை நாளில் (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படும் முதல் நபர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள் தாம்.

அறிந்துகொள்ளுங்கள்: என் சமுதாயத்தாரில் சிலர் கொண்டுவரப்பட்டு, இடப்பக்கத்(திலுளள நரகத்)திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான், 'என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்'' என்று சொல்வேன். அதற்கு 'இவர்கள் உங்க(ளுடைய மரணத்து)க்குப் பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என்று கூறப்படும். அப்போது நான், நல்லடியார் ஈசா(அலை) அவர்கள் சொன்னதைப் போன்று, 'நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்!'' என்று பதிலளிப்பேன். அதற்கு, 'இவர்களை நீங்கள் பிரிந்ததிலிருந்து, இவர்கள் தங்கள் குதிகால் சுவடு)களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து வெளியேறிக் கொண்டுதான் இருந்தார்கள்'' என்று கூறப்படும். (புகாரி, 4625)

//இந்த சிபாரிசின் மூலம் முகமதுவை ஏற்பவர்கள் எவ்வளவு கொடூரங்களைச் செய்திருந்தாலும், அதை அல்லாஹ் மன்னிப்பார்.// - இப்படிச் சொன்னவர், மேற்கண்ட நபிமொழியிலிருந்து பாடம் பெறுவாரா..?

அன்புடன்,
அபூ முஹை

Friday, September 22, 2006

பொய்யர்களின் கடைசிப் புகலிடம்.

இஸ்லாம் மார்க்கத்தைக் களங்கப்படுத்திட களமிறங்கிய இஸ்லாத்தின் எதிரிகளின் ஆய்வறிவற்றப் பொய்ப் பிரச்சாரங்கள் பிரமிக்க வைக்கிறது. இஸ்லாத்தை விமர்சிக்கவென்றே, இஸ்லாத்தைப் படிக்கும் இந்தப் பக்கத்துக் காஃபிர்கள், என்னதான் வாசிக்கிறார்கள்? இருப்பதை இல்லையெனவும், இல்லாததை இருப்பதாகவும் சொல்வதற்கா..?

இஸ்லாத்தின் மீது விஷத்தைத் துவிடக் கிளம்பிய வெஷ குமார் - அபு லபு என்று அடித்துக் கொண்ட இவரை, நேசம், வெஷம் என்று எழுத எமக்கு உரிமையுண்டு என்றாலும், வேண்டாம் நேசகுமார் என்றே குறிப்பிடுவோம். - இந்தப் பக்கத்துக் காஃபிரின் உள்ளத்தில் குடிகொண்ட இஸ்லாமிய வெறுப்பு, மொத்த முஸ்லிம்களையும் வெறுக்கும் ஒரு உளரீதியான வியாதிக்கு அவரைத் தள்ளியிருக்கிறது. அதனால் முஸ்லிம்கள் வைத்துக் கொண்டக் காரணப்
பெயராகிய அபூ, இப்னு என்ற பெயர்களும் பிடிக்காமல் போய் விட்டது.

சர் வில்லியம் மூய்ரின் தீவிர பக்தரான இவர், இஸ்லாத்தை எதிர்ப்பதில் சர் வில்லியம் மூய்ர் மூத்தவர், தான் இளையவர் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். திருக்குர்ஆன் பற்றிய இவரின் மகாப் பொய்களை அடையாளம் காட்டியதை மறுக்க திராணியற்ற இவர் என் மீதும் ஒரு மெகா அவதூறைத் திணித்தார். அது பொய்யென்று நாம் சொன்னதற்கு இவரின் மெளனமே இன்றுவரை பதிலாக இருக்கிறது.

வரலாறுகளைத் துல்லியமாக எழுதுவது போல் கட்டிக் கொள்ளும் இந்த மேதாவி!? இஸ்லாமிய வரலாற்றையும் தான் படித்திருப்பதாகக் காட்டிக் கொள்கிறார். இவரது இஸ்லாமிய ரிசர்ஜ் எப்படி இருக்கிறது என்றால், 14 நூற்றாண்டுகளுக்கு பிறகு திருக்குர்ஆனில் ''முஸ்லிம்கள்'' என்று சொல்லப்படவில்லை என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார் நேசகுமார் என்ற மத ஆய்வு ''விஞ்ஞானி''!? போகட்டும், திருக்குர்ஆனின் சில ஆயிரக்கணக்கான வசனங்களில் இது அவருக்கு ஏற்பட்ட தவறு என்று எடுத்துக் கொள்வோம். ஆனால் ஒரு நல்ல விமர்சகன் தனக்கு அறிவில்லாத விஷயத்தைப் பற்றி விமர்சிக்க மாட்டார். அப்படி விமர்சிப்பவர் நேர்மையான விமர்சகராக இருக்க மாட்டார்.

//இன்று திண்ணையில்(15.09.2006) வெளிவந்த எனது கட்டுரையின் (ஜிகாத்தும் தலித் விடுதலையும், முயற்சித்தலும் மூடி மறைத்தலும்) முழுவடிவம்:// - கட்டுரையைப் பிரசவித்தவர்:- நேசகுமார்.

''முழுவடிவும்'' என்று பிரசவித்த இந்த ஆக்கத்திற்கு ''முழுப் பொய்கள்'' என்று பெயர் வைத்திருந்தால் மிகப் பொருத்தமாக இருந்திக்கும். அவ்வளவு பொய்கள் அதில் மலிந்து கிடக்கின்றன. கைச் சரக்கு தீர்ந்து வரும்போது, எஞ்சியுள்ள சரக்கில் கலப்படம் செய்யும் வியாபாரிகளைப் போலாகிவிட்டார் நேசகுமார். இஸ்லாத்தின் ஆவணங்கள் முழுவதும் பாதுகாப்பாக இருக்கும் நிலையிலும் இவரால் இஸ்லாத்தின் மீது துணிந்து பொய்களைக் கட்டவிழ்த்து விட முடிகிறதென்றால், மற்ற விஷயங்கள் இவரிடம் எம்மாத்திரம்..?

முதல் பொய்:- //முகமதுவுக்குப் பின் 200 வருடங்கள் கழித்து, பாரசீகத்தில்தான் இஸ்லாம் ஒரு மதமாக உருவெடுத்தது. முஸ்லிம்கள் என்கிற பதமே அரபிக்களிடம் ஆரம்பத்தில் இருந்திருக்கவில்லை - திருக்குரானில் இருப்பதெல்லாம் நம்பிக்கையாளர் பதம் மட்டும்தான். அன்றைய நம்பிக்கையாளர் முகமதுவை ஒரு இறைத்தூதர் என்று நம்பி, அவருக்கு கீழ்ப்படிந்து ஜகாத் எனும் வரியை கொடுக்கும் ஒரு குழு-அங்கத்தினர் அவ்வளவே.//

''வரி கொடுக்கும் ஒரு குழு'' என்று, என்ன சாமர்த்தியமாக திரிக்கிறார் பாருங்கள்!

இதற்கு 22:78வது வசனத்தை - (''அவன்தான் உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயரிட்டான்'') - சான்றாக வைத்து சிறு விளக்கமும் சொல்லப்பட்டுள்ளது.

இரண்டாது பொய்:- //பிரமிட்டின் உச்சியில் முகமதின் குடும்பம் இருந்தது. அன்றைய தேதியிலேயே முகமதின் விதவைகளுக்கு 10,000 தினார்கள் இப்படிச் சேர்ந்த செல்வத்திலிருந்து அளிக்கப்பட்டது.//

இது பற்றியும் முன்பு எழுதப்பட்டுள்ளது.

''என் வாரிசுகள் பொற்காசையோ, வெள்ளிக்காசையோ பங்கிட்டுக் கொள்ள(வாரிசுரிமையாகப் பெற) மாட்டார்கள். என் மனைவிமார்களின் ஜீவனாம்சத்தையும் என் ஊழியரின் கூலியையும் தவிர, நான் விட்டுச் செல்வதெல்லாம் தருமமாகும்''. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 2776, 3096, 6729)

நபி (ஸல்) அவர்கள், தாம் விட்டுப்போன சொத்திலிருந்து தமது மனைவிமார்கள் வாழ்வாதாரத் தேவைகளை மட்டுமே பெறமுடியும் என்று சொல்லிட்டு தமது சொத்துக்கு எவரையும் வாரிசாக்கவில்லை என்பதும் மேற்காணும் நபிமொழியிலிருந்து விளங்கலாம். அதுவும், நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களின் மரணத்திற்குப் பின் அதுவும் கொடுக்க வேண்டிய ஆவசியமில்லாமல், அந்தத் தொகையும் தர்மமாக கொடுக்கப்பட வேண்டும். இதுதான் இஸ்லாத்தின் ஆவணங்கள். இதற்கு மேல் 10.000 தினார்கள் என்பதற்கான ஆவணங்களை சம்பந்தப்பட்டவர்கள் பதிவு செய்யட்டும் பரிசீலிப்போம்.

மூன்றாவது பொய்:- //இதன் நல்ல உதாரணம் - ஹிந்தாவுடன் அவருக்கி நிகழ்ந்த உரையாடல். அபூ சு·பியானின் மனைவியான ஹிந்தா, மக்கா நகரை முஸ்லிம் படை கைப்பற்றியவுடன் இதன் நல்ல உதாரணம் - ஹிந்தாவுடன் அவருக்கி நிகழ்ந்த உரையாடல். அபூ சு·பியானின் மனைவியான ஹிந்தா, மக்கா நகரை முஸ்லிம் படை கைப்பற்றியவுடன் வேறு வழியின்றி முஸ்லிமாக மாற நேர்ந்தது. அப்போது முஸ்லிமாவதற்கு இந்திந்த உறுதிமொழிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முகமது சொல்வார். விபச்சாரம் செய்யக் கூடாது என்றவுடன் ஹிந்தா கேட்பார் - சுதந்திரமான எந்தப் பெண்ணாவது விபச்சாரம் செய்வாளா என்று. குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்றவுடன் - என் குழந்தைகளையெல்லாம்தான் நீங்கள் கொன்றுவிட்டீர்களே என்று முகமதுவிடம் வேதனையுடன் சொல்வார்(இப்படி அவர் சொல்லும்போது சஹாபாக்கள் (நபித்தோழர்கள்) எக்காளமாகச் சிரிப்பர்).//

மூன்னறாவது பொய்யிலுள்ள பல கிளைப் பொய்கள்:-

ஒன்று:- //அபூ சு·பியானின் மனைவியான ஹிந்தா, மக்கா நகரை முஸ்லிம் படை கைப்பற்றியவுடன் வேறு வழியின்றி முஸ்லிமாக மாற நேர்ந்தது.//

ஹிந்த் பின்த் உத்பா மனப்பூர்வமாகவே இஸ்லாத்தை ஏற்றார் என்று அதே செய்தியிலிருந்து எம்மால் நிரூபிக்க முடியும்.

இரண்டு:- //விபச்சாரம் செய்யக் கூடாது என்றவுடன் ஹிந்தா கேட்பார் - சுதந்திரமான எந்தப் பெண்ணாவது விபச்சாரம் செய்வாளா என்று.//

சுதந்திரமான பெண்கள் திருமணம் என்ற பெயரில் விபச்சாரம் செய்தார்கள் என்ற செய்தியை நம்மால் தர முடியும்.

மூன்று:- //குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்றவுடன் - என் குழந்தைகளையெல்லாம்தான் நீங்கள் கொன்றுவிட்டீர்களே என்று முகமதுவிடம் வேதனையுடன் சொல்வார்//

//என் குழந்தைகளையெல்லாம்தான் நீங்கள் கொன்றுவிட்டீர்களே// -

- நேசகுமார், குழந்தைகள் எங்காவது போருக்குச் செல்லுமா? ''குழந்தைகள்'' என்றா அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது. எதற்கய்யா இப்படி பொய்க்கு மேல் பொய்யாக அடுக்கிச் செல்கிறீர்..?

ஹிந்தாவின் மகன் அநியாயமாகக் கொல்லப்படவில்லை என்பதையும் அதே செய்தியிலிருந்து நம்மால் நிரூபிக்க முடியும்.

''வேதனையுடன் சொல்வார்'' ''வேதனையுடன்'' என்று செய்தியில் இல்லை. இது பொய்யரின் அவதூறு+வேதனை.

நான்கு:- //(இப்படி அவர் சொல்லும்போது சஹாபாக்கள் (நபித்தோழர்கள்) எக்காளமாகச் சிரிப்பர்).//

நபித்தோழர் உமர் (ரலி) என்ற ஒருவர் மட்டும், கட்டுரையாளரின் பார்வையில் நபித்தோழர்கள் என்று பன்மையில் தெரிவதேனோ..? ''சஹாபாக்கள் (நபித்தோழர்கள்) எக்காளமாகச் சிரிப்பர்'' - ''எக்காளமாகச் சிரித்தார்கள்'' இந்த வார்த்தைதான் செய்தியில் உள்ளது என்பதை கட்டுரையாளர் நிரூபிக்கத் தயாரா..? ''சஹாபாக்கள் (நபித்தோழர்கள்) எக்காளமாகச் சிரிப்பர்'' என்று சொன்னது பச்சைப் பொய் என்பதையும் நாம் நிரூபிப்போம்.

பொய்யர்கள் பலவிதம் என்பார்கள் அதில் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யன் என்பார்களே அந்த ரகத்தைச் சேர்ந்தவர்தான் நேசகுமார் என்பவர். இதை நான் மிகையாகச் சொல்லவில்லை. மக்கா வெற்றியின் போது, அபூ ஸுஃப்யான் (ரலி) அவர்களின் மனைவியாகிய, ஹிந்த் (ரலி) - நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி வாங்கிய சம்பவத்தில் எவ்வளவு பொய்களை ஊடுறுவியுள்ளார் என்பதே அவர் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யர் என்பதற்கு போதுமான ஆதாரமாகும்.

நேசகுமார் என்ற பொய்யருக்கு தற்சமயம், - ஹிந்த் (ரலி) பெண்களிலேயே இஸ்லாத்தை அவர் போல் யாரும் எதிர்த்தவர்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கு இஸ்லாத்தின் எதிரியாயிருந்தார் உஹத் போரில் ஹம்ஸா (ரலி) அவர்களின் உடலை சின்னா பின்னப்படுத்தி ஈரல் கொலையை கடித்துத் துப்பியவர். ஆனாலும் பின்னாளில் அவர் மனம் விரும்பியே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்பதற்கு - கீழ்கண்ட செய்தியை சான்றாக வைக்கிறேன்.

ஹிந்த் பின்த் உத்பா (ரலி) சொன்னதாக புகாரியில் ஒரு செய்தி:- ''அல்லாஹ்வின் தூதரே! யாருமே பெற்றிராத கேவலத்தை நீங்கள் அடைய வேண்டும் என்று முன்பு நான் பிரியப்பட்டேன். இன்று, யாருமே பெறாத கண்ணியத்தை நீங்கள் பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்''.

நான்காவது:- // அழகிய ரைஹானா எனும் யூதப்பெண்ணை முகமது தமக்கென எடுத்துக் கொண்டார்(இப்பெண் முஸ்லிமாக மதம்மாறவில்லை என்பதால் அடிமைப்பெண்ணாகவே முகமதின் அந்தப்புரத்தில் இருந்து இறந்துபோனார் என்கின்றனர். மதம்மாறாத காரணத்தினால் அவரை மனைவியாக ஏற்கவில்லை முகமது. தமது செக்ஸ் அடிமையாக மட்டும் வைத்துக் கொண்டார் என்று சொல்கின்றனர். சர் வில்லியம் மூர் போன்றவர்கள் இது நிஜமாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்).//

பொய்யனின் செய்தியை அவனால் நிரூபிக்க முடியாமல் போகும்போது,
''அது நிஜமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது''
''அப்படியும் இருக்கலாம் என்கின்றனர்''
''அவ்வாறு சொல்லப்படுகிறது''
''அப்படித்தான் சொல்லிக் கொண்டார்கள்'' என்று உளறுவான், இப்படி சொல்லித் திரிபவனின் அவதூறுகளை, ''பொய்யர்களின் கடைசிப் புகலிடம்'' என்பார்கள். இந்தக் கருத்தையொத்ததாக இருக்கிறது கட்டுரையாளரின் நான்காவது பொய்.

முஸ்லிம்களே! மகாப் பொய்யரான நேசகுமாரிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளளுங்கள்! ''நாங்கள் எச்சரிக்கையாகவே இருக்கிறோம்'' என்கிறீர்களா..? சரி! ''மிக எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்'' முழு உலகத்தையும் ஒரு சோத்துப் பருக்கைக்குள் மறைத்திட முயற்ச்சிக்கும் பேராபத்தான மனிதர் இந்த நேசகுமார்.

//முகமது அவர்களின் வாழ்வில் ஜிஹாத் மூன்று கட்டமாக கடைப்பிடிக்கப் பட்டது. அவையாவன:// -

- அதி மேதாவியின் இந்த மூன்று கட்ட உளறலுக்கும் ''இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்'' என்ற பகுதியில் விளக்கம் வரும். அதுபோல் மற்றவைகளுக்கும் தொடர்ந்து விளக்கம் எழுதப்படும் இன்ஷா அல்லாஹ்.

ஓர் அழைப்பு,
//தழைத்து கொப்பும், கிளையுமான ஆலமரமாய் படர்ந்து தீர்க்க சிந்தனையை// - ஏற்று இளைப்பாற வரலாமே! இதனால் நரக நெருப்பிலிருந்து மீளலாம்.

பிறயாவும் பின்...

அன்புடன்,
அபூ முஹை

Wednesday, September 20, 2006

கொள்கையால் வேறுபட்டவர்கள்.

மனதால் கொள்கையில் மாறுபட்டவர்கள் மண வாழ்க்கையில் இணைந்தால்..?


அனைத்திற்கும் ஒரே, ஒரு இறைவன் மட்டுமே இருக்கிறான் என்பதே இஸ்லாம் மார்க்கத்தின் இறைக் கொள்கை. இந்தக் கொள்கையால் மற்ற மதங்களிலிருந்து இஸ்லாம் வேறுபடுகிறது. மட்டுமல்ல, சட்ட திட்டங்கள், வணக்க வழிபாடுகள், கொள்கைகள் என எல்லா விஷயங்களிலும், பிற மதங்களிலிருந்து இஸ்லாம் தனிவழி கொண்டிருக்கிறது.

இல்லறத் துணை என்பது மனித வாழ்வில் மிக முக்கியத் தேவை. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஆண், பெண் முஸ்லிம்களுக்கு, தமது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துக் கொள்வதில் வரம்புகளை விதிக்கிறது இஸ்லாம். அது பற்றய திருக்குர்ஆனின் வசனங்கள்...

2:221.(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை - நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். ஆவாள், அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள். இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன். (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான். மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.

இதே கருத்து 60:10 வசனத்திலும் சொல்லப்படுகிறது.

முஸ்லிமான ஆண்கள், பெண்கள், இஸ்லாமல்லாத பிறமதத்தைச் சேர்ந்தவர்களுடன் திருமணம் சம்பந்தம் வைத்துக் கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. மாறாக தடை விதிக்கிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் தமது சமுதாயத்திலேயே வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து கொள்ள வலியுறுத்துகிறது. இது, இஸ்லாம் மனிதர்களிடையே உயர்வு தாழ்வைக் கற்பிக்கிறது என்று சிலருக்குத் தோன்றினாலும் சற்று நடுநிலையோடு சிந்தித்தால் மனிதர்களின் நன்மைக்காகவே பிற மதத்தில் மணம் செய்வதைத் தடை செய்கிறது என்பதை விளங்கலாம்.

வாழ்க்கைத் துணையாக இணைய ஒரு ஆண், பெண் இருந்தால் போதும். - இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாகவோ, அல்லது ஒருவர் மதம் சார்ந்தவராகவும் இன்னொருவர் மதம் சாராதவராகவும் இருந்தாலும் இருவரும் மனமொப்ப மணம் செய்து கொண்டால், - இல்லறம் நடத்த என்ன தடை இருக்கிறது? இந்தக் கேள்வி நியாயமாகப்பட்டாலும். இதிலுள்ள போலித் தனத்தை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை.

கொள்கையால் இருவேறு துருவங்கொண்ட ஆண், பெண் இல்வாழ்க்கையில் இணைந்து கொள்ள சம்மதித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றால், தான் கொண்ட கொள்கையில் அவர்கள் உறுதியாக இல்லை! இன்னும் சொல்வதென்றால் இருவரிடமும் கொள்கை என்பதே இருந்திருக்கவில்லை! கொள்கையுடன் இருந்திருந்தால் மாறுபட்ட கொள்கையுடைய நாம் எப்படி வாழ்க்கையில் ஒன்றுபட முடியும் என்பதை சிந்தித்திருப்பார்கள்.

ஆண், பெண் இருவரில் ஒருவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர், மற்றவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். இந்த இருவரும் வாழ்க்கையில் இணைந்தால் ஒருவர் நம்பிக்கையை மற்றவர் ஆதாரிக்கிறார். அதாவது, கடவுள் உண்டு என்பதும் சரிதான், கடவுள் இல்லை என்பதும் சரிதான் என்ற இந்த ரெண்டுங்கெட்டான் தன்மை எதிர்காலத்தில் ஏதாவது ஒருபக்கம் சாய்ந்துவிட வைத்துவிடும்.

மண வாழ்வில் அடியெடுத்து வைப்பது எல்லா வகையிலும் சந்தோஷங்களை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு. வாழ்க்கையில் இணையும் மணமக்கள் இருவரும் ஒரே மதத்தைச் சார்ந்தவர்களாக, அல்லது இருவரும் மதத்தைச் சேராதவர்களாக இருந்தால் மதக் கொள்கையில் எதுவும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பில்லை.

மாறாக இரு வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டவர்கள் வாழ்க்கையில் இணைந்தால், குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது..? எப்படி வளர்ப்பது? எந்த மத அடிப்படையில் சொத்துக்களைப் பிரிப்பது என்பது போன்ற பலப் பிரச்சனைகளை சந்திப்பது மட்டுமல்லாமல் நிம்மதியான வாழ்க்கையும் சீர் குலைந்துவிடும்.

அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தமது மதத்திலேயே வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொள்வதுதான் எல்லா வகையிலும் சரியாக இருக்கும். ஒரு கடவுட்க் கொள்கையுடையவர் பல கடவுட்க் கொள்கையுடையவருடனும், அல்லது கடவுளே இல்லை என்ற கொள்கையுடையவருடனும் நீண்ட நாள் ஒத்துப் போக இயலாது. (இது உறுதியான கொள்கையிருப்பவர்களுக்குப் பொருந்தும்.)

ஏக இறைவனுக்கு இணைவைக்கும் ஆண், பெண் என்னதான் கவர்ச்சியூட்டக்கூடியவர்களாக இருந்தாலும், அதைவிட ஏக இறைவனை மட்டும் நம்பிக்கை கொண்ட அடிமையே மேலானவர் என்று திருக்குர்ஆன் சொல்கிறது. இங்கு கொள்கையளவிலுள்ள வித்தியாசங்களே சுட்டிக் காட்டப்படுகின்றன. ஜாதிகள் அடிப்படையில் மனிதர்களிடம் வேற்றுமையைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

மேலும் ''அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை'' என்று இறைவன் கூறுகிறான். ஏக இறைவனை நம்பிக்கை கொண்டு இஸ்லாத்தில் நுழைந்து விட்டால் அந்தக் கணமே திருமணம் முடித்து கொள்ளத் தடையில்லை என்றும் 2:221வது இறைவசனம் கூறுவதால், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஜாதியின் அடிப்படையேக் காரணம் என்ற தவறானக் கருத்தையும் தகர்த்து விடுகிறது இஸ்லாம்.

''இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்.''

இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டபின், இஸ்லாத்தில் இருந்து கொண்டே, இறைவனுக்கு இணைவைக்கும் மதத்தில் திருமணம் செய்யக் கூடாது என்ற இறைக் கட்டளையை மீறி, ஒரு முஸ்லிமான ஆண் - பெண் இணைவைப்பவரைத் திருமணம் செய்து கொண்டால், இந்த இறைக் கட்டளையைப் புறக்கணித்த அவருக்கு மாற்று மதக் குடும்பத்தோடு திருமண உறவு ஏற்பட்ட பின், அக்குடும்பத்தாரைத் திருப்திபடுத்துவதற்காக வேறு சில விஷயங்களிலும் இறைவனின் வரம்புகளை மீறுவது சாதாரணமாகிவிடும்.

அது அப்படியே பரிணாமமடைந்து இறைவனுக்கு இணைவைப்பதும் அந்த முஸ்லிமிற்கு மிகச் சாதாரணமாகி, அச்செயல்பாடுகள் அவரை நரகத்தில் சேர்த்துவிடும். 'இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்.'' என்றால், நரகத்தைப் பற்றிய நம்பிக்கை இல்லாதவரின் திருமண அழைப்பை - நரகம் உண்டென்று கண்டிப்பாக நம்பும் ஒரு முஸ்லிம் - ஏற்று மணமுடித்துக் கொண்டால் அதனால் ஏற்படும் பின் விளைவுகள், மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கைக்கு முக்கியத்துவம் வழங்கும் நிலையேற்பட்டு, ஏக இறைவனுக்கு இணைவைக்கும் நிலையையுமடைந்து நரகத்துக்குச் செல்ல நேரிடும். அதுவே இங்கு ''நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்'' என்று இலக்கியத்தோடு சொல்லப்படுகிறது.

எனவே முஸ்லிம்கள் தங்கள் குடும்பத்தில் எவரேனும் மாற்று மதத்தவருடன் திருமண உறவுக்குத் தயாரானால், அச்செயல் நரகத்தில் சேர்த்துவிடும் என்பதால், அவரை நரகத்திலிருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்புணர்வை அக்குடும்பத்தின் மீது சுமத்தியிருக்கிறது என்பதை கீழ்காணும் வசனத்திலிருந்து விளங்கலாம்.

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். (திருக்குர்ஆன், 66:6)

அன்புடன்,
அபூ முஹை

Monday, September 18, 2006

மதமாற்றம் ஏன்? -5

இஸ்லாம் பற்றிய சந்தேகம் கேட்டு, 67.நான் ஏன் மதம் மாறினேன்..? என்ற தலைப்பின் தருமி என்பவர் ஒரு பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில் 21கேள்விகள் வைக்கப்பட்டிருந்தது. கேள்விகள் மட்டுமில்லை, கேள்விகளுக்கு முன் ஒரு முன்னுரை மாதிரி, ''இதெல்லாம் எனக்குத் தெரியும்'' என்ற தோரணையில் இஸ்லாத்தை பற்றியும் சில விளக்கங்களை எழுதியிருந்தார்.

நமது பார்வையில் அது விமர்சனமாகப்பட்டது. ஏனென்றால் எழுத்தின் சாயலில் விமர்சனம் இருந்தது. மிகையாகச் சொல்லவில்லை இதோ அவர் எழுதியது...

//மூன்று திருமணங்கள் மட்டுமே (என்னைப் பாதித்தவை) குறிப்பிடத் தக்கவை.

1 ஆயிஷா - முகமது இப்பெண்ணை மணம் முடிக்கும்போது அவரது வயது 50-க்கு மேல்;
2. Zaynab bint Jahsh- ஜேனாப் என்ற இந்தப் பெண்மணி முகமதின் வளர்ப்பு மகனின் மனைவி;

3. ஜுவேரியா - இந்தப் பெண்ணின் கதை மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமாயிருந்தது.//
>தருமி.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்களின் எண்ணிக்கையைப் பட்டியலிட்டு அதில் மூன்று திருமணங்களால் இவர் பாதிக்கப்பட்டதாகவும், (எப்படி பாதிக்கப்பட்டாரோ?) அதிலும் ஜுவைரியா (ரலி) அவர்களுக்கு நிகழ்ந்தது இவர் மனதை கஷ்டப்படுத்தியதாகவும் (எதனால் கஷ்டமடைந்தாரோ?) குறிப்பிட்டிருந்தார். இது விமர்சனம் என்பதில் சந்தேகமில்லை.

இந்த விமர்சனத்தை மனதில் கொண்டு, அன்னை ஆயிஷா, அன்னை ஸைனப், அன்னை ஜுவைரியா (ரலி-அன்ஹுமா) இந்த மூவர் முஹம்மது (ஸல்) அவர்களை மணந்து அதனால் எவ்வித பாதிப்புக்கும் ஆளாகவில்லை. மாறாக மகிழ்ச்சியாகவே வாழ்ந்தார்கள் என்பதை இரண்டு பதிவுகளில் விளக்கியிருந்தோம்.

அப்படிப் பாதிக்கப்பட்டிருந்தால், அது சமகால இஸ்லாத்தின் எதிரிகளால் விமர்சிக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற திருமணங்கள் அச்சமூகங்களிடையே தடை செய்யப்பட்டிருந்தால் அதுவும் எதிரிகளால் விமர்சிக்கப்பட்டிருக்கும். என்று எழுதி, இத்திருமணத்தால் எங்களின் வாழ்க்கை பாழாகி விட்டதாக யாரும் சொல்லவில்லை மாறாக மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் வரலாறு. என்று சொல்லி...

//நபியை மணந்த ஆயிஷா (ரலி)யின் வாழ்க்கையில் சிறு கீறல்கூட இல்லாமல் மிக்க மகிழ்ச்சியாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று அவர்கள் சொல்லியே வரலாற்றிலிருந்து அறிய முடிகிறது. ஆனாலும் தருமி போன்றவர்கள் புகுந்து இது கொடுமையென்று தொடர்ந்து புலம்பிக் கொண்டிருப்பதுதான் மிகக் கொடுமை. 53வயதான நபி(ஸல்) அவர்களை மணந்ததால் என் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று ஆயிஷா (ரலி) எங்காவது சொல்லியிருக்கிறார்களா? இந்த பால்ய விவாகத்திற்கும் தருமி மதமாறியதற்கும் என்ன சம்பந்தம்?

59வயதான நபி(ஸல்) அவர்களை மணந்ததால் என் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று ஜுவைரியா (ரலி) எங்காவது சொல்லியிருக்கிறார்களா?//
> இப்படிக் கேட்டிருந்தோம்.

அதாவது சம்பந்தப்பட்டவர்கள் மிக சந்தோஷமாக நபி (ஸல்) அவர்களோடு இல்லற வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள். இது ஏன் தருமியை பாதிக்க வேண்டும்? அப்போதிருந்தே, தருமிதான் எனக்கு விளக்கம் சொல்லும் இடத்தில் இருக்கிறார்.

ஆனால் பதில் சொல்லாமல், 175.நான் ஏன் மதம் மாறினேன்..? என்ற பதிவில், அவருடைய கேள்விகளில் சிலவற்றை அவரே தள்ளுபடி செய்கிறார். மேலும் தான் விமர்சித்த பகுதிக்கு விளக்கம் கொடுத்த போது, நான் அதைக் கேள்வியாக வைக்கவில்லை என்று நாணயத்தை மாற்றுகிறார், பூவா, தலையா போட சுண்டியதில் பூ விழுந்ததும், உடனடியாக நாணயத்தை தலைப் பக்கம் திருப்பிக் போட்டுக் கொள்வார்களே! அது போல.

//ஆக, என் 21 கேள்விகளில், முதல் கேள்வி, கேள்வியே தவறானது என்று ஒப்புக்கொள்கிறேன். இரண்டாவது, மூன்றாவது, ஆறாவது கேள்விகளுக்குப் பதில் தரப்பட்டுள்ளன. அந்தப் பதில்களை நான் ஏற்றுக் கொண்டுவிட்டேனா என்பது வேறு விஷயம்.// >தருமி.

இங்கே தருமிக்கு சில வார்த்தைகள்: எந்தவொரு விளக்கத்தையும் ஏற்றுக் கொள்வதும், புறக்கணிப்பதும் அவரவர் சுதந்திரமான கருத்திற்குட்பட்டது. ஏற்றுக் கொண்டேயாக வேண்டுமென்று இங்கு யாரும் வற்புறுத்தவில்லை. ஏற்காததால் பூமியின் சுழற்சி நின்று விடப்போவதில்லை ஆனால்...

ஒரு விமர்சகனின் எழுத்தில் நேர்மை இருக்க வேண்டும். தான் விமர்சித்ததை விளக்கும் போது 'இதை நான் கேள்வியாக வைக்கவில்லை' என்றால் கேள்விகளுக்கு முன்பு அந்த விமர்சனங்கள் ஏன் எழுதப்பட்டது? என்பதையாவது உண்மையுடன் உரைக்க வேண்டும். 21 கேள்விகளுக்கு மட்டுமல்ல அதற்கு அப்பாலுள்ள கேள்விகளுக்கும் மணி மணியான விளக்கங்கள் இஸ்லாத்தில் இருக்கிறது.

அது பற்றி பேசுவதற்கு முன்,

//மூன்று திருமணங்கள் மட்டுமே (என்னைப் பாதித்தவை) குறிப்பிடத் தக்கவை.

1 ஆயிஷா - முகமது இப்பெண்ணை மணம் முடிக்கும்போது அவரது வயது 50-க்கு மேல்;

2. Zaynab bint Jahsh- ஜேனாப் என்ற இந்தப் பெண்மணி முகமதின் வளர்ப்பு மகனின் மனைவி;

3. ஜுவேரியா - இந்தப் பெண்ணின் கதை மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமாயிருந்தது.//
>தருமி.

இந்த மூவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள் என்று கூட வேண்டாம் - பாதிக்கப்பட்டார்கள் என்பதற்கான சம்பந்தப்பட்டவர்களின் வாக்கு மூலம், அல்லது சமகாலத்தில் யாராவது இவர்களின் பாதிப்பைப் பற்றி பேசியுள்ளதாக ஏதேனும் ஒரு ஆவணத்தை தருமி சமர்ப்பிக்க வேண்டும், அதன் பிறகு அவருடைய மற்ற கேள்விகளையும் அது சம்பந்தமான விவாதங்களையும் அழகிய முறையில் சந்திப்போம். நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Sunday, September 17, 2006

2.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.

இஸ்லாம், ''அவர்களைக் கொல்லுங்கள்'' என்று சொல்கிறதென்றால், இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் முஸ்லிமல்லாதவர்களிடம் ''ஜிஸ்யா'' ஏன் வசூலிக்க வேண்டும்..?


இஸ்லாம் பற்றி, இஸ்லாத்தின் எதிரிகள் பரப்பும் பொய்யானத் தகவல்களை களைவதுதான் இந்தப் பதிவின் நோக்கமேயல்லாது, அனைத்து இஸ்லாமியப் போர்கள் பற்றியும் விளக்கிடும் நோக்கமல்ல. ''முஸ்லிமல்லாதவர்களை கொல்லுங்கள்'' என்று திருக்குர்ஆன் கூறுவதாக வாய் கூசாமல் பொய் பிரச்சாரம் செய்பவர்கள் முன் வைக்கும் மற்றொரு, - 47:4வது - வசனத்தையும் பார்ப்போம்.

47:4. (முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள். கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள். அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான். ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான். ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.

மேற்காணும், வசனத்தில் ''காஃபிர்களை நீங்கள் சந்தித்தால் அவர்களின் கழுத்துகளை வெட்டுங்கள்'' என்ற வார்த்தைகளை எடுத்துக் கொண்டு ''திருக்குர்ஆன் முஸ்லிமல்லாதவர்களையெல்லாம் வெட்டச் சொல்கிறது பாருங்கள்'' என இஸ்லாத்தின் எதிரிகள் எழுதி வருகிறார்கள். மேலும், 47:4வது வசனம் போர் பற்றியே சொல்லவில்லை, எனவும் ''ஒவ்வொரு முஸ்லிமும் கையில் ஆயுதத்தோடு அலைந்து கொண்டிருக்க வேண்டும், காஃபிர்களை சந்திக்க நேர்ந்தால் அவர்களின் பிடரியில் வெட்ட வேண்டும்''. என்றும் இஸ்லாத்தை விமர்சிக்கும், சில பக்கத்துக் காஃபிர்கள் 47:4வது வசனத்திற்கு இப்படித்தான் விளக்கவுரை!? எழுதுகிறார்கள்.

இந்த விளக்கம் சரியா? என்று பார்ப்போம்.

1. ''அவர்களின் கழுத்துகளை வெட்டுங்கள்'' என்பது போர் முனையில் காஃபிர்களை சந்திப்பது பற்றி சொல்லவில்லை, பொதுவாக போரிலில்லாமல் சாதாரணமாக முஸ்லிம்கள் ''முஸ்லிமில்லாதவர்களை'' சந்தித்தாலும் அவர்களின் கழுத்தில் வெட்ட வேண்டுமென்பதுதான் பொருளென்றால், நபி (ஸல்) அவர்களின் ஆட்சித் தலைமையில் மதீனாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தபொழுது, காஃபிர்கள் சிறுபான்மையினராக இருந்தார்கள். முஸ்லிம்களும், காஃபிர்களும் அன்றாடம் சந்தித்து அளாவளாவி, நட்புடன் கொடுக்கல், வாங்கல்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.

முஸ்லிம்கள் காஃபிர்களை சந்தித்தவுடன் அவர்களின் கழுத்தை வெட்டியிருந்தால் மதீனாவில் ஒரு காஃபிர் கூட எஞ்சியிருக்க முடியாது. 47:4வது வசனத்திற்கு எதிரிகள் சொல்வதுதான் உண்மையான விளக்கம் என்றிருந்தால் அதை முஸ்லிம்கள் அன்றே விளங்கி செயல்பட்டிருப்பார்கள். மதீனாவில் காபிஃர்கள் சுத்தமாக துடைத்தெறியப்பட்டிருப்பார்கள். ஆனால் முஸ்லிம்கள் அப்படிச் செய்யவில்லை - காஃபிர்களின் கழுத்துகளை வெட்டுங்கள் என்ற வசனத்தை போரில் சந்திக்கும்போது ஏற்படும் நிகழ்வு என்பதை முஸ்லிம்கள் சரியாக விளங்கிக் கொண்டதால் மதீனாவில் முஸ்லிம்களும், காஃபிர்களும் சகஜமாக பழகி வாழ்ந்து வந்தார்கள்.

2. இஸ்லாத்தின் சட்டங்களை செயல்படுத்தும் - இஸ்லாமிய அரசு அதிகாரம் செலுத்தும் - நாட்டில் ''ஜிஸ்யா'' வரி என்று ஒன்று வசூலிக்கப்படும். இந்த வரி முஸ்லிமல்லாத குடி மக்களின் மீது விதிக்கப்படுகிறது. ''காஃபிர்களை சந்தித்தால் அவர்களின் கழுத்துக்களை வெட்டுங்கள்'' என்ற திருக்குர்ஆன் வசனம் போரில் சந்திக்கும் போது வெட்டுவதைப் பற்றி சொல்லவில்லையென்றால், இஸ்லாம் அதிகாரம் செலுத்தும் நாட்டில் முஸ்லிமல்லாதவர் ஒருவர் கூட வாழ முடியாது. பின் ஜிஸ்யா வரி எதற்கு?

இஸ்லாமிய அரசு இல்லாத நாட்டில் ஜிஸ்யா வரி இல்லை. இஸ்லாமிய சட்டங்களை அமுல் படுத்தும் அதிகாரம் பெற்ற நாட்டில் மட்டுமே முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜிஸ்யா வரி விதிக்க முடியும். அப்படியானால் இஸ்லாமிய அரசு ஆட்சியிலிருக்கும் ஒரு நாட்டில் முஸ்லிம்களும், முஸலிமல்லாதவர்களும் சேர்ந்து வாழ்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை என்பதை மேலோட்டமாக பார்த்தாலே புரிந்து கொள்ளலாம் - சிந்திக்கவும்.

இனி 47:4வது வசனத்தைப் பார்ப்போம்.

1.''நிராரிப்பவர்களை நீங்கள் சந்தித்தால் பிடரியை வெட்டுங்கள்.''
2. ''முடிவில் அவர்களை வென்றால் போர் தனது ஆயுதங்களைக் கீழே போடும்வரை கட்டுகளைப் பலப்படுத்துங்கள்.''
3. ''அதன் பிறகு ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம் அல்லது பெருந்தன்மையாக விட்டு விடலாம்''


''நிராரிப்பவர்களை நீங்கள் சந்தித்தால் பிடரியை வெட்டுங்கள்.'' என்று கூறி, அடுத்த வாக்கியத்தில், ''அவர்களை வென்றால்'' என்று சொல்லப்படுகிறது. ''அவர்கள்'' என்பது நாம் முதல் கட்டுரையில் விளக்கியது போல, இந்த வசனத்திலும் முதல் வாக்கியத்தில் சொல்லப்பட்டுள்ள ''காஃபிர்கள் - நிராகரிப்பவர்களையே குறிப்பிடுகிறது. பிறகு என்ன சொல்கிறது? ''போர் தனது ஆயுதங்களைக் கீழே போடும் வரை'' இங்கு மிகத் தெளிவாகவே, ''போர், சண்டை, யுத்தம்'' - (''war, fight, combat, battle'') - என்பதைக் குறிப்பட்டுச் சொல்லும் ''அல் ஹர்ப்'' என்ற வாசகமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (47:4வசனம் போர் பற்றி சொல்லவில்லை என்று மறுப்பவர்கள் தாராளமாக தங்கள் எதிர் கருத்துக்களை வைக்கலாம்)

''போர் தனது ஆயுதங்களைக் கீழே போடும் வரை'' என்று ஆயுதங்களோடு போருக்கு வருபவர்களை என்று விளங்குவதில் எந்த சிரமும் இல்லை, ஆனாலும் மிகவும் வெண்மையான இந்த வசனத்தைத் திரிக்க முயற்சிப்பவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு, கருமையைப் பூசிட முயல்கிறார்கள்.

''அதன் பிறகு ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம் அல்லது பெருந்தன்மையாக விட்டு விடலாம்'' இங்கேயும் இந்த வசனத்தை திரிப்பவர்ளுக்கு மிகத் தெளிவான விளக்கமிருக்கிறது. - ''அதன் பிறகு ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம்'' - போரில் தோற்கடிக்கப்பட்டு, போரில் வென்றவர்களால் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களேயே போரில் தோற்ற எதிரணியினர் ஈட்டுத் தொகைக் கொடுத்து தங்கள் போர் வீரர்களை மீட்டுக் கொள்வார்கள்.

சுதந்திரமான எந்த மனிதனையும் பிடித்து வைத்துக்கொண்டு ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்வதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே போரில் தோற்கடிக்கப்பட்டு பிடிபட்டவர்களே, ஈடு பெற்றுக்கொண்டு விடுவிக்கப்பட்டார்கள்.

அன்றைய போர் என்பது, நூற்றுக் கணக்கான, பல்லாயிரக் கணக்கானவர்கள் மோதிக் கொள்வார்கள் என்பது மட்டுமல்ல, ஒண்டிக்கு ஒண்டியாக மோதுவதும் போராகவே கொள்ளப்பட்டது. போர் சூழலை மேற்கொண்டு போரிடத் தயாராகும் இரு அணியும் தங்களது ராணுவத் தளங்களை ஸ்திரப்படுத்தி அமைத்துக் கொள்வார்கள். பிறகு முதன் முதலில் அங்கிருந்து ஒருவர், இங்கிருந்து ஒருவர் என களமிறங்கி எதிரியைச் சந்தித்து ஒத்தைக்கு ஒத்தையாக சண்டையிடுவார்கள். இருவருமே மற்றவர் கழுத்தை வெட்டுவதற்கு குறி வைத்தபடியே சண்டை நடக்கும், இதுவும் போர்தான். பிறகு மூன்று பேராகக் களமிறங்குவார்கள், இப்படியே போர் உக்கிரமடைந்து இரு அணியினரும் மோதிக் கொள்வார்கள். இதில் இரண்டு அணியினருமே கொல்லப்படுவார்கள்.

போரில், முஸ்லிம் காஃபிரை பிடரியில் வெட்டவில்லையென்றால், காஃபிர் முஸ்லிமைப் பிடரியில் வெட்டி விடுவார். காஃபிர், முஸ்லிமை பிடரியில் வெட்டவில்லையென்றால், முஸ்லிம் காஃபிரை பிடரியில் வெட்டி விடுவார். இது போரில் நடக்கும் சம்பவம். இதையெல்லாம் திரித்து இஸ்லாத்தின் மீது அவதூறு சுமத்தப்படுகிறது. எனவே...

ஆயுதமேந்தி போருக்கு வருபவர்களையே ''சந்தித்தால் அவர்களின் பிடரியை'' வெட்டுங்கள் என்பதை புரிந்து கொள்வதற்காகவே - (முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) ''நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்.'' - திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு அடைப்புக் குறிக்குள் (போரில்) என்று விளக்கியிருக்கிறார்கள். 47:4வது வசனத்தின் பின் வரும் வாசகங்கள் போரில் நடப்பது பற்றியே பேசுவதால், போரில் சந்தித்தால் அவர்களின் பிடரியை வெட்டுங்கள்'' என்பது மிகையான மொழி பெயர்ப்பு அல்ல. வசனத்தின் மற்ற வாசகங்கள் இதையே உறுதிபடுத்துகிறது.

8:57. எனவே, போரில் நீர் அவர்கள் மீது வாய்ப்பைப் பெற்று விட்டால், அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களும் பயந்தோடும்படி சிதறடித்து விடுவீராக - இதனால் அவர்கள் நல்லறிவு பெறட்டும்.

போரில் சந்திக்கும் எந்தவொரு அணியும், எதிரணியை வென்று விட்டால் அவர்களை பின்னோக்கி ஓடும்படி விரட்டுவார்கள். இது மீண்டும் ''அவர்கள்'' போருக்கு வராமலிருக்க பாடமாக அமையும். இரு தரப்பினருக்கும் இது பொருந்தும். இந்த வசனத்திலுள்ள ''அவர்கள்'' யார் என்றால் போர் தொடுத்து வருபவர்களேயே ''அவர்களை'' எதிர்த்துப் போர் செய்யச் சொல்கிறது. சண்டைக்கு வராதவர்களுடன், வலியச் சென்று சண்டையிடச் சொல்லவில்லை இஸ்லாம்.

(விளக்கங்கள் தொடரும்)

குறிப்பு: முதலில் ''பூ'' விற்க வந்துவர் இப்போ ''புஷ்பம்'' என்று விற்க வருகிறார். உள்ளேயிருக்கும் வியாபாரப் பொருள் ஒன்றுதான் பெயரில் மட்டுமே மாற்றம் உள்ளது. இவர், ''முஸ்லிம்கள்'' என்ற பதம் ''நம்பிக்கையாளர்கள்'' என்ற கருத்திலேயே திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறார் அவருக்கு நினைவூட்டி இந்த வசனம்...

22:78. ''அவனே உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான்''

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு ''முஸ்லிம்கள்'' என இறைவனே பெயரிட்டிருக்கிறான். திருக்குர்ஆனில் மற்ற வசனங்களில் இடம்பெறும் ''முஸ்லிம்'' என்பதை நம்பிக்கையாளர் என்று மொழி பெயர்த்தாலும், ''ஹுவ ஸம்மாக்குமுல் முஸ்லிமீன்'' இங்கே ''ஸம்மாக்கும்'' என்று ''உங்களுக்கு பெயரிட்டான்'' என்று இறைவன் சூட்டிய பெயரை மொழி பெயர்க்கக் கூடாது.

கருப்பருக்கு, வெள்ளையன் என்று பெயர் வைத்தால் வெள்ளையன் என்றுதான் அழைக்க வேண்டும். நோயாளியாக இருந்தாலும் ஆரோக்கியம் என்று பெயர் வைத்தால் நோயாளியையும் ஆரோக்கியம் என்றுதான் கூப்பிட வேண்டும். பெயர் என்பது காரணத்துடன் வைக்கப்படுவதில்லை, பெயர் ஒரு குறியீடுதான். முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்தை முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுவது, அப்படித்தான் அல்லாஹ் பெயர் சூட்டியிருக்கிறான் என்பதால், அப்படி எங்களை நாங்கள் குறியீடு செய்து கொள்கிறோம்.

பிறயாவும் பின்...

அன்புடன்,
அபூ முஹை

Thursday, September 07, 2006

மதமாற்றம் ஏன்? -4

இஸ்லாம் இயற்றியுள்ளக் குற்றவியல் சட்டங்கள் மனிதாபிமானமற்றவை, கொடுரமானவை என்றும் குற்றம் புரிந்தவருக்குக் கடுமையான தண்டனையை இஸ்லாம் வழங்குகிறது. என்றெல்லாம் விமர்சிப்பவர்கள், இஸ்லாம் மட்டும் குற்றங்களுக்குத் தண்டனை வழங்கவில்லை, உலகநாடுகள் அனைத்தும் குற்றங்களுக்கான தண்டனைகளை நிர்ணயித்து குற்றவாளிகளை தண்டித்து வருகின்றன என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் செய்கின்றனர்.

குற்றவாளித் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாரிடமும் மாற்றுக் கருத்தில்லை. தண்டனை கூடுதல் என்பதில் தான் இஸ்லாம் முரண்படுகிறது. தண்டனை கூடுதல் போல் தோன்றினாலும் பாதிக்கப்பட்டவனின் தரப்பில் நின்று இஸ்லாம் தண்டனையை நிர்ணயிக்கிறது.

பாதிக்கப்பட்டவனின் பாதிப்பின் அழுத்தம் வெளியிலுள்ளவர்களுக்கு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்திவிடாது. அதனால் ''இதற்கு போய் இவ்வளவு பெரிய தண்டனையா..?'' என்று வெறும் அனுதாப ''அச்சச்சோ''க்களை உதிர்த்து விட்டு, அதே கையோடு இஸ்லாத்தையும் விமர்சிக்கத் தயாராகி விடுகிறார்கள்.

சரி, இதையெல்லாம் இங்கு எழுத என்ன காரணம்? தருமி என்பவர் தமது பழைய பதிவைப் புதுப்பித்து புதிதாக ஒரு கேள்வியும் கேட்டிருக்கிறார் இதோ அவருடைய புதிய கேள்வி...

//இந்த நிலையில் புதிதாக ஒரு கேள்வியும் சேர்ந்து விட்டது. அதை பட்டியலில் சேர்த்து விடுகிறேன். திருப்திகரமான பதில் கிடைத்த முதல் கேள்வியை விட்டுவிட்டு இந்தக் கேள்வியை என் அந்தப் பழைய பதிவில் சேர்த்துள்ளேன். just an updating.

அந்தக் கேள்வி:

குர்ஆன் 25 : 68: 'அவர்கள் எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள்.(காரணத்தோடு கொல்லலாம் என்று பொருள் படுகிறதே?' - கொலை செய்பவனுக்கு ஒரு காரணம் கண்டுபிடிப்பதா பெரிது?)

5:32: "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலுடைய மக்களின் மீது நாம் விதியாக்கினோம்.

5:33 அல்லாஹ்வுடனும், அவன் ரஸூலுடனும் போர் செய்து கொண்டு, பூமியில் குழப்பத்தை உண்டாக்கித் திரிபவர்களுக்குரிய தண்டனையானது அவர்கள் கொல்லப்படுதல், அல்லது அவர்கள் தூக்கிலிடப்படுதல்; அல்லது அவர்கள் மாறுகால் மாறுகை வாங்கப்படுதல் அல்லது அவர்கள் நாடு கடத்தப்படுதல்…

கிறித்துவத்தில் 'கொலை செய்யாதே' என்பது ஒரு கட்டளையாகக் கொடுக்கப்பட்டுள்ளது; சமணத்தில் நுண்ணுயிர்களைக் கூட கொல்லக் கூடாதென்ற தத்துவம்; பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்கிறது தமிழ்மறை; எல்லா உயிரும் ஒன்றே, உயிர்க்கொலை தவறு என்கிறது இந்து மதம். இந்த கோட்பாடுகளில் எந்த clasue, sub-clause-ம் கிடையாது, அதாவது இந்தந்த மாதிரி நேரங்களில் மட்டும் கொலை செய்யலாம் என்ற விலக்குகள் தரப்படவில்லை. கொலை என்பது ஒட்டுமொத்தமாக தவறு; பாவம் என்றுதான எல்லா மதங்களும் போதிக்கின்றன. இந்த இடத்தில், நாடுகளுக்கு நடுவில் நடக்கும் போர்களையும், மனிதர்களுக்கு நடுவில் நடக்கும் சண்டைகளையும் குழப்பிக் கொள்ளக் கூடாதென நினைக்கிறேன். நாடுகளுக்கு நடுவில் நடக்கும் போர் என்றால் அங்கு 'கீதையின் விதிகள்தான்' எங்கும் பொருந்தும் என்பதில் ஐயமில்லை. ஆனால் மனிதர்களுக்குள்ளும் அந்த விதிகள் பொருத்தமாகக் கூடாது.

இஸ்லாமியத்தில் மட்டும் கொலை செய்வதற்கு ஏன் சில விதிவிலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஏதாவது ஒரு சரியான காரணம் கொண்டு -
கொலைக்குப் பழியாக -
குழப்பத்தைத் தடுக்க -
அல்லாஹுடனும், அவன் ரஸுலுடன் போர் செய்பவர்களை -
குழப்பத்தை உண்டாக்குபவர்களை -
இந்த சமயங்களில் கொலை செய்வது சரியா?

கொடூரக் கொலைகாரர்கள்கூட தங்கள் கொலைக்குக் காரணம் சொல்ல முடியுமே. அப்படியானால் ஒவ்வொரு கொலையும் யாரோ ஒருவரால் - நிச்சயமாக கொலை செய்தவனால் - காரண காரியங்களோடு நியாயப்படுத்த முடியுமே! அதோடு பழி வாங்குவது, அதற்காகக் கொலை செய்வது அனுமதிக்கப்படுகிறதே! இவைகள் எப்படி சரியாகும்.

புரிதலுக்காகவே இந்தக் கேள்வி.//

இந்தக் கேள்விக்கான விளக்கத்தைப் பார்க்குமுன் வலைப்பூவில் இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் பற்றி எனக்கு சில கருத்துக்கள் சொல்ல வேண்டியுள்ளது.

இஸ்லாத்தின் மீதான விமர்சனங்கள் வலைப்பதிவில் தொடங்கிய நாளிலிருந்து, காஃபிர், ஜிஹாத், பால்ய விவாகம், பலதாரமணம், அடிமைகள் என இப்படி ஒரே விஷயங்கள் தான் விமர்சனமாக வலைப்பதிவில் வைக்கப்பட்டு வருகிறது. முஸ்லிம் வலைப்பதிவர்களால் இதற்கான விளக்கங்கள் எழுதப்பட்டால் கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் பழைய விமர்சனமே புதுப்பித்துப் பதியப்படுகிறது வெவ்வேறு பெயர்களில்.

கிராமங்களில் மாடு அல்லது ஆடு அடுத்தவரின் விளைச்சல் நிலத்தில் சென்று மேய்ந்துவிடும். இதனால் பிரச்சனைகள் ஏற்பட்டு, நிலத்துக்குச் சொந்தக்காரன் கிராமப் பஞ்சாயத்தில் முறையிட, மாட்டுக்குச் சொந்தக்காரன் பஞசாயத்துக்கு அழைக்கப்படுவான். பிறகு அபராதமாக ஒரு தொகையை, மாட்டுக்கு சொந்தக்காரன் செலுத்த வேண்டுமென்பதோடு சுமுகமாக அந்த வழக்கு முடிந்து விடும்.

இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், இவ்வளவு நடந்தது அந்த மாட்டுக்குத் தெரியாது. மறுநாள் அதே விளை நிலத்தின் பக்கம் போக நேர்ந்தால் மீண்டும் நிலத்திற்குள் புகுந்து மேய்ச்சலைத் தொடங்கிவிடும். மேயும்போது சப்தமிட்டு விரட்டினால் சத்தத்தைக் கேட்டு ஓடிவிடும். சப்தம் இல்லாதபோது மீண்டும் நிலத்தில் வந்து மேயும்.

சப்தமிட்டு விரட்டும் போது, விரட்டுகிறார்கள் என்பதை மாடு புரிந்து கொண்டு ஓடி விடுகிறது. ஆனால் எதற்காக விரட்டுகிறார்கள் என்பதை புரிய முடியாததால் மீண்டும் நிலத்தில் புகுந்து மேயத் தொடங்குகிறது. (யாரையும் குறிப்பிட்டு இவ்வுதாரணத்தை நான் சொல்லவில்லை என்பதை அறியவும்) இந்த உதாரணத்தையே இறைவன் திருக்குர்ஆன் 2:171வது வசனத்தில் சொல்லிக் காட்டுகிறான்.

2:171. அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால், ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையும் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள். அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.

இனி தருமியின் கேள்விக்கு வருவோம்.

இஸ்லாத்தின் குற்றவியல் சட்டங்கள் விமர்சிக்கப்படுவதை மேலே எழுதியுள்ளேன். கொலைக்குக் கொலை, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், மணமானவர் விபச்சாரம் செய்தால் - பெண்ணை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை. இது போன்ற குற்றவியல் சட்டங்களை இஸ்லாம் இயற்றியுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இஸ்லாமிய அரசு இத்தண்டனைகளை நிறைவேற்ற வேண்டும்.

25:68வது வசனத்தைப் பார்ப்போம்..

25:68. அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள். இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.

''நியாயமின்றி - காரணமின்றி எந்த மனிதரையும் கொல்ல மாட்டார்கள்'' என்றால், ஒருவன் இன்னொரு மனிதனைக் கொலை செய்திருந்து, அல்லது மேலே குறிப்பிட்டுள்ள மரண தண்டனை பெறும் குற்றங்களை செய்திருந்தால் அவன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு, அந்தக் குற்றமே கொலைக்குக் கொலை என கொலையாளிக்கும் மற்ற குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு அவன் கொல்லப்படுகிறான். அதாவது குற்றவாளி தான் செய்த குற்றத்திற்காகக் கொலை செய்யப்படுகிறான். இதுதான் ''காரணத்தோடு கொல்லலாம்'' என்பது.

இந்தக் காரணங்கள் இல்லையென்றால் ''அவர் தண்டனை அடைய நேரிடும்'' என்று வசனத்தின் இறுதி வாசகம் எச்சரிக்கிறதே, தருமி புரிந்து கொள்ளவும்.

5:32. இதன் காரணமாகவே, ''நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ...

(5:32 வது வசனத்திலும்,) ''கொலைக்குப் பதிலாகவேயன்றி'' யாரையும் கொலை செய்யக் கூடாது என்று காரணங்கள் சொல்லப்படுகிறது. இதையெல்லாம் முதுகுக்குப் பின்னால் தள்ளிவிட்டு காரணங்களைத் தேடுபவர்களை என்னவென்பது?

அடுத்து...

5:33. அல்லாஹ்வுடனும் அவன் துதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டணை இதுதான். (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல். இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.

குழப்பம் செய்வதை கொலையை விடக் கடுமையானக் குற்றமாக இஸ்லாம் பிரகடனப்படுத்துகிறது. ஏன்? எதற்காக? என்று கூடத் தெரியாமல் ஆங்காங்கே பயங்கரவாதங்களை செயல்படுத்தி, நாட்டின் இறையாண்மையை சீர் குலைத்து, மக்களின் நிம்மதியையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் எவரும் குழப்பவாதிகள் - தண்டனைக்குரியவர்கள். இவர்களின் பிணங்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே சில வாரங்களுக்கு முன் வலைப்பதிவின் வாதமாக இருந்தது.

அன்றும் நாட்டின் இறையாண்மையை சீர்குலைக்கும் குழப்பவாதிகள் இருந்தார்கள். அரசுக்குக் கட்டுப்படுவதாக சொல்லிக்கொண்டு, எதிரிகளுக்கு நாட்டின் ரகசியங்களை அறிவித்துக் கொடுத்துப் போர் செய்ய வரும்படியும் தகவல்களை வழங்கி, சுத்த நயவஞ்சகத் தன்மையில் ஈடுபட்டு குழப்பம் விளைத்துக் கொண்டிருந்தவர்களுக்குத் தான் 5:33 வது வசனத்தில் தண்டனைகள் சொல்லப்படுகிறது. தேசத் துரோகிகளைக் கொல்வதும், நாடு கடத்துவதும் தவறு என்றால் அந்தத் தவறைச் செய்யும்படி இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு இஸ்லாம் கட்டளையிடுகிறது.

(தருமி புரியும்படியா கேள்வியை வைக்கவில்லை, புரிந்ததை விளக்கியுள்ளேன்)

அன்புடன்,
அபூ முஹை

Tuesday, September 05, 2006

1.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்

மக்கத்துக் காஃபிர்களா..? பக்கத்துக் காஃபிர்களா..?


இஸ்லாத்தின் மீது களங்கம் கற்பிப்பவர்கள் திருக்குர்ஆன் 2:191 வசனத்தில் ''அவர்களைக் கொல்லுங்கள்'' என்ற வாசகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, ''முஸ்லிமல்லாதவர்கள் அனைவரையும்'' கொன்று விடும்படி திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுகிறது என்று தவறானப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இந்த அவதூறுப் பிரச்சாரம் இந்தியாவிலும் உலக அளவிலும் அரங்கேற்றப்படுகின்கிறது. முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாத்தின் கொள்கைகளின் பால் கவரப்பட்டு விடக்கூடாது, இஸ்லாத்தை விஷமென வெறுக்க வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு இத்தகையப் பிரச்சாரம் நடத்தப்படுகின்றது. இதை நாம் மிகையாகச் சொல்லவில்லை. உள்ளதை உள்ளபடி விளங்க வேண்டும் என்ற திறந்த, பரந்த மனப்பான்மை இவர்களிடம் இல்லை. சிந்திக்கும் திறனும் இவர்களிடத்தில் இல்லையென்பதை இவர்களின் போலியான வாதங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

இவர்கள் எந்த வசனத்தை ஆதாரமாகக் கொண்டு இத்தகைய வாதத்தை வைக்கிறார்களோ, அதற்கு முன்னர் கூறப்பட்டது என்ன? தொடர்ந்து வரும் வசனங்களில் சொல்லப்படுவது என்ன? என்பதையும் சற்று நிதானத்துடன் கவனித்தால் தமது வாதங்களிலுள்ள அபத்தங்களை உணர்ந்து கெண்டிருப்பார்பார்கள்.

''இவர்கள்'' என்று நாம் குறிப்பிட்டது, இஸ்லாத்தின் மீது களங்கத்தை சுமத்த அவதூறுப் பிரச்சாரங்களை மேற்கொண்டவர்களை மட்டுமே அடையாளப்படுத்தும், முஸ்லிமல்லாத அனைவரையும் சுட்டிக் காட்டவில்லை என்பதை புரிபவர்கள் புரிந்து கொள்ளட்டும். அதுபோல், இவர்கள், அவர்கள். அவன், இவன். அது, இது. அவை, இவை. போன்ற சொற்களை பிரயோகிக்கும்போது தனியாகப் பயன்படுத்த முடியாது. ஏற்கெனவே எது பற்றியாவது, எவரைப் பற்றியாவது பேசியிருந்தால் மீண்டும் அதைக் குறிப்பிடுவதற்காகவே இது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படும்.

''இன்று காலை 9 மணிக்கு வருவதாக முஹம்மதும், முஹைதீனும் நேற்று சொல்லிச் சென்றார்கள், இன்னும் 'அவர்கள்' வரவில்லையே என்று சொன்னால் 'அவர்கள்' என்ற வாசகம் யாரைக் குறிக்கும் என்பதை விளங்க என்ன சிரமம் இருக்கிறது. அவர்கள் என்றால் யார்? எத்தனை பேர்கள்? என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குப் புரியும். ஆனாலும் இந்த இடத்தில் இது பற்றி எதையும் விளங்காதவர்கள் ''அவர்கள்'' என்றால் மொத்த ஊரிலுள்ளவர்களையும் குறிக்கும் என்பதுதான் அசட்டுத்தனம்.

திருக்குர்ஆன் 2:191வது வசனத்தை விமர்சிப்பவர்களிடம் நியாயமான பார்வையிருந்தால் ''அவர்களைக் கொல்லுங்கள்'' என்று சொல்வதில் இந்த ''அவர்கள்'' என்பவர்கள் யார்? என்பதை முன், பின் வசனங்களிலிருந்து விளங்கியிருப்பார்கள். நேர்மையில்லாதவர்களிடம் நியாயமான பார்வையை எதிர்பார்க்க முடியாது. எனினும் இவர்களின் நேர்மையற்ற விமர்சனம் இங்கு அடையாளம் காட்டப்படுகிறது.

இனி விஷயத்துக்கு வருவோம்.

2:190.உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

2:191. (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள், ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள். ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.

2:192. எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

2:193. ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள். ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.

2:194. (போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும். இதே போன்று, எல்லாப் புனிதப் பொருட்களுக்கும் ஈடு உண்டு - ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்பு மீறுங்கள். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


மேற்காணும் ஐந்து வசனங்களும் போர் பற்றியே பேசுகிறது. இவ்வசனங்கள், போர் தொடர்பாக மதீனாவில் அருளப்பட்ட முதல் வசனங்களாகும். போர் பற்றிய வரம்புகள் இங்கு விளக்கமாகச் சொல்லப்படுகின்றது. போர் செய்ய நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

முதலில் திருக்குர்ஆன் 2:190 இறை வசனம் என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம்.

2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

9:13. அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?


உங்களுடன் போருக்கு வருபவர்களுடன், நீங்களும் போர் செய்யுங்கள் என்று 2:190, 9:13 ஆகிய வசனங்கள் கூறுகிறது. வம்புச் சண்டைக்கு, அதாவது வலியப் போருக்குச் செல்லும்படி இஸ்லாம் சொல்லவில்லை. நியாயமான காரணங்கள் இருந்தால் மட்டுமே முஸ்லிம் அரசாங்கம் போர் செய்ய வேண்டும். (இது பற்றிய விளக்கம் வரும் பகுதிகளில்)

இஸ்லாத்தின் ஆரம்பகாலப் பிரச்சாரத்தை மக்காவில் துவக்கியபோது, இறைத்தூதர் (ஸல்) அவர்களும், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட குறைந்த அளவிலான முஸ்லிம்களும், மக்கா குரைஷிகளால் - மக்கத்துக் காஃபிர்களால் மிகவும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்களை கொடூரமாகக் கொலை செய்தும் வந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உயிருக்கு உலை வைக்கும் திட்டமும் குரைஷிகளால் தீட்டப்பட்டது. இந்தக் கொடுமைகளிலிருந்து மீள, இறைத்தூதரும் - முஸ்லிம்களும், தமது உடமைகளையெல்லாம் இழந்து சொந்த ஊரையும் துறந்து வெளியேறினார்கள். வெளியேற இயலாத - வழி தெரியாத பலவீனமான முஸ்லிம்கள் மக்காவிலேயே தங்கி விட்டார்கள். இவர்களின் மீதும் குரைஷிகளின் அடக்கு முறை மேலும் தொடர்ந்து கொண்டிருந்தது.

மக்காவைத் துறந்து சென்ற முஸ்லிம்களுக்கு மதீனா அடைக்கலம் தந்து ஆதரித்தது. இறைவன் காட்டிய வழியில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் மதீனாவில் ஒரு அரசு உருவாகியது. இந்த நேரத்தில் மக்காவில் ஏக இறைவனை மறுத்துக் கொண்டிருந்த ''மக்கத்துக் காஃபிர்கள்'' முஸ்லிம்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்தேத் தீருவோம் என்ற மூர்க்கத்தனத்தில் செயல்பட்டு, முஸ்லிம்களின் மீது வலிய போருக்கு வந்தார்கள். அதனால் மதீனாவில் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்ட முஸ்லிம்களுக்கு ''உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்'' என்று இறைவனின் போர் பற்றிய முதல் கட்டளைகள் பிறப்பிக்கப்படுகிறது. கட்டளையிடும் அதே நேரத்தில் போரில் வரம்புகளை மீறி விடக்கூடாது என்றும் எச்சரிக்கப்படுகிறது. (புரிந்து கொள்ள இந்த வரலாற்றுப் பின்னணி உதவியாக இருக்கும் என்பதால் சிறு விளக்கம்.)

2:191. (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள், ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள். ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.

190லிருந்து 194வரையுள்ள, போர் பற்றி அறிவிக்கும் வசனங்களில், 191வது வசனத்தை மட்டும் உருவியெடுத்துக் கொண்டு விமர்சிப்பது இவர்களின் நோக்கம் என்னவென்பதை வெள்ளிடை மலையாக விளக்கி விடுகிறது. இந்த வசனத்தில் (போர்க் களத்தில்) சந்திக்கும் போது ''அவர்களைக் கொல்லுங்கள்'' என்றே சொல்லப்பட்டுள்ளது. போர்க் களமென்று இங்கு சொல்லவில்லையே? என்ற கேள்வியெழுந்தாலும், ''உங்களை எதிர்த்து போர் புரிபவர்களுடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்'' என்ற 190வது வசனத்தின் தொடர்ச்சியாகவே 191வது வசனமும் அமைந்திருக்கிறது.

இஸ்லாத்தின் எதிரிகள் எடுத்து வைக்கும் (191வது) வசனத்திற்கு முந்தைய வசனத்தில் ''உங்களுடன் போரிட வருபவர்களை எதிர்த்து போரிடுங்கள்'' என்று கூறிவிட்டு, அடுத்த 191வது வசனத்தில் முஸ்லிம்களுடன் போருக்கு வருபவர்களேயே ''அவர்கள்'' என்று சுட்டுகிறது. 'அவர்கள்' என்றால் உங்களுடன் போர் செய்ய வருபவர்கள் என்பது எவருக்கும் விளங்கும். அதாவது முஸ்லிம்களை அழித்தொழிக்க படை திரட்டிக் கொண்டு வரும் எதிரிகளோடு போரிட்டு ''அவர்களைக் கொல்லுங்கள்'' என்றே இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

மேலும்,191வது வசனத்தின் தொடர் வாசகங்கள் இவர்களின் தவறான வாதத்தை தகர்த்தெறிகிறது. ''அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு, நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்'' என்று கூறுகிறது, மக்காவிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது ''மக்கத்துக் காஃபிர்களா?'' அல்லது ''பக்கத்துக் காஃபிர்களா?'' (சிந்திக்கவும்)

1.''அவர்களை''க் கொல்லுங்கள்'' 2.''அவர்கள்'' உங்களை ஊரை விட்டு வெளியேற்றியவாறு'' என 191வது வசனத்தில் இரண்டு முறை அவர்கள் என்று சொல்லப்படுகிறது. இரண்டும் மக்கத்துக் காஃபிர்களைத்தான் குறிப்பிடுகின்றது என்பதை விளங்கலாம்.

9:13. ''தமது, உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவங்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?''

ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டதற்காக முஸ்லிம்களை ஊரை விட்டு வெளியேற்றிய மக்கத்துக் காஃபிர்களே, முஸ்லிம்களுக்கெதிராக போரிடவும் வந்தார்கள். ''அவர்களுடன்'' போர் செய்ய வேண்டாமா? என, 9:13வது வசனத்தில் சொல்லப்படுகிறது. 2:190,191 ஆகிய இரு வசனங்களுக்கு, 9:13வது வசனம் விளக்கமாக அமைந்துள்ளது.

மேலும், முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுங்கள் என்று திருக்குர்ஆன் எந்த இடத்திலும் சொல்லவில்லை. அவர்களைக் கொல்லுங்கள் என்பதும் முஸ்லிமல்லாதவர்கள் அனைவரையும் கொல்லச் சொல்வதாக பொருள் கொள்வது தவறான புரிதல்.

(விளக்கங்கள் தொடரும்)

அன்புடன்,
அபூ முஹை