இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி நீலகண்டன் - http://arvindneela.blogspot.com/2006/12/blog-post_20.html - சொல்கிறார், ''ஹராம்'' என்றால் ''இழிவானது'' என்று.
கணவனுள்ள பெண்களும் - ''ஹுர்ரிமத் அலைக்கும்''... - (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளார்கள். 004:024)
எப்படியிருக்கிறதென்று பாருங்கள்? ஏற்கெனவே ஒருவனுக்கு மனைவியாக இருப்பவள் இன்னொருவனைத் திருமணம் செய்து அவனுக்குப் பிள்ளையும் பெற்றாளாம். (இன்னும் மூவரைக் கட்டிக் கொண்டால் சுத்தமாக இருக்கும்) ஒருவனுக்கு மனைவியாய் இருப்பவள் அவனிடமிருந்து விவாகரத்துப் பெறாமல் வேறொருவனை மணமுடிக்கக் கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது. இதில் பிற மதங்கள் என்ன சொல்கின்றன என்பது தெரியவில்லை. இந்திய சட்டமும் இதைத் தடை செய்கிறது என்றே கருதுகிறேன்.
''ஹராம்'' என்பதற்கு நீலகண்டன் அவர்களின் விளக்கவுரை...
//இப்போது இன்னொரு விசயத்தை பார்ப்போம். பெற்றவர் தவறு செய்ததாகவே வைத்துக்கொள்வோம். பிறந்த குழந்தை என்ன செய்யும்? இந்த நவீன உலகில் திருமண பந்தத்தில் பிறந்தாலும் மத நெறிக்கு வெளியே பிறந்ததால் பச்சிளம் குழந்தையை பாவ பிறவி எனக் கூறும் கொடுங்கோரர்களை என்ன என்று சொல்ல? இதுதான் பகுத்தறிவா?
இந்த பகுத்தறிவான பதில் வெளிவந்தது 'முஸ்லீம் முரசு' இதழில் (மார்ச் 1989) இந்த பகுத்தறிவு பெட்டகத்தின் அட்டையை அலங்கரித்த 'பகுத்தறிவு' யார் தெரியுமா?//
ஹராம் என்றால் பாவப் பிறவி, இழிபிறவி என்று தமக்குத் தோன்றியதை அடுக்கிக் கொண்டே போகிறார் நீலகண்டன். ஹராம் என்றால் விலக்கப்பட்டது, தடைசெய்யப்பட்டது, கூடாத உறவு, தகாத உறவு. என்றே பொருள். இஸ்லாமிய வழக்கில் இறைவன் அனுமதிக்காததை ''ஹராம்'' என்று சொல்லப்படும்.
''ஹுர்ரிம அலைக்கும்'' உங்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும். (003:050)
ஹராம் என்றால் இழிவானது எனப் பொருள் என்றால் ஹராமாக்கப்பட்ட ஒன்றை, இங்கு மீண்டும் இறைவன் அனுமதிக்க மாட்டான். ஹராம் என்பது தடை செய்யப்பட்டவை, இறைவனால் தடை செய்யப்பட்டவற்றிலிருந்து முஸ்லிம்கள் விலகிக்கொள்ள வேண்டும்.
''ஹுர்ரிமத் அலைக்கும்'' - தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை - உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. (005:003) இதே வசனத்தில், ஹராமாக்கப்பட்டவைகளை - நிர்ப்பந்த நிலையில் பாவம் செய்யும் எண்ணமில்லாமல் - புசித்தால் அவர் மீது குற்றமில்லை என்றும் இறைவன் கூறுகிறான்.
விபச்சாரத்தில் பிறந்த குழந்தையின் நிலைப்பாடு.
ஒரு பெண் 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக நான் (தகாத உறவினால்) கர்ப்பமுற்றுள்ளேன்' என்று கூறினார்.
''இல்லை நீ சென்று குழந்தை பெற்றெடு' (பிறகு திரும்பி வா) என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
குழந்தை பெற்றெடுத்த பின் அந்தப் பெண் ஒரு துணியில் குழந்தை எடுத்துக்கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'இது நான் பெற்றெடுத்த குழந்தை' என்று கூறினார்.
''நீ சென்று குழந்தைக்குப் பாலூட்டு! பால்குடி மறந்தபின் திரும்பி வா'' என்றார்கள்.
பால்குடி மறக்கடித்த பின் அப்பெண் அச்சிறுவனுடன் வந்தார். அவனது கையில் ரொட்டித் துண்டு ஒன்று இருந்தது. அப்பெண் 'அல்லாஹ்வின் தூதரே இவனுக்குப் பால்குடி மறக்கடித்து விட்டேன். இப்போது உணவு உட்கொள்கிறான்' என்று கூறினார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அச்சிறுவனை முஸ்லிம்களில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள். பிறகு அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். (முஸ்லிம், நபிமொழியின் சுருக்கம்)
ஒன்றிரண்டு நபிமொழிகளை எடுத்துக்காட்டி, அதோடு //பாகிஸ்தானில் மத சட்டத்தின் படி 'தவறான' உறவில் பிறந்த குழந்தையும் கல்லால் அடித்து கொல்லப்பட்டது குறித்து படித்த ஞாபகம்.// என்று எழுதி விட்டால் ''இஸ்லாம் தவறான உறவில் பிறந்த குழந்தையைக்கூடவாக் கொல்லச் சொல்கிறது'' என்று படிப்பவர்கள் இமைகளை விரிக்கமாட்டார்களா? போகட்டும்.
விபச்சாரத்தின் மூலம் கர்ப்பமடைந்த பெண் - அவர் குழந்தை பெறும் காலம்வரை, குழந்தை பெற்று அந்தக் குழந்தைத் தாய் பால் குடிக்கும் காலம் வரை, பின் பால்குடி மறக்கடிக்கப்பட்டு ரொட்டியை உணவாக உண்ணும் வரை - அந்தப் பெண்ணுக்கு தண்டனை காலம் தள்ளி வைக்கப்படுகிறது. பின் அச்சிறுவனைப் பராமரிக்கும் பொறுப்பு வேறொருவரிடம் ஒப்படைக்கப்பட்டு, விபச்சாரம் செய்த பெண்ணுக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
இவ்வளவும், இஸ்லாம் தடை செய்த விபச்சாரத்தைச் செய்தவர்கள் தகாத உறவு கொண்டவர்கள் என்றாலும், தகாத உறவில் - ஹராமான உறவில் பிறந்த குழந்தை எந்தப் பாவமும் செய்யவில்லை, தாகாத உறவால் விபச்சாரம் செய்தவர்களுக்காக அந்த உறவில் பிறந்த குழந்தை பொறுப்பாளியாகாது என்பதனால் இஸ்லாம் அந்தக் குழந்தையின் பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகிறது என்பதை விளங்கலாம். ஆனாலும் நீலகண்டன் அவர்கள் இஸ்லாத்தின் மீது வலிய தமது இட்டுக் கட்டலைத் திணித்திருக்கிறார்.
//அவள் பெற்ற குழந்தையும் ஹராமான பிறப்பே.//
விபச்சாரத்தில் பிறந்த குழந்தை, இஸ்லாம் தடை செய்துள்ள தகாத உறவில் பிறந்த குழந்தை என்று முஸ்லிம் முரசு சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. தகாத உறவில் பிறந்த குழந்தையை இஸ்லாம் இழிபடுத்துவதாகத் தவறாக விளங்கிக் கொண்டு இஸ்லாத்தை விமர்சத்திருப்பதுதான் அபத்தம்.
அதே அபத்தத்தோடு பெரியாரையும் சாடியிருப்பது பேரபத்தம். மேல்ஜாதி, கீழ்ஜாதி, தீண்டத்தகாதவன் எனும் தீண்டாமையை ஒழித்த ஒரே மார்க்கம், இஸ்லாம் மார்க்கம் என்று பெரியார் மட்டுமல்ல, அன்றும் இன்றும் நாளையும் யார் சொல்லியிருந்தாலும், சொன்னாலும் அதற்குப் பொருத்தமான - தீண்டாமை இல்லாத மார்க்கம் இஸ்லாம் என்பதில் நேர்மையானவர்களிடையே மாற்றுக் கருத்து இருக்கவா முடியும்?
நீலகண்டன் அவர்கள் எதிலோ உள்ள ஆத்திரத்தை நிதானமிழந்து இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்...
//"தமிழ் மக்களுக்கு இஸ்லாமே பொருத்தமானது" கூறியவர் ஈவேரா (24-2-1935) 1980களிலும் 2000களிலுமே இப்படி என்றால் 1930களில் இந்த கும்பல் எப்படி இருந்திருக்க வேண்டும். அவர்களிடம் போய் இளித்தபடி ஈவேரா இப்படி அறிக்கை விட்டிருந்தால் அந்த ஆள் எப்படிப்பட்ட நயவஞ்சக பசப்பு வார்த்தை ஆசாமியாக இருந்திருக்க வேண்டும்! இப்படிப்பட்ட போலி பகுத்தறிவு ஆசாமி, சுயமரியாதை இல்லாத காட்டுமிராண்டி நயவஞ்சக முட்டாளை, 'பெண் விடுதலை போராளி' என்று சொன்னால், தெரியாமல்தான் கேட்கிறேன்...பெண் ஏன் அடிமையாக மாட்டாள்?//
பொருத்தமில்லாத வசவு மொழிகள்.
அன்புடன்,
அபூ முஹை
Thursday, December 21, 2006
Monday, December 11, 2006
வரலாற்றில் ரீ மிக்ஸ்.
இஸ்லாம் மார்க்கத்தில் ஜாதிகள் இல்லையா? எனக் கேட்டு இஸ்லாத்தில் ஜாதிகளை நிறுவ, இஸ்லாத்திலிருந்து ஒரு சான்றைக்கூட வைக்காமல் வழக்கம் போல் தமது ரீ மிக்ஸ் கைங்காரியத்தை செய்திருக்கிறார் ஒரு இந்துத்துவவாதி.
அடக் கைச்சேதமே.
//இது சம்பந்தமாக நிறைய இணையக் கட்டுரைகள் இருக்கின்றன. யோகிந்தர் சிக்கந்த் கூட தலித் முஸ்லிம்கள் பற்றியெல்லாம் எழுதியுள்ளார். இருப்பினும், என் சார்பாக இஸ்லாமிய சமுதாயத்தில் இருக்கும் சாதிகளின் அடிப்படையில் செய்யப்பட்ட ஒரு கள ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகளை (எழிலின் பதிவில் இட்டது) இங்கு மீண்டும் இடுகிறேன்.
இதன் மூலம் நான் ஒன்றும் இந்து மதத்தில் சாதியில்லை அல்லது சாதிப்பிரச்சினை இல்லை என்று சாதிக்க முயலவில்லை. மாறாக, சாதி இஸ்லாத்தில் இல்லை என்று சாதிக்கும் இஸ்லாமிஸ்டுகளுக்காகவும், இஸ்லாத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் இன்னும் இருக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்காகவும் இதை இடுகிறேன்.
***
ஒரு ஆய்வின் போது, ஹதராபாத்தில் இருக்கும் ஜாதிகள் என்று இந்தக் கட்டுரையின் ஆசிரியர் பட்டியலிடும் ஜாதிகள் இவை://
(இது சம்பந்தமாக ஆங்கிலக் கட்டுரைகளை இந்த சுட்டியில் சென்று பார்த்துக் கொள்ளலாம்
http://nesakumar.blogspot.com/2006/12/blog-post_07.html)
...
//(My note: இக்கட்டுரையைப்படிக்கும், இந்திய இஸ்லாமிய சமூகத்தைப் பற்றி அவ்வளவாகத் தெரியாத நண்பர்களுக்காக - உயர்ஜாதி முஸ்லிம்கள் - சயீத் - இங்கிருக்கும் பிராம்மணர்களைப் போன்றவர்கள், பிராம்மணர்கள் எப்படி ரிஷி வழி வந்தவர்களாக, ஆன்மீகத்தன்மை உடையவர்களாக தம்மை கற்பிதம் செய்து கொள்கிறார்களோ அவ்வாறே சய்யத்து அல்லது சயீத் சாதியினரும் முகமதின் வழித்தோன்றல்களாக தம்மை கருதிக்கொள்கின்றனர். பதான்கள் தம்மை க்ஷத்திரிய சாதியினராக கருதுகின்றனர். பொதுவாக கான் என்றால் க்ஷத்திரியர்கள், சயீத் அல்லது சாபு அல்லது தங்ஙள் என்றால் பிராம்மண முஸ்லீம்கள் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்)//
-----------------
எமது குறிப்பு:
சய்யத் என்றால்: master, lord, chief, head, leader
சய்யதி: sir
சய்யதத்: lady, woman, mistress, mrs, madem(e)
சய்யதாதி வ சாததீ: ladies and gentlmen
புரட்சி சய்யத்: புரட்சித் தலைவர்.
புரட்சி சய்யதத்: புரட்சித் தலைவி.
''எங்கள் கூட்டத்தின் - சய்யதை - தலைவரை தேள் கொட்டிவிட்டது.'' (புகாரி, 5007)
''என்னுடைய இந்த (புதல்வியின்) புதல்வர் - சய்யதுன் - தலைவர் ஆவார்.'' (புகாரி, 7109)
சய்யது என்பது அரபி மொழியில் மரியாதைக்குரிய ஒரு வார்த்தை ''யா சய்யதி'' ''ஓ தலைவரே'' என்று இன்றும் அழைத்துக் கொள்வார்கள். கடிதத்திலும், அதிகாரிகளுக்கு எழுதும் மனுவிலும் இவ்வாறேக் குறிப்பிட்டு அரபியர்கள் எழுதுவார்கள். இது ஒரு சாதாரண தலைவா என்று தமிழில் சொல்லிக் கொள்வது போல் உள்ள வார்த்தையே அரபியில் சய்யத் என்பதும். இதை ஜாதியாகக் கருதி, அதுவும் உயர் ஜாதியாக கட்டமைத்து வழக்கம் போல் வரலாற்றில் ரீ மிக்ஸ் செய்ய முயற்சித்திருக்கிறார் இந்த இந்துத்துவவாதி.
சயீத் என்றால் அதிர்ஷ்டசாலி. சயீத் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். அபூ சயீத் அல் குத்ரீ, அபூ சயீத் பின் முஅல்லா.
இஸ்லாத்தின் நிலைப்பாடு.
மனித குலம் ஒரு தாய் தந்தையிலிருந்தே பல்கிப் பெருகிறது.
நீங்கள் அனைவரும் ஆதமின் மக்கள் ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டார்.
கருப்பனைவிட வெள்ளையனோ, வெள்ளையனைவிட கருப்பனோ சிறந்தவனல்ல.
அரபியனைவிட அரபியரல்லாதவனோ, அரபியரல்லாதவனைவிட அரபியனோ சிறந்தவனல்ல.
உங்களில் இறையச்சமுடையவர்களே இறைவனிடத்தில் மேன்மையானவர்கள்.
இப்படி ஜாதிகளின் அடிப்படையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை வேரோடும், வேரடி மண்ணொடும் அழித்து விட்டது இஸ்லாம். இஸ்லாத்தில் ஜாதிகள் இருப்பதாக நிறுவ முயற்சிப்பவர்கள் இஸ்லாத்திலிருந்தே ஆதாரங்களை வைப்பதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.
அன்படன்,

Wednesday, December 06, 2006
ஆடு மேய்ப்பவனுக்கு பெண் கொடுக்கலாமா?
இஸ்லாம் மார்க்கத்தின் நிழலில் நபித்தோழர் பிலால் (ரலி) அவர்களுக்குக் கிடைத்த சிறப்பு - என்பது பாரம்பர்யமோ, குலச்சிறப்பு, குடும்பச் சிறப்பு, பொருளாதார வலிமையோ இல்லாத, விலை கொடுத்து வாங்கிய, எஜமானின் கட்டளைக்கு உழைத்த ஒரு கருத்த அடிமைக்கு இத்தனை மதிப்பா? என்று - குறைஷிகள் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு உயர்வாகவே இருந்தது.
''எங்கள் தலைவர் அபூபக்ர், எங்கள் மற்றொரு தலைவர் பிலாலுக்கு விடுதலை வழங்கி விட்டார்'' என்று நபித்தோழர் உமர் (ரலி) அவர்கள் சிலாகித்துச் சொல்லுமளவுக்கு - கருப்பின அடிமையாக சிறுமைப்பட்டிருந்த பிலால் (ரலி) அவர்களின் நன் மதிப்பை உன்னதமாக உயர்த்தியது இஸ்லாம். மக்கா வெற்றியின் போது இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காஃபாவினுள் நுழைந்த போது அவர்களுடன் அனுமதிக்கப்பட்ட மூன்றே தோழர்களில் பிலால் (ரலி) அவர்களும் ஒருவர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களை பாங்கு சொல்லப் பணித்தார்கள். பிலால் (ரலி) அவர்களும் காஃபாவின் மத்தியில் நின்று பாங்கு சொன்னார்கள்.
''முஹம்மதுக்கு இந்த காஃபா ஆலயத்தில் பாங்கு சொல்ல அடிமை பிலாலைத் தவிர வேறு ஆளே கிடைக்கவில்லையா? இந்த ஆசாமிதான் அங்கே ஏறி நின்று சொல்ல வேண்டுமா? பாரம்பர்யமுள்ளவர்களால் கூட காஃபாவினுள் பிரவேசிக்க சாத்தியமில்லாதிருக்க இந்த ஆசாமியை உள்ளே விட்டது யார்?'' என்றெல்லாம் கூறி தங்கள் எரிச்சலை வெளிப்படுத்திக் கொண்டனர் அன்றைய சிலர். இன்றும் அதே எரிச்சலையே வெளிப்படுத்துகிறார்கள், முஹம்மது தன் மகள் ஃபாத்திமாவை பிலாலுக்கு ஏன் திருமணம் செய்து வைக்கவில்லை? என்று.
அப்படித் திருமணம் செய்திருந்தால் மட்டும் இவரென்ன இஸ்லாத்தைத் தழுவி விடவாப் போகிறார்..?
திருமணத்தைக் கொண்டு ஏற்றத் தாழ்வை நிர்ணயிப்பவர்கள், அதைவிட இந்த முஸ்லிம் சமுதாயத்தில் ஒப்பற்ற மனிதர்களில் ஒருவராக பிலால் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள் என்பதை சிந்திக்க மறுக்கிறார்கள். பிலால் (ரலி) அவர்களின் இறைநம்பிக்கையும், தூய்மையும், தியாகமும் அவரை உயர்ந்த அந்தஸ்துக்கு உயர்த்தி விட்டன. இந்த உயர்வை அடைவதில் பிலால் (ரலி) அவர்களின் கருத்த மேனியோ, குலசிறப்பின்மையோ, முந்தைய அடிமை நிலை எதுவுமே தடையாக இருக்கவில்லை! முன்னர் யாருமே கண்ணெடுத்தும் பார்க்காத இந்தக் கருப்பு மனிதரை அன்று நபியும், நபித்தோழர்களும் போற்றினார்கள், இன்றும் இச்சமூகத்தினர் அனைவரும் போற்றுகின்றார்கள்.
திருமணம் என்பதும் இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட விஷயம். ஒரு முஸ்லிமான ஆண், ஒரு முஸ்லிமானப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற அனுமதியை இஸ்லாம் வழங்கியுள்ளது. இதற்கு மேல் அத்திருமணத்தை நடத்துவதென்பது இரு வீட்டாரின் சம்மதத்தில் அடங்கியுள்ளது. மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் சம்மதித்துக் கொண்டால் சம்பந்தம் செய்து கொள்ளலாம். சம்மதமில்லையென்றால் திருமணத்தை நடத்த வேண்டிய அவசியமில்லை. இதிலும் இஸ்லாம் தலையிட்டு - இன்னாருக்கு, இன்னார் பெண் கொடுத்து சம்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்ளையையும் - சொல்லியிருக்க வெண்டும் என்பது பைத்தியக்காரத்தனம்.
சாதாரண டீக்கடை வைத்திருப்பவர் கடையில் பணியாளாக இருப்பவருக்கு தனது மகளைத் திருமணம் செய்து கொடுக்க முன் வரமாட்டார். காரணம் பொருளாதார எற்றத் தாழ்வு என்ற தகுதி அவரைத் தடுக்கிறது. இதைத் தவறு என்று எந்த புத்திசாலியும் சொல்ல மாட்டார். மகளின் மீது அக்கறை கொண்ட எந்த தகப்பனுக்கும் வாக்கப்பட்டுப் போகுமிடத்தில் மகள் சந்தோஷமாக வாழ வேண்டும், தன் மகள் வறுமையில் வாடக்கூடாது என்ற எண்ணம்தான் மேலோங்கி இருக்கும்.
சின்ன டீக்கடை வைத்து நடத்தும் ஒரு பெண்ணின் தந்தையின் நிலை இதுவென்றால், சவூத் மன்னரின் குடும்பத்துப் பெண்களை ஒட்டகம் மேய்க்கும் முஸ்லிம்களுக்கு அதுவும் தலித்!? முஸ்லிம்களுக்கு ஏன் திருமணம் செய்து கொடுக்கவில்லை? என்று கேட்கிறார் ஒரு விவரமில்லாதவர். எவ்வளவு பெரிய பொருளாதார வித்தியாசம் இருக்கிறது என்பது கூட தெரியாமல் ஏதோ தாக்குதல் நடத்த வேண்டுமென்பதற்காக கேட்கப்பட்டக் கேள்வியாகவே இருக்கிறது.
பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையிலிருக்கும் பெண்ணை மணமுடிக்கும்போது அவளோடு வாழ்க்கை நடத்த முன்வருபவன் அவளுக்கு நிகரான பொருளாதார அந்தஸ்தைப் பெற்றிருக்கவில்லை என்றால் அவனோடு ஒருநாளும் அந்தப் பெண் வாழமுடியாது. அவளுக்கான அன்றாடச் செலவை இவனால் ஈடுகட்ட முடியாது. இப்படிப்பட்ட வறுமை நிலையில் இருக்கும் ஒருவனுக்கு எந்த அரபியனும் தனது மகளை மணமுடித்துத் தரமாட்டான்.
இது உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஜாதி அடிப்படையில் தீர்மானிப்பதில்லை. மாறாக பொருளாதாராம், கலச்சாரம், பண்பாடு அடிப்படையில் தீர்மானிப்படுகிறது. கல்லானாலும் கணவன் என்கிற பண்பாட்டை அரபியப் பெண்களிடம் சொல்ல முடியாது. அதுபோல் கதர் சேலையைக் கட்டிக் கொள் என்ற எளிய ஆடைக் கலாச்சாரத்தையும் அவளிடம் திணிக்க முடியாது. எல்லாவற்றுக்கு தாராளமான பொருளாதாரம் வேண்டும். அப்படியில்லாதவன் அவனுக்குத் தகுந்தமாதிரிப் பெண்ணையேத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் அதுதான் அவனுக்கும் நல்லது.
இதை ஒட்டகம் மேய்ப்பவனுக்கு பெண் கொடுக்கத் தடையிருப்பதாக விளங்கக்கூடாது. பொருளாதாரத்திலுள்ள ஏற்றத்தாழ்வு காரணமாக பெண் தரமாட்டார்கள். எல்லா நாட்டிலும் இந்த ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்பதை எவரும் மறுத்துவிட முடியாது. மற்றபடி இஸ்லாம் இதைத் தடை செய்திருக்கிறதா என்றால் அதைக் காட்ட வேண்டும். எந்தக் கோடீஸ்வரனும் யாசகம் செய்பவனுக்கு தன் பெண்ணை மணமுடித்துத் தர மாட்டான். அது யாராக இருந்தாலும் சரியே.
இந்தியாவிலுள்ள ஒரு முஸ்லிம் தன்னிடம் ஆடு மேய்க்கும் முஸ்லிமுக்கு தன் பெண்ணை மணமுடித்துக் கொடுக்கமாட்டான். இந்த விஷயத்தில் முதலில் தன்னை சுயவிமர்சனம் செய்துகொண்டு பிறகு பொது விமர்சனம் செய்ய வேண்டும். மேல் ஜாதி, கீழ் ஜாதி என்றெல்லாம் இஸ்லாத்தில் இல்லையென்றாலும் பொருளாதார ஏற்றத்தாழ்வு அடிப்படையில் திருமணம் என்பது இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்டது. இதில் இஸ்லாம் தலையிடுவதில்லை.
கீழ்கண்ட கேள்விக்கான விளக்கங்களே மேற்சொன்னவைகள். -
- //முகமது சமூக நீதியின் மீது அக்கறை கொண்டவராக இருந்தால், பிலாலுக்கு தமது மகள் ஃபாத்திமாவை மணம் செய்து கொடுத்திருக்க வேண்டியதுதானே. முகமதின் குடும்பத்தில் எதாவது ஒரு பெண்ணை கறுப்பின முஸ்லிம்களுக்கு மணம் செய்து கொடுத்தார்களா? தமது அடியார் அபுபக்கர் தமது பெண் பாத்திமாவை மணந்துகொள்ள(ஆயிஷாவை முகமது மணந்து கொண்டதைப் போல) கேட்டதற்கு வஹி வருகிறது, வஹி வருகிறது என்று சொல்லி கடைசியில் தமது (உயர்குல) தம்பி(கஸின்) அலிக்கு தமது மகள் பாத்திமாவை கட்டிக் கொடுத்து ஏமாற்றியவர்தானே உங்களது போலி இறைத்தூதர்?
இவ்வளவும் ஏன், இன்றைய சவுது மன்னர் குடும்பத்து பெண்களை இந்தியாவிலிருந்து அங்கு சென்று மலம் அள்ளும் உங்களைப்போன்ற 'முஸ்லீம்களுக்கு' கட்டிக் கொடுப்பார்களா? எத்தனை அரபி உயர்குலப் பெண்களை இங்கிருந்து சென்று ஒட்டகம் மேய்க்கும் தலித் முஸ்லிம்கள் மணந்திருக்கின்றார்கள் - விபரம் தர முடியுமா?
6. கடைசியாக, கேள்விகளை கேட்ட இஸ்லாமிய பதிவர் ஒருவர் 'சமஸ்காரம் தெரியாத அசடுகளை' வீட்டிற்குள் அழைத்துவந்தது குறித்து எழுதியிருக்கிறார். இது இஸ்லாத்திலும் இருக்கிறது. அரபிக்கள் எத்துனை பேர் இந்திய இஸ்லாமிய வேலையாட்களுக்கு தத்தமது பெண்மக்களை, சகோதரிகளை திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்றொரு கேள்வியைக் கேட்டேன் - எந்த இஸ்லாமியரும் இன்றுவரை பதிலளிக்கவில்லை. எனக்குத் தெரிந்து எத்தனையோ பிராம்மணரல்லாதோர் பிராம்மணப் பெண்களை மணந்திருக்கின்றனர். ஆனால், எத்தனை அரபியல்லாதோர் குவைத் அரபிப்பெண்களை மணந்திருக்கின்றனர்? இது ஒரு பிரச்சினை என்றால், இந்தப் பிரச்சினை இந்து மதத்தையும் விட தீவிரமாக இஸ்லாத்தில் இருக்கிறது.//

Saturday, December 02, 2006
இல்லாத இடம் தேடும் ...
மறு பதிப்பு
மனுதர்மத்தைக் குர்ஆனில் தேடுகின்ற சூபியின் மாறாத்தனம் கடந்த வாரத் திண்ணையில் [சுட்டி-1] வெளிப் பட்டிருக்கிறது.
"மனிதர்களே!" என்று மொத்த மனுக்குலத்தையும் விளித்து, "நீங்கள் அனைவரும் ஒரேயொரு தாய்-தகப்பனின் வழி வந்தவர்கள்" என்றும் "உங்கள் அனைவரின் இறைவனும் ஒரேயொருவனே!" [004:001] என்றும் தீண்டாமையை அழித்தொழிக்கும் குர்ஆனில் மனு தர்மத்தைத் தேடி அலையும் சூபியை எதில் சேர்ப்பது? என்பதை வாசகர்களே முடிவு செய்யட்டும்.
இனி, அபூலஹபைக் குறித்து சூபி கேட்டிருப்பதற்கு விளக்கம்:
அபூலஹப் என்பவன் யார்?
அப்துல் உஸ்ஸா என்ற இயற் பெயருடைய அபூலஹப், அப்துல் முத்தலிபின் மகன்களுள் ஒருவனும் வஹ்ஹாபிகளின் தலைவர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய தந்தையுமாவான். ஹர்புடைய மகளும் அபூஸுஃப்யானின் சகோதரியுமான அர்வா என்பவள் அபூலஹபின் மனைவியாவாள்.
"உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை விடுப்பீராக!" [026:214] என்ற இறைகட்டளை வந்தவுடன், நபி (ஸல்) அவர்கள், மக்காவில் உள்ள 'ஸஃபா' என்ற குன்றின் மீதேறி நின்று, ''யா ஸபாஹா! யா ஸபாஹா!!'' என்று குரலெழுப்பினார்கள். (எதிரிப் படையொன்று சூழ்ந்துகொண்டதை அல்லது ஏதேனும் பேராபத்து வந்துவிட்டதை அறிவிக்க இந்த அரபுச் சொல் பயன்படுத்தப்படும்.)
பிறகு குறைஷி வமிசத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் அழைத்தார்கள்: ஃபஹ்ர் குடும்பத்தாரே! அதீ குடும்பத்தாரே! அப்து முனாஃபின் குடும்பத்தாரே! அப்துல் முத்தலிபின் குடும்பத்தாரே! என்று அழைத்தார்கள்.
அவர்களது அழைப்பைச் செவியேற்றவர்கள், "இவ்வாறு அழைப்பவர் யார்?" என வினவ சிலர் ''முஹம்மது'' என்று கூறினர். உடனே குறைஷியர்களில், அபூலஹப் உட்பட பலரும் அங்குக் குழுமினர். வர இயலாதவர்கள் தங்கள் சார்பாக ஒருவரை அவர் சொல்வதைக் கேட்டு வருமாறு கூறியனுப்பினார்கள்.
அனைவரும் ஒன்று கூடியபோது நபி (ஸல்), ''இம்மலைக்குப் பின்னாலுள்ள கணவாயில் உங்களைத் தாக்குவதற்காக குதிரை வீரர்கள் காத்திருக்கிறார்கள் என்று நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களா?'' என்று கேட்டார்கள்.
அதற்கு அம்மக்கள், ''ஆம்! உங்களை நம்புவோம்; உங்களை உண்மையாளராகவே கண்டிருக்கிறோம்; பொய்யுரைத்துக் கண்டதில்லை'' என்றனர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''குறைஷியரே! அல்லாஹ்விடமிருந்து உங்களது ஆன்மாக்களை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக, நான் உங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு நான் எந்தப் பலனும் அளிக்க முடியாது.
கஅபு இப்னு லுவய்யின் வழித்தோன்றல்களே! முர்ரா இப்னு கஅபின் வழித்தோன்றல்களே! குஸைய்யின் வழித்தோன்றல்களே! அப்துல் முனாஃபின் வழித்தோன்றல்களே! அப்து ஷம்ஸ் வழித்தோன்றல்களே! ஹாஷிம் வழித்தோன்றல்களே! அப்துல் முத்தலிபின் வழித்தோன்றல்களே! அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! அப்துல் முத்தலிபின் மகள் ஸஃபிய்யாவே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களது எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் நான் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு நான் எந்தப் பலனும் அளிக்க முடியாது.
முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! எனது செல்வத்திலிருந்து விரும்பியதைக் கேட்டு பெற்றுக்கொள். உன்னை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்! நிச்சயமாக நான் உனது நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வை விட்டு உனக்கு நான் எந்தப் பலனும் அளிக்க முடியாது.
எனினும், மக்களே! உங்களுடன் இரத்த பந்தம் எனும் உறவு இருக்கிறது. உரிய முறையில் இரத்தப் பந்தத்திற்கானக் கடமைகளை நிறைவேற்றுவேன்'' என்று கூறி முடித்தார்கள்.
இந்த எச்சரிக்கை முடிந்ததும் மக்கள் எதுவும் கூறாமல் கலைந்து சென்றார்கள். ஆனால், அபூ லஹப் மட்டும் குரோதத்துடன் நபி (ஸல்) அவர்களை எதிர்கொண்டான். ''நாள் முழுவதும் உனக்கு நாசமுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களைக் கூட்டினாயா?'' என்று கூறினான். அவனைக் கண்டித்து ''அழியட்டும் அபூ லஹபின் இரு கரங்கள்; அவனும் அழியட்டும்...'' என்ற 111வது அல்குர்ஆன் அத்தியாயம் அருளப் பட்டது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாமிவுத்திர்மிதீ, [சுட்டி-2 & 3].
அபூலஹபின் மீது தணியாத பாசம் கொண்ட சூபியின் கேள்வி யாதெனில், "கருணையாளனான அல்லாஹ் தெருச் சண்டைக்காரன் போல் சாபமிடலாமா?" என்பதே!
முஸ்லிம்களின் இறைவனைக் குறித்து எதுவுமே தெரியாத அறிவிலித்தனத்தால் விளைந்த கேள்வியைத்தான் சூபி கேட்கிறார்.
அல்லாஹ் கருணையாளன்தான். அதேவேளை கையாலாகாதவன் அல்லன். அடக்கியாள்பவனும் அவனே! அவனுடைய அன்பிற்குரிய அடியார்கள் பலரையே அடக்கி வைத்தவன்; வைத்திருப்பவன் எனும்போது அபூலஹப் அவனுக்கு எம்மாத்திரம்?
அடுத்து, "இது அல்லாவின் வார்த்தையா?" என்று சூபி ஒரு கேள்வியை வைக்கிறார் - அந்தக்கால அபூலஹபைப் போலவே.
மேற்காணும் 111ஆவது அத்தியாயம் அருளப் பட்ட பின்னரும் பத்தாண்டு காலத்திற்கு மேல் அபூலஹப் உயிர் வாழ்ந்திருந்தான். அந்தப் பத்தாண்டுகளில் அவனுடைய குரைஷிக் குலத்தினரில் பெரும்பாலோர் சத்திய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு விட்டனர்.
சூபியைப் போலவே இறைவாக்கைப் பொய்ப் படுத்திவிட வேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ்ந்த அபூலஹப், சற்றே அறிவைப் பயன் படுத்தி இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்?
"நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டேன்" என்ற ஓர் அறிவிப்பு அபூலஹபிடமிருந்து வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
1 - "குர்ஆன் இறைவாக்கு இல்லை" என்று நிறுவுவதற்கு 1400 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைகீழ் நின்று தண்ணீர் குடிக்க வேண்டிய பரிதாப நிலை தொடந்திருக்காது.
2 - நபி (ஸல்) அவர்களை, அல்லாஹ்வின் தூதர் என்ற உயர் பதவியிலிருந்து இறக்கி, வெறும் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று ஆக்குவதற்கு இன்றுவரை செய்யப் பட்டுக் கொண்டிருக்கும் பூனையைக் கட்டி வைத்து சிரைக்கும் வேலை மிச்சமாகிப் போயிருக்கும்.
3 - உலக மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் பின்பற்றுகின்ற - எதிர்ப்புகளை எதிர்கொண்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து செம்மாந்து நிற்கின்ற - வாழ்க்கை நெறியான இஸ்லாம், இல்லாமலாகி இருக்கும்.
கேள்வி: அபூலஹப் ஏன் அதைச் சொல்லாமலே அழிந்து போனான்?
பதில்: அல்குர்ஆன் இறைவேதம்தான் என்பதற்கு இன்னொரு சாட்சியாக!
சுட்டிகள்
1 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=80611233&format=html
2 - http://www.a1realism.com/history/Raheequl_makthooom/second_stage.htm#3
3 - http://www.usc.edu/dept/MSA/quran/maududi/mau111.html
நன்றி: வஹ்ஹாபி திண்ணை

Subscribe to:
Posts (Atom)