Saturday, March 24, 2007

வரலாற்றில் கயமைத்தனம்.

ஆயிஷா (ரலி) அவர்களின் திருமண வரலாறு தெரியாத நேசமுள்ளவரின் வரலாற்றுக் கயமைத்தனத்தை அடையாளப்படுத்தியிருந்தோம். நாம் தமிழில் வைத்த ஹதீஸை விளங்காமல் அந்த ஹதீஸை அப்படியே ஆங்கிலத்தில் வைத்து இது இஸ்லாமியர்களால் மதிக்கப்படும் வலைத்தளமாகும் என வழக்கம் போல் சம்பந்தமில்லாமல் பிதற்றியிருக்கிறார்.

ஆயிஷா (ரலி) அவர்களின் தந்தையிடம் நபி (ஸல்) அவர்கள் பெண் கேட்கும் சம்பவத்தைச் சொல்லும் செய்தி...

நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) ''நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்'' என்று கூறினார்கள். (புகாரி, 5081) இதுதான் செய்தி.

இந்த செய்தியில் சாதாரணமாக, நபி (ஸல்) அவர்கள் அபூ பக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷாவைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர் (ரலி) அவர்கள் ''நான் தங்களின் சகோதரனாயிற்றே'' என்று கூறுகிறார். அதாவது பெண் தரமுடியாது என்று மறுக்கவில்லை. இந்தத் திருமண உறவு கூடுமா? என்றே சந்தேகம் எழுப்புகிறார். இது பற்றி ஏற்கெனவே எழுதிய பதிவு.

கடவுள் வந்து கனவில் ஆயிஷாவை மணமுடித்து விட்டார் என்று சொல்லி, அபூ பக்ரிடம், நபி (ஸல்) அவர்கள் பெண் கேட்டதாக இந்த செய்தியில் இல்லை. ஆனால் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்களின் மீதும் வன்முறைத் தாக்குதலை வழக்கமாக்கிக் கொண்டவர் என்ன சொல்கிறார் பாருங்கள்...

//ஆயிஷா மீது ஆசைப்பட்டு, கடவுள் வந்து தனக்கு கனவில்(கனவில் வருவதும் வஹீதான்) ஆயிஷாவை மணமுடித்து விட்டார் என்று அபூபக்கரிடம் சொல்கிறார். அபூபக்கர் கனவுகளை நம்பக்கூடியவர், கனவுகளுக்கு அர்த்தம் சொல்லக்கூடியவர் என்பதை இங்கே கவனிக்க வேண்டும். அபூபக்கர் முதலில் மறுக்கிறார்(இது குறித்து ஏமாறாதவன் விரிவாக எழுதியிருப்பதால் நான் விளக்கமாக அவற்றை இங்கே சொல்லவில்லை, நிறைய இணைய தளங்களிலும் இவ்விஷயம் காணக்கிடைக்கின்றது)// - வரலாறு எப்படித் திரிக்கப்படுகிறது பார்த்தீர்களா!

ஆயிஷாவைப் பெண் கேட்பதும், மணமுடிப்பதும் மக்காவில் நடந்த சம்பவங்கள். ஆயிஷாவை மணமுடிப்பதற்கு முன் ஆயிஷாவைக் கனவில் கண்ட செய்தியை மதீனாவில் தமது மனைவி ஆயிஷாவிடம் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்...

(என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் உன்னை மணப்பதற்கு முன்னால்) இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டேன். ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்த வானவர்) உன்னை ஒரு பட்டுத் துண்டில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர் 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி'' என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துண்டை விலக்கிப் பார்க்கிறேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்'' என்று சொல்லிக்கொண்டேன். (புகாரி, 5078)

இந்த ஹதீஸைச் சுட்டிக் காட்டியே சென்ற பதிவில் இவ்வாறுக் கேட்டிருந்தோம்...

//அபூ பக்ர் (ரலி) அவர்கள் கனவுகளுக்கு விளக்கம் சொல்லக்கூடியவர் என்பது தனி விஷயம். ஆனால், கடவுள் கனவில் வந்து தனக்கு ஆயிஷாவை மணமுடித்து விட்டார் என்று அபூ பக்ரிடம் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இந்த மன நோயாளி சொல்வது வெறும் உளறல். எங்கே அப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதை ஆதாரத்துடன் எழுதட்டுமே பார்க்கலாம்.// - அபூ முஹை

நிறைய இணைய தளங்களில் காணக் கிடைக்கின்றன என்று சொன்னவரைப் பார்த்து ''எங்கே ஆதாரங்களுடன் எழுதட்டுமே பார்க்கலாம்'' என்றதற்கு இவரின் மற்றொரு திரித்தலைப் பாருங்கள்...

//ஏன், அபூ முஹையே சிந்தித்துப் பார்க்கலாமே? இதை ஆயிஷாவிடம் கூறிய முகமது, தமக்கு பெண் கொடுக்க மறுத்த அபூபக்கரிடம் எப்படிச் சொல்லாமல் இருந்திருப்பார்? அதுவும் ஆயிஷாவை தான் மணந்தே தீருவது என்று (கடவுள் சொன்னதாக நம்பி) தனக்குள்ளே முடிவு எடுத்துக் கொண்ட நிலையில்? இத்தனைக்கும் அபூ பக்கர் பாவம் கனவுகளை நம்பும், முகமதை இறைத்தூதர் என்று நம்பிய மனிதர்!//

இப்படியெல்லாம் வரலாறுகளைத் திரிப்பது இவருக்குக் கட்டாயமாகிறது. திறந்த புத்தமாக இருக்கும் இஸ்லாமிய வரலாற்றிலேயே இவ்வளவு புரட்டல்களை இவரால் சுமத்த முடிகிறது என்றால், பிறகு தனிப்பட்ட என் மீது சுமத்திய அவதூறெல்லாம் எம்மாத்திரம்?

குறிப்பு: எனக்குப் பதில் சொல்வதாகக் கருதி சம்பந்தல்லாமல் நீளமாக எழுதியுள்ளார். நீளமாக எழுதி விட்டால் நிறைய ஆதாரங்களை சொல்வதாக இவரது நம்பிக்கை.

அன்புடன்,
அபூ முஹை

6 comments:

அட்றா சக்கை said...

நான் சகோ. இப்னு பஷீர் அவர்கள் பதிவில் சொன்னது இங்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

கோயபல்ஸ் இவரிடம் பாடம் படிக்க வேண்டும் அந்த அளவுக்குக் கயமையும் வக்கிரமும் பிடித்த ஆள் இந்நபர்.

இவரது உத்திகள் மீண்டும் அரங்கேற்றுகிறார். இன்னொரு சகோதரருடன் விவாதத்தைத் தொடங்கியுள்ளார். அவரது அடிவருடி ஒன்று அவரது வக்கிர பதிவுகளுக்கு இணைப்பு கொடுத்து தன் விசுவாசத்தைக் காட்டிச் சொறிந்து கொள்கிறது.

பிரதி வாதத்திற்கு எதிர்க்கருத்து இல்லையென்றால் கெட்ட வார்த்தைகள் பேசும் நாலாந்தர ரவுடிகள் போலத் திரியும் இவர்களை தமிழ் வலையுலகம் அடையாளம் கண்டு கொள்ளும்.!

Dr.Anburaj said...

53 வயது முகம்மமு 9 வயது சிறு குழந்தையை மணம் செய்தார் என்பதை என்படி ஏற்றுக் கொள்கின்றீர்கள்.அதுவம் வழிகாட்டி உலகிற்கே உதாரணம் என்று பீத்தல் வேறு.படிப்பதற்கே அசிங்கமாக உள்ளதே
முகம்மது -மரியாஅடிமைப் பெண்கதைவேறு முகம்மது ஜைனப்கதை முகம்மதுவின் வரலாறு பல அசிங்கங்களைக் கொண்டது

அபூ முஹை said...

டாக்டர் அன்புராஜ்,
கடந்த நூற்றாண்டு வரை பால்ய விவாகத்தை அங்கீகரித்து சட்டம் இயற்றிய இந்திய நாட்டில் இருந்து கொண்டு, 1400 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி மணமுடித்த பால்ய விவாகத்தை அசிங்கம் என்று கூறுவதற்கு அறுகதையுள்ளதா.

http://abumuhai.blogspot.com/2005/12/1.html

மேற்கண்ட சுட்டியைத் திறந்து வாசித்துப் பாருங்கள்.

Dr.Anburaj said...

உலகத்திற்கு வழிகாட்டி,இறைவனின் உண்மை மார்க்கம் என்றெல்லாம் பீற்றும்தாங்கள் ஏன் இந்துக்களின் தவறான பழக்க வழக்கங்களை முன் உதாரணமாகக் கொள்ள வேண்டும் என்பது புரியவில்லை. சிறந்த பொருள் தன்நிலையிலேயே பரிபுரணம் பெற்றிருக்க வேண்டும்.இந்தியாவில் குழந்தை திருமணம் எல்லா பிரிவிலும் இருந்ததில்லை.தவறான பழக்கம் என்று நிராகரிக்கப்பட்ட ஒரு பழக்கத்தை தாங்கள் முன்உதாரணம் காட்டி உலகத்துக்கே முன் உதாரண புருசன் முகம்மதுவை காப்பாற்ற நினைப்பது வேடிக்கையாக உள்ளது.சிரிப்புதான் வருகின்றது. முகம்மது செய்தது தவறு. பொருந்தாத செயல்.காபாவில் உள்ள சிலைகளை உடைக்க வளர்ப்பு மகன் செயத் மனைவியை விவாகதர்து செய்தவுடன் மணந்து கொள்ள அனுமதித்து வஹி அனுப்பிய அல்லா ஏன் 53 வயது பெரியவர் 9 வயது சிறு குழந்தையை மணப்பது பொருத்தமற்றது என்று ஏன் சொல்லவில்லை.தங்கள் கருத்தில் பெரும் குழப்பம் உள்ளது.

Dr.Anburaj said...

இந்தியாவில் பல இடங்களில் பரவி இருந்தது சிறுவயது திருமணம்.சிறுவயது ஆணுக்கு சிறுவயது பெண்ணை திருமணம் செய்து வைப்பார்கள். பின்னர் தக்க காலத்திற்கு பின் மணமகள் கணவன் வீட்டிற்கு வருவார்.பாரதியாரும் கண்ணம்மாவும் வயதில் சிறியவர்கள். பாரதியார் 53 வயதில் 9வயது கண்ணம்மாவை திருணம் செய்யவில்லை. ஈவேராமசாமி நாயக்கர் என்பவர்அவரைவிட 30 வயது குறைந்த மணிய்மமையை திருணம் செய்த காரணத்தால்தான் அண்ணாதுரையும் கலைஞர் கரணாநிதியும் திராவிட கழகத்திலிருந்து தி.மு.கழகம் துவக்கினார்கள். முகம்மதுவின் பல செய்ல்கள் அபத்தமாக உள்ளது.

அபூ முஹை said...

டாக்டர் அன்புராஜ்,

இந்தியாவில் பால்ய விவாகம் சட்ட ரீதியாக நடைமுறையில் இருந்தது. இதில் மணமகன், மணமகள் இருவரும் குழந்தைகளாக இருக்கும் போதே இருவருக்கும் பால்ய விவாகம் நடந்துள்ளது. மணமகன் முதிய வயதுடைவராகவும் மணமகள் பால்ய வயதுடையவராகவும் இருந்து இருவருக்கும் திருமணம் நடந்த நிகழ்வுகளும் உண்டு. பெண்ணின் திருமண வயது படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது பெண்ணின் திருமண வயது 18 என வந்து நிற்கிறது.

இந்தியாவில் நடந்த பால்ய விவாகமெல்லாம் உங்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை. ஆனால், 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது நபி தமது 53ம் வயதில் சிறுமி ஆயிஷாவை மணமுடித்தது உங்களுக்கு அங்கலாப்பை ஏற்படுத்துகிறது என்றால் உங்கள் விமர்சனத்தின் நோக்கம் என்ன? என்பது படிப்பவர்களுக்கு நன்கு புரியும்.

கடந்த நூற்றாண்டு வரை இதுதான் நிலை என்றால் அந்தக் காலத்தில் முதியவர் சிறுமியை மணப்பது ஒரு பொருட்டாக இருந்ததில்லை. அன்று வாழ்ந்த சமூகதினரிடம் அது அங்கீகரிக்கப்பட்டிருந்தது. ஆனால், மணப்பெண்ணின் சம்மதமின்றி நடத்தும் திருமணம் செல்லாது என இஸ்லாம் சட்டமியற்றியிருப்பதால் குடும்பம், தாம்பத்திய உறவு பற்றிய அறிவை மணப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகின்றது. ஆகவே, மணப் பெண்ணின் சம்மதமில்லாத குழந்தைத் திருமணம் இஸ்லாத்தில் இல்லை. என்பதை விளங்கி நேர்மையுடன் விமர்சனம் செய்தால் மீண்டும் மீண்டும் எழுதியதையே எழுதிக் கொண்டிருப்பதைத் தவிர்க்கலாம்.

(குறிப்பு: முதியவர் சிறுமியை மணமுடித்த வரலாறும் மதமாற்றம் ஏன்? என்ற பதிவில் எழுதப்பட்டுள்ளது. விளங்கி விமர்சனம் எழுதுங்கள்)