Friday, March 02, 2007

கணவன்-மனைவி-ஆடை!

கணவன் - மனைவி - ஆடை! என்ற தலைப்பில் இப்னு ஹம்துன் அவர்கள் தமது வலைப்பூவில் ஒரு பதிவெழுதியிருந்தார். இஸ்லாம் மார்க்கத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் ஆடையாகத் திகழ்கிறார்கள் என்பதை திருக்குர்ஆன், 002:187வது வசனத்தை மேற்கோள் காட்டி இல்லற வாழ்க்கையில் கணவன், மனைவி இருவரும் சமமே என இஸ்லாத்தின் இயல்பை மிக அழகாக பதிவின் வழியாக பகிர்ந்து கொண்டார்.

சகோதரத்துவம், சமத்துவம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கு இது பொருக்குமா..? அவர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியாமல், அபத்தமான உளறல்களைக் கொட்டியிருக்கிறார் பாருங்கள்!

திருக்குர்ஆன், 002:187வது வசனத்தில்...

''ஹுன்ன ''லிபாஸு''ல்லகும்'' - ''அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும்''
''வ அன்தும் ''லிபாஸு''ல்லஹுன்ன'' - ''நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும்'' இருக்கின்றீர்கள் என்று மிகத்தெளிவாக கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஆடை போன்ற உதராணமாக இறைவன் குறிப்பிடுகிறான்.

லிபாஸ் என்றால் - dress, robe, garment, gown, apparel, attire, clothing, cloths, suit, costume, wear

லிபாஸ் என்பதை எப்படிப் பொருள் கொண்டாலும் சேலை, சல்வார் கமீஸ், கவுன் போன்ற ஆடை, உடை மற்றும் நீதிபதிகள், பாதிரியார்கள், பட்டம் பெறுவோர் மற்றும் சாதாரண ஆண்கள், பெண்கள் அணிந்து கொள்ளும் அங்கி என்றே பொருள்படும். மேலும் ஆடைகள் பற்றிச் சொல்லும் திருக்குர்அன் வசனங்கள்...

''ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும் அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம் (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது'' (007:026, 27வது வசனத்ததையும் பார்க்கவும்)

மனிதன் மானத்தை மறைத்துக் கொள்ள உடம்பில், அணிந்து கொள்ளும் ஆடை அலங்காரத்தைப் பற்றிச் சொல்லும் இறைவன், உள்ளத்தில் அணிந்து கொள்ளும் ஆடையைப் பற்றியும் சிலாகித்து உதாரணமாக: தக்வா - இறையச்சம் எனும் ஆடையே சிறந்தது என்று உள்ளத்திற்கு அணிய வேண்டிய ஆடையைப்பற்றியும் இங்கே சிறப்பித்துக் கூறுகிறான்.

அங்கு அவர்களுக்கு ஆணிவிக்கப்படும் ஆடை பட்டாக இருக்கும். - ...and their garments there will be of silk (022:023. 035:033)

மறுமையில் சொர்க்கவாசிகளுக்கு அணிவிக்கப்படும் ஆடைகள் பற்றிச் சொல்லப்படுகிறது.

உதாரண ஆடை:
அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம். (078:010. 025:047)
மனிதன் ஓய்வெடுத்து உறங்குவதை நிம்மதியெனும் ஆடையாக இரவை ஆக்கினோம் என்று இறைவன் உதாரணமாகக் கூறுகிறான்.

''அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக பசி மற்றும் பயம் எனும் ஆடையை அல்லாஹ் அவர்களுக்கு அணிவித்தான்'' (016:112)

இங்கும் பசியையும், பயத்தையும் ஆடைகளென்று உதராணமாக இறைவன் குறிப்பிடுகின்றான்.

இங்கு குறிப்பிட்ட வசனங்களில் ''லிபாஸ்'' என்ற வாசகமே இடம்பெறுகிறது, தமிழறிஞர்கள் மற்றும் சில ஆங்கில அறிஞர்கள் லிபாஸ் என்பதை ஆடை என்றே மொழிபெயர்த்திருக்கிறார்கள் ஆடை என்பதுதான் சரியான - பொருத்தமான மொழிபெயர்ப்பு!

இந்தப் பொருத்தத்தின்படி அழகிய முன்னுதாரணத்தில்: கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் மானம் - மரியாதை - கெளரவம் எனும் விலை மதிப்பற்ற ஆடையாகத் திகழ்கிறார்கள்.

மேதகு நண்பர் ஏமாறாதவனின் கூற்றுப்படி, ''They are the keepers of your secrets, and you are the keepers of their secrets.'' என்று மொழி பெயர்த்தால்...

ஆடை என்பதை secrets என்று மொழிபெயர்த்துப் பாருங்களேன், குழப்பந்தான் மிஞ்சும்.

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

13 comments:

அபூ முஹை said...

test

ஆதி said...

ஏமாறாதவன் கூற்றில் என்ன தவறு கண்டீர்கள்?

கணவனுக்கு மனைவி ஆடையாம். மனைவிக்கு கணவன் ஆடையாம்.

அப்போ உடலுறவின்போது யாருக்கு யார் ஆடை?

உளறினாலும் பொருத்தமாக உளறுங்கள் பாய்.

மரைக்காயர் said...

ஏமாறாதவன், ஆதிசேஷன் போன்றவர்களின் பிண்ணனி அப்படி. தாங்கள் ஜனிக்க காரணமாக இருந்த தாய் தந்தையரின் உறவைக்கூட ஆபாச படக்காட்சிகளாக தன் மனத்திரையில் ஓட விட்டு ரசிப்பவர்கள் இவர்கள். மற்றவர்களைப் பற்றிய இவர்களின் பார்வை எப்படி இருக்கும் என்பதை சொல்ல வேண்டுமா?

அபூ முஹை said...

ஆதிசேஷன் உங்கள் வருகைக்கு நன்றி!

ஏமாறாதவனின் கூற்றில் தவறு இருப்பதால்தான் இந்தப்பதிவு!

கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் ஆடை போன்றவர்கள்! இப்படித்தான் திருக்குர்ஆன், 002:187வது வசனம் குறிப்பிடுகிறது.

இதை உளறல் என்று பொத்தாம் பொதுவாக சொல்வதை விட, இந்தப் பதிவுக்கு எதிர் கருத்து இருந்தால் தக்க சான்றுகளுடன் அதை எழுதுங்களேன்! உளறுவது யாரென அம்பலமாகி விடும். செய்வீர்களா?

அன்புடன்,
அபூ முஹை

நண்பன் said...

002.187
YUSUFALI: Permitted to you, on the night of the fasts, is the approach to your wives. They are your garments and ye are their garments. Allah knoweth what ye used to do secretly among yourselves; but He turned to you and forgave you; so now associate with them, and seek what Allah Hath ordained for you, and eat and drink, until the white thread of dawn appear to you distinct from its black thread; then complete your fast Till the night appears; but do not associate with your wives while ye are in retreat in the mosques. Those are Limits (set by) Allah: Approach not nigh thereto. Thus doth Allah make clear His Signs to men: that they may learn self-restraint.

PICKTHAL: It is made lawful for you to go in unto your wives on the night of the fast. They are raiment for you and ye are raiment for them. Allah is Aware that ye were deceiving yourselves in this respect and He hath turned in mercy toward you and relieved you. So hold intercourse with them and seek that which Allah hath ordained for you, and eat and drink until the white thread becometh distinct to you from the black thread of the dawn. Then strictly observe the fast till nightfall and touch them not, but be at your devotions in the mosques. These are the limits imposed by Allah, so approach them not. Thus Allah expoundeth His revelation to mankind that they may ward off (evil).

SHAKIR: It is made lawful to you to go into your wives on the night of the fast; they are an apparel for you and you are an apparel for them; Allah knew that you acted unfaithfully to yourselves, so He has turned to you (mercifully) and removed from you (this burden); so now be in contact with them and seek what Allah has ordained for you, and eat and drink until the whiteness of the day becomes distinct from the blackness of the night at dawn, then complete the fast till night, and have not contact with them while you keep to the mosques; these are the limits of Allah, so do not go near them. Thus does Allah make clear His communications for men that they may guard (against evil).

http://www.usc.edu/dept/MSA/quran/002.qmt.html

நண்பர்களுக்குத் தேவை ஒரு நல்ல ஆங்கில அகராதி. ஆகையால் அதன் தமிழ் மொழி பெயர்ப்பிற்கு:

http://www.tamililquran.com/suraindex.asp

அபூ முஹை said...

மரைக்காயர் அவர்களே உங்கள் வருகைக்கு நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

அபூ முஹை said...

நண்பன் உங்கள் வருகைக்கும், திருக்குர்ஆன் ஆங்கில வசனங்களை பார்வைக்கு தந்ததற்கும் நன்றி!

//நண்பர்களுக்குத் தேவை ஒரு நல்ல ஆங்கில அகராதி. ஆகையால் அதன் தமிழ் மொழி பெயர்ப்பிற்கு://

நல்ல ஆங்கில அகராதியையே நண்பர்கள் வைத்திருப்பார்கள்! ஆனால் வருந்தக்கது: எங்காவது அறிஞர்கள் தடுமாற்றத்தில் இடறியிருந்தால் அவர்களைத் தேடிக் கொண்டு வந்து கொலு மண்டபத்தில் வைத்து புகழ் பாடுவார்கள்.

ஒரு பலவீனத்தைத் தங்களின் பலமாக மாற்ற முயற்சிப்பவர்கள் அவ்வளவுதான்.

http://tamilislam.com/tamilquran/the_cow.htm

ஏற்கெனவே மேற்கண்ட சுட்டியிலுள்ள திருக்குர்ஆன் 002:187 வசனத்தின் தமிழ் மொழி பெயர்ப்புக்குத்தான் இத்தனை ஆர்ப்பட்டங்கள்!

அன்புடன்,
அபூ முஹை

Sirajudeen said...

002:187
002:187 Khan
It is made lawful for you to have sexual relations with your wives on the night of As-Saum (the fasts). They are Libas [i.e. body cover, or screen,
or Sakan, (i.e. you enjoy the pleasure of living with her - as in Verse 7:189)], for you and you are the same for them. Allah knows that you used
to deceive yourselves, so He turned to you (accepted your repentance) and forgave you. So now have sexual relations with them and seek that
which Allah has ordained for you (offspring), and eat and drink until the white thread (light) of dawn appears to you distinct from the black
thread (darkness of night), then complete your Saum (fast) till the nightfall. And do not have sexual relations with them (your wives) while you
are in I'tikaf (i.e. confining oneself in a mosque for prayers and invocations leaving the worldly activities) in the mosques. These are the limits
(set) by Allah, so approach them not. Thus does Allah make clear His Ayat (proofs, evidences, lessons, signs, revelations, verses, laws, legal and
illegal things, Allah's set limits, orders, etc.) to mankind that they may become Al-Muttaqun (the pious - see V.2:2).
002:187 Maulana
It is made lawful for you to go in to your wives on the night of the fast. They are an apparel for you and you are an apparel for them. Allah knows
that you acted unjustly to yourselves, so He turned to you in mercy and removed (the burden) from you. So now be in contact with them and seek
what Allah has ordained for you, and eat and drink until the whiteness of the day becomes distinct from the blackness of the night at dawn, then
complete the fast till nightfall, and touch them not while you keep to the mosques. These are the limits of Allah, so go not near them. Thus does
Allah make clear His messages for men that they may keep their duty.
002:187 Pickthal
It is made lawful for you to go in unto your wives on the night of the fast. They are raiment for you and ye are raiment for them. Allah is Aware
that ye were deceiving yourselves in this respect and He hath turned in mercy toward you and relieved you. So hold intercourse with them and
seek that which Allah hath ordained for you, and eat and drink until the white thread becometh distinct to you from the black thread of the dawn.
Then strictly observe the fast till nightfall and touch them not, but be at your devotions in the mosques. These are the limits imposed by Allah, so
approach them not. Thus Allah expoundeth His revelation to mankind that they may ward off (evil).
002:187 Rashad
Permitted for you is sexual intercourse with your wives during the nights of fasting. They are the keepers of your secrets, and you are the keepers
of their secrets. GOD knew that you used to betray your souls, and He has redeemed you, and has pardoned you. Henceforth, you may have
intercourse with them, seeking what GOD has permitted for you. You may eat and drink until the white thread of light becomes distinguishable
from the dark thread of night at dawn. Then, you shall fast until sunset. Sexual intercourse is prohibited if you decide to retreat to the masjid
(during the last ten days of Ramadan). These are GOD's laws; you shall not transgress them. GOD thus clarifies His revelations for the people,
that they may attain salvation.
002:187 Sarwar
It is made lawful for you, during the nights of fasting, to have carnal relations with your wives. They are your garments and you are their
garments. God knew that you were deceiving yourselves. He relented towards you and forgave you. Now it is lawful for you to have carnal
relations with your wives and follow what God has commanded. Eat and drink until the white streak of dawn becomes distinguishable from
darkness. Complete your fast, starting from dawn to dusk. It is not lawful to have carnal relations with your wives during i'tikaf in the mosque.
Such are the limits of the laws of God. Do not come close to transgressing them. Thus has God explained His evidence to men so that perhaps
they will have fear of God.
002:187 Shakir
It is made lawful to you to go into your wives on the night of the fast; they are an apparel for you and you are an apparel for them; Allah knew
that you acted unfaithfully to yourselves, so He has turned to you (mercifully) and removed from you (this burden); so now be in contact with
them and seek what Allah has ordained for you, and eat and drink until the whiteness of the day becomes distinct from the blackness of the night
at dawn, then complete the fast till night, and have not contact with them while you keep to the mosques; these are the limits of Allah, so do not
go near them. Thus does Allah make clear His communications for men that they may guard (against evil).
002:187 Sherali
It is made lawful for you to go in unto your wives on the night of the fast. They are a sort of garment for you and you are a sort of garment for
them. ALLAH knows that you have been acting unjustly to yourselves, wherefore HE has turned to you with mercy and afforded you relief. So
you may now go in unto them and seek what ALLAH has ordained for you; and eat and drink until the white thread becomes distinct to you from
the black tread of the dawn. Then complete the fast till nightfall and do not go in unto them while you remain in the Mosques for devotion. These
are the limits set by ALLAH, so approach them not. Thus does ALLAH make HIS commandments clear to men that they may become secure
against evil.
002:187 Yusufali
Permitted to you, on the night of the fasts, is the approach to your wives. They are your garments and ye are their garments. Allah knoweth what
ye used to do secretly among yourselves; but He turned to you and forgave you; so now associate with them, and seek what Allah Hath ordained
for you, and eat and drink, until the white thread of dawn appear to you distinct from its black thread; then complete your fast Till the night
appears; but do not associate with your wives while ye are in retreat in the mosques. Those are Limits (set by) Allah: Approach not nigh thereto.
Thus doth Allah make clear His Signs to men: that they may learn self-restraint.


இந்த 8 மார்க்க அறிஞர்களில் ரசாத் என்பவருடைய குர்ஆன் விளக்கத்தை மட்டும் இட்டு தன்னுடைய இஸ்லாமிய காழ்புணர்வை வெளிப்படுத்தியுளளார் ஏமாறாதவன். இன்னொரு முக்கிய விசயம் குர்ஆன் அரபி மொழியில் இறங்கிய வேதம். அதை அந்த மொழியின் மொழிபெயர்ப்பை கொண்டு தான் மொழிபெயர்த்திருக்க வேண்டும்.

அபூ முஹை said...

சிராஜுதீன் உங்கள் வருகைக்கு நன்றி!

திருக்குர்ஆன் 002:187 வது வசனத்தின் ஆங்கில மொழி பெயர்ப்புகளை மறுமொழியில் பகிர்ந்தமைக்கு நன்றி!

இவர்கள் திருக்குர்ஆனை,குறை காணும் நோக்கத்தில் அணுகுகிறார்கள். அதனால் 1400 ஆண்டுகளாக திருக்குர்ஆனில் இருந்து கொண்டிருக்கும் வசனங்களை இல்லையென்றும் மறுக்கத் துணிகிறார்கள்.

மிக நன்றாக ''மெய்ப் பொருள் காணுகிறார்கள்''அவதூறு இவர்களுக்குப் பழகி விட்டது.

அன்புடன்,
அபூ முஹை

நண்பன் said...

அன்பின் அபூமுஹை,

வேலைப்பளு காரணமாக, வெறும் இணைப்புகளை மட்டும் கொடுத்து விட்டு, வேறு எதுவும் எழுத முடியாமல் போய்விட்டது.

குரான் மொழி பெயர்ப்பில், சிறந்தவை எனவும், ஆதாரப்பூர்வமானது என அங்கீகாரம் பெறப்பட்டதுமான மொழி பெயர்ப்புகளைத் தான் நான் கொடுத்துள்ளேன்.

அவர்களில் ஒருவரின் வரலாறு மிகவும் சுவையானது.

அவர் - பிக்தால். வில்லியம் மர்மட்யூக் பிக்தால்.

ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட முதல் குரானை இவர் தான் செய்தார். அர்த்தங்களைத் தான் தன்னால் மொழி பெயர்க்க முடிந்தது, அதை ஓதும் பொழுது எழும் கண்ணீர் வரவழைக்கும் இனிமையை தன்னால் மொழி பெயர்க்க முடியவில்லை என்று கூறும் இவர் - பிறப்பால் ஆங்கிலேயர். மொழி பெயர்ப்பை எகிப்தில் உள்ள ஆங்கிலம் அறிந்த இமாம் ஒருவர் மூலமாக வார்த்தைக்கு வார்த்தை சரி பார்க்கப்பட்டு, வாதம் செய்யப்பட்டு, பின்னர் தான் வெளியிடப்பட்டது.

இவரின் வரலாறு சுவையானது என்று நான் சொன்னது இதனால் அல்ல. அது - பிறப்பால் கிறித்துவரான இவருக்கு முதலில் பணி வழங்கியது கிறித்துவ தேவலாயங்கள் - என்ன அது தெரியுமா?

குரானை விமர்சனம் செய்ய வேண்டும். அது தான் அவருடைய பணி. விமர்சனம் செய்வதற்காக அவர் குரானை வாசிக்க நேர்ந்தது. விமர்சிப்பதற்காக வாசித்தவர், பின்னர் அதன் வழியாகச் சொல்லப்பட்ட உண்மைகளை உணர்ந்து, இப்படிப்பட்ட குரானையா நான் விமர்சனம் செய்கிறேன் என கேள்விகளை எழுப்பி, மனம் மாறி இஸ்லாத்தைத் தழுவியவர். பின்னர் தன் வாழ்நாள் முழுவதும் இஸ்லாத்தின் பணியில் செலவிட்டார். இன்றும், அவருடைய மொழி பெயர்ப்பே, ஆங்கிலத்தின் அதிகார பூர்வ வடிவமாக அனைத்து இஸ்லாமியர்களாலும் ஏற்கப்பட்டுள்ளது.

உண்மையான விமர்சகர்களாக இருந்தால், நியாயம் புரியும். ஆனால், இங்கு வலைத்தளத்தில் எழுதுபவர்களின் நேர்மையை கிலோ எத்தனை என்று விலை பேசி விடலாம். இவர்கள் தான் கிளம்பி விட்டார்கள் விமர்சிப்பதற்கு.

மத விசாரணையில் ஈடுபடுபவர்கள், முதலில் தங்கள் மதத்தைப் பற்றிய முழு அறிவையும் பெற்றிருக்க வேண்டும். ஆன்மீகத்தில் அடிப்படை பரிச்சியம் இருக்க வேண்டும். உண்மையான தேடுதலுடன் ஆராய்ச்சியில் இறங்க வேண்டும்.

ஆனால், நம் நண்பர்கள், அரசியல் காரணமாக, குரான் விமர்சனத்தில் இறங்குகிறார்கள். அதிலும், நேர்மை கிடையாது. எப்படியாவது, மக்களின் கண்களில் மண்ணைத் தூவி, உண்மைகளை மறைத்து அவப்பெயர் உண்டாக்கி விட வேண்டும் என்ற முனைப்பில் செயல்படுகிறார்கள். காரணம் - அடக்குமுறை மிகுந்த சமூக அமைப்பிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டுமானால், அது தங்களின் பிறப்பால் தங்களை அவமதிக்கும் மதத்தை விட்டு வெளியேறுவது தான்.

பலர் அம்பேத்கரின் வழியைப் பின்பற்றி, புத்தத்திற்கு செல்கிறார்கள். இஸ்லாத்திற்கு வருகிறார்கள். கிறித்துவத்திற்கும் செல்கிறார்கள். இப்பொழுது, புத்த மதத்தை இந்து மதத்தின் ஒரு அங்கம் என்றே சொல்லத் தலைப்பட்டுவிட்டனர். இது தான் காலத்தின் கட்டாயம் என்பது. எந்த மதத்தை, இந்த மண்ணை விட்டு, அழித்து ஒழித்தார்களோ, அதே மதத்தை இப்பொழுது தங்களின் சகோதர மதமாக அங்கீகாரம் தர தலைப்படுகின்றனர்.

ஆனால், இஸ்லாத்தையும், கிறித்துவத்தையும் - அதனுடைய துல்லியமான வேறுபாடுகளால், தங்களின் சகோதர மதமாக கூற முடியாது என்பதை உணர்ந்து தான், துர்ப்பிரச்சாரம் செய்து, மக்களை தடுத்து விட வேண்டும் என்று நினைக்கின்றனர். இந்த எதிர்மறை அணுகும் முறை நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது என்பதை அறியவில்லை அவர்கள். அது, கலவரங்களிலும், மத வெறுப்பிலும் தான் கொண்டு போய் நிறுத்துகிறது.

இந்த பிரச்சாரத்தின் உச்ச கட்டம் - மத தலைவர்களை இழிவு செய்வது. முகமது நபிகளை - ஒரு மனிதர் என்ற அளவிற்கேனும் மதிக்கத் தவறிய இந்த மனிதர்களை மனிதர்கள் என்று அழைப்பதும் கூட தவறு. சகமனிதனை மனிதன் என்று அழைக்க மறுக்கும் இவர்கள், எப்படி, விமர்சனத்தில் இறங்குகிறார்கள்? எந்த நியாயத்தின் அடிப்படையில் இறங்குகிறார்கள் என்று புரியவில்லை. எந்த ஒரு விமர்சகனுக்கும் அடிப்படையில் தேவை - கருத்து வேறுபாடுகளை மீறிய, மனித மதிப்பீடுகள். அவ்வாறு உள்ளவர்களாலேயே, உண்மையான விமர்சனத்தில் இறங்க முடியும். அந்த தகுதி, வலைப்பதிவர்களில் தங்களை விமர்சகர்களாகக் காட்டிக் கொள்ள முயலும் எவருக்கும் இல்லை என்பது தான் உண்மை. அதனால் தான், இன்று அவர்களின் எழுத்துகளை எவரும் வாசிப்பதில்லை. திண்ணையில் முயன்று பார்த்தார்கள். இப்பொழுது, வலைப்பதிவுகளில். தாங்களே எழுதி, தாங்களே வாசித்து, தாங்களே சிலாகித்து, முகவரியற்ற அநாமதேயங்களால், பின்னூட்டமிட்டு, போலியான பிரமிப்பை எழுப்ப முயற்சிக்கிறார்கள். இவர்களுக்கு வலைத்தளத்தில் வரவேற்பில்லை என்பதை பல வலைப்பதிவாளர்கள் ஆக்ரோஷமாக அவர்கள் மீது தாக்குதல் தொடுப்பதிலிருந்தே தெரிகிறது.

இப்பொழுது புதிதாக சங்கதிகளை ஆரம்பிக்கிறார்கள் - அம்பேத்கர் ஒரு இந்துத்வா வாதி என்று. ஒரு அப்பட்டமான பொய்யை, கொஞ்சம் கூட கை கூசாமல் எழுதும் இவர்கள் சமூகத்தால் சிறிது சிறிதாக ஒதுக்கப்படுவர். அம்பேத்கரின் பல புத்தகங்களை வாசித்தவன் என்ற முறையில் தான் இவர்களின் நேர்மையின்மையை அறிய முடிகிறது.

அடுத்த கட்ட பிரச்சாரமாக, இந்து மதத்தில் சாதி பிரச்சினைகளே கிடையாது என்று ஒரே போடாக போடுகிறார்கள். அநாமதேய பின்னூட்டங்கள் அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. இதிலேயே அவர்களுடைய நேர்மை பல்லிளித்து விட்டது.

ஒரு விமர்சகனுக்கு உள்ள நேர்மை, முதலில் உண்மைகளை ஒப்புக் கொள்ள வேண்டும். பிறகு, ஒரு மதத்தினர் ஆதாரப்பூர்வமான நூல் என்று கூறும் பிரதிகளை வைத்துக் கொண்டு வாசிக்க வேண்டும். தாங்களேவே உருவாக்கிக் கொண்ட நூல்களை வைத்துக் கொண்டு, வாதாட வரக்கூடாது. இன்று, இணையத்தளங்களில் எழுதப்படும் விஷயங்களை வைத்துக் கொண்டு, வாதாடுகிறார்கள். இணையத் தளங்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது. எவர் வேண்டுமானாலும், எவர் பெயரிலும், எதன் பெயரிலும் எழுதத் தொடங்கலாம். தங்கள் கருத்துகளை இது தான் இந்த மதம் என்று போதிக்கலாம். இத்தகைய கருத்துகளை வைத்துக் கொண்டு வாதாடுவது, என்பது தூங்குவதாக நடிப்பவனிடம் விழிப்பை ஏற்படுத்தும் வெட்டி வேலையாகத் தான் முடியும்.

அவர்களுக்குத் தங்கள் விருப்பம் போல அவதூறுகளை அள்ளி இறைக்கலாம். அது அவர்களின் தனிமனித சுதந்திரம். ஆனால், அந்த சுதந்திரத்தை அமல் செய்வதிலும் விதிகள் இருக்கின்றன. பிற மனிதர்களை, மனிதர்களாக மதிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவற்றவர்கள் கூட, விமர்சனத்தில் இறங்கிவிடுகின்றனர். இவர்கள் தான் தங்கள் மதத்தில் தாழ்த்தப்பட்டு அடக்கி வைக்கப்படும் மனிதர்களை மனிதர்களாக நியாயமாக நடத்துவோம் என்று சூளுரைக்கின்றனர். என்ன ஒரு வெத்து வாதம்? இவர்களை பின் எப்படி மற்றவர்கள் நம்புவார்கள்? இந்தப் புரிதல் இல்லாமலே, சீர்திருத்த வந்தவர்கள் அறியவில்லை, சீர்திருத்தம் முதலில் உள்ளிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதை.

ஒருவர், மிக சவடாலாக, நபி பெருமானார் அவர்களை அவன் இவன் (இறைவன் மன்னிப்பானாக) என்று எழுதுவதில் என்ன தப்பு என்று கேள்வி எழுப்புகிறார்!!! இஸ்லாத்தின் முதல் வாக்கியமான இறைவன் ஒருவனே அன்றி வேறல்ல என்ற தத்துவத்தைக் கூட புரிந்து கொள்ளாமலே, இஸ்லாத்தை அறிந்து விட்டதாக இறங்கி விட்டார்கள். தமிழ் மொழியில், ஏகத்தைக் குறிக்கும் விதமாக அவன் என்று குறிப்பிடப்படுகிறது. அவர் என்று சொன்னால் கூட, அது மரியாதைப்பண்மை ஆகி விடும் என்பதால், காலப்போக்கில், இந்த 'அவர்' உள்ளே பலர் புகுந்து விடக்கூடும் என்பதால், எந்த வித கருத்து மயக்குதலுக்கும் இடமின்றி, தெளிவாக ஒருவனைக் குறிப்பிடுவதற்காக மொழி இலக்கணப்படி, அவன் என்ற சொல் ஒருமையைக் குறிப்பதற்காக, பயன்படுத்தப்படுகிறது.

மொழி அறிவும் கிடையாது, தத்துவ புரிதலும் கிடையாது, மத புரிதலும் கிடையாது ஆனாலும், நான் விமர்சிப்பேன் என்று அடம்பிடிப்பவர்களைப் பார்க்கும் பொழுது, இத்தகைய அநியாய மனிதர்களால், அவர்கள் சார்ந்த மதமே இறுதியில் இழிவு அடைகிறது என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

குரானை நிறுவதற்கு, விஞ்ஞான ஆயத்தங்கள் கூட தேவையில்லை.
குரானின் வசனங்களில் ஒன்று, பிற மதத்தைத் தூற்றாதே - பின் அவர்கள் உங்களைத் தூற்றுவார்கள் என்பது. இது இன்று நிரூபணமாகி வருகிறது. பாருங்கள் அவர்கள் முன் நிறுத்திய வேதங்களைப் போட்டு, நார் நாராக கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் சொல்வது, இத்தகைய நேர்மையற்ற மனிதர்களின் தளங்களில், அநாவசியமாகப் பின்னூட்டமிட்டு, நேரத்தை வீணடிப்பதோ, அல்லது அவர்கள் தளங்களின் சுட்டி கொடுத்து, விளம்பரம் செய்வதோ தேவையற்றது. எல்லோரும் ஒதுக்கியவர்களை எதற்காக தேடிப்பிடித்து வாசிக்கிறீர்கள்? மறுப்பு வெளியிட வேண்டுமென்றால், கருத்துகளை மட்டும் குறிப்பிட்டு, நமது தளங்களிலே மறுப்பு சொல்லிக் கொண்டால் போதுமானது என்றே நினைக்கிறேன்.

சரிதானே?

(பின்னர், இதையே ஒரு தனிப்பதிவாகவும் போட்டு விடுகிறேன்.)

நண்பன் said...

அன்பின் அபூமுஹை,

நான் அனுப்பிய விரிவான பின்னூட்டத்தில் வில்லியம் மர்மட்யூக் பிக்தால் அவர்கள் தங்கள் பெயரை முகமது மர்மட்யூக் பிக்தால் என்று மாற்றிக் கொண்ட செய்தியையும், அவரைப் பற்றிய குறிப்புகளை, பேராசிரியர் நாகூர் ரூமி அவர்கள் எழுதிய 'இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்' என்ற நூலில் படித்ததையும் குறிப்பிட மறந்து விட்டேன்.

நன்றி.

Unknown said...

உங்கள் விளக்கங்களும், கூடுதலாக நண்பன் மற்றும் sirajudeen போன்றவர்களின் குர்ஆனுடைய ஆங்கில கருத்தாங்கங்களும் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு போதுமானவை. விஷமிகளுக்கு????

அபூ முஹை said...

அன்பின் நண்பன்