இஸ்லாம் மார்க்கத்தில் ஜாதிகள் இல்லையா? எனக் கேட்டு இஸ்லாத்தில் ஜாதிகளை நிறுவ, இஸ்லாத்திலிருந்து ஒரு சான்றைக்கூட வைக்காமல் வழக்கம் போல் தமது ரீ மிக்ஸ் கைங்காரியத்தை செய்திருக்கிறார் ஒரு இந்துத்துவவாதி.
அடக் கைச்சேதமே.
//இது சம்பந்தமாக நிறைய இணையக் கட்டுரைகள் இருக்கின்றன. யோகிந்தர் சிக்கந்த் கூட தலித் முஸ்லிம்கள் பற்றியெல்லாம் எழுதியுள்ளார். இருப்பினும், என் சார்பாக இஸ்லாமிய சமுதாயத்தில் இருக்கும் சாதிகளின் அடிப்படையில் செய்யப்பட்ட ஒரு கள ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகளை (எழிலின் பதிவில் இட்டது) இங்கு மீண்டும் இடுகிறேன்.
இதன் மூலம் நான் ஒன்றும் இந்து மதத்தில் சாதியில்லை அல்லது சாதிப்பிரச்சினை இல்லை என்று சாதிக்க முயலவில்லை. மாறாக, சாதி இஸ்லாத்தில் இல்லை என்று சாதிக்கும் இஸ்லாமிஸ்டுகளுக்காகவும், இஸ்லாத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் இன்னும் இருக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்காகவும் இதை இடுகிறேன்.
***
ஒரு ஆய்வின் போது, ஹதராபாத்தில் இருக்கும் ஜாதிகள் என்று இந்தக் கட்டுரையின் ஆசிரியர் பட்டியலிடும் ஜாதிகள் இவை://
(இது சம்பந்தமாக ஆங்கிலக் கட்டுரைகளை இந்த சுட்டியில் சென்று பார்த்துக் கொள்ளலாம்
http://nesakumar.blogspot.com/2006/12/blog-post_07.html)
...
//(My note: இக்கட்டுரையைப்படிக்கும், இந்திய இஸ்லாமிய சமூகத்தைப் பற்றி அவ்வளவாகத் தெரியாத நண்பர்களுக்காக - உயர்ஜாதி முஸ்லிம்கள் - சயீத் - இங்கிருக்கும் பிராம்மணர்களைப் போன்றவர்கள், பிராம்மணர்கள் எப்படி ரிஷி வழி வந்தவர்களாக, ஆன்மீகத்தன்மை உடையவர்களாக தம்மை கற்பிதம் செய்து கொள்கிறார்களோ அவ்வாறே சய்யத்து அல்லது சயீத் சாதியினரும் முகமதின் வழித்தோன்றல்களாக தம்மை கருதிக்கொள்கின்றனர். பதான்கள் தம்மை க்ஷத்திரிய சாதியினராக கருதுகின்றனர். பொதுவாக கான் என்றால் க்ஷத்திரியர்கள், சயீத் அல்லது சாபு அல்லது தங்ஙள் என்றால் பிராம்மண முஸ்லீம்கள் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்)//
-----------------
எமது குறிப்பு:
சய்யத் என்றால்: master, lord, chief, head, leader
சய்யதி: sir
சய்யதத்: lady, woman, mistress, mrs, madem(e)
சய்யதாதி வ சாததீ: ladies and gentlmen
புரட்சி சய்யத்: புரட்சித் தலைவர்.
புரட்சி சய்யதத்: புரட்சித் தலைவி.
''எங்கள் கூட்டத்தின் - சய்யதை - தலைவரை தேள் கொட்டிவிட்டது.'' (புகாரி, 5007)
''என்னுடைய இந்த (புதல்வியின்) புதல்வர் - சய்யதுன் - தலைவர் ஆவார்.'' (புகாரி, 7109)
சய்யது என்பது அரபி மொழியில் மரியாதைக்குரிய ஒரு வார்த்தை ''யா சய்யதி'' ''ஓ தலைவரே'' என்று இன்றும் அழைத்துக் கொள்வார்கள். கடிதத்திலும், அதிகாரிகளுக்கு எழுதும் மனுவிலும் இவ்வாறேக் குறிப்பிட்டு அரபியர்கள் எழுதுவார்கள். இது ஒரு சாதாரண தலைவா என்று தமிழில் சொல்லிக் கொள்வது போல் உள்ள வார்த்தையே அரபியில் சய்யத் என்பதும். இதை ஜாதியாகக் கருதி, அதுவும் உயர் ஜாதியாக கட்டமைத்து வழக்கம் போல் வரலாற்றில் ரீ மிக்ஸ் செய்ய முயற்சித்திருக்கிறார் இந்த இந்துத்துவவாதி.
சயீத் என்றால் அதிர்ஷ்டசாலி. சயீத் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். அபூ சயீத் அல் குத்ரீ, அபூ சயீத் பின் முஅல்லா.
இஸ்லாத்தின் நிலைப்பாடு.
மனித குலம் ஒரு தாய் தந்தையிலிருந்தே பல்கிப் பெருகிறது.
நீங்கள் அனைவரும் ஆதமின் மக்கள் ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டார்.
கருப்பனைவிட வெள்ளையனோ, வெள்ளையனைவிட கருப்பனோ சிறந்தவனல்ல.
அரபியனைவிட அரபியரல்லாதவனோ, அரபியரல்லாதவனைவிட அரபியனோ சிறந்தவனல்ல.
உங்களில் இறையச்சமுடையவர்களே இறைவனிடத்தில் மேன்மையானவர்கள்.
இப்படி ஜாதிகளின் அடிப்படையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை வேரோடும், வேரடி மண்ணொடும் அழித்து விட்டது இஸ்லாம். இஸ்லாத்தில் ஜாதிகள் இருப்பதாக நிறுவ முயற்சிப்பவர்கள் இஸ்லாத்திலிருந்தே ஆதாரங்களை வைப்பதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.
அன்படன்,
அபூ முஹை
11 comments:
அட அட அட..
கலக்கிட்டீங்க சகோதரர் அபூமுஹை!
நேசகுமார் போன்ற கயமையை மட்டுமே மூலதனமாகக் கொண்டுள்ளவர்கள் இது போலத் திருகுதாளம் செய்வது ஆச்சரியப் படக்கூடியதா என்ன?
வளைகுடாவில் வேலைபார்க்கும் பல அன்பர்கள் ஏர்போர்ட்டில் வரும் சயிதாத்தி வ சதாதி போன்ற அறிவிப்புகளைக் கேட்காமல் இருந்திருப்பார்களா? வேசகுமார் அகராதியில் ladies and gentlemen என அழைப்பதற்கு அய்யர்களே மற்றும் அய்யங்கார்களே என்று பொருள் போலும்...
//வழக்கம் போல் தமது ரீ மிக்ஸ் கைங்காரியத்தை செய்திருக்கிறார் ஒரு இந்துத்துவவாதி.//
எழிலின் பதிவில் 'என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்க'ன்னு சம்மனில்லாம ஆஜரானாரே அந்த நபரையா சொல்றீங்க?
//இஸ்லாத்தில் ஜாதிகள் இருப்பதாக நிறுவ முயற்சிப்பவர்கள் இஸ்லாத்திலிருந்தே ஆதாரங்களை வைப்பதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.//
அருமையாகவும் எளிமையாகவும் அழுத்தமாகவும் அதேநேரம் வன்மை ஏதுமின்றியும் இஸ்லாம் பற்றி பதிலளிக்கும் உங்கள் பாங்கை பாராட்டுகிறேன்.
இஸ்லாம் பற்றி எதிர்மறையாக எழுதுபவர்கள் 'வேண்டும்'-என்றே அவ்வாறு செய்கிறார்கள் என்பதை நாம் அறிந்தது தான். அவர்கள் எழுத்தில் மெய்ப்பிக்கப்படுவதெல்லாம் இஸ்லாம் பற்றிய அவர்களின் 'எண்ணங்கள்' தான்.
அருமையான விளக்கம் அபூமுஹை அவர்களே! புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி!!
அட்றா சக்கை, TRS, ஹாபிழ், மற்றும் ஜாஃபர் அலி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!
-------------------
மரைக்காயர் அவர்களே உங்கள் வருகைக்கு நன்றி!
///வழக்கம் போல் தமது ரீ மிக்ஸ் கைங்காரியத்தை செய்திருக்கிறார் ஒரு இந்துத்துவவாதி.///
//எழிலின் பதிவில் 'என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்க'ன்னு சம்மனில்லாம ஆஜரானாரே அந்த நபரையா சொல்றீங்க?//
கடிதம் போட்டு வரச் சொன்னதாகச் சொன்னாரே அவரேதான்! கடிதமும், சம்மனும் ஒன்றுதானே? நீங்கள் சம்மனில்லாமல் ஆஜரானவர் என்கிறீர்களே எங்கேயோ இடிக்குதே?
அன்புடன்,
அபூ முஹை
tamilreber உங்கள் வருகைக்கு நன்றி!
//இஸ்லாமிய சமூகத்தில் இந்தியாவில் சாதிகள் இருக்கின்றன. இஸ்லாம் என்கிற மத போதனைகளில் அவை இல்லாமல் இருக்கலாம். சமூகத்தில் இருக்கின்றன.தலித் முஸ்லீம்கள் என்று ஒரு பிரிவினர் தங்களை கூறிகொள்கிறார்கள். சமீபத்திய ப்ரண்ட்லைன் இதழில் கூட இது குறித்து எழுதப்பட்டுள்ளது. எனவே இன்னும் எத்தனை காலம்தான் இஸ்லாம் சாதியை ஒழிதது என்ற கட்டுக்கதையை சொல்வீர்கள்.//
நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று உங்களுக்கே விளங்கியுள்ளதா? //இஸ்லாம் என்கிற மத போதனைகளில் அவை இல்லாமல் இருக்கலாம்// ஆம் இஸ்லாத்தில் ஜாதியின அடிப்படையில் ஏற்றத் தாழ்வு இல்லை என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.
இஸ்லாத்தில் ஜாதி இல்லையா? என்று கேட்டு விட்டு முஸ்லிம்களில் ஜாதி இருக்கிறது என்று சொன்னால் அது பித்தலாட்டமா இல்லையா?
//இதன் மூலம் நான் ஒன்றும் இந்து மதத்தில் சாதியில்லை அல்லது சாதிப்பிரச்சினை இல்லை என்று சாதிக்க முயலவில்லை. மாறாக, சாதி இஸ்லாத்தில் இல்லை என்று சாதிக்கும் இஸ்லாமிஸ்டுகளுக்காகவும், இஸ்லாத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் இன்னும் இருக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்காகவும் இதை இடுகிறேன்.//
இந்து மதத்தில் சாதியில்லை என்று நான் சொல்லவில்லை என்று சொல்லிவிட்டு //மாறாக, சாதி இஸ்லாத்தில் இல்லை என்று சாதிக்கும் இஸ்லாமிஸ்டுகளுக்காகவும், இஸ்லாத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் இன்னும் இருக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்காகவும் இதை இடுகிறேன்.// என்று சொன்னவர் - அதாவது இந்து மதத்தில் ஜாதிகள் இருப்பதுபோல் இஸ்லாம் மதத்திலும் ஜாதிகள் உண்டு என்று சொன்னவர், ''இஸ்லாம் ஜாதிகளைக் கற்பித்திருக்கிறது'' என்பதற்கு இஸ்லாத்திருந்து ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாதது பக்கா ஃபிராடுத்தனமா இல்லையா? சிந்தித்துப் பாருங்கள் உங்களையும் சேர்த்து கட்டுக் கதைகளை அவிழ்த்து விடுவது யாரெனப் புரிந்து கொள்வீர்கள்! இஸ்லாத்தை முழுமையாக அறியாதவர் யாரெனவும் விளங்கிக் கொள்வீர்கள்!
முஸ்லிம்களில் உள்ள இந்த ஜாதிப் பிரிவினை எதன் அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி பேசுவோமா? எதன் அடிப்படையில் அமைந்திருந்திருப்பதாக நீங்கள் கூறுகிறீர்களோ அதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்பதை இஸ்லாத்திலிருந்தே விளக்குவோம் நன்றி!
அன்புடன்,
அபூ முஹை
நல்ல விளக்கம். எப்படி இவ்வளவு பொறுமையாய் விளக்குகிறீர்கள்?
தெளிவான விளக்கம்.
இஸ்லாமிஸ்டுகளுக்கு இஸ்லாத்தை கற்று தர வந்த இஸ்லாமோஃபோபிக் நபர் (நன்றி பாபுஜி) வீண் கற்பனையில் தன் மதியை விற்பனை செய்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் ஸ்டெடி செய்துகொண்டிருக்கலாம். சாதுர்வர்ண நால்வித கொள்கை வர்ணாசிரம தத்துவம் இஸ்லாத்திலும் உண்டு என இஸ்லாமிஸ்டுகளுக்கு பாடம் சொல்ல வந்தவர் இஸ்லாத்தின் வேதத்திலிருந்தல்லவா சொல்லியிருக்க வேண்டும்?
-முஸ்லிம்
// இஸ்லாமிய சமூகத்தில் இந்தியாவில் சாதிகள் இருக்கின்றன. இஸ்லாம் என்கிற மத போதனைகளில் அவை இல்லாமல் இருக்கலாம். சமூகத்தில் இருக்கின்றன.தலித் முஸ்லீம்கள் என்று ஒரு பிரிவினர்
தங்களை கூறிகொள்கிறார்கள். சமீபத்திய ப்ரண்ட்லைன் இதழில் கூட இது குறித்து எழுதப்பட்டுள்ளது. எனவே இன்னும் எத்தனை காலம்தான் இஸ்லாம் சாதியை ஒழிதது என்ற கட்டுக்கதையை சொல்வீர்கள்.
//
ஆமாமா, ஆமா, ஆமா
எதுக்கு பொய் சொல்றீங்க மரைக்காயர் ஜாதியை சேர்ந்த ஐயா?
இஸ்லாத்தில்.. மாணவ ஜாதி, ஆசிரியர் ஜாதி, நீதிபதி ஜாதி, டபேதார் ஜாதி, எழுத்தாளர் ஜாதி, பேச்சாளர் ஜாதி, தலைவர்/சய்யது (நன்றி - பீடிக்கு நெருப்பு கேட்போர் குழு) ஜாதி, தொண்டர் ஜாதி, தொலைந்தவர் ஜாதி, வெங்காயம், வெள்ளப்பூண்டு இதெல்லாம் வச்சுக்கிட்டு பேச பெரிசா பேச வந்திட்டீரு. ஆண்ஜாதி, பெண்ஜாதி கூட இருக்காமே?
உலகத்திலேயே உண்மை பேசற ஒரே ஒருத்தர், உலகத்திலேயே கரெக்டான வரலாறு தெரிஞ்ச ஒரே ஒருத்தர், உலகத்திலேயே நம்பகமான எல்லாருக்கும் தெரிஞ்ச (!?) ஒரே ஒருத்தர், உலகத்திலேயே எந்த சமூகமோ, கலாச்சாரமோ ஒடுக்கப்பட்டாலோ, அழிக்கப்பட்டாலோ, அவர்களுக்கு குரல் குடுக்கும் ஒரே ஒருத்தர் ரொம்ப தெளிவா ஆராய்ச்சி (!?) பண்ணி எங்குளுக்கு உங்க மதத்த பத்தி சொல்லி புரிய வக்கறாரு.
அதை போய் புளுகுனு சொல்றீங்களே பாவிங்களா, ஸாரி பாய்ங்களா, உங்க ஜென்ம புத்தி (!?) யை காண்பிச்சிட்டீங்களே?
ஸல்மான்
//கடிதம் போட்டு வரச் சொன்னதாகச் சொன்னாரே அவரேதான்! கடிதமும், சம்மனும் ஒன்றுதானே? நீங்கள் சம்மனில்லாமல் ஆஜரானவர் என்கிறீர்களே எங்கேயோ இடிக்குதே?//
ரொம்ப வெள்ளந்தியான மனசு உங்களுக்கு. எல்லாத்தையும் நம்பிடுவீங்க போலிருக்கு :-)
அது போகட்டும். முஸ்லிம்களிடையே ஜாதி இருக்குன்னு சொல்றவங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவு படுத்த விரும்புகிறேன். உலகத்துல உள்ள எந்த இஸ்லாமிய பள்ளிவாசலிலும் சென்று எனது இறைவனை என்னால் வணங்க முடியும். அது மாற்றுக் கருத்துக்கள் கொண்ட ஷியாக்களின் பள்ளிவாசலாக இருந்தாலும் சரி.
முஸ்லிம்களிடையே ஜாதி இருப்பதாக சொல்கிறவர்கள் தங்கள் மதத்தைச் சார்ந்த எல்லோருக்கும் இதே போன்ற உரிமை இருப்பதாக சொல்ல முடியுமா?
புதுச்சுவடி, முஸ்லிம், சல்மான் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!
//ரொம்ப வெள்ளந்தியான மனசு உங்களுக்கு. எல்லாத்தையும் நம்பிடுவீங்க போலிருக்கு :-)//
மரைக்காயரே! அப்படின்னா கடித விஷயமும் ரீ மிக்ஸ் என்று சொல்கிறீர்களா? :)))
//அது போகட்டும். முஸ்லிம்களிடையே ஜாதி இருக்குன்னு சொல்றவங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவு படுத்த விரும்புகிறேன். உலகத்துல உள்ள எந்த இஸ்லாமிய பள்ளிவாசலிலும் சென்று எனது இறைவனை என்னால் வணங்க முடியும். அது மாற்றுக் கருத்துக்கள் கொண்ட ஷியாக்களின் பள்ளிவாசலாக இருந்தாலும் சரி.//
வணக்க வழிபாடுகளில் மட்டும் இஸ்லாம் தீண்டாமையை ஒழித்துக் கட்டியிருக்கவில்லை. இதர ஆள் என்ற வேற்றுமை இல்லாமல் சமபந்தி போஜனத்திலும் இஸ்லாம் மேற்ஜாதி, கீழ்ஜாதி என்ற வேற்றுமையை வேரறுத்து விட்டது. சமபந்தி என்றால் ஒரே தட்டில் அவர் எந்த முஸ்லிமாக இருந்தாலும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம், முஸ்லிமல்லாதவராக இருந்தாலும் அவரும் முஸ்லிம்களோடு சேர்ந்து உணவருந்தலாம் அதனால் தீட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை.
அன்புடன்,
அபூ முஹை
Post a Comment