இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி நீலகண்டன் - http://arvindneela.blogspot.com/2006/12/blog-post_20.html - சொல்கிறார், ''ஹராம்'' என்றால் ''இழிவானது'' என்று.
கணவனுள்ள பெண்களும் - ''ஹுர்ரிமத் அலைக்கும்''... - (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளார்கள். 004:024)
எப்படியிருக்கிறதென்று பாருங்கள்? ஏற்கெனவே ஒருவனுக்கு மனைவியாக இருப்பவள் இன்னொருவனைத் திருமணம் செய்து அவனுக்குப் பிள்ளையும் பெற்றாளாம். (இன்னும் மூவரைக் கட்டிக் கொண்டால் சுத்தமாக இருக்கும்) ஒருவனுக்கு மனைவியாய் இருப்பவள் அவனிடமிருந்து விவாகரத்துப் பெறாமல் வேறொருவனை மணமுடிக்கக் கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது. இதில் பிற மதங்கள் என்ன சொல்கின்றன என்பது தெரியவில்லை. இந்திய சட்டமும் இதைத் தடை செய்கிறது என்றே கருதுகிறேன்.
''ஹராம்'' என்பதற்கு நீலகண்டன் அவர்களின் விளக்கவுரை...
//இப்போது இன்னொரு விசயத்தை பார்ப்போம். பெற்றவர் தவறு செய்ததாகவே வைத்துக்கொள்வோம். பிறந்த குழந்தை என்ன செய்யும்? இந்த நவீன உலகில் திருமண பந்தத்தில் பிறந்தாலும் மத நெறிக்கு வெளியே பிறந்ததால் பச்சிளம் குழந்தையை பாவ பிறவி எனக் கூறும் கொடுங்கோரர்களை என்ன என்று சொல்ல? இதுதான் பகுத்தறிவா?
இந்த பகுத்தறிவான பதில் வெளிவந்தது 'முஸ்லீம் முரசு' இதழில் (மார்ச் 1989) இந்த பகுத்தறிவு பெட்டகத்தின் அட்டையை அலங்கரித்த 'பகுத்தறிவு' யார் தெரியுமா?//
ஹராம் என்றால் பாவப் பிறவி, இழிபிறவி என்று தமக்குத் தோன்றியதை அடுக்கிக் கொண்டே போகிறார் நீலகண்டன். ஹராம் என்றால் விலக்கப்பட்டது, தடைசெய்யப்பட்டது, கூடாத உறவு, தகாத உறவு. என்றே பொருள். இஸ்லாமிய வழக்கில் இறைவன் அனுமதிக்காததை ''ஹராம்'' என்று சொல்லப்படும்.
''ஹுர்ரிம அலைக்கும்'' உங்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும். (003:050)
ஹராம் என்றால் இழிவானது எனப் பொருள் என்றால் ஹராமாக்கப்பட்ட ஒன்றை, இங்கு மீண்டும் இறைவன் அனுமதிக்க மாட்டான். ஹராம் என்பது தடை செய்யப்பட்டவை, இறைவனால் தடை செய்யப்பட்டவற்றிலிருந்து முஸ்லிம்கள் விலகிக்கொள்ள வேண்டும்.
''ஹுர்ரிமத் அலைக்கும்'' - தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை - உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. (005:003) இதே வசனத்தில், ஹராமாக்கப்பட்டவைகளை - நிர்ப்பந்த நிலையில் பாவம் செய்யும் எண்ணமில்லாமல் - புசித்தால் அவர் மீது குற்றமில்லை என்றும் இறைவன் கூறுகிறான்.
விபச்சாரத்தில் பிறந்த குழந்தையின் நிலைப்பாடு.
ஒரு பெண் 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக நான் (தகாத உறவினால்) கர்ப்பமுற்றுள்ளேன்' என்று கூறினார்.
''இல்லை நீ சென்று குழந்தை பெற்றெடு' (பிறகு திரும்பி வா) என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
குழந்தை பெற்றெடுத்த பின் அந்தப் பெண் ஒரு துணியில் குழந்தை எடுத்துக்கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'இது நான் பெற்றெடுத்த குழந்தை' என்று கூறினார்.
''நீ சென்று குழந்தைக்குப் பாலூட்டு! பால்குடி மறந்தபின் திரும்பி வா'' என்றார்கள்.
பால்குடி மறக்கடித்த பின் அப்பெண் அச்சிறுவனுடன் வந்தார். அவனது கையில் ரொட்டித் துண்டு ஒன்று இருந்தது. அப்பெண் 'அல்லாஹ்வின் தூதரே இவனுக்குப் பால்குடி மறக்கடித்து விட்டேன். இப்போது உணவு உட்கொள்கிறான்' என்று கூறினார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அச்சிறுவனை முஸ்லிம்களில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள். பிறகு அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். (முஸ்லிம், நபிமொழியின் சுருக்கம்)
ஒன்றிரண்டு நபிமொழிகளை எடுத்துக்காட்டி, அதோடு //பாகிஸ்தானில் மத சட்டத்தின் படி 'தவறான' உறவில் பிறந்த குழந்தையும் கல்லால் அடித்து கொல்லப்பட்டது குறித்து படித்த ஞாபகம்.// என்று எழுதி விட்டால் ''இஸ்லாம் தவறான உறவில் பிறந்த குழந்தையைக்கூடவாக் கொல்லச் சொல்கிறது'' என்று படிப்பவர்கள் இமைகளை விரிக்கமாட்டார்களா? போகட்டும்.
விபச்சாரத்தின் மூலம் கர்ப்பமடைந்த பெண் - அவர் குழந்தை பெறும் காலம்வரை, குழந்தை பெற்று அந்தக் குழந்தைத் தாய் பால் குடிக்கும் காலம் வரை, பின் பால்குடி மறக்கடிக்கப்பட்டு ரொட்டியை உணவாக உண்ணும் வரை - அந்தப் பெண்ணுக்கு தண்டனை காலம் தள்ளி வைக்கப்படுகிறது. பின் அச்சிறுவனைப் பராமரிக்கும் பொறுப்பு வேறொருவரிடம் ஒப்படைக்கப்பட்டு, விபச்சாரம் செய்த பெண்ணுக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
இவ்வளவும், இஸ்லாம் தடை செய்த விபச்சாரத்தைச் செய்தவர்கள் தகாத உறவு கொண்டவர்கள் என்றாலும், தகாத உறவில் - ஹராமான உறவில் பிறந்த குழந்தை எந்தப் பாவமும் செய்யவில்லை, தாகாத உறவால் விபச்சாரம் செய்தவர்களுக்காக அந்த உறவில் பிறந்த குழந்தை பொறுப்பாளியாகாது என்பதனால் இஸ்லாம் அந்தக் குழந்தையின் பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகிறது என்பதை விளங்கலாம். ஆனாலும் நீலகண்டன் அவர்கள் இஸ்லாத்தின் மீது வலிய தமது இட்டுக் கட்டலைத் திணித்திருக்கிறார்.
//அவள் பெற்ற குழந்தையும் ஹராமான பிறப்பே.//
விபச்சாரத்தில் பிறந்த குழந்தை, இஸ்லாம் தடை செய்துள்ள தகாத உறவில் பிறந்த குழந்தை என்று முஸ்லிம் முரசு சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. தகாத உறவில் பிறந்த குழந்தையை இஸ்லாம் இழிபடுத்துவதாகத் தவறாக விளங்கிக் கொண்டு இஸ்லாத்தை விமர்சத்திருப்பதுதான் அபத்தம்.
அதே அபத்தத்தோடு பெரியாரையும் சாடியிருப்பது பேரபத்தம். மேல்ஜாதி, கீழ்ஜாதி, தீண்டத்தகாதவன் எனும் தீண்டாமையை ஒழித்த ஒரே மார்க்கம், இஸ்லாம் மார்க்கம் என்று பெரியார் மட்டுமல்ல, அன்றும் இன்றும் நாளையும் யார் சொல்லியிருந்தாலும், சொன்னாலும் அதற்குப் பொருத்தமான - தீண்டாமை இல்லாத மார்க்கம் இஸ்லாம் என்பதில் நேர்மையானவர்களிடையே மாற்றுக் கருத்து இருக்கவா முடியும்?
நீலகண்டன் அவர்கள் எதிலோ உள்ள ஆத்திரத்தை நிதானமிழந்து இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்...
//"தமிழ் மக்களுக்கு இஸ்லாமே பொருத்தமானது" கூறியவர் ஈவேரா (24-2-1935) 1980களிலும் 2000களிலுமே இப்படி என்றால் 1930களில் இந்த கும்பல் எப்படி இருந்திருக்க வேண்டும். அவர்களிடம் போய் இளித்தபடி ஈவேரா இப்படி அறிக்கை விட்டிருந்தால் அந்த ஆள் எப்படிப்பட்ட நயவஞ்சக பசப்பு வார்த்தை ஆசாமியாக இருந்திருக்க வேண்டும்! இப்படிப்பட்ட போலி பகுத்தறிவு ஆசாமி, சுயமரியாதை இல்லாத காட்டுமிராண்டி நயவஞ்சக முட்டாளை, 'பெண் விடுதலை போராளி' என்று சொன்னால், தெரியாமல்தான் கேட்கிறேன்...பெண் ஏன் அடிமையாக மாட்டாள்?//
பொருத்தமில்லாத வசவு மொழிகள்.
அன்புடன்,
அபூ முஹை
9 comments:
(அபூமுஹை.பொருத்தமாயிருந்தமால் மட்டும் அனுமதிக்கவும்)
தமிழ்ரிபெர்,
இஸ்லாமியத் தண்டனைகள் கடுமையாகத் தோன்றலாம். ஆனால் அதில்தான் தவறிலிருந்து தப்பிக்க வழியிருக்கிறது. இது போன்ற தகாத உறவுக் குற்றங்கள் மலிந்து விட்டிருப்பதால் அது உங்களுக்கு கடினமான தண்டனையாகத் தோன்றுகிறது. இவை மலிந்ததற்கு காரணமே இது மாதிரிச் சட்டங்கள் அமுல் படுத்தப் படாததல்தான் என்பது என் கருத்து.
அந்த நிலைமைக்கு ஆக்கப்பட்டு வளர்நதுள்ள வாலிபனிடம் கேளுங்கள். உங்களுகக்கு இந்த நிலை வரக் காரணமாயிருந்த உங்களைப் பெற்றெடுத்த தந்தையை என்ன செய்வீர்கள் என்று. இஸ்லாம் பாதிக்கப்பட்டவனின் திசையிலிருந்து பார்க்கச் செய்கிறது.
தகாத உறவுக்கான தண்டனையை உறுதி செய்ய கடினமான சட்ட திட்டங்கள் உண்டு. குறைந்த பட்சம் நேரில் பார்த்த மூன்று சாட்சிகள் அது உண்மையில் உடலுறவுதான் என்பதை பார்த்ததாக தெளிவான சாட்சியம் அளித்தல் அவசியம். சாட்சிகள் தவறென்று அறியப்பட்டால் அவர்களுக்கு கசையடி (சாட்டையடி) தண்டனை நிறைவேற்றப்படும். தகாத உறவுக்கு தெளிவான மூன்று சாட்சிகள் கிடைப்பதே மிகவும் அரிது. அவர்கள் தவறென்று நிரூபிக்கப்படும் வாய்ப்பை அறிந்து அவர்கள் சாட்சியம் அளிக்க முன் வர வேண்டும். ஆகையால் மிக மிக குறைந்த அளவே இத்தண்டனை நிறைவேற்றப்பட வாய்ப்பு உண்டு. இந்த மிக மிக குறைந்த அளவிலான தண்டணையே தவறு செய்ய நினைப்பவர்களை நேர்வழி செலுத்தப் போதுமானதாகும்.
குறிப்பாக இந்த இஸ்லாமியச் சட்டம் வந்ததும் அந்தப் பெண் மீது யாரும் குற்றம் சுமத்தவில்லை அவரே முன்வந்து அந்த தண்டணையை ஏற்றார். நபிகளார் 'உனக்கு பைத்தியமா திரும்பிச் செல்' என்கின்றனர். அந்தப் பெண் திரும்ப வலியுறுத்தவும், குழந்தை பெற்றதும் வரச் சொல்கின்றனர். அந்தப் பெண் குழந்தை பெற்ற பின் வந்து தண்டணையை நிறைவேற்ற வலியுறுத்தும் போது, குழந்தைக்கு பால்குடி மறந்ததும் வரச் சொல்கின்றனர். இது போல் தப்பிக்க எத்தனையோ வழியிருந்தும் தப்பிக்க நினைக்காமல், இறைவனை தூய்மையாக சந்திக்க என்ற நினைவில் அந்தப் பெண் வலியுறுத்தலுக்குப் பின் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. அந்தப் பெண்ணிற்காக நபியவர்களே பாவ மன்னிப்புக் கேட்டதோடு அந்தப் பெண்ணிண் இறை நம்பிக்கையை மிகவும் புகழ்ந்தார்கள்.
தாம் செய்த தவற்றை எல்லோர் முன்னிலும் ஒப்புக் கொண்டு தண்டணை பெற வேண்டும் என்பது மட்டுமில்லாமல், தவறு செய்தவர்கள் மனம் வருந்தி அந்தத் தவறிலிருந்து மீண்டு இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி, அந்த தவறின் பக்கம் செல்லாமல் இருக்கவும் இஸ்லாத்தில் வழியுள்ளது.
இஸ்லாத்தில் நான்கு திருமணங்களுக்கான அனுமதி ஏன் என்பதை விளக்கி பலமுறை பதில் சொல்லியாகி விட்டது. ஏராளமான இணையத்தளங்களிலும் இதற்கு விளக்கங்கள் உள்ளன. திரும்பத் திரும்ப அதையே சொல்லும் மனம் பிறழ்ந்தவர்களின் இஸ்லாத்தைப் பார்க்காமல் தூய இஸலாத்தை அறிய முயற்சி செய்யுங்கள். இணைய முகவரி வேண்டுமானால் தரப்படும்.
கல்லெறிந்து கொல்லுதல் பற்றிய உங்களது சந்தேகத்திற்கு பதிலாக அபுமுஹை அவர்கள் தெளிவாக பதிவு இடுவார் என்று நம்புகிறேன்.
இருந்தாலும் எம்மால் முடிந்த வரை அதற்கு விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளோம்.
தண்டனைகள் எதற்காக கொடுக்கப்படுகின்றன என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒன்று அரசாங்கம் கொடுக்கும் தண்டனையின் மூலம் அந்த தவறை திரும்பவும் குற்றம் செய்தவன் செய்யக் கூடாது. இரண்டு இது மற்ற மனிதர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். குற்றத்திலும் வித்தியாசம் உள்ளது. ஒருவன் செய்யும் குற்றம் தனிமனிதனை, சமூகத்தை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை பொறுத்தும் தண்டனைகள் கொடுக்கப்படுகிறது. சமூகத்தை பாதிக்கும் அளவைப்பொறுத்து தண்டனைகளின் விரியமும் அதிகரிக்கிறது. இப்போது இந்த விபச்சார விசயத்திற்கு வருவோம். ஒரு ஆண், பெண் சற்று அற்ப இன்பத்திற்காக கூடி விடுகிறார்கள். ஆனால் அதனால் ஏற்படும் சமூதாய பாதிப்பை கணக்கில் கொண்டால் இவர்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் தண்டனை சரிதான் என்று ஒத்துக கொள்வீர்கள். இதனால் தான் இஸ்லாத்திற்கு மாற்றமாக கருத்து கொண்ட அத்வானி கூட கற்பழிப்புக்கு அரபு நாட்டு தண்டனை (அதாவது மரண தண்டனை) கொடுக்க வேண்டும் என்று அறிவித்தார். கற்பழிப்புக்கும், விபச்சாரத்திற்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை. எல்லாமே சமுதாயம் அங்கரித்திருக்கும் திருமண்ம் என்ற கட்டுக்கோப்பை விட்டு வெளியே உள்ள சீhகேடுகள். சிர்கேடுகள் என்று தெரிந்தாலும் மனிதர்கள் தங்களின் மன இச்சையினால் இந்த தவறை சதாரணமாக செய்ய தயங்குவதில்லை. இதனால் சமூகத்தின் குடும்ப காட்டுக் கோப்பை இவர்கள் மதிக்க வில்லை என்பது மட்டுமல்ல. மற்றவர்களும் இது போன்ற தவறை செய்ய இவர்கள் முன்னுதாரணமாக இருக்கிறார்கள். இதுமட்டுமல்ல இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும். தவறே செய்யாத குழந்தை சமூகத்தில் மிகப் பெரிய அவமானத்தை சந்திக்கும். இவர்களை போன்றவர்களை சமூகத்தில் வளர விட்டால் நாளiடைவில் சமூகத்தின் ஒழுக்கம் இல்லாமல் போகும்.
மேலும் நீங்கள் கண்கூடாக பார்க்கிறீர்கள். இந்தியாவில் உள்ள சட்டங்களால் இவை போன்ற தீமைகளை தடுக்கமுடியாத காரணத்தினால் தான் ஜவர்ஹர்லால் நேரு விபச்சாரத்திற்கு லைசென்ஸ் கொடுத்தார். இதற்கு அந்த காலத்தில் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் மிகப்பெரிய எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால் அவர்களுக்கு நேரு பதிலலிக்கையில் சட்டங்களை கொண்டு இந்த தீமையை தடுக்கமுடியாது என்பதால் தான் நான் விபச்சாரத்திற்கு லைசென்ஸ் கொடுத்தது என்று தெரிவித்ததுடன் குடும்ப பெண்களுக்கு இதனால் பாதுகாப்பு கிடைக்கும் என்றார். ஆக ஒரு நாட்டின் பிரதமர் தன்னுடைய நாட்டு சட்டத்தால் இந்த தீமையை தடுக்க முடியாமல் அந்த தீமையை வேறுமுறையில் ஆதரிக்கிறார் என்றால் காரணம் இந்த சட்டத்தினால் எல்லாம் இந்த தீமையை தடுக்க முடியாது. அதனால் இந்தியாவில் விபச்சாரம் செய்தால் என்ன தண்டனையோ அதற்கு பதிலாக இஸ்லாம் வழங்கும் தண்டனையை செயல்படுத்தி பாருங்கள். இந்த தவறு சமூகத்தில் குறைகிறதா? அல்லது கூடுகிறதா என்று பார்ப்போம். இன்னொரு விசயம் இப்படிப் பட்ட தவறை செய்யும் போது அதை மக்கள் பார்க்க வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிடுகிறது, இந்த தண்டனை படம் பிடித்து டிவி யில் ஒளிப் பரப்பி பாருங்கள். இதற்கு பிறகு இந்த தவறை மற்றவர்கள் செய்ய முன் வருவார்களா என்று பார்ப்போம். மேலும் இப்படி கல்லெறி தண்டனை விபச்சாரக் குற்றம் சுமத்தப்பட்டவுன் இஸ்லாம் வழங்கி விடாது. இதற்கு 4 சாட்சிகள் தேவை. இதற்கு பிறகுதான் தண்டனையே வழங்கபெறும்.
அமெரிக்காவில் கூட காதிரினா, ரீட்டா புயல்கள் தக்கிய போது பத்திரிக்கையில் வந்த செய்தி. அந்த சூழலில் டாய்லெட்டுக்கு சென்ற ஒரு பெண்ணை அங்கு வைத்து ஒருவன் கற்பழீக்க முயல்கிறான். சத்தம் கேட்டு பார்த்த மக்கள் அவனை அடித்து கொன்றார்கள் என்பதை படிக்க முடிந்தது. இன்னும் இது போன்று இத்தகைய கற்பழிப்புக்கும், விபச்சாரத்திற்கும் நமது வீட்டு பெண்ணை ஒருவன் பயன்படுத்தினால் நம்முடைய உணர்வு எப்படி இருக்கும். நம்முடைய வீட்டு பெண்ணை ஒருவன் பலாத்காரமாகவோ அல்லது மனஇச்சைக்கு உட்படுத்தியோ கெடுத்து விட்டால் நாம் அவனை சும்மா விடுவோமா? என்பதை சிந்திக்க வேண்டும். இஸ்லாம் இப்படி பாதிக்கப்பட்டவனுடைய உணர்வுக்கு மதிப்பளிக்கிறது.
இத்துடன் இன்னொன்றையும் சகோதரர் கேட்டிருக்கிறார். பால்குடி மறக்கடிக்கப்பட்ட குழந்தைக்கு தாய் தேவையில்லையா என்று. ஆம் தேவை தான். ஆனால் இது சட்டம். சட்டம் என்பது யாருக்கும் வளைந்து கொடுக்கக் கூடாது. அது நூல் போன்று இருக்க வேண்டியது அவசியமானது. இல்லையென்றால் 10 கொலைகள் செய்தவன் தூக்கு தண்டனை கொடுத்தபிறகு நீதபதியிடம் ஐயா நான் 5 குழந்தைக்கு தகப்பன் என்று கேட்பான் இதற்கும் சட்டம் வளைந்து கொடுக்க வேண்டியிருக்கும். இதை யெல்லாம் மனதில் கொண்டு தான் நமது நாட்டின் நீதி தேவதைக்கும் கண்ணில் கருப்பு கயிறு கட்டி இருக்கிறார்கள். சட்டம் என்று வரும்போது அங்கு குற்றம் செய்தவனுக்கு தண்டனை தான் கொடுக்க வேண்டுமே தவிர அங்கு உயர்ந்தவன், தாழ்ந்தவன், இரக்கம், கோபம் என்று பார்த்து தண்டனை கொடுக்க கூடாது.
இந்த நபிமொழியில் கூட அந்த பெண்ணை இருமுறை இறை தூதர் (ஸல்) அவர்கள் தண்டனை கொடுக்காமல் அதற்கான காரணத்தை சொல்லி அனுப்பி விடுகிறார்கள். அந்த பெண்ணிடம் இருந்த இறையச்சத்தின் காரணமாக நாம் இதற்கான தண்டனையை இந்த உலகில் பெறவில்லையென்றால் மறுமை நாளிலே கொடுமையான வேதனை அனுப்பவிக்க வேண்டியதிருக்கும் என்ற அச்சத்தால் அவர்களாகவே யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் வருகிறார் என்பது கவனிக்கதக்கது.
அடுத்த கேள்விக்கும் இது போன்று விரிவாக பதில் அளிக்க வேண்டும். பல முஸ்லீம் அல்லாதவர்களாலும் இக்கேள்வி கேட்கப்பட்டதுதான்.
\\இது போல் தப்பிக்க எத்தனையோ வழியிருந்தும் தப்பிக்க நினைக்காமல், இறைவனை தூய்மையாக சந்திக்க என்ற நினைவில் அந்தப் பெண் வலியுறுத்தலுக்குப் பின் தண்டனை நிறைவேற்றப்படுகிறது.\\
இறையச்சம் எந்த அளவு இஸ்லாத்தினால் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது, இன்று நான் இந்த தண்டனையிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் மனிதர்களும் விலங்குகளும் உயிரோடு எழுப்பப்படும் அந்த மறுமை நாளில் இறைவனின் சன்னிதானத்தில் என்னால் தப்பிக்க முடியாது என்ற எண்ணம்தான் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழிந்த பின்னும் அந்தப் பெண்ணை தேடி வந்து தண்டனையைப் பெறவைக்கிறது. அவருடன் நபியவர்கள் அவரைக்கண்காணிக்க காவலரையோ அல்லது வேறு எந்த எற்பாடுமோ செய்யவில்லை.
அந்தப் பெண்ணை கல்லால் அடிக்கும் பொழுது அவரின் இரத்தம் ஒருவரின் உடையின் மேல் பட்டு விடுகிறது அப்பொழுது அவர் "பாவம் செய்த இந்தப்பெண்ணின் இரத்தம் என்மீது படுவதா?" என்று கூறிய பொழுது நபியவர்கள் அவ்வாறு கூறியவரைக் கண்டித்து தோழரே இந்தப்பெண் இப்பொழுது சொர்க்கத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறார் என்று கூறுகிறார்கள்.
ஒரு சிறிய பறவையை கூட தான் உண்ணும் உணவுக்காகவன்றி வேறுகாரணத்திற்க்காக கொல்லக்கூடாது என்று கூறியவர் குற்றத்திற்கு தண்டனை என்ற அளவில் மட்டுமே அந்தப்பெண்ணை கல்லெறிந்து கொல்ல அனுமதிக்கிறார்கள். இஸ்லாம் பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்கிறது பாதிக்கப்பட்டவனுக்கே பாதிக்கப்பட்டதன் வலி தெரியும்.
குற்றம் செய்தவர் தேடிவந்து தண்டனை பெறும் சமுதாயத்தை உருவாக்கிய இறைவன் மிகப் பெரியவன்.
tamilreber உங்கள் வருகைக்கு நன்றி!
ஒரு குற்றத்திற்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று விதி வகுத்துக் கொண்டால், அதற்கு என்ன தண்டனை உறுதி செய்யப்படுகிறதோ அதுதான் அந்தக் குற்றத்திற்கான தண்டனை. அதில் வித்தியாசம் காட்டாமல், எல்லோரும் சமமாகக் கருதப்பட வேண்டும். ஒரே குற்றத்தை இருவர் செய்திருக்கும் போது ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. இன்னொருவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்படுகிறது என்றால் அது போன்ற பாராபட்சமான ஓர வஞ்சனைத் தீர்ப்புக்கு இஸ்லாத்தில் இடமில்லை!
தாய் செண்டிமென்ட் மட்டுமல்ல, எந்த செண்டிமென்டை வைத்தும் குற்றவாளிக்கு தண்டனையிலிருந்து சலுகை என்பது இல்லை, இருக்கவும் கூடாது. ''அச்சச்சோ குழந்தை தாயில்லாமல் போய்விடுமே?'' என்று நீங்களும் நானும் அனுதாபப் படலாம். ஆனால் தீர்ப்பளிக்கும் நீதிபதி அனுதாபப்பட்டால் நீதி சிதைந்து, எவருக்கும் தண்டனை வழங்க முடியாமல் போய்விடும். எந்த மனிதனுக்கும் உறவு என்பது இல்லாமலில்லை - எந்தவொரு மனிதனை நம்பியும் எதாவது ஒரு உறவு இருக்கத்தான் செய்யும்.
//பால்குடி மறந்த பின் தாய் தேவையில்லையா- என்ன குரூரமான நீதி இது// இந்தக் கேள்வியில் எள்ளளவும் நியாயமிருப்பதாகத் தோன்றவில்லை. முதல் மாதக் கருவாக இருக்கும்போதே, தண்டனை குற்றம் செய்தவருக்குத்தான், வயிற்றிலிருக்கும் கருவுக்குத் தண்டனை வழங்கக்கூடாது அதாவது வயிற்றில் வளரும் உயிருக்கு மரண தண்டனை வழங்குவது நேர்மை இல்லை என்றே தண்டனை காலம் தள்ளி வைக்கப்படுகிறது இதைப் போய் நீங்கள் குரூரம் என்கிறீர்களே!
கல்லெறிந்து மரண தண்டனை நிறைவேற்றுவது நாகரீகமான செயல் இல்லை என்பவர்கள், விபச்சாரத்தை நாகரீகமான செயலாகக் கருதுவது வேடிக்கையாக இருக்கிறது. நாலு சுவற்றுக்குள் நிறைவேற்றப்படும் தூக்குத் தண்டனையும் நாகரீகமில்லை, மிருகங்களைப் போல் குற்றவாளிகளை - மனிதர்களைக் கம்பி வைத்தக் கூண்டு அறைக்குள் அடைத்து வைப்பதும் நாகரீகமில்லையே, ஆனாலும் இதையெல்லாம் குற்றங்களுக்கான தண்டனையாக நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பகளென நாம் ஏற்றுக் கொள்ளவில்லையா? கல்லெறி தண்டனை இஸ்லாம் வழங்கிய தீர்ப்பு அதைத்தான் இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகளில் நிறைவேற்றுகிறார்கள்.
இங்கே கல்லெறி தண்டனை வழங்குவது மட்டும்தான் அரசு நீதிபதியின் தீர்ப்பாக இருக்கிறது. தண்டனையை நிறைவேற்றுவது, பொது மக்கள் முன்னிலையில் பொது மக்களே தண்டனையை நிறைவேற்றுகிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது. இதில் நல்ல படிப்பினை இருக்கிறது என்பதையும் மறுமொழியில் கருத்து வைத்த சகோதரர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
//ஆனால் ஆண்கள் மட்டும் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம்.கணவன் மனைவியிடம் அனுமதி பெறாமலும் திருமணம் செய்து கொள்ளலாம். இதுதானே இஸ்லாத்தின் 'நீதி'.//- tamilreber
ஆண்களுக்கு மட்டும் நான்கு பெண்களை மணமுடிக்க அனுமதி வழங்கிய இஸ்லாம், பெண்களுக்கு ஒரே நேரத்தில் இரு ஆண்களை கணவர்களாகப் பெற அனுமதிக்கவில்லையே ஏன்? இது இஸ்லாத்தில் அநீதியாக இருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். இது பற்றி நேரம் கிடைக்கும் போது தனிப்பதிவில் இன்ஷா அல்லாஹ்.
அன்புடன்,
அபூ முஹை
சுல்தான், சிராஜுதீன், ஸயீத் உங்கள் வருகைக்கு நன்றிகள்! நல்லக் கருத்துக்களை பதிவு செய்துள்ளீர்கள்.
குற்றவாளிகளை வலைவீசித் தேடி, விரட்டிப் பிடித்து, இரும்புக் கரம் கொண்டு அடக்கி, இரும்புக் கோட்டைக்குள் அடைத்து வைத்து தப்பிக்க வழியில்லாமல் பலத்தப் பாதுகாப்புப் போடுவது எங்கே?
தண்டனை பெறுவதற்காக வலிய வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டு பின் குழந்தை பிறந்து பால்குடி மறக்கும் காலம்வரை சுதந்திரமாக நடமாடி, தனக்கு மரண தண்டனைதான் நிறைவேற்றப்படும் என்று உறுதியாகத் தெரிந்திருந்தும், தப்பிக்க எவ்வளவோ வழிகளும், அவகாசங்களும் இருந்தும் கொள்கைய விட உயிர் பெரிதல்ல என அந்த நபித் தோழியர் உறுதியாக இருந்து மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார் என்பது எங்கே?
இந்தக் கருத்தில் உங்கள் மூவரின் சிந்தனையும் ஒரே கோணத்தில் இருந்தது போல் என் சிந்தனையிலும் இதேக் கருத்து தோன்றியது. இந்தத் தியாகங்களின் காரணமாகவே நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறிய மூன்று தலைமுறைகளில் முதல் தலைமுறையினராக இவர்கள் இருக்கிறார்கள் என்பது கவனித்தக்கது.
//குற்றம் செய்தவர் தேடிவந்து தண்டனை பெறும் சமுதாயத்தை உருவாக்கிய இறைவன் மிகப் பெரியவன்.//- ஸயீத்
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
அன்புடன்,
அபூ முஹை
\\கல்லெறிந்து மரண தண்டனை நிறைவேற்றுவது நாகரீகமான செயல் இல்லை என்பவர்கள், விபச்சாரத்தை நாகரீகமான செயலாகக் கருதுவது வேடிக்கையாக இருக்கிறது. நாலு சுவற்றுக்குள் நிறைவேற்றப்படும் தூக்குத் தண்டனையும் நாகரீகமில்லை, மிருகங்களைப் போல் குற்றவாளிகளை - மனிதர்களைக் கம்பி வைத்தக் கூண்டு அறைக்குள் அடைத்து வைப்பதும் நாகரீகமில்லையே, ஆனாலும் இதையெல்லாம் குற்றங்களுக்கான தண்டனையாக நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பகளென நாம் ஏற்றுக் கொள்ளவில்லையா? கல்லெறி தண்டனை இஸ்லாம் வழங்கிய தீர்ப்பு அதைத்தான் இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகளில் நிறைவேற்றுகிறார்கள்.//
சுருக்கமான,அருமையான விளக்கம் சகோதரர் அபுமுஹை அவர்களே. உங்கள் பணிக்கு அல்லாஹ் மகத்தான கூலி வழங்குவானாக. இந்த சத்திய மார்க்கத்தில் பிறப்பிலே நம்மை எல்லாம் எவ்வித முயற்சியும் இன்றி இணைத்த உயர்ந்தோன் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். இதை சகோதரர் tamilreber விளங்கட்டும். அவருடைய நேர்வழிக்காக துஆ செய்வோம்.
fztd; ,y;yhky; vthplNkh Foe;ijia ngw;w ngz;Zf;F Kfk;kJ mth;fs; mspj;j jz;lid rhpjhd;. Mdhy; me;j Foe;ijf;F fhuzkhf ,Ue;j MZf;F jz;lid ,y;iyah? ,jpy; vd;d rkePjp ,Uf;fpwJ. xUth; nra;j jtW fhuzkhfth Foe;ij gpwe;jJ? ,e;j Fw;wj;jpy; rk;ge;jg;gl;bUg;gJ ,Uth;. Mdhy; xUtUf;F kl;Lk; jz;lid. ,J ve;j tpjj;jpy; rhp vd;gij tpsf;f KbAkh? ,Jjhd; ePjpah?
கணவன் இல்லாமல் எவரிடமோ குழந்தையை பெற்ற பெண்ணுக்கு முகம்மது அவர்கள் அளித்த தண்டனை சரிதான். ஆனால் அந்த குழந்தைக்கு காரணமாக இருந்த ஆணுக்கு தண்டனை இல்லையா? இதில் என்ன சமநீதி இருக்கிறது. ஒருவர் செய்த தவறு காரணமாகவா குழந்தை பிறந்தது? இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்டிருப்பது இருவர். ஆனால் ஒருவருக்கு மட்டும் தண்டனை. இது எந்த விதத்தில் சரி என்பதை விளக்க முடியுமா? இதுதான் நீதியா?
Posted by suniloliver | Thu Jan 11, 07:55:57 AM
suniloliver உங்கள் வருகைக்கு நன்றி!
இந்தப் பதிவில் வைக்க வேண்டிய மறுமொழியை, கருத்துக்கு சம்பந்தமில்லாத வேறு பதிவில் சொல்லியுள்ளீர்கள். உங்கள் கேள்வியும், அதற்கான விளக்கமும் இங்கே...
//கணவன் இல்லாமல் எவரிடமோ குழந்தையை பெற்ற பெண்ணுக்கு முகம்மது அவர்கள் அளித்த தண்டனை சரிதான். ஆனால் அந்த குழந்தைக்கு காரணமாக இருந்த ஆணுக்கு தண்டனை இல்லையா? இதில் என்ன சமநீதி இருக்கிறது. ஒருவர் செய்த தவறு காரணமாகவா குழந்தை பிறந்தது? இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்டிருப்பது இருவர். ஆனால் ஒருவருக்கு மட்டும் தண்டனை. இது எந்த விதத்தில் சரி என்பதை விளக்க முடியுமா? இதுதான் நீதியா?//
மாயிஸ் பின் மாலிக் (ரலி) என்பவர் முஹம்மது (ஸல்) அவர்களிடம் வந்து, தாம் விபச்சாரம் செய்து விட்டதாக வாக்கு மூலம் தருகிறார். நபி (ஸல்) அவர்கள் அவரைத் திருப்பி அனுப்பி விடுகிறார்கள் மீண்டும் வந்து முன்பு போலவே விபச்சாரம் செய்து விட்டதாக வாக்கு மூலம் தருகிறார். அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறுக் கட்டளையிடப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.
இனி...
ஒரு பெண்மணி வந்து 'அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ''உனக்குக் கெடுதான்! நீ திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுவாயாக'' என்று கூறினார்கள்.
அதற்கு அப்பெண், 'மாயிஸ் பின் மாலிக்கைத் திருப்பி அனுப்பியதைப் போன்று என்னையும் திருப்பி அனுப்பப் பார்க்கிறீர்கள் என்று கருதுகிறேன்' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள். ''என்ன அது?'' என்று கேட்டார்கள். அப்பெண், 'நான் விபச்சாரத்தால் கர்ப்பமுற்றவள் என்றார்.
நபி (ஸல்) அவர்கள் (அது) ''நீயா?'' என்று கேட்டார்கள். அப்பெண் 'ஆம்' என்றார். (நபிமொழியின் சுருக்கம், முஸ்லிம்)
விபச்சாரத்தில் ஈடுபட்ட இருவருமே தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். முதலில் ஆண் தண்டனைப் பெற்ற பின்பே, மாயிஸ் பின் மாலிக் (ரலி) அவரிடம் தாகாத உறவு கொண்டு கர்ப்பமுற்ற பெண்மணி வந்து, நான் விபச்சாரத்தால் கர்ப்பமுற்றவள் என்று ஒப்புக் கொண்டு அவருக்கும் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இங்கே விபச்சாரம் செய்த ஆண், பெண் இருவருமே தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.
விபச்சாரம் செய்த ஆண், பெண் இருவருமே தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் சம நீதி. ஆனால் இதை இருவரும் ஒப்புக் கொள்ள வேண்டும். அல்லது இருவரும் விபச்சாரம் செய்தார்கள் என்று நிரூபிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இருவரையும் தண்டிக்க முடியும்.
இந்தச் சம்பவத்தில், மாயிஸ் பின் மாலிக் (ரலி) வந்து தாம் விபச்சாரம் செய்ததாக ஒப்புக் கொள்கிறார். அவர் மட்டுமே தண்டிக்கப்படுகிறார். விசாரணை என்ற பெயரில் அவர் விபச்சாரம் செய்த பெண் யார்? என்று அவரிடம் கேட்கப்படவுமில்லை, அப்படிக் கேட்டு அப்பெண் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
அன்புடன்,
அபூ முஹை
நாடோடி, உங்கள் வருகைக்கு நன்றி!
//மன்னிப்பது தெய்வம். தண்டிப்பது மிருகம். இடைப்பட்டவன்..மனிதன்//
அப்படியானால், எந்தக் குற்றத்திற்காகவும் மனிதன் தண்டிக்கப்படக் கூடாது என்று சொல்ல வருகிறீர்களா?
அன்புடன்,
அபூ முஹை
Post a Comment