Wednesday, December 06, 2006

ஆடு மேய்ப்பவனுக்கு பெண் கொடுக்கலாமா?

இஸ்லாம் மார்க்கத்தின் நிழலில் நபித்தோழர் பிலால் (ரலி) அவர்களுக்குக் கிடைத்த சிறப்பு - என்பது பாரம்பர்யமோ, குலச்சிறப்பு, குடும்பச் சிறப்பு, பொருளாதார வலிமையோ இல்லாத, விலை கொடுத்து வாங்கிய, எஜமானின் கட்டளைக்கு உழைத்த ஒரு கருத்த அடிமைக்கு இத்தனை மதிப்பா? என்று - குறைஷிகள் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு உயர்வாகவே இருந்தது.

''எங்கள் தலைவர் அபூபக்ர், எங்கள் மற்றொரு தலைவர் பிலாலுக்கு விடுதலை வழங்கி விட்டார்'' என்று நபித்தோழர் உமர் (ரலி) அவர்கள் சிலாகித்துச் சொல்லுமளவுக்கு - கருப்பின அடிமையாக சிறுமைப்பட்டிருந்த பிலால் (ரலி) அவர்களின் நன் மதிப்பை உன்னதமாக உயர்த்தியது இஸ்லாம். மக்கா வெற்றியின் போது இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காஃபாவினுள் நுழைந்த போது அவர்களுடன் அனுமதிக்கப்பட்ட மூன்றே தோழர்களில் பிலால் (ரலி) அவர்களும் ஒருவர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களை பாங்கு சொல்லப் பணித்தார்கள். பிலால் (ரலி) அவர்களும் காஃபாவின் மத்தியில் நின்று பாங்கு சொன்னார்கள்.

''முஹம்மதுக்கு இந்த காஃபா ஆலயத்தில் பாங்கு சொல்ல அடிமை பிலாலைத் தவிர வேறு ஆளே கிடைக்கவில்லையா? இந்த ஆசாமிதான் அங்கே ஏறி நின்று சொல்ல வேண்டுமா? பாரம்பர்யமுள்ளவர்களால் கூட காஃபாவினுள் பிரவேசிக்க சாத்தியமில்லாதிருக்க இந்த ஆசாமியை உள்ளே விட்டது யார்?'' என்றெல்லாம் கூறி தங்கள் எரிச்சலை வெளிப்படுத்திக் கொண்டனர் அன்றைய சிலர். இன்றும் அதே எரிச்சலையே வெளிப்படுத்துகிறார்கள், முஹம்மது தன் மகள் ஃபாத்திமாவை பிலாலுக்கு ஏன் திருமணம் செய்து வைக்கவில்லை? என்று.

அப்படித் திருமணம் செய்திருந்தால் மட்டும் இவரென்ன இஸ்லாத்தைத் தழுவி விடவாப் போகிறார்..?

திருமணத்தைக் கொண்டு ஏற்றத் தாழ்வை நிர்ணயிப்பவர்கள், அதைவிட இந்த முஸ்லிம் சமுதாயத்தில் ஒப்பற்ற மனிதர்களில் ஒருவராக பிலால் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள் என்பதை சிந்திக்க மறுக்கிறார்கள். பிலால் (ரலி) அவர்களின் இறைநம்பிக்கையும், தூய்மையும், தியாகமும் அவரை உயர்ந்த அந்தஸ்துக்கு உயர்த்தி விட்டன. இந்த உயர்வை அடைவதில் பிலால் (ரலி) அவர்களின் கருத்த மேனியோ, குலசிறப்பின்மையோ, முந்தைய அடிமை நிலை எதுவுமே தடையாக இருக்கவில்லை! முன்னர் யாருமே கண்ணெடுத்தும் பார்க்காத இந்தக் கருப்பு மனிதரை அன்று நபியும், நபித்தோழர்களும் போற்றினார்கள், இன்றும் இச்சமூகத்தினர் அனைவரும் போற்றுகின்றார்கள்.

திருமணம் என்பதும் இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட விஷயம். ஒரு முஸ்லிமான ஆண், ஒரு முஸ்லிமானப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற அனுமதியை இஸ்லாம் வழங்கியுள்ளது. இதற்கு மேல் அத்திருமணத்தை நடத்துவதென்பது இரு வீட்டாரின் சம்மதத்தில் அடங்கியுள்ளது. மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் சம்மதித்துக் கொண்டால் சம்பந்தம் செய்து கொள்ளலாம். சம்மதமில்லையென்றால் திருமணத்தை நடத்த வேண்டிய அவசியமில்லை. இதிலும் இஸ்லாம் தலையிட்டு - இன்னாருக்கு, இன்னார் பெண் கொடுத்து சம்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்ளையையும் - சொல்லியிருக்க வெண்டும் என்பது பைத்தியக்காரத்தனம்.

சாதாரண டீக்கடை வைத்திருப்பவர் கடையில் பணியாளாக இருப்பவருக்கு தனது மகளைத் திருமணம் செய்து கொடுக்க முன் வரமாட்டார். காரணம் பொருளாதார எற்றத் தாழ்வு என்ற தகுதி அவரைத் தடுக்கிறது. இதைத் தவறு என்று எந்த புத்திசாலியும் சொல்ல மாட்டார். மகளின் மீது அக்கறை கொண்ட எந்த தகப்பனுக்கும் வாக்கப்பட்டுப் போகுமிடத்தில் மகள் சந்தோஷமாக வாழ வேண்டும், தன் மகள் வறுமையில் வாடக்கூடாது என்ற எண்ணம்தான் மேலோங்கி இருக்கும்.

சின்ன டீக்கடை வைத்து நடத்தும் ஒரு பெண்ணின் தந்தையின் நிலை இதுவென்றால், சவூத் மன்னரின் குடும்பத்துப் பெண்களை ஒட்டகம் மேய்க்கும் முஸ்லிம்களுக்கு அதுவும் தலித்!? முஸ்லிம்களுக்கு ஏன் திருமணம் செய்து கொடுக்கவில்லை? என்று கேட்கிறார் ஒரு விவரமில்லாதவர். எவ்வளவு பெரிய பொருளாதார வித்தியாசம் இருக்கிறது என்பது கூட தெரியாமல் ஏதோ தாக்குதல் நடத்த வேண்டுமென்பதற்காக கேட்கப்பட்டக் கேள்வியாகவே இருக்கிறது.

பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையிலிருக்கும் பெண்ணை மணமுடிக்கும்போது அவளோடு வாழ்க்கை நடத்த முன்வருபவன் அவளுக்கு நிகரான பொருளாதார அந்தஸ்தைப் பெற்றிருக்கவில்லை என்றால் அவனோடு ஒருநாளும் அந்தப் பெண் வாழமுடியாது. அவளுக்கான அன்றாடச் செலவை இவனால் ஈடுகட்ட முடியாது. இப்படிப்பட்ட வறுமை நிலையில் இருக்கும் ஒருவனுக்கு எந்த அரபியனும் தனது மகளை மணமுடித்துத் தரமாட்டான்.

இது உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஜாதி அடிப்படையில் தீர்மானிப்பதில்லை. மாறாக பொருளாதாராம், கலச்சாரம், பண்பாடு அடிப்படையில் தீர்மானிப்படுகிறது. கல்லானாலும் கணவன் என்கிற பண்பாட்டை அரபியப் பெண்களிடம் சொல்ல முடியாது. அதுபோல் கதர் சேலையைக் கட்டிக் கொள் என்ற எளிய ஆடைக் கலாச்சாரத்தையும் அவளிடம் திணிக்க முடியாது. எல்லாவற்றுக்கு தாராளமான பொருளாதாரம் வேண்டும். அப்படியில்லாதவன் அவனுக்குத் தகுந்தமாதிரிப் பெண்ணையேத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் அதுதான் அவனுக்கும் நல்லது.

இதை ஒட்டகம் மேய்ப்பவனுக்கு பெண் கொடுக்கத் தடையிருப்பதாக விளங்கக்கூடாது. பொருளாதாரத்திலுள்ள ஏற்றத்தாழ்வு காரணமாக பெண் தரமாட்டார்கள். எல்லா நாட்டிலும் இந்த ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்பதை எவரும் மறுத்துவிட முடியாது. மற்றபடி இஸ்லாம் இதைத் தடை செய்திருக்கிறதா என்றால் அதைக் காட்ட வேண்டும். எந்தக் கோடீஸ்வரனும் யாசகம் செய்பவனுக்கு தன் பெண்ணை மணமுடித்துத் தர மாட்டான். அது யாராக இருந்தாலும் சரியே.

இந்தியாவிலுள்ள ஒரு முஸ்லிம் தன்னிடம் ஆடு மேய்க்கும் முஸ்லிமுக்கு தன் பெண்ணை மணமுடித்துக் கொடுக்கமாட்டான். இந்த விஷயத்தில் முதலில் தன்னை சுயவிமர்சனம் செய்துகொண்டு பிறகு பொது விமர்சனம் செய்ய வேண்டும். மேல் ஜாதி, கீழ் ஜாதி என்றெல்லாம் இஸ்லாத்தில் இல்லையென்றாலும் பொருளாதார ஏற்றத்தாழ்வு அடிப்படையில் திருமணம் என்பது இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்டது. இதில் இஸ்லாம் தலையிடுவதில்லை.

கீழ்கண்ட கேள்விக்கான விளக்கங்களே மேற்சொன்னவைகள். -

- //முகமது சமூக நீதியின் மீது அக்கறை கொண்டவராக இருந்தால், பிலாலுக்கு தமது மகள் ஃபாத்திமாவை மணம் செய்து கொடுத்திருக்க வேண்டியதுதானே. முகமதின் குடும்பத்தில் எதாவது ஒரு பெண்ணை கறுப்பின முஸ்லிம்களுக்கு மணம் செய்து கொடுத்தார்களா? தமது அடியார் அபுபக்கர் தமது பெண் பாத்திமாவை மணந்துகொள்ள(ஆயிஷாவை முகமது மணந்து கொண்டதைப் போல) கேட்டதற்கு வஹி வருகிறது, வஹி வருகிறது என்று சொல்லி கடைசியில் தமது (உயர்குல) தம்பி(கஸின்) அலிக்கு தமது மகள் பாத்திமாவை கட்டிக் கொடுத்து ஏமாற்றியவர்தானே உங்களது போலி இறைத்தூதர்?

இவ்வளவும் ஏன், இன்றைய சவுது மன்னர் குடும்பத்து பெண்களை இந்தியாவிலிருந்து அங்கு சென்று மலம் அள்ளும் உங்களைப்போன்ற 'முஸ்லீம்களுக்கு' கட்டிக் கொடுப்பார்களா? எத்தனை அரபி உயர்குலப் பெண்களை இங்கிருந்து சென்று ஒட்டகம் மேய்க்கும் தலித் முஸ்லிம்கள் மணந்திருக்கின்றார்கள் - விபரம் தர முடியுமா?

6. கடைசியாக, கேள்விகளை கேட்ட இஸ்லாமிய பதிவர் ஒருவர் 'சமஸ்காரம் தெரியாத அசடுகளை' வீட்டிற்குள் அழைத்துவந்தது குறித்து எழுதியிருக்கிறார். இது இஸ்லாத்திலும் இருக்கிறது. அரபிக்கள் எத்துனை பேர் இந்திய இஸ்லாமிய வேலையாட்களுக்கு தத்தமது பெண்மக்களை, சகோதரிகளை திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்றொரு கேள்வியைக் கேட்டேன் - எந்த இஸ்லாமியரும் இன்றுவரை பதிலளிக்கவில்லை. எனக்குத் தெரிந்து எத்தனையோ பிராம்மணரல்லாதோர் பிராம்மணப் பெண்களை மணந்திருக்கின்றனர். ஆனால், எத்தனை அரபியல்லாதோர் குவைத் அரபிப்பெண்களை மணந்திருக்கின்றனர்? இது ஒரு பிரச்சினை என்றால், இந்தப் பிரச்சினை இந்து மதத்தையும் விட தீவிரமாக இஸ்லாத்தில் இருக்கிறது.//

அன்புடன்,
அபூ முஹை

8 comments:

அட்றா சக்கை said...

சகோதரர் அபூமுஹை

நீங்கள் பதில் சொல்லும் ஆளின் உத்தி தெரியாததா? தன்னை இக்கட்டிலிருந்து விடுவித்துக் கொள்ள இப்படி எதிர்க் கேள்வி கேடு திசை திருப்புவது இந்த நயவஞ்சகருக்குப் புதிதா என்ன?

முதலில் பாக்கி இருக்கும் கேள்விகளுக்கு இந்த இணைய காவி இந்துத்வியாதி பதில் சொல்லட்டும். பின்னர் அந்த ஆளுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லலாம்.

என்ன தான் இருந்தாலும் கோபப்படாமல் அழகாக பதில் சொல்கிறீர்கள். பாராட்டுக்கள்.

அபூ முஹை said...

//7. இது சம்பந்தமாக எதாவது இஸ்லாமியர் என்னுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க முன்வந்தால் மகிழ்வேன். நீங்கள் கேட்பதற்கும் நான் பதிலளிக்கத் தயாராகவுள்ளேன்.//

எற்கெனவே நாம் முன்பு அவர் எழுதியவற்றிலேயே கேட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளித்து விட்டு நேசகுமார் மகிழட்டும். அதுவரை இஸ்லாத்தைப் பற்றியோ, முஸ்லிம்களை பற்றியோ பேசுவதற்கு எந்த அறுகதையும் இவருக்கு இல்லை!

அன்புடன்,
அபூ முஹை

ஸயீத் said...

ஆமா ஜாதி இஸ்லாதில இருக்குன்னா அரபிங்க ஜாதி பார்க்காம் ஆடுமேய்க்கிறவன் பொண்ணாயிருந்தாலும் பரவாயில்லைன்னு ஹைதரபாத் வந்து கல்யாணம் பண்றானே அது என்ன?. ஜாதி பார்த்தா அவன் எப்படி கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துவான் இன்னைக்கும் அரபு நாட்டுல ஹைதரபாத்தி பொண்ணுக்குப் பொறந்த எத்தனையோ பேறு அரபு நாட்டு குடியுரிமை பெற்று எல்லா ஃபெஸிலிட்டியும் அனுபவிக்கிறாங்களே!

ஜாதி, குலம், கோத்திரம், பொருளாதார மற்றும் ஜாதகப் பொருத்தமற்ற கல்யாணங்கள் இங்கு இந்து மதத்தில் நடக்கிறதா?

ஏன்னதான் நீங்க சொல்றது போல ஸையீது குலமோ, மரைக்காயர் குலமோ, ரவுத்தர் குலமோ அல்லது நபியோட குறைசி குலமோ, பகவான் முன்னாடி எல்லாம் ஒன்னுதானே! எவன் இறைவன் சொன்னபடி நன்மை செய்றானோ அவந்தான் உயர்ந்த குலம். இதெல்லாம் புரிஞ்சுதானே புரியாத மாதிரி இஸ்லாமியர்களைப் பத்தியெல்லாம் எழுதிரீங்க.

நீங்க இஸ்லாத்தில குலம் கோத்திரமெல்லாம் இருக்குன்னு இன்னைக்கு அரபிகளை உதாரணம் கூறுகின்றீர்கள்!. ஆனால் அதே குலப் பெருமையை உடைக்க வந்த பகவானின் தூதர் சொன்னது உங்களுக்குத்தெரியும் இருந்தாலும் ஒரு நினைவூட்டல்.

இன்றயதினம் "ஒரு கருப்பன் வெள்ளையனைவிடவோ, அல்லது ஒரு வெள்ளையன் கருப்பனை விடவோ, அல்லது ஒரு அரபி, அரபி அல்லாதவனை விடவோ அல்லது ஒரு அரபி அல்லாதவன் அரபியைவிடவோ உயர்ந்தவன் இல்லை உங்கள் நற்செயல்களை வைத்தே உங்கள் உயர்வு உள்ளது".

இதை ஏற்றுக் கொள்ள உங்கள் மனம் இடம் தரவில்லை என்றால் அதனால் எங்களுக்கு என்ன நஷ்டம்?.

புதுச்சுவடி said...

ராமன் ஏன் சீதையைப் பெண்கேட்டுப் போனான்? அயோத்தியில் வேறு பெண்ணே இல்லையா என்று நாம் கேட்க மாட்டோம்.

அதுபோல் சீதையை ஜனகன் ஏன் ஓர் ஆடு மேய்ப்பவனுக்குக் கட்டிவைக்கவில்லை என்றும் நாம் கேட்க மாட்டோம்.

ஏனெனில் அரச குலம் அரச குலத்தில் பெண் எடுப்பதை இஸ்லாம் தடை செய்வதில்லை.

இன்னாருக்கு இன்னார் என்று இறைவன் நிச்சயிக்கிறான் என்று நாம் நம்புகிறோம்.

நேசகுமார் போன்றவர்கள், 'அட்றாசக்கை' சொல்லியுள்ளதுபோல், இக்கட்டிலிருந்து தப்பிக்க எதிர்க் கேள்வி போடுவார்கள்.

வாசகன் said...

எழில் நேசகுமார் போன்றவர்கள் சேறு வாரி இறைப்பதை தொழிலாகவே வைத்திருக்கிறார்கள்.
சித்தாந்த ரீதியாக மனிதர்களிடையே பாகுபாட்டை இஸ்லாம் கடைபிடிப்பதில்லை என்பதையும், இந்துமதமே பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கிறது என்பதையும் அவர்கள் வாதத்துக்காகக் கூட ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் இத்தகையவர்களின் உள்நோக்கம் தெளிவாக விளங்குகிறது.


நீங்கள் பொதுவான கருத்தியல்களுடன் இஸ்லாம் பற்றி தொடர்ந்து அறியத்தாருங்கள். முன்முடிவுடன் இல்லாமல், அறிந்துக்கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்குப் பலனளிக்கும் அல்லவா!

அபூ முஹை said...

அட்றா சக்கை, ஸயீத், புதுச்சுவடி உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள்!

புதுச்சுவடி உங்கள் விளக்கம் மிக அருமை.

அரச குலம், அரச குலத்தில் பெண் கொடுப்பதே சிறப்பு. ஒரு இளவரசி, ஒரு இளவரசனை மணக்க வேண்டும் அல்லது அரசனை மணக்க வேண்டும். இல்லையெனில் அரச குடும்பத்தைச் சேர்ந்த உறவு முறைகளில் மணம் செய்து கொள்ள வேண்டும். அதுதான் பொருத்தமாக இருக்கும்.

ஒட்டகம் மேய்க்க வருபவன், ஒட்டகத்தின் சொந்தக்காரன் மகளையே மணக்கத் தகுதியில்லாமல் இருக்கும் போது, ஒட்டகம் மேய்க்க வந்தவனுக்கு அரச குடும்பத்துப் பெண்ணை கட்டி வைக்க வேண்டும் என்று சொல்வது அதிகமானக் கற்பனை வளம். பரந்த நிலப்பரப்பையாளும் அரச குடும்பத்துப் பெண்ணை, அதே நிலப்பரப்பில் ஒரு ஜான் நிலத்தைக் கூட சொந்தமாக பெற்றிராதவனுக்கு ஏன் மணமுடித்து வைக்கவில்லை? என்று கேட்டு இதன் வழியாக இஸ்லாத்தில் ஜாதியை நிறுவ முயற்சிப்பவர்கள் மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார்கள்.

அன்புடன்,
அபூ முஹை

தொண்டன் said...

உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள். மேலும் மேலும் தொடர வேண்டும்.
Abumughai

சவூதி தமிழன் said...

திரு. மரைக்காயரின் பதிவில் அளித்த பின்னூட்டம் இங்கு பொருத்தம் என நான் கருதுவதால் இங்கும் அளிக்கிறேன்.

//சிவபாலன் மரைக்காயருடன் சம்பந்தம் பேச அய்யர்களோ அல்லது அய்யங்கார்களோ தயாரா என்பதையும் கொஞ்சம் கேட்டுச் சொன்னால் நல்லது.//

சிவபாலன் மரைக்காயரை விடுங்கள், முதலில் கால்கரி சிவாவுடன் சம்பந்தம் செய்து கொள்ள எந்த அய்யரோ அய்யங்காரோ தயாரா?

சம்ஸ்காரம் என்றெல்லாம் உட்டாலக்கடி அடித்துப் பேசும் நேசகுமார் முதலில் இந்த சம்பந்தம் பேசி புரட்சியைத் தொடங்கி வைக்கட்டுமே.