Sunday, May 25, 2008

மதம் மாறினால் மரண தண்டனை-3 A

ஜப்பார் என்பது அல்லாஹ்வின் திருப்பெயர்களில் ஒன்றாகும். இதற்கு ''ஆதிக்கம் செலுத்துபவன்'' என்று பொருள். (பார்க்க: திருக்குர்ஆன், 059:023) அல் ஜப்பார் என்று முஸ்லிம்கள் பெயர் வைத்துக்கொள்ளமாட்டார்கள். அப்படி பெயர் சூட்டியிருந்தால் அது அறியாமையாகும். அறியாமல் அல் ஜப்பார் என்று முஸ்லிம் யாரேனும் தனக்கு பெயர் வைத்திருந்தால் அப்பெயரை அப்துல் ஜப்பார் என்று மாற்றிக்கொள்ளவும்.

அல்ஜப்பார்!? என்பவரின் கேள்வி:

Quote:
Dear
Good Morning!

Do you know in Quran - Chapter al-bakara 2:256 saying that, there is 'NO' compulsion in Islam that everyone must adopt Islam as our religion. Yes. It is your right to accept about if you will! Please let me know where in Quran or Hadith stating if a muslim left from Islam, he/she must kill? I waiting for your reply. My ID : aljabbarஅட்gmail.com

குர்-ஆனிலோ, ஹதீஸ்களிலோ "இஸ்லாமை விட்டு வேறு மதத்திற்கு மாறுபவர்களைக் கொல்லூங்கள்" என்ற வசனம் எங்கே உள்ளது எனக்கு தெரிவியுங்கள் என்று கேள்வி கேட்டுள்ளீர்கள்.ஆதாரம் 1,

''எவர் தன் மார்க்கத்தை மாற்றிக்கொள்கிறாரோ அவரைக் கொன்று விடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி தமிழ் 3037, 6992. புகாரி மூலமொழி 2794,

6411

திர்மிதீ தமிழ் 1483. மூலமொழி 1378 )

ஆதாரம் 2

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

''அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்'' என உறுதிமொழி கூறிய எந்த முஸ்லிமான மனிதரையும் மூன்று காரணங்களைத் தவிர வேறு எதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை.

1. ஒரு மனிதரைக் கொலை செய்வதற்குப் பதிலாகக் கொலை செய்வது.

2. திருமணமாகியும் விபச்சாரம் செய்தவன்.

3. ஜமாஅத் எனும் சமூக கூட்டமைப்பை விட்டு வெளியேறி தமது மார்க்கத்தை கைவிட்டவன்.

(புகாரி தமிழ் 6878. மூலமொழி 6370. முஸ்லிம் தமிழ் 3463, 3464. மூலமொழி 3175,

3176 )

ஆதாரம் 3.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

''மூன்று காரணங்களில் ஏதேனும் ஒன்றுக்காகவே தவிர, முஸ்லிமான மனிதரைக் கொல்வது ஆகுமானதல்ல. திருமணமாகியும் விபச்சாரம் செய்தவன் கல்லெறிந்து கொல்லப்படுவான். ஒருவரை வேண்டுமென்றேக் கொலை செய்தவன் கொல்லப்படுவான். இஸ்லாத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான். அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான். அல்லது நாடு கடத்தப்படுவான். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸயீ மூலமொழி 3980)

இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்களே!

மதம் மாறினால் மரண தண்டனை என்று இஸ்லாம் கூறும் ஆதாரங்கள் இதுதான். இவற்றை உள்வாங்கிப் படித்துக்கொள்ளுங்கள். திருக்குர்ஆன், 002:106வது வசனம் அருளப்பட்டு 002:256வது வசனம் இரத்து செய்யப்பட்டது என்ற கருத்து சரியா? என்பதையும், இதற்கு வலு சேர்க்க எழுதியுள்ள மற்ற வசனங்களையும் பார்த்துவிட்டு மேலே குறிப்பிட்டுள்ள நபிமொழிகளின் விளக்கத்தையும் பார்க்கலாம் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

4 comments:

முகவைத்தமிழன் said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சகோ. அபு முஹை அவர்களே குதர்க்கவாதிகளின் முட்டாள்தனமான கேள்விகளுக்கும் வாதங்களுக்கும் பதில் அளிப்பதற்கு உங்களுக்கு மேன்மேலும் தெளிவான ஞானத்தை வல்ல நாயன் வழங்குவானாக!!

//''எவர் தன் மார்க்கத்தை மாற்றிக்கொள்கிறாரோ அவரைக் கொன்று விடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி தமிழ் 3037, 6992. புகாரி மூலமொழி//

மேலேயுள்ள நபிமொழி சம்பந்தமான தவறான புறிதல்களை தெளிவான ஆதராங்களுடன் விளக்குங்கள்.உண்மையில் மூத்தத் என்றால் என்ன ? யார்? என்பது குறித்தும் அவர் எந்த சூழநிலையில் கொல்லப்பட வேண்டும், இன்னும் இஸ்லாத்தை விடடு வெளியேறிய அவைரும் கொல்லப்பட வேண்டியவர்களா என் பல்வுறு சந்தேகங்களுக்கும், இன்னும் நம் மக்களில் சிலரிடையும் கூட் இது சம்பந்தமான இருவேறுபட்ட கருத்துக்கள் உள்ளன அவற்றையும் உங்கள் கட்டுரைகளில் தெளிவு படுத்துங்கள் இன்சா அல்லாஹ்.

அபூ முஹை said...

வ அலைக்கும் ஸலாம் வரஹ...

முகவைத்தமிழன் உங்கள் வரவுக்கும், கருத்திற்கும் நன்றி!

திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளையும் உலகெங்கும் எவரும் அணுகலாம் வாசிக்கலாம், ஆய்வு செய்யலாம் எனும் ரீதியில் இஸ்லாம் திறந்த புத்தகமாக இருக்கின்றது. எந்த மனிதருக்கும் இஸ்லாம் மறைக்கப்பட்டதாக இல்லை.

மறைக்கப்படாத மார்க்கத்தில் சில சட்டங்களை ''முஸ்லிம்கள் சோத்துப் பானைக்குள் வைத்து மறைத்துக் கொண்டார்கள்'' என பிற மத நண்பர்கள் கூறுவது அவர்களுடைய தவறான புரிதல் திறனைக் காட்டுகின்றது.

ஷரீப் said...

Masha allah

ஷரீப் said...

அல்ஹம்துலில்லாஹ்