Thursday, February 09, 2006

நம்பிக்கையில், நானும் - தங்கமணியும்.

எந்தவொரு நம்பிக்கையும் இல்லாமல் இந்த உலகம் இயங்குவதில்லை. விளை நிலத்தைப் பண்படுத்தி, விதைத்துவிட்டு - விளையுமென்ற நம்பிக்கையில் விவசாயி இருக்கிறான். விளைந்த தானியங்களை கொள்முதல் செய்ய வேண்டுமென்ற நம்பிக்கையில் வியாபாரி இருக்கிறான். வியாபாரிகளிடமிருந்து பொருட்களை வாங்க வேண்டுமென்ற நம்பிக்கையில் பொது மக்கள் இருக்கிறார்கள். தொழிலாளர்கள், தொழிலதிபர்கள் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் சம்பந்தப்பட்ட தொழில்கள், துறைகளை நம்பியே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அன்றாட வாழ்க்கையில் பிச்சைக்காரனும் தனக்குக் கிடைக்கும் பிச்சையை நம்பியே வாழ்கிறான். மோசடிக்காரன், திருடன், ஜேப்படி செய்பவனும் தன் தொழிலை!? நம்பியே வாழ்கிறார்கள். இப்படி அனைத்து மனிதர்களின் நம்பிக்கையிலேயே இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
நம்பிக்கை இதோடு முடிந்து விடுவதில்லை. மறைவான விஷயங்களை நம்புவதில் ஆன்மீகவாதிகளுக்கு கடவுள் நம்பிக்கை மிக முக்கியப் பங்களிப்பாக இருக்கிறது.

ஆன்மீகவாதியாகிய நான் என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் - உண்ணுதல், பருகுதல், இல்லறம் - குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில்கள் சமூகம் இவை அனைத்திலும் இறைவழி காட்டுதல்களையே முன்னுதாரணமாக நம்பிக்கை கொண்டு செயலாற்றி வருகிறேன்.

என் நம்பிக்கை பலமகலாம் ஆனால் எந்த நேரத்திலும் நிஜமாக முடியாது என்பது தங்கமணி என்பவரின் வாதம். இதை கீழ்காணும் அவரின் பின்னூட்டத்திலிருந்து விளங்கலாம்.

//ஆனால் ஒரு நம்பிக்கை பலமாகலாம்; எந்த நேரத்திலும் நிஜமாகமுடியாது என்பது எல்லா நம்பிக்கையாளரும் நினைவிற்கொள்ள வேண்யது. எனவே ஒரு நபிகளின் மேலான தாக்குதலை ஒரு வரலாற்று/ அரசியல் பாத்திரத்தின் மேல் செய்யப்படும் திரித்தல் என்ற அளவிலேயே பார்த்தலும் எதிர்வினையாற்றுதலும் சரியானது என்று நினைக்கிறேன். அப்படியான திரித்தல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நடத்தப்படும் போதும் எதிர்வினை ஆற்றுவது மிகவும் அவசியமானது ஆகும்.//

என் நம்பிக்கையை பலமானது, ஆனால் நிஜமானது இல்லை என்ற கருத்தை நிறுவ முயலும் தங்கமணியின் நம்பிக்கையும் பலமானது, ஆனால் நிஜமானது இல்லை! - பின்னே இல்லையா? எல்லா நம்பிக்கையாளர்களும் நினைவிற்கொள்ள வேண்டியது போல் தங்கமணியின் நம்பிக்கையும் நிஜமானதல்ல என்பதை அவர் நினைவிற்கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தில் அரசியலும் ஆன்மீகம்தான் என்பதை இன்னும் சற்று ஆழமாக இஸ்லாத்தை வாசித்திருந்தால் தங்கமணி புரிந்து கொண்டிருப்பார்.

20 comments:

-/பெயரிலி. said...

/இஸ்லாத்தில் அரசியலும் ஆன்மீகம்தான்/

அதுதான் பிரச்சனைகட்கு மூலகாரணமாகின்றது. இஸ்லாம் என்றில்லை, எந்த மதமுமே அரசியலை ஆன்மீகம் ஆக்கப் புறப்படும்போது, சிக்கல்தான்

Thangamani said...

//இஸ்லாத்தில் அரசியலும் ஆன்மீகம்தான்//

இந்த வரிதான் உங்களது இந்தப்பதிவுக்கே காரணம் என்று நான் நம்புகிறேன்.

'ஒரு கல்லின் மேல் இன்னொரு கல் இல்லாதவாறு உங்கள் ஆலயங்கள் இடிக்கப்படும்' என்று ஈசா நபியவர்கள் சொன்னார்கள் அல்லவா அதைப்பற்றி நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.

உண்மையான எதையும் நம்பவேண்டியதில்லை அபுமுஹை. நம்பிக்கையாளர்களின் நம்பிக்கை பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. ஏனெனில் நான் அனுபவத்தைப்பற்றியே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

அபுமுஹை இப்படி ஒரு பதிவை எழுதியிருப்பதாக நீங்கள் தொடங்கி யாரும் நம்பவேண்டியதில்லை; கண்களைத் திற்ந்து பார்த்தால் போதும்.

இதுகுறித்து என்னால் விவாதிக்கமுடியாது. நன்றி!

ரவி ஸ்ரீநிவாஸ் said...

இஸ்லாத்தில் அரசியலும் ஆன்மீகம்தான்
as exemplified by Taliban or as in Iran ?

அபூ முஹை said...

அன்பின் பெயரிலி,
அரசியல் என்றதும், இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் ஊழல் நிறைந்த அரசியல் ஆட்சி நம் கண்முன் வந்து நிற்பதை நம்மால் தவிர்க்க முடியாது. இப்படிப்பட்ட அரசியலை இஸ்லாம் சொல்லவில்லை.

மனிதர்களுக்கு சேவை புரிவதும் அவர்களுடன் நல்லமுறையில் நடந்து கொள்வதும் ஒழுக்கப் பண்பாடடின் ஒரு முக்கிய அம்சமாகும். ஒழுக்கவியலுடன் தொடர்புள்ள சிந்தனையார்கள் அனைவருமே தம் அறிவுரைகளில் மனிதகுல சேவைகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாறே உலகத்தின் எல்லா மதங்களும் அதன் முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்டுள்ளன. இதை அம்மதங்களின் வேதங்களிலும், ஆகமங்களிலும் காணலாம்.

படைப்பினங்களுக்கு பணி செய்வது இறைவனுக்குச் செய்யும் சேவையாக இஸ்லாம் கருதுகிறது - இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு செய்யும் உதவி இறைவனுக்கு செய்யும் உதவியாகவும், மனிதர்களுக்கு ஒத்துழைப்பு செய்வதை, இறைவனுக்கு செய்யும் ஒத்துழைப்பாகவும் கருதுகிறது இஸ்லாம்.

விசுவாசிகளே! - நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்;. அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (திருக்குர்ஆன், 5:2)

''மனித குலம் முழுவதும் அல்லாஹ்வின் குடும்பமாகும். மனிதகுலத்திற்கு அதிக நன்மை செய்வர்கள்தான் அல்லாஹ்விடத்தில் அதிக அன்பிற்குரியவர்கள்''. (நபிமொழி மிஷ்காத்)

''எவன் மனிதர்கள் மீது கருணை புரிவதில்லையோ அவன் மீது இறைவன் கருணை புரிவதில்லை'' (நபிமொழி புகாரி)

கருணை புரிபவர்கள் மீது கிருபையுள்ள இறைவன் கருணையைப் பொழிகின்றான். (எனவே நீங்கள்) பூமியில் இருப்பவர் மீது கருணை புரியுங்கள், வானத்தில் இருப்பவன் உங்கள் மீது கருணையைப் பொழிவான்''. (நபிமொழி திர்மிதி)

''இங்கு கருணைபுரிவது என்பது, பரஸ்பரம் அனுதாபம் கொள்வது, உங்களுக்கு மத்தியில் - உங்களுக்கு நெருக்கமானவர்களிடையே நீங்கள் புரியும் கருணையைக் குறிப்பிடவில்லை. மாறாக மனித இனத்தின் ஒவ்வொரு பொது மனிதனுடனும் நீங்கள் கருணை புரிய வேண்டும்'' (நபிமொழி தப்ரானி) என்பதுதான் இங்கு வலியுறுத்தப்படுகிறது.

தொழுகை, நோன்பு, ஜகாத் எனும் தர்மம் வழங்குதல், ஹஜ் போன்ற செயல்கள் மட்டும்தான் இஸ்லாத்தில் இறைவழிபாடு என்பது தவறானக் கணிப்பு. மாறாக, மனித சமுதாயத்துக்காக சேவை செய்வதும் அதன் நன்மை நலனுக்காக எடுக்கப்படும் முயற்சிகளும் இஸ்லாத்தின் பார்வையில் இறைவழிபாடு ஆகும்.

மனித சமுதாயங்களின் வாழ்க்கை சேவையுடன் பின்னிப் பிணைந்திருக்கும் அரசியலையும் இறைவழிபாட்டின் பட்டியலில்தான் இஸ்லாம் சேர்க்கிறது.

''நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே மேலும் உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளியாவர். தன் பிரஜைகள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்தாருக்கு பொறுப்பாளியாவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண் தனது கணவனின் குடும்பத்திற்கு பொறுப்பாளியாவாள். அவளது பொறுப்புக்குட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் (அடிமை) தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவை பற்றி விசாரிக்கப்படுவான்''. (நபிமொழி புகாரி)

தனி மனிதனிலிருந்து குடும்பம், கூட்டமைப்பு, மற்றும் மக்களை ஆளும் அரசியல் தலைவர்கள்வரை அவர்களுக்குள்ள பொறுப்புகளை சுமத்தி மனித சேவைகளை வலியுறுத்தியுள்ளது இஸ்லாம். ஆகையால், இஸ்லாத்தில் அரசியலும் இறைவழிபாடே - ஆன்மீகமே (புரிந்து கொள்வீர்களென்று மிகச் சுருக்கமாகவே எழுதியுள்ளேன் மேலும் சந்தேமிருந்தால் எழுதுங்கள்)

அன்புடன்,
அபூ முஹை

பாபு said...

அரசியலை ஆன்மீகமாக கருதுபவர்கள் குறைந்துப்போய் ஆன்மீகத்திலும் அரசியல் செய்கிற 'போலிகள்' நிரம்பிவிட்ட இக்காலத்தில், இந்தியா போன்ற நாடுகளில் 'அரசியலும் ஆன்மீகமாகப்படவேண்டும்' என்பதை பலரால் புரிந்துக்கொள்ள முடியாதிருக்கிறது போலும்.

தனது குடிமக்களின் கஷ்டங்களை; துன்பங்களை தானே முன்னின்று தீர்த்த தலைவர்களை இக்காலத்தில் காண இயலாவிடினும் வரலாற்றில் பார்க்க முடிகிறது. அத்தகைய தலைவர்கள் தலைவர்களாக அல்லாமல் மக்கள் தொண்டர்களாகத்தான் வரலாற்றில் வீற்றிருக்கிறார்கள்.

தேசப்பிதா கூட அத்தகையவர்களை முன்மாதிரியாகக் கொள்ளும்படித் தானே சொல்லிச்சென்றார்.

Machi said...

// பணியாள் (அடிமை) தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். //
இடிக்குதே...
பணியாள் எப்படி அடிமையாவான்??? அரபு கலாச்சாரத்தில் வேண்டுமானால் பணியாளை அடிமையாக நடத்தியிருக்கலாம், இஸ்லாமும் அப்படிதான் சொல்கிறதோ?

நல்லடியார் said...

//'ஒரு கல்லின் மேல் இன்னொரு கல் இல்லாதவாறு உங்கள் ஆலயங்கள் இடிக்கப்படும்' என்று ஈசா நபியவர்கள் சொன்னார்கள் அல்லவா அதைப்பற்றி நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.//

அன்பின் தங்கமணி,

இதை எதற்குக் குறிப்பிடுகிறீகள் என்று யூகிக்க முடியவில்லை. குர்ஆனில் ஈசா நபி பற்றி சொல்லப் பட்ட இடங்களில் நீங்கள் குறிப்பிட்ட வசனம் இல்லை.

//உண்மையான எதையும் நம்ப வேண்டியதில்லை அபுமுஹை. நம்பிக்கையாளர்களின் நம்பிக்கை பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. ஏனெனில் நான் அனுபவத்தைப்பற்றியே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.//

அனுபவம் மட்டுமே உண்மையென்றால் குருடரின் நம்பிக்கைபடி உங்கள் நம்பிக்கைகள் உன்மையல்ல. அறிவுக்கு எட்டியவை மட்டுமே உண்மையெனில், அது அறிவின் குறைபாடு என்பது என் தாழ்மையான கருத்து.

நாம் மெய்யென நம்பியதில் நிலைத்து நிற்பதே நம்பிக்கை. அந்தவகையில் மதங்களை நம்பாதவரும் இன்னொரு வகையில் ஒரு நம்பிக்கையாளர்தான்.

அபூ முஹை said...

தங்கமணி சார்,

//இதுகுறித்து என்னால் விவாதிக்கமுடியாது. நன்றி!//

உங்கள் கருத்துப் பற்றி உங்களாலேயே விவாதிக்க முடியாது என்கிற போது நான் சொல்வதற்கு ஏதுவுமில்லை. முடித்துக் கொள்கிறேன் அதற்கு முன்,

அரசியல் வேறு, ஆன்மீகம் வேறாக உங்களின் முழுப் பின்னூட்டத்தின் கருத்தை விளங்கியதால் அரசியலும் ஆன்மீகம்தான் என இஸ்லாத்தின் கருத்தை வைத்தேன். பின்னூட்டத்தில் ஈசா (அலை) அவர்கள் பற்றியும் பேசியுள்ளீர்களா? ஆச்சரியம்தான் எனக்கு உள்ளர்த்தம் விளங்காமல் போய்விட்டது.

//கேள்வி எழுப்பவேண்டும்.// -யார் எழுப்ப வேண்டும்? என்று புரிந்து கொள்ள முடியவில்லை. அனுபவத்தைப் பற்றியும் எனக்கு எழுத வேண்டியிருந்தாலும், விவாதிக்க முடியாது என்ற பின் இத்தோடு முடித்துக் கொள்கிறேன். நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

திரு ரவி சிரினிவாஸ்,

//இஸ்லாத்தில் அரசியலும் ஆன்மீகம்தான்
as exemplified by Taliban or as in Iran ?//

தாலிபான், ஈரான் மட்டுமில்லை இஸ்லாமிய அரசியலுக்கு முழு உதாரணமாக எந்த முஸலிம் நாடுகளும் இல்லை.

நன்றி பாபு.

மதியிலி said...

//ஒரு நம்பிக்கை பலமாகலாம்; எந்த நேரத்திலும் நிஜமாகமுடியாது என்பது எல்லா நம்பிக்கையாளரும் நினைவிற்கொள்ள வேண்யது//

அறிவியல் ரீதியா நிரூபிக்க முடியாத எதுவும் நிஜம் என்று ஏற்றுக் கொள்ள முடியாது..இதைத் தான் பகுத்தறிவுன்னு நினைக்கறேன்..அதன்படி பார்க்கும்போது தங்கமணியின் வாதம் சரி என்றே தோன்றுகிறது..

இருந்தாலும் மனிதர்களின் நம்பிக்கைகளைப் பற்றி இன்னொருவர் வேறு நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் கருத்து கூற முடியும். இந்த விதமான பல நம்பிக்கைகளில் எது அறிவியல்ரீதியாக நிரூபிக்கப் பட்டிருக்கிறதோ அதை பிரசாரம் செய்யலாம்.

அபூ முஹை said...

மிக்க நல்லது தமிழ் கமாண்ட்ஸ். செய்த தவறுக்காக நீங்கள் தலையில் குட்டியதை ஏற்றுக்கொள்கிறேன்.

இனிமேல் நன்றாக கவனித்து பின்னூட்டங்களை அனுமதிப்பேன் என்று கூறி, ஹாபிழ் என்பவரின் பின்னூட்டத்தை நீக்கி விடுகிறேன் நன்றி.

அன்புடன்,
அபூ முஹை

அபூ முஹை said...

குறும்பன் சார்,

// பணியாள் (அடிமை) தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். //
இடிக்குதே...
பணியாள் எப்படி அடிமையாவான்??? அரபு கலாச்சாரத்தில் வேண்டுமானால் பணியாளை அடிமையாக நடத்தியிருக்கலாம், இஸ்லாமும் அப்படிதான் சொல்கிறதோ?//

அன்றையக் காலகட்டத்தில் அடிமையை பணியாள் என்றே அழைக்கப்பட்டு வந்தார்கள். நாம் எடுத்தெழுதிய புகாரி 2558வது ஹதீஸின் மூலத்தில் ''காஃதிம்'' என்ற சொல் இடம்பெற்றுள்ளது. இதற்கு 'பணியாள், வேலைக்காரன், சேவகன், ஏவலாள் என்று பொருள் கொள்ளலாம்.

புகாரி 2554வது ஹதீஸாகவும் இதே செய்தி இடம்பெறுகிறது இதன் மூலத்தில் ''அப்து'' - ''அடிமை'' என்ற சொல் இடம்பெற்றுள்ளது. மொழிபெயர்த்தவர்கள் இரண்டு ஹதீஸையும் கருத்தில் கொண்டே 2558வது ஹதீஸில் ''பணியாள்'' என்றும் அடைப்புக் குறிக்குள் ''அடிமை'' என்றும் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

இந்த விபரங்களை இங்கு எழுதக் காரணம், அன்று அடிமையைத்தான், வேலைக்காரன் என்றும் குறிப்பிட்டு வந்தார்கள் என்பதை விளங்கிக்கொள்வதற்காகவே.

''என் அடிமை, என் அடிமைப்பெண்'' என்று உங்களில் எவரும் கூற வேண்டாம். ''என் பணியாள், என் பணிப்பெண் என் பையன்'' என்று கூறட்டும்'' (நபிமொழி புகாரி 2552) அன்று அடிமை முறைகள் இருந்தாலும் அடிமைகளை அடிமையென்று சொல்வதைத் தவிர்க்கும்படியும் ''உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவர்'' என்றும் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள் என்பதை நபிவழிச் செய்திகளிலிருந்து விளங்கலாம்.

இன்று அடிமைகள் இல்லை. நிர்வாகம், அல்லது முதலாளியிடம் பணிபுரியும் தொழிலாளி, அல்லது பணியாள் முறைகள் இருக்கிறது. ''ஒரு பணியாள் முதலாளியின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் தன் பொறுப்புப் பற்றி விசாரிக்கப்படுவான்'' என்று விளங்கினால் இடிப்பதற்கு வாய்ப்பில்லை.

அன்புடன்,
அபூ முஹை

நண்பன் said...

// இஸ்லாத்தில் அரசியலும் ஆன்மீகம்தான்
as exemplified by Taliban or as in Iran ? //

No. As exemplified in Manu and try to be implemented by the Sangh Parivaar.

மனு சொல்கிறார் - வேறு யாருக்கும் சட்டங்கள் இயற்ற அதிகாரமில்லை. நான் இயற்றிய சட்டங்களைக் கொண்டு தான் ஒவ்வொரு அரசும் தன் ஆட்சியை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகி?றார். அப்படித்தான் இந்து ஆட்சியாளார்கள் ஆட்சி புரிந்தனர். இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும் வரும் வரை.

ravi,

அடிப்படைவாதங்களை எதிர்த்து எழுதுபவர் என்று இரண்டு பேர் சொன்னால் போதாது. உண்மையிலேயே அடிப்படைவாதத்தை எதிர்த்து எழுதும் தகுதி உங்களுக்கு இல்லை.

மாறாக காழ்ப்புணர்ச்சியில் மட்டும் தான் நீங்கள் இஸ்லாமிய வலைப்பதிவாளர்கள் தளங்களுக்கெல்லாம் சென்று உளறிக் கொண்டிருக்கிறீர்களே தவிர, அடிப்படைவாதத்தை எதிர்ப்பதற்கு அல்ல.

இந்தப் போலித்தனத்தினால் நீங்கள் உங்களையே தாழ்த்திக் கொள்கிறீர்கள் -

ravi சற்று சிந்தியுங்கள். முதலில் உங்கள் மத கோட்பாடுகளைப் பற்றிய அடிப்படை வாதங்களைத் தகர்த்தெரிவதற்குப் பாடுபடுங்கள். அல்லது, இஸ்லாமிய அடிப்படைவாதம் என்று அடைமொழி கொடுத்து எழுதும் பொழுது, அதற்கு சமமான இந்து அடிப்படைவாதத்தையும் எழுதி, இரண்டுமே ஒழியட்டும் என்று எழுதுங்கள்.

அப்படி இல்லாமல், நீங்கள் காட்டும் கரிசனை போலியானதாகிவிடும்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

தலிபான்கள் குரானின்படியே ஆட்சி செய்கிறோம் என்றே கூறியிருக்கிறார்கள்.பாமியான் புத்தர் சிலைகள்களை தகர்த்ததும் கூட இஸ்லாமிய நெறிகளின்படித்தான் என்று கூறியிருக்கிறார்கள். அதை பாகிஸ்தான் வரவேற்றது.ஈரானில் ஆட்சியாளர்கள் தாங்கள் இஸ்லாமிய நெறிப்படியே
நடப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள். எனவேதான் அந்தக் கேள்வியை முன் வைத்தேன். ஒரு குறிப்பிட்ட மதத்தின் புனித நூல்களை அல்லது கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு அரசாட்சி செய்வது சரியல்ல என்பதுதான் என் கருத்து.ஆன்மிகம் என்பதையும் மதத்தினையும் ஒன்று என்று கருதத்தேவையில்லை.சமத்துவத்தினை ஏற்கும் ஆன்மிகமும் உண்டு, அதை ஏற்காத மதங்களும் உண்டு. மேலும் நீதி, நியாயம், ஆட்சி நெறி போன்றவற்றை மதம் சாராத சொல்லாடல்கள் மூலமும் பேச முடியும். மதம் தேவையில்லை, மானுட நேயமும்,பகுத்தறிவும், மனித உரிமை, சமத்துவக் கண்ணோட்டமும் போதும் என்று கருத முடியுமே.
"''என் அடிமை, என் அடிமைப்பெண்'' என்று உங்களில் எவரும் கூற வேண்டாம். ''என் பணியாள், என் பணிப்பெண் என் பையன்'' என்று கூறட்டும்'' (நபிமொழி புகாரி 2552) அன்று அடிமை முறைகள் இருந்தாலும் அடிமைகளை அடிமையென்று சொல்வதைத் தவிர்க்கும்படியும் ''உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவர்'' என்றும் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள் என்பதை நபிவழிச் செய்திகளிலிருந்து விளங்கலாம்."

அடிமைகளை வைத்துக் கொள்,அடிமை முறை இருக்கட்டும் ஆனால் அழைக்கும் போது அடிமை என்று அழைக்காதே என்பது அடிமை முறையை அழிக்க உதவுமா. யாரும் யாருக்கும் அடிமை இல்லை, அனைவரும் சம உரிமை படைத்தவர்கள், அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று
கூறுவதுதானே சரியானதாக இருக்கும்.இஸ்லாம் அடிமை முறைக்கு முற்றிலும் எதிரானது அல்ல என்றும் ஒரு வாதம் இருக்கிறது.

நல்லடியார் said...

//தலிபான்கள் குரானின்படியே ஆட்சி செய்கிறோம் என்றே கூறியிருக்கிறார்கள்.பாமியான் புத்தர் சிலைகள்களை தகர்த்ததும் கூட இஸ்லாமிய நெறிகளின்படித்தான் என்று கூறியிருக்கிறார்கள்.//

நண்பர் ரவி ஸ்ரீனிவாஸ்,

பாமியான் சிலைகள் இடிக்கப்பட்டதும் அதை ஊடகங்கள் பெரிது படுத்தியதும் துரதிஷ்டவசமானது.

A delegation from the 55-nation Organization of Islamic Conference came to the Afghan town of Kandahar, the austere Islamic group's headquarters, on Sunday to urge the Taleban to stop its campaign against the relics. Taleban leaders refused.

ஆப்கானிலிருந்த பாமியான் சிலைகளை பாதுகாக்க சில மில்லியன் டாலர்களை செலவு செய்ய முன்வந்தது. உணவுக்கும் மருந்துக்கும் மக்கள் அகதிகளாக அல்லாடிக் கொண்டிருந்தபோதுஇது தேவையில்லாத செயல் என்பது ஆப்கானின் கொள்கைக்கு எதிரானது என்பதாலும் தாலிபான் அவற்றை தகர்த்தனர்.


இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். தாலிபான்கள் பாமியான் சிலைகளை இடித்ததை கண்டிக்கும் மேதாவிகள், இராக்கிலும் ஆப்கானிலும் அமெரிக்க குண்டு வீசி தகர்த்த மசூதிகள் பற்றி யாரும் வாய் திறப்பதில்லை.

பிறமத வழிபாட்டுத் தலங்களை அவர்களின் விருப்பமின்றி இடிப்பதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை.

//அடிமைகளை வைத்துக் கொள்,அடிமை முறை இருக்கட்டும் ஆனால் அழைக்கும் போது அடிமை என்று அழைக்காதே என்பது அடிமை முறையை அழிக்க உதவுமா//

அடிமை முறையை இஸ்லாம் படிப்படியாகத்தான் ஒழித்தது. நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் முற்றிலும் ஒழிக்கப்படும் முன் உள்ள நிகழ்வைப் பற்றியது. அதை வைத்துக் கொண்டு இஸ்லாம் அடிமைத்தனத்தை ஊக்குவிக்கிறது என்பது சரியல்ல.

அபூ முஹை said...

திருக்குர்ஆனின் அறிவுரைப்படியே, தாலிபான் புத்தர் சிலைகளை உடைத்தெறிந்தார்கள் என்றால் உலகத்துடன் சேர்ந்து முஸ்லிம்களும் ஏன் அதை கண்டிக்க வேண்டும்? இந்த வன்செயல் திருக்குர்ஆன் நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதால்தான் முஸ்லிம்களும், முஸ்லிம் அமைப்புகளும் தாலிபானின் சிலைகள் உடைப்பை மிக வன்மையாகக் கண்டித்தனர். உடைத்ததை படு விளம்பரமாகவும், கண்டித்ததை ஒண்ணுமில்லாததாகவும் மீடியாக்களும், ஊடகங்கங்களும் வெளிப்படுத்தின. இப்போது நீங்களும் மறைக்கிறீர்கள் அவ்வளவுதான்.

அடிமைகள் பற்றி ''இஸ்லாமும் - அடிமைகளும்'' தனிப்பதிவிட்டுள்ளேன். அடிமைகள் பற்றிய கருத்துக்களை மட்டும் பின்னூட்டத்தில் பதிக்கலாம்.

அன்புடன்,
அபூ முஹை

கால்கரி சிவா said...

பாகிஸ்தானிலும், பங்காளாதேஷ்லும் துன்புறும் இந்துகளையும், சௌதி அரேபியா மீறும் மனித உரிமைகளையும் மீடியா கண்டுக்கொள்வதில்லை. எதை வெளியிட்டால் லாபம் கிட்டுமோ அதை வெளியுட்டு காசு பார்ப்பதுதான் மீடீயாக்களின் வேலை.

கால்கரி சிவா

அபூ ஸாலிஹா said...

//உடைத்ததை படு விளம்பரமாகவும், கண்டித்ததை ஒண்ணுமில்லாததாகவும் மீடியாக்களும், ஊடகங்கங்களும் வெளிப்படுத்தின.//

மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

தலிபான்களிடம் இப்போது சிலைகளை தகர்க்க வேண்டாமே என்று இஸ்லாமிய நாடுகள் சார்பாக சென்ற மார்க்க அறிஞர்கள் குழு கூறியது. இதை தலிபான்கள் ஏற்கவில்லை.
Afghanistan's Taliban rulers on March 12 rejected the arguments of leading Islamic scholars and protests from around the world and said they were obliterating the last traces of the country's ancient Buddhist statues.

A delegation from the 55-nation Organization of Islamic Conference (OIC) flew out of the southern Afghan town of Kandahar after two days of talks with the Taliban failed to produce any result, a Pakistan-based Afghan news service said.

The Afghan Islamic Press (AIP) quoted a Taliban spokesman, Mullah Abdul Hayee Mutmaen, as saying in Kandahar that the Afghan ulama, or scholars, had rejected the call by the OIC's Islamic scholars to halt the campaign to destroy all the country's statues on the grounds they are un-Islamic.

The OIC delegation, led by Qatar Minister of State for Foreign Affairs Ahmed Bin Abdullah Zaid Al Mahmoud, included Egypt's top cleric, the Mufti Nasr Farid Wassel, and other widely respected Muslim clerics and scholars.

Mutmaen said the OIC scholars could give no religious justification for preserving the statues and had argued only that the time was not right for such a course of action.

"The Afghan ulama replied that for us the present time is right and suitable," AIP quoted Mutmaen as saying. It said the Afghan ulama had insisted that Islam orders the destruction of all idols.

பாகிஸ்தான் இதை தடுத்திருக்க முடியும்,ஆனால் தடுக்கவில்லை.
http://www.saag.org/papers3/paper228.html

தலிபான்கள் பின் லேடான் போன்ற தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது பிற நாடுகள் உதவி தருவதில் சிக்கலை ஏற்படுத்தியது. மக்கள் பசியால் வாடுகையில் சிலை உடைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, உலக நாடுகள் என்ன சொன்னாலும் பரவாயில்லை சிலைகள் உடைப்பது என்று வெறித்தனமாக நடந்து கொண்டது தலிபான். தலிபான் 'அரசை' அங்கீகரித்ததே சில நாடுகள்தான்.அதில் பாகிஸ்தானும் அடக்கம். தலிபான்கள் மனிதாபிமானம் இல்லாத மத வெறியர்கள்.அவர்களை வளர்த்து விட்டது அமெரிக்கா.இஸ்லாமிய அடிப்படைவாதத்தினை அது ஆதரிதத்தின் விளைவுதான் இன்றுள்ள பல பிரச்சினைகள்.

அபூ முஹை said...

கால்கரி சிவா,

//பாகிஸ்தானிலும், பங்காளாதேஷ்லும் துன்புறும் இந்துகளையும், சௌதி அரேபியா மீறும் மனித உரிமைகளையும் மீடியா கண்டுக்கொள்வதில்லை. எதை வெளியிட்டால் லாபம் கிட்டுமோ அதை வெளியுட்டு காசு பார்ப்பதுதான் மீடீயாக்களின் வேலை.//

தாலிபான் அரசு சிலைகளை உடைத்ததை இஸ்லாத்தின் நெறிமுறைகளுக்கு எதிரானது, அச்செயலை முஸ்லிம்களும், முஸ்லிம் அமைப்புகளும் கண்டித்தன, இதை மீடியாக்கள் இருட்டடிப்பு செய்தது என்று நாம் எழுதியது, மற்ற நாடுகளில் - மீறும் மனித உரிமைகளையும் - இந்துக்கள் துன்பப்படுத்தபடுவதையும் ஆதரித்தாக ஆகாது.

என்ன எழுதுகிறோம் என்று எழுதுமுன் சற்று சிந்தித்து எழுதுங்கள்.

திரு ரவி சிரினிவாஸ்,

இந்தப் பதிவில், உங்கள் பின்னூட்டங்களை நீங்கள் மறுபடியும் ஒருமுறை நிதானமாகப் படித்துப்பாருங்கள் உங்களுக்கு நீங்களே முரண்படுகிறீர்கள் என்பது புரியும்.

அன்புடன்,
அபூ முஹை

அபூ முஹை said...

ஹாபிழ்,
தமது பின்னூட்டம் அநாகரீகமானது என்பதை உணர்ந்து தமிழ் கமெண்ட் அவரது பின்னூட்டத்தை நீக்கி நாகரீகமாக நடந்து கொண்டார். அதற்கு எதிர்வினை செய்த நீங்களும் உங்கள் பின்னூட்டத்தை நீக்கி விடுவதுதான் சரியாக இருக்கும்.

மற்றும் வருகை தந்து கருத்துக்களைப் பதிவு செய்த நல்லடியார், மதியிலி, நண்பன் உங்களுக்கு என் நன்றிகள்!

அன்புடன்,
அபூ முஹை