மக்காவில் அமைந்துள்ள காபத்துல்லாஹ் எனும் இறையில்லம் முஸ்லிம்களின் முதன்மை வணக்கத்தலமாகத் திகழ்கிறது. இது மிகவும் தொன்மையான ஆலயம். ''பழமையான அந்த ஆலயத்தை அவர்கள் தவாஃப் செய்யட்டும்'' (022:029) ''மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம்'' (003:096) என்று திருக்குர்ஆன் சான்று பகர்கின்றது.
இங்கு காபத்துல்லாஹ்வின் வரலாறு பற்றி எழுதும் நோக்கமல்ல. சவூதி அரபியா நாட்டில் மக்கா எனும் நகரத்தில் அமைந்த இந்த இறையில்லம், உலக முஸ்லிம்களுக்கு தொழும் திசையாக இருக்கிறது. முஸ்லிம்கள் காபத்துல்லாஹ்வை முன்னோக்கித் தொழுவதை அரபு நாட்டுத் திசை நோக்கித் தொழுவதாக சிலர் கருதிக்கொண்டு, அரபு நாட்டுக்கு அடிமைபட்டவர்கள் என்று முஸ்லிம்களின் மீது பொருத்தமில்லாத வசவு மொழிகளை அடுக்குகிறார்கள். இவர்களை ''அறியாத சமுதாயம்'' என்று புறக்கணித்து விடுவோம்.
பழமையான காபத்துல்லாஹ் சிதலமடைந்து, இறைவனின் கட்டளையின்படி இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) புதுப்பித்தார்கள், மீண்டும் காபத்துல்லாஹ்வைக் கட்டியெழுப்பியபின், ''ஹஜ்'' செய்வதற்கான அழைப்பையும் அறிவிக்கச் சொல்கிறான் இறைவன்.(022:027)
ஒரே இறைவனுக்கு அடியார்களாக வாக்குக் கொடுத்து இறைவனுக்கு கீழ்படியும் மக்களனைவரும் - அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்காளாக இருப்பினும் - அவர்கள் இந்த ஹஜ்ஜின் அழைப்பையேற்று கூடும் மையமாக காபத்துல்லாஹ்வை இறைவன் நிர்ணயித்தான்.
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் ஹஜ்ஜிற்கான அழைப்பை அறிவித்தபோது, சவூதி அரபியா எனும் எல்லைக் கோடுகள் வரையப்பட்ட நாட்டிற்குள் காபத்துல்லாஹ் இருக்கவில்லை! மாறாக, காபத்துல்லாஹ் இருந்த இடத்தில் மக்கள் குடியேறினார்கள் அதன் பிறகு நாடு உருவாகி அந்நாடு சவூதி அரபியா எனும் பெயர் பெற்றது.
''எனக்கு எதையும் இணையாக்காதீர்! தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், நின்று வணங்குவோருக்காகவும், ருகூவு செய்து ஸஜ்தா செய்வோருக்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!'' (002:125. 022:026) என்று காபத்துல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தும் பணியை, நபி இப்ராஹீம் (அலை) அவர்களும், அவரது மைந்தர் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் மேற்கொண்டார்கள்.
காலங்காலமாக இந்தப் பணிகள் பல சமூகத்தாரின் கைகளுக்கு மாறி, இன்று சவூதி அரபியாவை ஆட்சி செய்யும் மன்னரின் கண்காணிப்பில் காபத்துல்லாஹ்வின் பணிகள் நிர்வாகமாக இயங்குகிறது. இறைவன், நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு ''எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!'' என்று கட்டளையிட்ட அதே பணிகள், இன்றும் தூய்மைப்படுத்துவதோடு, அதிகமான மக்கள் வருகையை கணக்கில் கொண்டு புனித ஆலயம் விரிவாக்கப் பணியும் சிறப்பாக செய்யப்பட்டு பராமரிப்புப் பணியின் நிர்வாகம் நீடிக்கிறது.
காபத்துல்லாஹ்வை யார் நிர்வகித்தாலும், காபத்துல்லாஹ்வின் மீது அவர்களுக்குள்ள உரிமை போன்று உலக முஸ்லிம்களுக்கும் உண்டு என்று திருக்குர்ஆன் பிரகடனம் செய்கிறது.
''மஸ்ஜிதுல் ஹராமை (அதன்) அருகில் வசிப்போருக்கும், தூரத்தில் வசிப்போருக்கும் சமமாக ஆக்கினோம்'' (022:025)
ஜாதியின ஏற்றத் தாழ்வு அடிப்படையில் குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கே வழிபாட்டுத்தலங்களில் முக்கியத்துவம் - முன்னுரிமை வழங்கப்படும்.
இஸ்லாம் சமத்துவத்தின் பிறப்பிடமாக, காபத்துல்லாஹ்வுக்கு அருகில் வசிக்கும் ஒரு அரபியனுக்கு காபத்துல்லாஹ்வின் மீது என்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமை உலகில் எந்த மூலையில் வாழ்கின்ற ஒவ்வொரு முஸ்லிமிற்கும் உண்டு! என்று ஏற்றத் தாழ்வு வேற்றுமையை வேரோடு அறுத்தெறிகிறது. புனித ஆலயம், ''எனது இல்லம்'' என்று இறைவன் கூறியிருக்கும்போது, அந்த ஆலயத்தில் இறையடியார்கள் அனைவரும் சமமானவர்களே! அங்கு எவருக்கும் முன்னுரிமை - முதலிடம் என்பதில்லை!
அன்புடன்,
அபூ முஹை
Monday, March 05, 2007
Friday, March 02, 2007
கணவன்-மனைவி-ஆடை!
கணவன் - மனைவி - ஆடை! என்ற தலைப்பில் இப்னு ஹம்துன் அவர்கள் தமது வலைப்பூவில் ஒரு பதிவெழுதியிருந்தார். இஸ்லாம் மார்க்கத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் ஆடையாகத் திகழ்கிறார்கள் என்பதை திருக்குர்ஆன், 002:187வது வசனத்தை மேற்கோள் காட்டி இல்லற வாழ்க்கையில் கணவன், மனைவி இருவரும் சமமே என இஸ்லாத்தின் இயல்பை மிக அழகாக பதிவின் வழியாக பகிர்ந்து கொண்டார்.
சகோதரத்துவம், சமத்துவம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கு இது பொருக்குமா..? அவர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியாமல், அபத்தமான உளறல்களைக் கொட்டியிருக்கிறார் பாருங்கள்!
திருக்குர்ஆன், 002:187வது வசனத்தில்...
''ஹுன்ன ''லிபாஸு''ல்லகும்'' - ''அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும்''
''வ அன்தும் ''லிபாஸு''ல்லஹுன்ன'' - ''நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும்'' இருக்கின்றீர்கள் என்று மிகத்தெளிவாக கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஆடை போன்ற உதராணமாக இறைவன் குறிப்பிடுகிறான்.
லிபாஸ் என்றால் - dress, robe, garment, gown, apparel, attire, clothing, cloths, suit, costume, wear
லிபாஸ் என்பதை எப்படிப் பொருள் கொண்டாலும் சேலை, சல்வார் கமீஸ், கவுன் போன்ற ஆடை, உடை மற்றும் நீதிபதிகள், பாதிரியார்கள், பட்டம் பெறுவோர் மற்றும் சாதாரண ஆண்கள், பெண்கள் அணிந்து கொள்ளும் அங்கி என்றே பொருள்படும். மேலும் ஆடைகள் பற்றிச் சொல்லும் திருக்குர்அன் வசனங்கள்...
''ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும் அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம் (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது'' (007:026, 27வது வசனத்ததையும் பார்க்கவும்)
மனிதன் மானத்தை மறைத்துக் கொள்ள உடம்பில், அணிந்து கொள்ளும் ஆடை அலங்காரத்தைப் பற்றிச் சொல்லும் இறைவன், உள்ளத்தில் அணிந்து கொள்ளும் ஆடையைப் பற்றியும் சிலாகித்து உதாரணமாக: தக்வா - இறையச்சம் எனும் ஆடையே சிறந்தது என்று உள்ளத்திற்கு அணிய வேண்டிய ஆடையைப்பற்றியும் இங்கே சிறப்பித்துக் கூறுகிறான்.
அங்கு அவர்களுக்கு ஆணிவிக்கப்படும் ஆடை பட்டாக இருக்கும். - ...and their garments there will be of silk (022:023. 035:033)
மறுமையில் சொர்க்கவாசிகளுக்கு அணிவிக்கப்படும் ஆடைகள் பற்றிச் சொல்லப்படுகிறது.
உதாரண ஆடை:
அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம். (078:010. 025:047)
மனிதன் ஓய்வெடுத்து உறங்குவதை நிம்மதியெனும் ஆடையாக இரவை ஆக்கினோம் என்று இறைவன் உதாரணமாகக் கூறுகிறான்.
''அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக பசி மற்றும் பயம் எனும் ஆடையை அல்லாஹ் அவர்களுக்கு அணிவித்தான்'' (016:112)
இங்கும் பசியையும், பயத்தையும் ஆடைகளென்று உதராணமாக இறைவன் குறிப்பிடுகின்றான்.
இங்கு குறிப்பிட்ட வசனங்களில் ''லிபாஸ்'' என்ற வாசகமே இடம்பெறுகிறது, தமிழறிஞர்கள் மற்றும் சில ஆங்கில அறிஞர்கள் லிபாஸ் என்பதை ஆடை என்றே மொழிபெயர்த்திருக்கிறார்கள் ஆடை என்பதுதான் சரியான - பொருத்தமான மொழிபெயர்ப்பு!
இந்தப் பொருத்தத்தின்படி அழகிய முன்னுதாரணத்தில்: கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் மானம் - மரியாதை - கெளரவம் எனும் விலை மதிப்பற்ற ஆடையாகத் திகழ்கிறார்கள்.
மேதகு நண்பர் ஏமாறாதவனின் கூற்றுப்படி, ''They are the keepers of your secrets, and you are the keepers of their secrets.'' என்று மொழி பெயர்த்தால்...
ஆடை என்பதை secrets என்று மொழிபெயர்த்துப் பாருங்களேன், குழப்பந்தான் மிஞ்சும்.
நன்றி!

Friday, February 16, 2007
குரைஷி குலத்தில் 12 ஆட்சியாளர்கள்.
இஸ்லாம் மார்க்கத்தில் சமூகம், இனம், குலம், கோத்திரத்திற்கெல்லாம் எந்த மதிப்பீடுமில்லை என்று வரும் 049:013ம் இறைவசனம் எடுத்துக் கூறுகிறது. குலங்கள், கோத்திரங்களாக இருப்பதும் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காகவேயன்றி, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற அடிப்படையில் பெருமை பாராட்டுவதற்கல்ல. நீங்கள் எந்தக் கோத்திரத்தையும் - எந்த குலத்தையும் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதனால் உங்களில் ஒருவர் உயர்ந்தவராகவே, தாழ்ந்தவராகவோ ஆகிவிட மாட்டார். இறைவனை எவர் அஞ்சுகின்றரோ அவரே இறைவனிடத்தில் அதிகம் சிறந்தவராவார்.
மனிதர்களே! நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக பல கிளைகளாகவும் கோத்திரங்களாவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அஞ்சுபவர்தான் அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன், நன்கறிபவன். (திருக்குர்ஆன், 049:013)
சிந்திக்கும் திறன் பெற்ற எவரும் மறுத்துப் பேச முடியாத அளவுக்கு மேற்கண்ட வசனம் இனமாச்சரியங்களுக்கு சாவுமணி அடிக்கிறது. ஆனாலும், எதற்கோ - யாருக்கு தமது விசுவாசத்தைக் காண்பிக்க வேண்டிய கட்டாயத்திலிருப்பவர்கள் தொடர்ந்து இஸ்லாம் மார்க்கத்தைத் திரிப்பதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.
அந்த வரிசையில் குரைஷியர்கள் பற்றி இஸ்லாம் உயர்வாகப் பேசியிருக்கிறது, குரைஷியரல்லாதவர்கள் குரைஷியரை விடத் தாழ்ந்தவர்கள் - தாழ்ந்த ஜாதியினர், இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் - குரைஷிக் குலத்தை சேர்ந்தவர் என்பதால் மக்களை ஆள்வதற்குத் தகுதியானவர்கள் குரைஷி குலத்தவர்களே என்று - தீர்ப்பு சொல்லி விட்டதாக, புதிய திரிபுகளை சலவை செய்யப்பட்ட தங்கள் அறிவுக்கேற்ற மாதிரி விளங்கி கீழ்கண்ட நபிமொழியை எடுத்து வைக்கிறார்கள்.
''நான் ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, அதை என் அடிமை நாஃபிவு வசம் கொடுத்தனுப்பினேன். அதில் '' நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸ் எதையேனும் எனக்குத் தெரிவியுங்கள்'' என்று கேட்டிருந்தேன்.
அவர்கள் எனக்குப் பதில் கடிதம் எழுதினார்கள். (அதில் பின் வருமாறு தெரிவித்திருந்தார்கள்.
ஒரு வெள்ளிக்கிழமை தினத்தன்று (மாயிஸ்) அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் (விபச்சாரக் குற்றத்திற்காக) கல்லெறிந்து கொல்லப்பட்ட மாலைப் பொழுதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''மறுமை நாள் நிகழ்வதற்கு முன் உங்களை பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் ஆளும்வரை இந்த மார்க்கம் நிலைபெற்றிருக்கும். அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்'' ... (முஸ்லிம், 3723)
ஒரு அடிமட்ட மூடன் கூட, ஜாதி வெறியைக் காட்டுவதற்காக, அல்லது ஆண், பெண் என பாலின வேறுபாடுகளை தூண்டுவதற்காக இந்த நபிமொழியைக் கையாள மாட்டான். ''மறுமை நாள் நிகழ்வதற்கு முன்'' என்று நபிமொழியில் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளதே இது ஒரு முன்னறிவிப்பு என்பதை தெளிவாகக் காட்டுகிறது. அப்படியிருக்கும்போது இதை இனவெறிக்கு சான்றாக வைத்தவரின் அறிவுத் திறமையை எந்த பட்டியலில் சேர்க்க...?
''ஆதம் (அலை) படைக்கப்பட்டது முதல் அந்த (மறுமை)நாள் வரும் வரையிலும் தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் எதுவும் ஏற்படுவதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
''பெரும் பொய்யர்களான தஜ்ஜால்கள் ஏறத்தாள முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை இறுதிநாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 3609)
மக்களை வழிகெடுக்கும் கொடியவன் தஜ்ஜால் தோன்றாமல் மறுமை நாள் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் ஏராளமான முன்னறிவிப்புகள் செய்திருக்கிறார்கள். இதனால் தஜ்ஜால் உயர்ந்தவன் - உயர்ந்த ஜாதிக்காரன் என்று பொருள் கொண்டால் அது முட்டாள்தனம்.
''பன்னிரண்டு ஆட்சியாளர்கள் தோன்றுவார்கள், அனைவரும் குரைஷிகளாக இருப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 7223)
தனக்குப்பின் தொடர்ந்து ஆட்சிக்கு வரும் பன்னிரண்டு பேர்கள் குரைஷி குலத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் என்று எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி அறிவிக்கப்பட்டதே இந்த முன்னறிவிப்பு. மற்றபடி குரைஷியர்களை சிறப்பித்துக் கூறியதல்ல...
''இந்தக் குரைஷிக் குலத்தவர் (களில் சிலர்) மக்களை அழித்து விடுவார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், (அப்படியொரு நிலை வந்தால்) 'நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று' கேட்டார். ''அவர்களிடமிருந்து மக்கள் விலகி வாழ்ந்தால் நன்றாக இருக்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 3604)
'உண்மையாளரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான நபி (ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தரின் அழிவு குரைஷி இளைஞர்களின் கரங்களில்தான் உள்ளது' என்று சொல்ல நான் கேட்டேன்'' - அபூ ஹூரைரா (ரலி) (புகாரி, 3605, 7058)
குரைஷியர்கள் உயர் குலத்தினரோ - உயர் ஜாதியினரோ அல்ல. அவர்களும் சராசரி மனிதர்களைப் போன்றவர்களே! குரைஷியரிடமும் நல்லவர்களும் கெட்டவர்களும் தோன்றுவார்கள். ஆட்சிக்கு வரும் குரைஷியர்களால் சமுதாயத்திற்கு அழிவும் ஏற்படும் என்று சேர்த்தே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இதையெல்லாம் சாதாரணமாகப் படித்தாலே புரிந்து கொள்ள முடியும் ஆனால் சிந்தனை சுத்தமாக இருக்க வேண்டும்.
முஹம்மது இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அறிவித்தார்
முஆவியா(ரலி) அவர்களிடம் குறைஷிகளின் ஒரு தூதுக் குழுவில் ஒருவனாக நான் வருகை தந்திருந்தபோது அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு அம்ர் பின் ஆஸ்(ரலி) அவர்கள் 'கஹ்தான் குலத்திலிருந்து மன்னர் ஒருவர் தோன்றுவார்'' என்று அறிவிப்பதாகச் செய்தி வந்தது. முஆவியா(ரலி) கோபமடைந்து எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுடைய தகுதிப் படியுள்ள வர்ணனைகளால் புகழ்ந்துவிட்டு பின்னர், 'இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின்பு கூறுகிறேன். உங்களில் சிலர், அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத, அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அறிவிக்கப்படாத செய்திகளைப் பேசுவதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் உங்களிடையேயுள்ள அறியாதவர்கள் ஆவர். வழி கெடுத்து விடுகிற வெற்று நம்பிக்கைகளைக் குறித்து நான் உங்களை எச்சரிக்கிறேன் - ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், 'இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும். அவர்களுடன் அது தொடர்பாகப் பகைமை பாராட்டுவோர் எவரையும் அல்லாஹ் முகம் குப்புறக் கவிழ்த்தே தீருவான். மார்க்கத்தை அவர்கள் நிலைநாட்டி வரும் வரை இந்நிலை நீடிக்கும்'' என்று கூற கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள். (புகாரி, 3500, 7139)
குரைஷியர்கள் மட்டுமல்ல எந்தக் குலத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியாளராக வந்தாலும், மார்க்கத்தை நிலை நாட்டும் வரை அவர்கள் ஆட்சியில் நீடிப்பார்கள், தீனை நிலைநாட்டத் தவறினால் மக்களால் அகற்றப்படுவார்கள். குரைஷியர்களும் மக்களால் அகற்றப்பட்டார்கள். பிறகு கஹ்தான் எனும் குலத்திலிருந்து ஒருவர் ஆட்சியாளராக வந்து மக்களை வழி நடத்திச் செல்வார் என்பதை வரும் நபிமொழி கூறுகிறது...
''கஹ்தான் குலத்திலிருந்து ஒரு மனிதர் மக்களைத் தம் கைத்தடியால் ஓட்டிச் செல்பவராகத் தோன்றாதவரை உலக முடிவு நாள் வராது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 3517)
உயர்ந்த குலம் - உயர்ந்த ஜாதி என்று பார்த்து தலைவரைத் தேர்ந்தெடுக்க இஸ்லாம் சொல்லவில்லை. மாறாக...
நபி (ஸல்) அவர்கள் 'விடைபெறும்' ஹஜ்ஜின்போது ஆற்றிய உரையில், ''அல்லாஹ்வின் வேதப்படி உங்களை வழி நடத்துகின்ற அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக்கப்பட்டாலும் அவரது சொல்லையேற்று அவருக்குக் கீழ்படியுங்கள்'' என்று கூறினார்கள். (முஸ்லிம், 3750)
இன்னும், பல அறிவிப்புகள் குரைஷிகள் அல்லாதவர்களும் ஆட்சியாளராக வருவார்கள் என்பதைச் சொல்லி, அப்படி வருபவர் எந்த ஜாதியினர் என்று பார்க்காமல், அல்லாஹ்வின் வேதப்படி மக்களை வழி நடத்தும், உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட கருப்பு நிற அடிமையொருவர் தலைவராக வந்தாலும் அவருக்குக் கீழ்படிந்து நடக்கவே இஸ்லாம் கட்டளையிடுகிறது.
நிறம் - இனம் - மொழி - உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாடுக்கு இஸ்லாத்தில் இடமில்லை, இஸ்லாத்தில் ஜாதியை நிறுவ முயற்சிப்பவர்கள் தக்க சான்றுகளுடன் எழுதலாம் நன்றி!

Monday, January 29, 2007
முன் மாதிரியாக ஒரு வரலாறு.
இஸ்லாம் வழங்கிய ஷரியா என்பது, இஸ்லாத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். மார்க்க அறிஞர்கள், நீதிபதிகள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மற்றும் முஸ்லிம்கள் எவராயினும் அவர்கள் வழங்கும் தீர்வுக்கு திருக்குர்ஆன், சுன்னாவைக் கொண்டு வலு சேர்த்திருக்க வேண்டும்.
திருக்குர்ஆன், சுன்னாவிலிருந்து பெறப்படாத தீர்ப்பு - விளக்கம் எதுவாயிருந்தாலும் அது சொன்னவரின் கருத்தாகவேக் கொள்ளப்படும். அல்லாஹ் அருளியதைக் கொண்டே தீர்ப்பளிக்க வேண்டும் என்ற முக்கிய நிபந்தனையை திருக்குர்ஆன் விதிக்கிறது...
எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் மறுப்பவர்கள். (005:044)
...அவர்கள் அநீதி இழைத்தவர்கள். (005:45)
...அவர்கள் குற்றவாளிகள் (005:047)
மார்க்கத் தீர்ப்புகள் இஸ்லாத்தின் ஆதாரங்களின் அடித்தளத்தின் மேல் நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்று மேற்கண்ட இறை வசனங்கள் தெளிவு படுத்துகிறது. ஷரியாவின் தீர்ப்பு என்று சொல்லிக் கொள்ளும் நீதிமன்றங்களின் நீதிபதிகளானாலும் அந்தத் தீர்ப்புகள் அல்லாஹ் அருளியதிலிருந்து பெறப்பட்டதாக இருக்க வேண்டும். அதாவது ஒரு தீர்ப்பின், முன்மாதிரி - நகல் - பிரகாசம் அது இஸ்லாத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியில்லாத தீர்ப்புகள் எதுவும் ஷரியாவிலிருந்து பெறப்பட்டது என்ற அந்தஸ்தை இழந்து விடும்.
ஒரு வரலாற்றுச் சம்பவம் முன் மாதிரியாக.
நபி யூஸுஃப் (அலை) சிறுவராக இருந்தபொழுது, எகிப்து நாட்டில் அற்ப விலைக்கு விற்கப்பட்டார். அவரை விலைக்கு வாங்கிய அமைச்சரின் வீட்டில் வளர்ந்து வந்தார். யூஸுஃப் (அலை) வளர்ந்து வாலிபப் பருவத்தை அடைந்த போது அமைச்சரின் மனைவி, யூஸுஃப் (அலை) அவர்களை அடைந்திட ஆசை கொள்கிறாள். வீட்டில் யாரும் இல்லா நேரத்தில் ''வாசல்களை அடைத்து வா'' என்று அமைச்சரின் மனைவி, யூஸுஃப் (அலை) அவர்களிடம் கூறுகிறாள்.
இதை யூஸுஃப் (அலை) மறுக்க, அமைச்சரின் மனைவி அவரை பலவந்தமாக அடைய முற்படுகிறாள். இந்த முயற்சியில் அமைச்சரின் மனைவி, யூஸுஃப் (அலை) அவர்களின் சட்டையின் பின்புறத்தைக் கிழித்து விடுகிறாள். அந்த நேரத்தில் அமைச்சர் வந்துவிட, நடந்த சம்பவத்தைத் தலை கீழாக மாற்றி தன்னிடம் தகாத செயலுக்கு முயற்சி செய்ததாக பழியை யூஸுஃப் (அலை) அவர்களின் மீது சுமத்துகிறாள். அதை அவர் மறுத்துரைக்கிறார்.
''அவரது சட்டை முன்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை கூறுகிறாள், அவர் பொய்யர். அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் பொய் கூறுகிறாள், அவர் உண்மையாளர்'' என்று அவளது குடும்பத்தைச் செர்ந்த ஒருவர் சான்றுரைத்தார்.
அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டதை அவ(ளது கணவ)ர் கண்ட போது. ''இது உனது சூழ்ச்சியே பெண்களாகிய உங்களின் சூழ்ச்சி மிகப் பெரியது'' என்றார்.
பிறகு வேறெரு சந்தர்ப்பத்தில், ''அவரை நான் தான் மயக்கப் பார்த்தேன் அவர் விலகிக் கொண்டார்'' என்று அமைச்சரின் மனைவி ஒப்புக் கொள்கிறாள். இந்த வரலாற்றுச் சம்பவங்களை திருக்குர்ஆனில் 012வது அத்தியாயம், 019லிருந்து 032வது வசனங்கள் வரை வாசிக்கலாம்.
பலவந்தம் செய்யப்பட்டவரிடம் தடயங்கள் இருக்குமெனில் அதை ஆய்வு செய்து குற்றவாளிகளை தீர்மானிக்கலாம் என்பதை படிப்பினையாக மேற்கண்ட திருமறை வசனங்கள் நம் முன் வைக்கிறது. பலாத்காரம் - வன்புணர்ச்சி செய்யப்பட்ட பெண், தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தன்னை பலாத்காரம் செய்தவனை அடையாளம் காட்டி புகார் செய்தால், அதிகாரிகள் பலாத்காரம் செய்தவனை விசாரிக்கும் போது அவன் அதை மறுத்தால், பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணையும், பலாத்காரம் செய்தவனையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி குற்றவாளியை உறுதி செய்யலாமென்றால் அதை இஸ்லாம் தடை செய்யவில்லை.
நவீனத்துவத்திற்கு இஸ்லாம் எதிரானதல்ல. எல்லாக் காலத்திலும், எந்த நிலையிலும் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது மறுக்கப்படக்கூடாது என்பதில் இஸ்லாம் உறுதியாக இருக்கிறது.
பலாத்காரம் செய்வது ஆணாதிக்கத்தின் ஆளுமை என்று ஒரு பக்கமே சாய்ந்து விடக்கூடாது. வன்புணர்ச்சி செய்யப்பட்டேன் என்று சொல்லும் எல்லாப் பெண்களையும் கண் மூடித்தனமாக நம்பிடவும் கூடாது. சதிவலை பின்னி, ஒருவரையொருவர் பழி தீர்த்துக் கொள்வதில் ஆண், பெண் இருவரும் சமமானவர்கள். நடந்த சம்பவம் - பலாத்காரம் செய்யப்பட்டவள், பலாத்காரம் செய்தவன் - இருவர் மட்டுமே அறிந்து, பலாத்காரம் செய்தவன் தன் மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டை மறுத்தால் மரபணு மருத்துவ சோதனைக்கு உள்ளாக்கி நீதி வழங்கலாம். (இறைவன் மிக அறிந்தவன்)

Thursday, January 25, 2007
நபியின் எளிய வாழ்க்கை.
தருமி அவர்களே, நீங்கள் அடிக்கடி எம்மை நினைவுபடுத்திக் கொள்கிறீர்கள் நன்றி! உங்களின் மறுமொழியை அனுமதித்தேன். தொழில் நுட்பக் கோளாறோ என்னவோ தெரியவில்லை, மறுமொழி சம்பந்தப்பட்ட பதிவில் வெளி வரவில்லை. மீண்டும் அனுமதித்துப் பார்த்தேன் இது ஏற்கெனவே வந்து விட்டதென்று ஏற்க மறுத்து விட்டது. நீங்கள் கேள்வியாக வைத்திருப்பதால், விளக்கத்தைத் தனிப் பதிவில் சொல்லலாமே என்று இப்பதிவு!
உங்கள் மறுமொழி...
Dharumi has left a new comment on your post "இறைவன் மன்னிக்காத குற்றம்.":
இன்னொரு சந்தேகம்; அதை இங்கே கேட்பதில் ஒரு வசதி. அதனால் இந்தப் பழைய பதிவுக்கே, தொடர்ச்சியாக இருக்கட்டுமே என்று வந்துள்ளேன்.
இஸ்லாமிய பதிவர்களின் பதிவுகளிலிருந்து அறிந்தவை: இறக்கும் போது நபி சொத்துக்கள் ஏதுமற்றவராக, எளியவராக, படுத்த வெறும் பாயின் அழுத்தங்கள் முதுகில் பதிந்தவராக இருந்தார்; கடனாளியாக இறக்கக் கூடாதென்பதற்காக கடைசியில் கையில் இருந்த சொற்ப காசை தனக்குக் கடன் கொடுத்தவர்களிடம் திரும்பக் கொடுத்தார்.
சரியாகச் சொல்லியுள்ளேனா?
மேலும் அறிந்தவை: முஸ்லீம் ஒன்றுக்கு மேல் பெண்களை மணம் செய்யலாமென்றாலும் அவர் தான் மணக்கப் போகும் பெண்ணை / பெண்களை நல்லபடியாகக் காப்பாற்றும் அளவுக்கு வசதியோடு இருக்கவேண்டியது அவசியம்.
(கேள்வி: 1)அந்த அளவு தரித்திரத்தில் வாழ்ந்தவரென்றால் அவரால் எப்படி அத்தனை பெண்களை மனைவியாக்க முடிந்தது? அது தடை செய்யப்பட்டதல்லவா?
நபி இறந்த பிறகு அவருக்குப் பின் வந்தவர்கள் நபிக்கு வழித்தோன்றல்கள் என்று யாரையும் சொல்ல முடியாது. அதனால் அவரது சொத்தின் மேல் அவரது மனைவியர்களுக்கு எந்த வித பாத்தியதையும் கிடையாது என்று சொல்லிவிட்டதாகவும் வாசித்தேன்.
(கேள்வி: 2)இறந்தபிறகு தர்க்கம் வரும் அளவு சொத்தை விட்டு விட்டுச் சென்று விட்டதாகத் தெரிகிறதே? பரம ஏழையாயிருந்து இறந்ததாகச் சொல்லப்பட்டவரிடம் எப்படி dispute வரும் அளவு சொத்து?
Publish this comment.
Reject this comment.
Moderate comments for this blog.
Posted by Dharumi to விமர்சனம் - விளக்கம் at 1/23/2007 02:46:43 AM
-------------------------------
//இஸ்லாமிய பதிவர்களின் பதிவுகளிலிருந்து அறிந்தவை: இறக்கும் போது நபி சொத்துக்கள் ஏதுமற்றவராக, எளியவராக, படுத்த வெறும் பாயின் அழுத்தங்கள் முதுகில் பதிந்தவராக இருந்தார்; கடனாளியாக இறக்கக் கூடாதென்பதற்காக கடைசியில் கையில் இருந்த சொற்ப காசை தனக்குக் கடன் கொடுத்தவர்களிடம் திரும்பக் கொடுத்தார்.
சரியாகச் சொல்லியுள்ளேனா?// - தருமி
ஒரு வல்லரிசின் அதிபராக இருந்த நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது, ''ஒரு யூதரிடம் தமது கவச ஆடையை ஈடாக வைத்து, முப்பது பக்கா கோதுமையைப் பெற்றிருந்தார்கள். அதை மீட்காமலேயே மரணித்தார்கள்'' இதைச் சேர்த்துக் கொண்டால் நீங்கள் சொல்லியது சரிதான்!
இனி உங்கள் இரு கேள்விக்கும் பொதுவாகவே சொல்லி விடுகிறேன்.
மக்காவைத் துறந்து மதீனா வந்தடைந்த அன்றே தொழுகைக்கான பள்ளிவாசல் கட்டுவதற்காக இரு இளைஞர்களுக்குச் சொந்தமான நிலத்தை விலைக்குக் கேட்டார்கள். இலவசமாகத் தருவோம் விற்க மாட்டோம் என்று இளைஞர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் இறுதியில், இலவசமாகப் பெறாமல் தமது சொந்தப் பணத்தைக் கொடுத்து அந்த இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டது. அதுதான் இன்றைய மஸ்ஜிதுந் நபவி என்று அழைப்படும் மதீனாவில் அமைந்தள்ள நபியின் பள்ளிவாசல்.
பள்ளிவாசல் கட்டுவதற்காக விலை கொடுத்து வாங்கிய நிலத்தில் சிறிது இடத்தை ஒதுக்கி, தமக்குத் தங்குவதற்கு மிகச் சிறிய அளவிலான வீடுகளை நபி (ஸல்) அவர்கள் அமைத்துக் கொண்டார்கள்.
ஆன்மீகம், ஆட்சி என இரு தலைமைப் பொறுப்புகள் நபி (ஸல்) அவர்களின் மீது சுமத்தப்பட்டிருந்தது. அதனால் தலைமைப் பொறுப்புகளை நிர்வாகம் செய்வதற்கே முழு நேரங்களும் சரியாக இருந்தது. மற்ற தொழில்கள் செய்வதற்கான அவகாசங்கள் இருக்கவில்லை. ஆயினும் சமுதாயப் பணிகளை நிறைவேற்றிக் கொண்டு, குடும்பத்திற்கான வருவாய்க்கும் வழி செய்திருந்தார்கள்.
நூறு ஆடுகள் கொண்ட ஆட்டுப் பண்ணையை அமைத்து, அதற்கொரு மேய்ப்பவரையும் அமர்த்திக் கொண்டார்கள். ஒரு ஆடு குட்டி போட்டால் பெரிய ஆடு ஒன்றைத் தமக்கென எடுத்துக் கொள்வார்கள். இப்படியே, ஆட்டுப் பண்ணை நூறு ஆடுகளுக்கும் குறையாமல் பார்த்துக் கொள்வார்கள். மேலும் ஆடுகளிலிருந்து கிடைக்கும் பால், அதுவும் குடும்பத்திற்கு கிடைத்துக் கொண்டிருந்தது. பல மனைவியரைக் கொண்ட நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த வருவாய் பற்றாக் குறையாகவே இருந்திருக்கும்.
மேலும், நபி (ஸல்) அவர்கள் போரில் பங்கெடுத்துக் கொண்டார்கள். போரில் தோற்றவர்களின் உடமைகள் வெற்றிப் பெற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் வழமை இருந்தது. தோற்றவர்களின் உடமைகள் வெற்றி பெற்ற அணியிலுள்ள போர் வீரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்படும். நபி (ஸல்) அவர்களும் - குதிரையேற்றத்திலும், வாள் வீச்சிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள் - போரில் கலந்து கொண்டதால் போர் வீரர்களுக்கு கிடைக்கும் பங்கு அவர்களுக்கும் கிடைத்தது. அப்பவும் எளிய வாழ்க்கையே வாழ்ந்தார்கள்.
இவ்வாறு நபி (ஸல்) அவர்களுக்கு கைபர், பதக் என்ற தோட்டங்கள் கிடைத்தன. அதிலிருந்து கிடைத்த வருமானம் நபியின் குடும்பத்தினருக்கும், ஏழைகளுக்கும் செலவிடப்பட்டு வந்தது. நபியவர்களின் மரணத்திற்கு முன்...
''என் வாரிசுகள் ஒரு தீனாரைக் கூட (வாரிசுப்) பங்காகப் பெறமாட்டார்கள். என் துணைவியருக்கான வாழ்க்கைச் செலவும் என் (பிரதிநிதி மற்றும்) ஊழியரின் ஊதியமும் போக நான் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமேயாகும்.'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' (புகாரி)
நபி (ஸல்) அவர்கள் மேற்கண்டவாறு அறிவித்து விட்டதால், நபியவர்களின் மரணத்திற்குப்பின் அந்த சொத்துக்கள் ஆட்சியாளர்களின் பொறுப்பில் ஏற்கப்பட்டு, அதில் கிடைக்கும் வருமானத்தில் நபியின் மனைவியருக்கு வாழ்க்கைச் செலவுக்குக் கொடுக்கப்பட்டு வந்தது. அவர்களின் மறைவுக்குப் பின் அதுவும் கொடுக்க வேண்டிய அவசியமில்லாமல், ஊழியர்களின் செலவு போக, அனைத்தும் அரசாங்கத்தில் சேர்க்கப்பட்டு தர்மம் செய்யப்பட்டது.
இந்தப் பதிவையும் பார்த்து விடுங்கள்!
நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரரசின் மன்னராகத் திகழ்ந்தார்கள். அரசு நிதியில் கோதுமைகள், பேரீச்சம் பழங்கள், ஆடுகள், மாடுகள், ஒட்டகங்களென குவிந்திருந்து அவற்றை அனுபவிக்கும் முழு அதிகாரம் இருந்தும் எளிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். பசியின் காரணமாக வயிற்றில் கல்லையும் கட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
ஒருமுறை ஒரு கிராமவாசி வந்து நபி (ஸல்) அவர்களின் மேலாடையை இழுத்தார், முரட்டுத் துணியாக இருந்ததால் நபியவர்களின் பிடரி சிவந்து விட்டது. கிராமவாசி துணியை இழுத்துக் கொண்டே ''முஹம்மதே எனது இரு ஒட்டகங்களின் நிறைய பொருட்களைத் தருவீராக! உமது செல்வத்திலிருந்தோ, உமது தகப்பனாரின் செல்வத்திலிருந்தோ நீர் தரப்போவதில்லை'' என்று கூறுகிறார். ''இழுத்துக் கொண்டிருக்கும் என் மேலாடையை விடும் வரை பொருட்களை தர மாட்டேன்'' என்று நபியவர்கள் கூறிய பின்னும் ''நான் விட மாட்டேன்'' என்று அவர் கூறினார். இவ்வாறு மூன்று முறை கூறிய போதும், விட மாட்டேன் என்று மறுத்து ''இவரது ஒரு ஒட்டகத்தில் கோதுமையையும், இன்னொரு ஒட்டகத்தில் பேரீச்சம் பழத்தையும் ஏற்றி அனுப்புவீராக'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நபிமொழியின் கருத்து)
மன்னரிடமிருந்து, நாட்டின் குடி மக்கள் தமக்குச் சேர வேண்டியதை உரிமையுடன் கேட்டு வாங்கிச் செல்கிறார்கள். ஆனாலும் ஸகாத் எனும் தர்மமாக வழங்கப்பட்ட செல்வங்களை தாமும், தம் குடும்பத்தாரும் உண்ணலாகாது என்று தடை விதித்துக் கொண்டார்கள். எளிய வாழ்க்கையை விரும்பித் தேர்ந்தெடுத்துக் கொண்ட நபி (ஸல்) அவர்களை மணம் செய்து கொண்ட பெண்களும் எளிமையை விரும்பியே ஏற்றுக் கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்களின் சொத்துக்காக சச்சரவு நடந்தது உண்மைதான் -

இதை அறிவித்த பின் சச்சரவில் நீடித்துக் கொண்டிருக்கவில்லை!

Subscribe to:
Posts (Atom)