Sunday, November 25, 2007

முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாய் மாற்றுவது மிகவும் சுலபம்!

ஒரு கிறிஸ்தவ அறிஞரின் அறிக்கை


டாக்டர் J. டட்லி வுட்பரி, Dudley Woodberry என்பவர் ஒரு கிறிஸ்தவ அறிஞர் இவர் கிராமப்புறங்களில் வாழும் முஸ்லிம்களின் வாழ்க்கை - அவர்களை எப்படி கிறிஸ்தவர்களாக மாற்றுவது என்பனவற்றை ஆராய்ந்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் சுருக்கத்தைக் கீழே தருகின்றோம்.

(டாக்டர். டட்லி வுட்பரி என்பவர் தான் அமெரிக்க ஜனாதிபதி கார்ட்டருக்கு இஸ்லாமிய நாடுகளைப் பற்றியதொரு அறிக்கையைத் தயாரித்தத் தந்தவர்.)

என்னுடைய பார்வையில் இஸ்லாத்தை இரண்டாக பிரிக்கலாம். 1. நாட்டுப் புறங்களில் வாழும் பாமர மக்களிடையே இருக்கும் இஸ்லாம். இதனை கிராமிய இஸ்லாம் (Folk Islam) என அழைக்கலாம். 2. உண்மையான இஸ்லாம் (Classical Islam).

கிராமிய இஸ்லாம் என்பது இஸ்லாத்திற்கு முன்பிருந்த பல மூடப்பழக்க வழக்கங்களையும், மந்திர தந்திர மாயாஜாலங்களையும் தன்னகத்தே கொண்டது. இந்த இஸ்லாம் பெரும்பாலும் பாமர மக்களிடையே பழக்கத்திலிருக்கின்றது. இந்தப் பாமர மக்கள் தங்கள் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் நோய் நொடிகளுக்கும் மந்திர தந்திரங்களைப் பயன்படுத்தி நிவாரணம் காண்பதில் தீவிரமாக இருக்கின்றார்கள். மெஞ்ஞானிகள் என கருதப்படும் சூஃபியாக்கள் இந்த இஸ்லாத்தை மக்கள் மத்தியில் வேரூன்றச் செய்தவர்கள்.

இந்தக் கிராமிய இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள் தங்கள் நடைமுறை வாழ்க்கையில் மூடத்தனம் நிறைந்த பல ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைபிடிக்கின்றார்கள். மெஞ்ஞானிகள் எனக் கருதப்படும் சிலர் இந்தப் பாமர மக்களிடையே பல மூட நம்பிக்கைகளையும் சாதுர்யமாகத் திணித்துள்ளனர்.

மூடப் பழக்க வழக்கங்கள் நிறைந்த இந்தக் கிராமிய இஸ்லாத்தைத்தான் முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் பின்பற்றி வருகின்றார்கள்.

முஸ்லிம்களில் 70 சதவிகிதத்தினர், மனிதப் புனிதர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பீர்களிடமும் வலிகளிடமும் சென்று தங்களது அந்தரங்க நோய்கள் முதல் அனைத்து நோய்களுக்கும் வைத்தியம் தேடுகின்றார்கள், ஆகவே பீர்களும் வலிகளும் பாமரமக்களிடையே ஆதிக்கம் நிறைந்தவர்களாக இருக்கின்றார்கள்.

சவூதி அரேபியா போன்ற நாடுகளில் இந்த இஸ்லாத்திற்கு அதிகமாக இடமில்லை. காரணம் அங்கே உள்ள அரசுகள் இந்த மூடதனங்களை ஒட்டுமொத்தமாகத் தடை செய்துள்ளது.

மலேசியா - இந்தியா - இந்தோனேசியா நாடுகளில் இந்தக் கிராமிய இஸ்லாம் 'ஷேக்' குகளின் ஆசியோடு பாமர மக்களிடையே பீடு நடை போடுகின்றது.

இஸ்லாத்தை ஒரு கொள்கையாகவும் இறைவனின் வழிகாட்டுதல்களை வாழ்வின் இலட்சியமாகவும் கொண்டு வாழம் உண்மையான முஸ்லிம்கள் (Classical Muslims) இந்தக் கிராமிய இஸ்லாத்தின் பிடியை மெல்ல மெல்ல தளர்த்தி வருகின்றார்கள்.

எகிப்து நாட்டில் மூடத்தனமான இந்தக் கிராமிய இஸ்லாத்திற்கு சாவுமணி அடித்தது முஸ்லிம் சகோதரத்துவம் என்ற இக்வானுல் முஸ்லிமுன் இயக்கம். இந்த இயக்கத்தை முன்னோடியாகக் கொண்டு முகிழ்ந்த பல இயக்கங்கள் பாமர மக்களை உண்மையான இஸ்லாத்தின் பக்கம் இழுத்து வருகின்றன.

எனினும் முஸ்லிம்களில் - பெரும் பகுதியினர் இந்தக் கிராமிய இஸ்லாத்தைப் பின்பற்றியே வாழ்ந்து வருகின்றனர்.

கிறிஸ்தவர்களாகிய நாம் இந்தக் கிராமிய இஸ்லாத்தைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்களிடையே தான் அதிகமாக நமது பிரச்சாரத்தை செய்ய வேண்டும். இவர்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதே எளிது. 1960 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை உலகெங்கும் கிறிஸ்தவத்திற்குத் தாவிய முஸ்லிம்கள் அனைவரும் இந்தக் கிராமிய இஸ்லாத்தைச் சார்ந்தவர்களே! முஸ்லிம்களை கிறிஸ்தவத்திற்கு மாற்றும் நமது பணி பீர்களாலும், வலிகளாலும் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வரும் இந்த முஸ்லிம்களைச் சுற்றியே இருந்திட வேண்டும்.

(லண்டனில் இருந்து வெளியாகும் FOCUS இதழிலிருந்து எம்.ஜி.எம். நன்றி: சமரசம்)

அந்நஜாத், செப்டம்பர் 1986

8 comments:

முஸ்லிம் said...

அதெல்லாம் அந்தக்காலம் இப்போ பெரும்பான்மை கிராமத்து முஸ்லிம்களிடமும் இஸ்லாத்தை பற்றிய தெளிவு ஏற்பட்டு விட்டது.

அரபுத்தமிழன் said...

உலக இறுதி நாள் வரை சத்தியத்திற்கு
எதிராக அசத்தியம் பல வழிகளில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கும்.
முஸ்லிம்களின் இறை நம்பிக்கையைக்
குலைப்பதற்கு அவ்வப்போது சோதனைகள் ஏற்படத்தான் செய்யும். நாம் ஒவ்வொருவரும் மரணம் வரை
இறை நம்பிக்கை பறி போய் விடக்கூடாதே என்று பயந்து வாழ வேண்டும்.

Unknown said...

//கிராமிய இஸ்லாம் என்பது இஸ்லாத்திற்கு முன்பிருந்த பல மூடப்பழக்க வழக்கங்களையும், மந்திர தந்திர மாயாஜாலங்களையும் தன்னகத்தே கொண்டது.//

//கிறிஸ்தவர்களாகிய நாம் இந்தக் கிராமிய இஸ்லாத்தைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்களிடையே தான் அதிகமாக நமது பிரச்சாரத்தை செய்ய வேண்டும். இவர்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதே எளிது. //

வரிகளுக்கிடையில் உள்ளதை புரிந்துகொள்ள முடிந்தது. நன்றி

அபூ முஹை said...

முஸ்லிம் அவர்களே, உங்கள் வருகைக்கு நன்றி!

நீங்கள் சொல்வது சரிதான்.

அபூ முஹை said...

அ.இப்னுஜுபைர் அவர்களே, உங்கள் வருகைக்கு சன்றி!

சோதனைகள் ஏற்படும் போது எதிர்கொள்ளும் ஆற்றலை இறைவன் அருள வேண்டும்.

அபூ முஹை said...

புகழேந்தி அவர்களே, உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

சதுக்க பூதம் said...

எந்த மதத்தினராக இருந்தாலும், மதம் பிடித்தவர்களை மனிதர்களாக மாற்றுவதுதான் கடினம்

அபூ முஹை said...

//எந்த மதத்தினராக இருந்தாலும், மதம் பிடித்தவர்களை மனிதர்களாக மாற்றுவதுதான் கடினம்//

ஐயா சதுக்க பூதம்,

உங்களுக்கும் மதம் பிடித்திருப்பது எழுத்தில் தெரிகிறது நன்றி! உங்கள் வருகைக்கும்.