Saturday, July 16, 2005

முஹம்மது நபி தமக்காக யாரையும் பழி வாங்கியதில்லை!

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனக்காக யாரையும் பழி வாங்கியதில்லை என்று இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்கள் கூறுகிறது. ஆரோக்கியம் என்பவர் "முகம்மது செய்த கொலைகள்'' என்ற தலைப்பில் கவ்வைக்குதவாத - இஸ்லாத்திற்கு வெளியே எழுதியதை இஸ்லாத்தின் ஆதாராமாகக் காட்ட முயற்சி செய்திருக்கிறார். இஸ்லாத்திலிருந்து ஆதாரங்களை முன் வைத்து இஸ்லாத்தை விமர்சிக்க வேண்டும் அதுதான் அறிவு சார்ந்த விமர்சனமாக இருக்கும் இது பற்றி பலமுறை முஸ்லிம்கள் வலைப்பதிவில் எழுதி விளக்கியிருக்கிறார்கள்.

டாக்டர் ஏ.என் சலீம் எழுதியதாக, முகம்மது செய்த கொலைகள் என்று அடுக்கியுள்ள ஆரோக்கியம் அவர்கள் அந்தக் கொலைகளின் செய்திகள் இடம் பெற்ற நேரடி ஹதீஸ் நூல்களின் பெயர்களைக் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், அதுவரை இது அவதூறாகவே இருக்கும்

ஒரு ஹதீஸின் விளக்கம்.

பனூ முஸ்தலிக் போரின்போது பெண் போர்க் கைதிகள் சிலர் எங்களுக்குக்கு கிடைத்தனர். அவர்களுடன் கருவுற்று விடக் கூடாதென்றும் நாங்கள் விரும்பினோம். எனவே புணர்ச்சி இடை முறிப்பு 'அஸல்'' செய்து கொள்வது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இதைச் செய்யாமலிருப்பதால் உங்களுக்கு எந்தத் தீங்கும் நேர்ந்துவிடப் போவதில்லை ஏனெனில் அல்லாஹ் மறுமை நாள்வரை நான் படைக்கவிருப்பவற்றை எழுதி முடித்துவிட்டான்'' என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பில் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: 'படைக்கப்பட உள்ள எந்த உயிரையும் அல்லாஹ் படைத்தே தீருவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர், அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) புகாரி,7409)

உடலுறவின் போது கர்ப்பம் தரிக்காமல் இருக்க உச்சக்கட்டத்தில் விந்தை வெளியேற்றுவதற்கே அரபியில் ''அஸல்'' என்று சொல்லப்படும். இப்படிச் செய்யலாமா? இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? என்று நபித்தோழர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கிறார்கள். ''நீங்கள் அஸல் செய்தாலும் செய்யா விட்டாலும் கருவறையில் இறைவன் படைக்க நாடியதை படைத்தே தீருவான்'' இறைவன் படைக்க நாடியதை யாராலும் தடுக்க முடியாது இறைவன் படைக்க நாடாததை யாராலும் படைத்து விட முடியாது'' என்கிற கருத்தில் நபி (ஸல்) அவர்கள் விளக்கமளிக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு தொடர்ந்து ஆணுறையைப் பயன்படுத்தி தாம்பத்தியத்தில் ஈடுபட்டு வந்த தம்பதியருக்கு குழந்தை ஜனித்தது என்று செய்திகளில் படித்த நினைவு முழுச் செய்தியும் சரியாக நினைவில்லை இந்த செய்தியை அறிந்தவர்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி!

கரு ஏற்பட்டு விடக்கூடாது என்று எச்சரிக்கையாக இருந்தாலும் இறைவன் நாடினால், பல லட்சம் உயிரணுக்களில் ஒரேயொரு உயிரணு நீந்திச் சென்று கருவை ஏற்படுத்திவிடும் - இறைவன் நாடியதை படைத்தேத் தீருவான். இந்த ஹதீஸின் அடிப்படையிலேயே தற்காலிகக் கருத்தடையை இஸ்லாம் அனுமதிக்கிறது என்று முஸ்லிம்கள் ஆதாராமாகக் கொள்வார்கள்.
மேற்கண்ட நபிமொழிக்கு அச்சில் ஏற்றுவதற்கு கை கூசும் அளவுக்கு, ஆரோக்கியம் அவர்கள் விளக்கவுரை!? எழுதினார். கண்டு கொள்ள நாதி இல்லை!

பனூ முஸ்தலிக் போர் பற்றி நான் கண்ணியமாகவே விளக்கமளித்திருந்தேன். ''அப்புறம் ஏன்லா உங்கள் ஊரில் அங்கங்கு குண்டு வெடிக்காது? என்று ஆரோக்கியம் நாகரீகமற்ற தலைப்பை வைத்திருந்தார். கண்டு கொள்ள நாதி இல்லை!

நல்லாடியாரின் ஜுலை 15,2005ன் பதிவு சற்று நிதானமிழந்து - அவசரத்தில் பதிந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. நல்லாடியாரின் பதிவைக் கண்டித்து களமிறங்கிய நடுநிலையாளர்கள், ஆரோாக்கியம் அவர்களின் நாகரீமற்ற எழுத்தை ஏன் கண்டு கொள்ளவில்லை என்று கண்டிப்பாக நான் கேட்க மாட்டேன். இங்கே முஸ்லிம் வலைப்பதிவர்களுக்கு சொல்லிக் கொள்வது இதுதான்..

எழுதுகின்ற விஷயத்தைக் கவனியுங்கள், எழுதுபவர் யார் என்ற கவனம் வேண்டாம். வேண்டுமென்றே எழுதும் - பிறர் எழுத்துக்களில் உள்ள வன்முறையை ஊதாசீனப்படுத்துங்கள். நிதானத்தை இழந்துவிட வேண்டாம், நீங்கள் நடுநிலை சமுதாயம் என்பதை மறந்து விட வேண்டாம். இஸ்லாத்தை விமர்சிப்பவர்களுக்கு, தாமதம் ஆனாலும் தக்க ஆதாரத்தின் அடிப்படையில் விளக்கம் அளியுங்கள். தரக்குறைவான வார்த்தைகளைக் கண்டிப்பாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அவமரியாதையாகப் பேசுவது நயவஞ்சகத் தன்மையிலொன்றாக இஸ்லாம் கூறுகிறது. (எழுதியவற்றில் பிழையிருந்தால் திருத்துங்கள்.)

அன்படன்,
அபூ முஹை

3 comments:

பாபு said...

//இஸ்லாத்திலிருந்து ஆதாரங்களை முன் வைத்து இஸ்லாத்தை விமர்சிக்க வேண்டும் அதுதான் அறிவு சார்ந்த விமர்சனமாக இருக்கும் இது பற்றி பலமுறை முஸ்லிம்கள் வலைப்பதிவில் எழுதி விளக்கியிருக்கிறார்கள்//

உங்களின் விளக்கங்கள் அவதூறுகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் நல்ல பதிலாக அமைகின்றன.

//இங்கே முஸ்லிம் வலைப்பதிவர்களுக்கு சொல்லிக் கொள்வது இதுதான்..

எழுதுகின்ற விஷயத்தைக் கவனியுங்கள்இ எழுதுபவர் யார் என்ற கவனம் வேண்டாம். வேண்டுமென்றே எழுதும் - பிறர் எழுத்துக்களில் உள்ள வன்முறையை ஊதாசீனப்படுத்துங்கள். நிதானத்தை இழந்துவிட வேண்டாம்இ நீங்கள் நடுநிலை சமுதாயம் என்பதை மறந்து விட வேண்டாம். இஸ்லாத்தை விமர்சிப்பவர்களுக்குஇ தாமதம் ஆனாலும் தக்க ஆதாரத்தின் அடிப்படையில் விளக்கம் அளியுங்கள். தரக்குறைவான வார்த்தைகளைக் கண்டிப்பாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அவமரியாதையாகப் பேசுவது நயவஞ்சகத் தன்மையிலொன்றாக இஸ்லாம் கூறுகிறது. (எழுதியவற்றில் பிழையிருந்தால் திருத்துங்கள்.)//

இஸ்லாத்தைப்பற்றி அவதூறு ஏதும் எழுதி விட்டால் மசூதிகளின் மாடங்களிலிருந்து கொலையாணைகள் பறக்கும் என்று ஒருபுறம் எழுதிக்கொண்டே மறுபுறம் எத்தனைக்கெத்தனை மோசமான அவதூறுகளை பரப்ப முடியுமோ அத்தனை மோசமாக பரப்புபவர்களுக்கும் போலியான நடுநிலை பேணுபவர்களுக்கும் இங்கே படிப்பினை இருக்கிறது. ஈகோவை விட்டு விட்டு உண்மை உணர்வார்களா.......?

நல்லடியார் said...

இஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் அவதூறுகளுக்கும் விளக்கம் கொடுப்பவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸை மட்டும் ஆதாரங்களாக வைத்து அதிகபட்சம் விளக்கம் கொடுக்கிறார்கள். பதிலுக்கு அவர்கள் மத நம்பிக்கை மீதான சந்தேகம் அல்லது குற்றச்சாட்டை வைத்தால்,

1) பெரும்பாலானவர்கள் இதை ஏற்கவில்லை. ஆகவே இதற்கு விளக்கம் தேவை இல்லை.

2) எனக்குத் தெரியாது; நான் எம்மதமும் சம்மதம் என நம்புபவன் அல்லது நம்பிக்கை இல்லாத நாத்திகன்.

3) இப்படி இருக்கலாம் அல்லது இதனால் இருக்கலாம் என்ற அனுமானங்கள்.

4) விவாதத்திற்கு சம்பந்தமில்லாத திசை திருப்பல்கள்

இதுவே, மாற்றுமத பதிவர்களின் அணுகுமுறையாக இருக்கிறது. இவர்களின் தவறான புரிதல்களை தகுந்த விளக்கங்களுடன் எடுத்து வைக்கும் இது போன்ற பதிவுகள் காலத்தின் கட்டாயம்.

அபூ முஹை said...

பாபு, நல்லடியார் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!

''அல்லாஹ் மறுமை நாள்வரை நான் படைக்கவிருப்பவற்றை எழுதி முடித்துவிட்டான்''

மேலே எழுதியுள்ள ஹதீஸ் வாசங்களில் ''நான்'' என்ற வாசகத்தில் எழுத்துப்பிழை உள்ளது எனவே அல்லாஹ் மறுமை நாள்வரை ''தான்'' படைக்கவிருப்பவற்றை எழுதி முடித்துவிட்டான்'' என்று திருத்திக் கொள்ளவும்.

ஆரோக்கியம் என்பவர் தமது http://ennamopo.blogspot.com/2005/07/blog-post_19.html வலைப் பதிவின் பின்னூட்டத்தில் எழுதியது..

அல்லாஹ் மறுமை நாள்வரை ''தான்'' படைக்கவிருப்பவற்றை எழுதி முடித்துவிட்டான்''

'படைக்கப்பட உள்ள எந்த உயிரையும் அல்லாஹ் படைத்தே தீருவான்'

மூல நூலில் இப்படித்தான் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. மேலும் (7409) இந்த ஹதீஸ் 7:172வது வசனத்திற்கு விளக்கமாகவுள்ளது.

அடுத்து..
இஸ்லாம்தான் அடிமைகளை அறிமுகப்படுத்தியது என்பது போல் இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் சித்தரிக்கிறார்கள் கொயபல்ஸ் தத்ததுவம் போல.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராகத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னும் - முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மறைவுக்குப்பின் சில நூறு ஆண்டுகள் வரையிலும் அடிமைகளின் வழக்கம் இருந்து வந்தது. இது போர் கைதிகளை சிறையிலடைக்கும் வழக்கம் ஏற்படுவதற்கு முன்பு, போர் கைதிகளை போர் வீரர்களுக்கு பங்கிட்டுக் கொடுப்பதே வழக்கமாக இருந்தது.

பண்டைய உலகம் ஆண் அடிமைகளிடம் வேலை வாங்குவதும், பெண் அடிமைகளை அனுபவிப்பதும் வழக்கமாகக் கொண்டிருந்தது. அடிமைப் பெண்களை திருமணமின்றி அனுபவிப்பது அநாகரிகமாக நமக்குத் தோன்றினாலும். அன்று அடிமைப் பெண்களை அனுபவிப்பது அங்கீகரிக்கப்பட்டிருந்தது. உலகெங்கும் நடந்த அடிமை வியாபாரத்தை அன்றைய மக்கள் அங்கீகரித்திருந்தார்கள். சந்தைகளில் ஆண், பெண் அடிமைகளை விற்பதும் வாங்குவதும் சர்வசாதாரணமாக ஆடு, மாடு விற்பனையாக நடந்து வந்தது. அதுபோல் போரிலும் வெற்றி பெற்றவர்களுக்கு, தோல்வியடைந்த ஆண், பெண் கைதிகள் அடிமையாக்கப்பட்டார்கள்.

உதாரணமாக:
அபூ முஹை என்பவர் ராணுவத் தளபதி என்பது போல், எதிரணியில் ராணுவத் தளபதியாக ஆரோக்கியம் என்பவர் இருக்கிறார். என்று வைத்துக் கொள்வோம் இரு அணியினருக்கும் பொதுவான போர் நிபந்தனைகளில் - போரில் தோல்வியடைந்தவர்கள் கைது செய்யப்பட்டு, வெற்றியடைந்தவர்களுக்கு அடிமையாக வேண்டும், பெண்கள் போரில் உதவி செய்யும் வழக்கமிருந்ததால் - பெண் போர் கைதிகளும் அடிமையாக்கப்பட்டார்கள். பெண் அடிமைகளை அவர்களின் எஜமானர்கள் அனுபவித்துக் கொள்ளலாம் - அதாவது போரில் நிராகரிப்பாளர்கள் வெற்றி பெற்றால் முஸ்லிம் பெண் போர் கைதிகளை அடிமைகளாக்கி நிராகரிப்பாளர்கள் அனுபவித்தார்கள் - போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றால் நிராகரிப்பாளர்களின் பெண் போர் கைதிகளை அடிமைகளாக்கி அனுபவித்தார்கள்.

போரில் ஆரோக்கியம் என்பவரின் அணி ஜெயித்தால், தோல்வியடைந்த அபூ முஹை என்பவரின் அணியின் பெண் போர் கைதிகளை, அடிமைகளாக்கி ஆரோக்கியம் என்பவரின் அணியினர் அனுபவித்துக் கொள்வார்கள் - போரில் அபூ முஹை என்பரின் அணி ஜெயித்தால், தோல்வியடைந்த ஆரோக்கியம் என்பவரின் அணியின் பெண் போர் கைதிகளை அடிமைகளாக்கி அபூ முஹை என்பவரின் அணியினர் அனுபவித்தக் கொள்வார்கள். இரு போர் அணியினர்களுக்கும், ஒருவரையொருவர் வெற்றி கொண்டால் கைது செய்யப்பட்ட பெண்களை அடிமைகளாக்கி அனுபவிப்பதில் சம உரிமை இருந்தது.

ஆரோக்கியம் என்பவரின் அணியினர் அடிமைப் பெண்களை அனுபவித்துக் கொண்டே, அபூ முஹை என்பவரின் அணியினர் அடிமைப் பெண்களை அனுபவிப்பதை தீண்டத்தகாத மாதிரி விமர்சித்தால் ஆரோக்கியம் என்பவரின் சிந்தனையை என்னவென்பது?

போரில் கைது செய்யப்பட்டவர்கள் அடிமைகளாக இருக்கவும், எஜமானர்கள் அடிமைப் பெண்களை அனுபவிப்பதும் பண்டைய மக்கள் அவர்களாகவே ஒப்புக்கொண்ட சமாச்சாரம். இஸ்லாம் அடிமைகள் விடுதலை செய்யப்படுவதற்கான வழியைக் காட்டியதேயன்றி, இஸ்லாம் அடிமைகளை உருவாக்கவில்லை என்பதை வரலாற்றைப் படித்தவர்கள் தெரிந்து கொள்ளலாம்.