Friday, September 19, 2008

வளர்ப்பு மகன் பெற்ற மகனாக முடியுமா?

shankaran E R has left a new comment on your post "மாற்றாரால் காமுகராகச் சித்தரித்த நபி - ஸைனப் திரும...":

தங்களின் பதிவு கண்டேன். விரிவாக விளக்கியுள்ளீர்கள். ஆயினும் என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. ஏன் நபி தனக்கு மருமகள், அதிலும் தனது வளர்ப்பு மகனின் மனைவியை, விவாகரத்தே ஆனாலும்,மருமகள் முறையிலுள்ள பெண்ணை மீண்டும் திருமணம் செய்ய வேண்டும்? இது அந்நாளைய பொதுவான வழக்கமா? இக்கேள்விக்கு சரியான பதில் தாங்கள் அளித்த சுட்டியிலும் இல்லை.

இக்கேள்விக்கு தங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.

*****

நண்பர் சங்கரன்,

ஒரு பக்கமாக வாசித்து விளங்கியுள்ளீர்கள். மறு பக்கத்தை உள்வாங்கவில்லை என்பதே உங்களால் முழுமையாக புரிந்து கொள்ளாமல் போனதற்குக் காரணம் எனலாம். நபியவர்களின் வளர்ப்பு மகனைத் திருமணம் செய்த ஸைனப் (ரலி) அவர்கள், நபியவர்களின் தந்தையுடன் பிறந்த சகோதரியின் மகளாவார். அதாவது நபியவர்களின் மாமி மகள் என்பதைக் கவனிக்கத் தவறி விட்டீர்கள்!

தந்தையுடன் பிறந்த சகோதரியின் மகள் - மாமி மகள், ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ள அதிகம் உரிமையுள்ளவர்கள். உதாரணமாக: ராஜா என்பவரின் தந்தையுடன் பிறந்த சகோதரியின் மகள், ராஜாவுக்கு முறைப் பெண்ணாவார். அந்தப் பெண்ணுக்கு ராஜா முறைப் பையனாவார். மாமியின் மகளான முறைப்பெண் வெறொருவருக்கு மனைவியாக இருந்தால் தவிர இவ்விருவருக்குமிடையே திருமண உறவு தடுக்கப்பட்டதல்ல.

நபியவர்களுக்கு ஸைனப் முறைப் பெண்ணாவார், ஸைனப்புக்கு நபியவர்கள் முறை மாப்பிள்ளையாவார். இவ்வுறவை யாரும் விரும்பித் தேர்ந்தெடுக்க முடியாது. இது இரத்த சம்பந்தப்பட்ட உறவினால் ஏற்படுவது. இதை மாற்றிடவோ மறுத்திடவோ இயலாது. மறுத்தாலும் அது வெறும் வார்த்தையாக இருக்குமேயன்றி மறுப்பு உண்மையாகிவிடாது.

வளர்ப்பு மகன், வளர்ப்புத் தந்தை என்று சொல்லிக்கொள்வது இரத்த உறவால் ஏற்படுவதில்லை. அதனால்தான் மகன், தந்தை என்று சொல்லாமல் வளர்ப்பு மகன், வளர்ப்புத் தந்தை என்று அடைமொழியோடு அழைக்கப்படுகிறது. வளர்ப்பு மகன் என்று சட்டபூர்வமாக ஆவணங்களில் பதிவு செய்து கொண்டாலும் இரத்த உறவு ஏற்பட்டுவிடாது. ஏனெனில் தந்தை, மகன் உறவு வெறும் வார்த்தைகளால் ஏற்படுவதில்லை.

பெற்ற மகன், வளர்ப்பு மகன் இவ்விரண்டுக்கும் என்றும் ஒற்றுமையில்லாத பெருத்த வேறுபாடு உள்ளது, வளர்ப்பு மகன் ஒருபோதும் பெற்ற மகனாகிவிட முடியாது.

ஸைதை வளர்ப்பு மகன் என்று நபியவர்கள் அறிவிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்போது ஸைத் மணமுடித்து விவாகரத்து செய்த பெண்ணை நபியவர்கள் திருமணம் செய்ய எந்தத் தடையும் இல்லை என்று ஒப்புக்கொள்பவர்கள், வளர்ப்பு மகன் என்று வாயால் சொல்லி விட்டதால் ஸைது மணமுடித்தப் பெண் நபியவர்களுக்கு எவ்வாறு மருமகளாகிவிடுவார்? என்பதையும் சிந்திக்க வேண்டும்.

''உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது'' (திருக்குர்ஆன், 004:023)

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம், பெற்ற மகனின் மனைவியே மருமகள் என்ற தகுதியைப் பெறமுடியும் என்ற கருத்தில் மகனின் மனைவியை திருமணம் செய்வதைத் தடைவிதிக்கிறது. வளர்ப்பு மகனுக்கு இந்தச்சட்டம் பொருந்தாது.

வளர்ப்பு மகனை சொந்த மகனாகக்கருதி இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளைப் புறக்கணிக்கும் முறை அன்றைய காலத்தில் இருந்தது. இன்னாருக்கு இன்னார் மகன் என்பதைத் தீர்மானிப்பது இறைவனின் அதிகாரத்தில் உள்ளது. இன்னொருவரின் மகனைத் தன் வளர்ப்பு மகன் என்று சொல்லி வளர்க்கலாமே தவிர, பெற்ற மகனாகக் கருதுவது போலியான உறவு. அந்த வெற்று உறவைத் தகர்க்கவே வளர்ப்பு மகனின் மனைவி விவாகரத்து செய்யப்பட்டால் அந்தப் பெண்ணை வளர்ப்புத் தந்தை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற சட்டத்தை இறைவன் தன் நபியின் வழியாக நிறைவேற்றினான்.

இவையெல்லாம் ஆக்கத்தில் சொல்லப்பட்டிருந்தும் நீங்கள் கவனிக்கவில்லையோ என்று தோன்றுகிறது. இனியும் உங்களுக்குச் சந்தேகம் உள்ளது எனில், இரத்த சம்பந்தமான உறவில் ஸைனப் (ரலி) அவர்கள் நபியவர்களுக்கு எவ்விதத்தில் மருமகளாகிறார்? என்பதை நீங்கள் விளக்க வேண்டும் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

4 comments:

Shankaran er said...

எனது சந்தேகத்திற்கு விடை அளித்ததற்கு மிக்க நன்றி. முதலில் ஒன்றை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். நபிகள் நாயகத்தை விமர்சிக்கும் எண்ணமோ நோக்கமோ எனக்கு இல்லை.இவ்விஷயத்தை பற்றி திண்ணையில் வந்த ஒரு கட்டுரையைப் பார்த்தே எனக்கு இந்த சந்தேகம் தோன்றியது. தாங்கள் கூறியது போலவே முறைப் பெண்ணாக இருந்தாலும் வேறொருவர், அதுவும் தன்னால் மகனாக வளர்க்கப்பட்டவரின் மனைவியை மணந்து கொள்வது விசித்திரமாக உள்ளது. ஆனால் தாங்கள் கூறியதான " இன்னொருவரின் மகனைத் தன் வளர்ப்பு மகன் என்று சொல்லி வளர்க்கலாமே தவிர, பெற்ற மகனாகக் கருதுவது போலியான உறவு. அந்த வெற்று உறவைத் தகர்க்கவே வளர்ப்பு மகனின் மனைவி விவாகரத்து செய்யப்பட்டால் அந்தப் பெண்ணை வளர்ப்புத் தந்தை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற சட்டத்தை இறைவன் தன் நபியின் வழியாக நிறைவேற்றினான்" என்பது சற்றும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. பிறகு தங்கள் கூற்றுப்படி பார்த்தால் பிறப்பால் உண்டாகாத உறவுகள் குறிப்பாக தந்தை-மகன் (தத்தெடுத்தல் மூலமாக ) அனைத்தும் போலியா?
விளக்கம் எதிர்பார்க்கிறேன்.

Unknown said...

ஒரு குழந்தையை தத்துஎடுத்தால் அதனை சொந்தப்பிள்ளை கருதியே வளர்க்க வேண்டும். இரத்த சம்பந்தமில்லாதுவிட்டாலும் அக்குழந்தையும் அவனின் வாரிசே. இன்னாரின் பிள்ளை என்று சொல்லி வளர்த்தல் பிள்ளைக்கு தந்தையின் பாசம் வருமா? வேற்று மதத்தினர் யாராவது தத்து எடுத்து குழந்தையை இன்னாரின் மகன் நீ என்று சொல்லி சொல்லி வளர்க்கிறார்களா?

வளர்ப்பு மகன் மகனே. அவனின் மனைவி இவருக்கு மருமகள் முறையாகிவிடுவாள்.

முகமதுவின் ஆசை காரணமாகவே இவரின் வளர்ப்பு மகன் விவாகரத்து செய்து அல்லாவின் அனுமதியுடன் முகமது அவளை மணந்தார்

abdul azeez said...

சகோதரர் சங்கரன் அவர்கள்
// பிறகு தங்கள் கூற்றுப்படி பார்த்தால் பிறப்பால் உண்டாகாத உறவுகள் குறிப்பாக தந்தை-மகன் (தத்தெடுத்தல் மூலமாக ) அனைத்தும் போலியா? //

இது சகோதரர் அபு முஹை அவர்களின் கூற்றோ அல்லது முஸ்லிம்களின் கூற்றோ கிடையாது. படைத்த இறைவனின் கூற்று. திருக் குர்ஆனின் வசனங்களின் ஆதாரத்தை கொண்டே விளக்கம் அளித்திருக்கின்றார். அன்றியும் பிறப்பால் உண்டாகாத என்று நீங்களே அறிகிறீர்கள் அதனால் தான் தந்தை-மகன் என்று எதார்த்தமாக போடமுடியாமல் அடைக் குறிப்பில் தத்தெடுத்தல் என்று போட்டுள்ளீர்கள் வளர்ப்பு மகனாக மட்டும் தான் பார்க்க முடியும்.

இப்படி வளர்ப்பது கூட சுய நலத்திற்க்காக தன சொத்து அனாதையாக கூடாது அல்லது தான் முதிர்ந்த வயதில் தங்களை பராமரிக்க மகன் என்ற பெயரில் ஒரு ஆள் வேண்டும் அன்றியும் கொஞ்சி விளையாடி மகிழ தற்காலிகமாக பிள்ளை வேண்டும்.
மா சலாம்.
அப்துல் அஜீஸ்

Unknown said...

அருமையான கேள்வி நண்பா