திருக்குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் பற்றி வரும் பதிவுகளில் தெரிந்து கொள்வோம்.
தற்போது, பிற மத நண்பர்கள் ''குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்'' என்று திருக்குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகளுக்கு சம்பந்தமில்லாதவற்றை குறிப்பிட்டுள்ளனர் அவற்றை இங்கு பார்ப்போம்,
குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்
Scribal errors in the Qur'an
கீழ் கண்டவற்றில் (1) என்று உள்ள பத்தியில்(Column) இருக்கும் வார்த்தைகள் இப்போது உள்ள குர்ஆனில் உள்ளவைகள் ஆகும். அதே போல (2) என்று உள்ள பத்தியில் இருக்கும் வார்த்தைகள் உண்மையில் அவ்வார்த்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்றும் மற்றும் அரபியில் அதனை எப்படி சரிபடுத்தினார்கள் எனபதையும் குறிக்கும்.
(2) (1) (2) (1)
மேலே குறிப்பிடப்பட்ட சில எழுத்து பிழைகள் பற்றி கீழ் கண்ட கட்டுரைகளில் விவாதிக்கப்படுகிறது.
மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 11ல் உள்ள குர்ஆன் வசனம் 21:88 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: page 141, section 3 (a).
மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 15ல் உள்ள குர்ஆன் வசனம் 27:21 பற்றிய
விவரங்கள் அறிய படிக்கவும்: page 96f, second last paragraph.
மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 17ல் உள்ள குர்ஆன் வசனம் 5:29 ஐ பற்றிய
விவரங்கள் அறிய படிக்கவும்: page 18f and page 133, section (d).
மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 19ல் உள்ள குர்ஆன் வசனம் 51:47 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: the middle of page 19 and the last half of page 125.
மேலே உள்ள வார்த்தைகளில் எழுத்துபிழைகள்(Scribal Errors) உள்ளது என்று இபின் கல்தன்(Ibm Khaldun – Classical Scholar) என்பவர் அங்கீகரித்துள்ளார் மற்றும் இவைகள் பிரச்சனைகள்(Problems) என்று ஹமிதுல்லா(Hamidullah – Modern Scholar) என்ற அறிஞரும் அங்கீகரித்துள்ளார்.
பிற மத நண்பர்களே!
விமர்சனம் எதைப் பற்றி என்றாலும் அது அறிவுப்பூர்வமாக நன்கு நீங்கள் அறிந்ததை எடுத்து வைத்து விமர்சனம் செய்யுங்கள், அது வரவேற்கத்தக்கதாக அமையும். நீங்கள் அறியாதவற்றை இது இப்படித்தான் இருக்கும் என்று கோணலாக சிந்தித்து விமர்சிக்காதீர்கள், அது உங்களை கோமாளி பட்டியலில் சேர்த்துவிடும்.
மொழி எழுத்துக்களின் உருமாற்றம்
மொழி எழுத்துக்கள் எல்லாக் காலங்களிலும் ஓர் உருவ அமைப்பில் இருந்ததில்லை.
ஆங்கில எழுத்தின் உருமாற்றங்கள் மற்றும் எழுத்துக்களின் பிற்சேர்க்கையும் அறிய, இங்கு சொடுக்கவும்.
தமிழ் எழுத்துக்களின் உருமாற்றங்கள் படத்தில்:
பண்டைய தமிழ் எழுத்துக்கள் பண்டைய கால மக்களுக்க பழக்கமாகியிருந்தது. இன்று நமக்கு அது குழந்தையின் கிறுக்கலாகத் தோன்றுகிறது. நம் காலத்தில், ''இப்படிக்கு'' என்று எழுதும் போது ''க்கு'' என்பதை முன்பு சேர்த்து எழுதுவோம். ''யானை'' என்று எழுத இந்த ''னை'' யை எழுத மாட்டோம் யானை தும்பிக்கையைத் தூக்கிப் பிளிரும் ஸ்டைலில் யானையின் தும்பிக்கை வடிவோடு ''ன'' வை சேர்த்து எழுதுவோம். இந்த முறை தமிழ் உருமாற்ற எழுத்துக்கள் மறைந்து, எழுத்தில் புதிய உருமாற்றங்கள் தோன்றுகின்றன.
இது எல்லா மொழி எழுத்துக்களுக்கும் உள்ள பொதுவான விதி. எழுத்துரு மாறும் போது சமூகம் அதை எதிர்ப்பதில்லை. பழையன கழிதல் புதியன புகுதல் என எழுத்துருவில் மட்டும் மாற்றங்கள் ஏற்படுவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். இன்று நாம் எழுதும் தமிழ் எழுத்துக்கள் நாளை மாறலாம். எனவே எழுத்துக்களில் மாற்றம் ஏற்படுவது தவறைத் திருத்துவதல்ல, எழுத்துருவில் தோற்றுவிக்கும் முன்னேற்றம் என்று சொல்லலாம்.
பிற மத நண்பர்கள் சுட்டியுள்ள படத்தைப் பார்க்கலாம்,
மேலே படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 11ல் உள்ள குர்ஆன் வசனம் 21:88 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: page 141, section 3 (a).
பிற மத நண்பர்கள் குறிப்பிட்டுள்ள, படத்தில் இடதுபுறம் 11 வது வரிசையில் நாம் கட்டம் வரைந்துள்ள வாசகத்தின் உச்சரிப்பு ''நுன்ஜி'' இரண்டு கட்டத்திலும் உள்ள வார்த்தை ''நுன்ஜி'' என்பது சிறிது அரபி அறிந்திருந்தாலும் புரிந்து கொள்ளலாம். இதற்கு பெரிய அரபுப்புலமை பெற்றிருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
ن+ن+ج+ي=ننجي
ந, ன, ண ஆகிய உச்சரிப்புக்கு அரபியில் ن நூன் என்ற உச்சரிப்பில் இந்த ஓர் எழுத்து மட்டுமே உள்ளது. ந, நா, நி, நீ, ன, னா, ணா, னி, னீ, ணி, ணீ தமிழ் எழுத்துக்களில் நெடில் குறில்கள் இடும்போது எவ்வாறு உச்சரிப்புகள் மாறுகிறதோ அதுபோல், நூன் என்ற மேற்கண்ட அரபி எழுத்தில் தேவையான நெடில் குறில்களை இட்டால் ந, ந் நா, நி, நீ, நு. நூ என்ற உச்சிப்பைப் பெறலாம்.
அரபு எழுத்துகளில் இரண்டு நூன், ஒரு ஜீம், ஒரு ய இந்த நான்கு எழுத்துக்களை நெடில் குறிகளுடன் எழுதினால் نُنْجِي - ''நுன்ஜி'' என்ற வாசிக்கலாம். நுன்ஜி என்ற பதங்கள் இடம்பெற்ற திருக்குர்ஆன் வசனங்கள் படத்தில்:
திருக்குர்ஆன், 010:103வது வசனம்
திருக்குர்ஆன் 019:072வது வசனம்
திருக்குர்ஆன் 021:088வது வசனம்
*****
திருக்குர்ஆன் 010:103
திருக்குர்ஆன் 019:72
திருக்குர்ஆன் 021:088
பிறமத நண்பர்கள் எடுத்துக் காட்டியுள்ள படத்தில் 11வது வரிசையில் நாம் வட்டமிட்ட இரண்டிலும் நுன்ஜி என்று சரியான அரபி எழுத்துக்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றுக்கொன்று எழுத்துருவின் மாடல் - ஸ்டைல் பழசே தவிர, புதிய மாடலில் - புதிய ஸ்டைலில் நுன்ஜி என்று குர்ஆன் வசனப் படங்களில் சிவப்பு, கருப்பு வண்ணத்தில் நாம் வட்டமிட்டுள்ள எழுத்துகளுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.
இதை அறிவுக் குருடுத்தனமாக - //உண்மையில் அவ்வார்த்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்றும் மற்றும் அரபியில் அதனை எப்படி சரிபடுத்தினார்கள்// - என்று விமர்சிக்கும் சத்தியவான் என்ற பெயரில் கயமைத்தனம் செய்யும் அசத்தியவான்கள் உணர வேண்டும். இறை வேதத்தில் கைவரிசையைக் காட்டும் கயமைத்தனத்தை தங்கள் வேதத்தோடு நிறுத்திக் கொள்ளட்டும்.
எங்கே பார்க்கலாம்,
மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 11ல் உள்ள குர்ஆன் வசனம் 21:88 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: page 141, section 3 (a).
உங்கள் படத்தில் 11ம் வரிசையில் உள்ள 021:088வது குர்ஆன் வசனத்தை அரபியில் ஏற்கெனவே இருந்ததை பிற்காலத்தில் என்ன சரிபடுத்தினார்கள்? என்பதை மக்களுக்கு விளக்கி, உங்களை யோக்கியர்கள் என்பதை நிறுவுங்கள் பார்க்கலாம். இல்லையேல் உங்களை இஸ்லாத்திற்கு எதிரான ''வைரஸ்'' பட்டியலில் எழுதிவிடுவார்கள்.
மீண்டும்,
உங்கள் அயோக்கிய அசத்தியவான்கள் குறித்து அடுத்த பகுதியில்...
அன்புடன்,
அபூ முஹை
3 comments:
யூதக் கைக்கூலிகள் யாராவது ஆங்கிலத்தில் லூசுத்தனமாக எங்கேயாவது உளறி வைத்ததை விழுங்கி மீண்டும் வாந்தி யெடுக்கும் இவர்களை விளக்கம் சொல்ல அழைத்தால்....
பாவம்! அவர்கள் என்ன செய்வார்கள்?
சுல்தான் பாய் சொன்னதுதான் சரி...
@அபூ முஹை,
தயவுசெய்து, இதைப்பார்க்கவும்.
http://thirumoolan.blogspot.com/2008/09/blog-post.html
பதிலும் கூறவும். இன்ஷா அல்லா...
Mastan உங்கள் வருகைக்கு நன்றி!
திருமூலம் வலைப்பதிவில் வைத்திருக்கும் கேள்வி புதிய கேள்வியல்ல. ஒவ்வொரு கால கட்டத்திலும் எழுப்பிய கேள்வியாகும்.
இஸ்லாத்தைக் குறித்த கருத்துகளை இறைவன் எப்படியாவது அவர்களுக்கு எட்டச் செய்வான். இஸ்லாத்தைப் பற்றிய செய்தி கிடைக்காதவர்களை தண்டித்துவிட மாட்டான். ஏனெனில் இறைவன் நீதி தவறாதவன்!
இது குறித்து நம் வலைப்பதிவவில் மறுமொழியில் விளக்கமளித்துள்ளோம். இங்கு சொடுக்கவும்
மேற்கண்ட பதிவில் விளக்கிய மறுமொழியின் கருத்து
பதிவையும், பதிவின் மறுமொழிகளையும் படித்தால் தெளிவு பெறலாம். மேலும் சந்தேகம் இருப்பின் மறுமொழியிடவும்.
பதிவிலுள்ள மறுமொழி இங்கு பார்வைக்கு!
//தருமி, மற்று ஜோ உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!
இருவரும் ஒரே மாதிரியானக் கேள்வியையே கேட்டிருக்கிறீர்கள். இங்கே ஒரு உதாரணத்தை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.
பள்ளியில் சேர்ந்து தொடர்ந்து அந்த வருடத்தின் இறுதி வரை படித்த மாணவனுக்குத்தான், தேர்வு நடக்கும் போது கேள்வித்தாள் கொடுக்கப்படும். பள்ளிக்கே செல்லாத மாணவன் பரீட்சை எழுத வேண்டிய அவசியமில்லை, கேள்வித்தாளும் அவனுக்கு அவசியமில்லாமல் போய் விடுகிறது.
''இஸ்லாம் பற்றி எதுவும் அறிந்திராத மக்களுக்கு
''இறைவனுக்கு இணை கற்பிக்கும்'' சட்டம் பொருந்துமா? என்றே கேட்கப்பட்டிருக்கிறது''!
//இன்றாவது communication எல்லாம் நல்லா இருக்கு. இது எதுவும் இல்லாத காலத்தில் (கி.பி. 1000 என்று கொள்வோமே) நம் இன்றைய இந்தியாவில் பிறந்த நம் முன்னோர் என்ன ஆவார்கள்?
இஸ்லாமைத் தெரிந்து கொள்ளாமலேயே வாழ்ந்து மறைந்தது அந்த பாவப்பட்ட மனிதனின் தவறா? அல்லது அப்படி அவனை அப்படிப் படைத்த இறைவனின் தவறா?// -தருமி
//இஸ்லாம் என்றொரு மார்க்கம் இருப்பதையே அறியாமல் இவ்வுலகில் பலர் இருக்கலாம் .அல்லது பிறப்பு ,அல்லது இருப்பிடத்தின் காரணமாக இஸ்லாம் பற்றி தெளிவாக அறிய வாய்ப்பில்லாமல் இருக்கலாம் .அவர்கள் இஸ்லாமை நிராகரித்ததாக எப்படி சொல்ல முடியும் ?அவர்களுக்கும் தண்டனை தானா? அவர்கள் செய்த குற்றம் என்ன ?// - ஜோ
தருமி மற்றும் ஜோ இவர்களின், இந்தக் கேள்வி மிகப் பழமையானக் கேள்வி. கி.மு சுமார் 2000 ஆண்டு வாக்கில், இறைத்தூதர் மோசே என்ற மூஸா(அலை) அவர்கள் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த போது ஃபிர் அவ்ன் இதேக் கேள்வியைத்தான் மூஸா நபியிடம் கேட்டான்...
''மூஸாவே உங்களிருவரின் இறைவன் யார்''? என்று கேட்டான் (திருக்குர்ஆன், 20:49)
''ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி பின்னர் வழி காட்டியவனே எங்கள் இறைவன்'' என்று கூறினார். (திருக்குர்ஆன், 20:50)
''முன் சென்ற தலைமுறையினரின் நிலை என்ன''? என்று அவன் கேட்டான். (திருக்குர்ஆன், 20:51)
''அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் உள்ளது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்'' என்று அவர் கூறினார். (திருக்குர்ஆன், 20:52)
ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த நபி மோசே (அலை) அவர்களிடம் ''நீர் பிரச்சாரம் செய்யும் இந்த ஓரிறைக் கொள்கையை இதற்கு முந்தய தலைமுறையினர் அறிந்திருக்கவில்லையே அவர்களின் நிலை என்ன''? என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது.
அது பற்றி இறைவன் நன்கு அறிந்தவன் அவன் தவறு செய்ய மாட்டான், எதையும் மறக்கவும் மாட்டான் என்றும் மிகத் தெளிவாகத் திருக்குர்ஆன் பதிலளிக்கிறது.
ஒரு விஷயத்தைத் தெரியாதவர் - அதைப்பற்றி அறிந்திராதவர், அதை எப்படிப் பின்பற்ற முடியும்? தெரியாத விஷயத்தை ஒருவர் பின்பற்றவில்லை என்பதற்காக அவரைத் தண்டித்து இறைவன் தவறு செய்பவனல்ல என்பதை மேற்கண்ட இறை வசனங்களிலிருந்து விளங்கலாம்!
ஓரிறைக் கொள்கை பற்றி அறியாததால் பின்பற்றவில்லையா? அல்லது அறிந்தே பின் பற்றவில்லையா? என்பதையும் இறைவன் மறந்து விட மாட்டான் என்பதும் இறைவனால் அறிவிக்கப்படுகிறது.
இதையே தருமி, மற்றும் ஜோ அவர்களுக்கும் விளக்கமாக வைக்கிறேன் நன்றி!
அன்புடன்,
அபூ முஹை//
Post a Comment