Monday, September 01, 2008

தினமலரெனும் சாக்கடை

உலக முஸ்லிம்களின் புனித மாதங்களில் ரமதான் மாதமும் ஒன்று. வைகறைப் பொழுதிலிருந்து பகல் முழுவதும் மாலை சூரியன் மறையும் வரை சுமார் 14 மணி நேரம் உண்ணாமல், பருகாமல் தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் இன்னும் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து உண்ணா நோன்பிருந்து முஸ்லிம்கள் இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர்.

இவ்வாண்டு ரமதான் மாத துவக்கத்தில், இஸ்லாத்திற்கு எதிரான விரோதப் போக்கில் முழு வீச்சாக ஈடுபடும் பார்ப்பனீய சண்டாள தினமலர் எனும் கழிசடை நாளேடு முஸ்லிம்களை பயங்கரவாதியாக சித்திரம் வரைந்து தமது பாஸிச கொள்கையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தக் கழிசடை நாளேட்டின் செயல்பாடுகள் நமக்கு பன்றிகளை நினைவுபடுத்துகிறது. எவ்வளவு நல்ல நீர் இருந்தாலும் துர் நாற்றம் நிறைந்த சாக்கடையில் புரண்டு சுகம் அனுபவிப்பதே பன்றியின் குணமாகும். இன்று திருந்திவிடும், நாளை திருந்தும் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் சாக்கடையில் புரளும் பன்றியின் இயல்பு மாற்றத்திற்குரியதல்ல என்பது போல் தினமலரெனும் கழிசடை நாளேட்டின் இயல்பும் மாற்றத்திற்குரியதல்ல.

எவரும் தீவிரவாதிகளாகப் பிறப்பதில்லை, தினமலர் போன்ற கழிசடை பார்ப்பனீயர்களால் தீவிரவாதிகள் உருவாக்கப்படுகிறார்கள். முஸ்லிம்கள் குறித்த செய்திகளை தவறாது திரித்து எழுதும் இந்தக் கழிசடை நாளேடுக் கும்பலுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

- அபூ முஹை


மீள் பதிவு,

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் புனிதமிகு ரமலான் மாதம் தொடங்கியிருக்கும் இன்று, மத வேறுபாடு பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களும் முஸ்லீம்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டிருக்கும் இந்த நல்ல வேலையில், பார்ப்பன வெறி பிடித்த தினமலர் நாளிதழ் மட்டும் தனது முஸ்லீம் விரோத போக்கை சற்றும் சளைக்காமல் மேற்கொண்டுள்ளது. பல இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் கூட பெயரளவுக்காவது இந்த ரமளான் மாதம் தொடங்கியதன் நிமித்தம் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்திருக்கும் சமயத்தில் தினமலர் மட்டும் தனது விஷமத்தனத்தை சில உள்நோக்கங்களுடன் மேற்கொண்டுள்ளது என்பது தான் மிகவும் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று.

குறிப்பாக பொது மக்கள் மத்தியில் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை ஊட்ட வேண்டும் என்ற ஒரு பாசிச எண்ணத்துடன் இந்த நேரத்தில் இந்த விஷமக் கார்ட்டூனை வெளியிட்டு தனது அரிப்பைத் தீர்த்துக்கொண்டுள்ளது.

இன்று வேலூரிலிருந்து வெளிவந்த தினமலர் நாளிதழின் இலவச பதிப்பான கம்ப்யூட்டர் மலரின் 12ம் பக்கத்தில், வேண்டும் என்றே கட்டுரைக்கும் தலைப்பிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல், உள்நோக்கத்துடன் 'சினிமா பார்க்க ஒரு வெப்சைட்' என்று தலைப்பிட்டு பல சர்ச்சைகளை ஏற்படுத்திய ஒரு கார்ட்டூனையும் சேர்த்து வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஒரு முஸ்லீமின் தலைப்பாகையின் மேல் வெடிகுண்டின் திரி பற்ற ஆரம்பிப்து போல் உள்ள அந்த சர்ச்சைக்குரிய கார்ட்டூனை போட்டு தனது முஸ்லீம் விரோத சிந்தனையை இணம் காட்டியுள்ளது.

இப்பொழுது ஒரிசாவில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்வ வெறியர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் கொலை வெறித்தாக்குதல்களை மறைத்து, அதை விட்டும் பொது மக்களின் கவனத்தை திசைத்திருப்பும் நோக்கத்துடன் இந்த கார்ட்டூன் வெளியிடப்பட்டிருப்பதாக பல சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஊடகங்கள் தங்கள் கைவசம் இருக்கின்றது என்ற காரணத்திற்காக எதை வேண்டுமானாலும் எழுதி வெளியிடலாம் என்ற துரோக எண்ணத்துடன் களம் இறங்கி இருக்கும் தினமலர் நாழிதளுக்கு எதிராக நாம் ஒவ்வொருவரும் எழுதுகோல் ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றோம் என்பதை உணர வேண்டும். இனிமேலும் உண்டோம் உறங்கினோம் என்றில்லாமல் நம்மால் இயன்ற அளவு இந்த மீடியாக்களின் பக்கம் கவனம் செலுத்தவேண்டும். நாம் ஒவ்வொருவரும் நமது முழுபலத்தையும் பிரயோகித்து இந்த மீடியாக்களின் பக்கம் கவனம் செலுத்தினால் வெற்றி வெகுதூரத்தில் இல்லை... என்பதை புரிந்து செயல்படுவோம்.

நன்றி: அதிரை எக்ஸ்பிரஸ்

10 comments:

╬அதி. அழகு╬ said...

முதல் தவற்றின்போது தகுந்த முறையில் சரிசெய்யப் படாவிட்டால் கடைசி வரையில் இப்படித்தான் ஆகும்.

அதற்குத்தான் முதற் கோணல் முற்றும் கோணல் என்று பெரியவர்கள் சொல்லி வைத்தனர்.

மதுரை தினகரன் அலுவலகம் முதற் கோணலின்போதே 'சரியான முறையில்' திருத்தப் பட்டது.

நிழலின் குரல் said...

//நாம் ஒவ்வொருவரும் நமது முழுபலத்தையும் பிரயோகித்து இந்த மீடியாக்களின் பக்கம் கவனம் செலுத்தினால் வெற்றி வெகுதூரத்தில் இல்லை... என்பதை புரிந்து செயல்படுவோம்.
//

எது கல்லெறிவதா குண்டு வைப்பதா ?

அபூ முஹை said...

அதி.அழகு உங்கள் கருத்திற்கு நன்றி!

அபூ முஹை said...

//எது கல்லெறிவதா குண்டு வைப்பதா ?//

நெழலு,
தமிழ் சரியா படிக்க வராதா?

//தினமலர் நாழிதளுக்கு எதிராக நாம் ஒவ்வொருவரும் எழுதுகோல் ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றோம் என்பதை உணர வேண்டும்.//

எழுதுகோலை ஆயுதமாக்குங்கள் என்று அதே பாராவில் சொல்லப்பட்டுள்ளது. பிறகு ஏன் கல்லு, குண்டுன்னு திரிக்கிற!

அது சரி!

பன்றிக்கு உள்ள புத்திதானே பன்றியின் நிழலுக்கும் இருக்கும்.

வால்பையன் said...

உண்மையில் இது குறிவைத்து தாக்கப்பட்டதாக உணருகிறீர்களா?

எனகென்னவோ அவர்களுக்கு நீங்கள் தான் இலவச விளம்பரம் தேடித்தருவதாக தோன்றுகிறது

அபூ முஹை said...

//உண்மையில் இது குறிவைத்து தாக்கப்பட்டதாக உணருகிறீர்களா?//

வால் பையன்,

விட்டால் அச்சுப் பிழை என்று சொல்வீர்களோ?

Anonymous said...

அன்புச் சகோதரர்களே

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

புனித ரமலான் மாதத்தில் உள்ள நமக்குப் புனித ரமலான் மாதத்தின் மகத்துவத்தினை உணர்ந்துச் செயல்படும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக.

நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைக் கேலி செய்து டென்மார்க் நாளிதழ் வெளியிட்ட கேலி சித்திரத்தை, பார்ப்பன கைக்கூலி பத்திரிக்கையான தினமலமும் இப்புனித ரமலானின் ஆரம்ப நாளில் வெளியிட்டச் செய்தியைத் தாங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.

அசத்தியத்திற்கு எதிராகப் போராடிய முஸ்லிம்களுக்கு முதல் வெற்றியை இப்புனித ரமலானில் தான் இறைவன் நமது நாயகத்துக்கு அருளினான். அது தியாகத்தின் வெற்றி.

அத்தியாகத்தினை நேசிக்கும் எவரும், பார்ப்பனக் கைக்கூலி ஏடான தினமலத்தினை உலகில் எங்குமே இனி நிம்மதியுடன் வலம் வர வைக்கக் கூடாது.

நாயகத்தினை இகழ முயன்ற தினமலத்தை இனிமேலும் வளர விடுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.

பல்லாண்டுகளாக முஸ்லிம் சமுதாயத்தின் மீது அறிவிக்கப்படாத எழுத்துப் போரினை மேற்கொண்டப் பார்ப்பன ஏடான தினமலத்தினை அழிப்பதற்கான நேரம் இது. இது அசத்தியத்திற்கு எதிரான மற்றோர் சத்தியப்போர்.

இதில் நாமே வெற்றி பெறுவோம். ஒன்றிணையுங்கள்.

சமூகத்தின் இரத்தத்தில் இரண்டறக் கலந்து விட்ட தினமலத்தினை அழிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதையும் கவனத்தில் கொள்வோம்.

அதற்காக ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற வகையில் அவரவர் வசிக்கும் பகுதிகளில் தங்களால் இயன்ற வழிகளில் தினமலத்தை ஒழிக்க முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

தமிழகத்தில் வாழும் நமது சொந்தங்கள் அதற்கான முன்முயற்சியை ஒவ்வொன்றாக எடுக்க ஆரம்பித்து விட்டனர்.

நேற்று தமுமுகவைச் சேர்ந்த நமது சொந்தங்கள் அதன் முதல் படியை ஆரம்பித்து வைத்துள்ளனர். தொடர்ந்து மனித நீதி பாசறையைச் சேர்ந்த நமது சொந்தங்களும் போரை அறிவித்து விட்டனர். இது அப்படியே மற்றைய நமது சொந்தங்களான ததஜ, முஸ்லிம் லீக், ஜாக் என அனைத்துச் சொந்தங்களையும் படரட்டும்.

இதில் வெளிநாட்டில் வாழும் நமது சொந்தங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன?

1. பிரிண்டட் வடிவமாக வெளிநாடுகளில் வரும் தினமலத்தினை முடக்குவதற்கு உரிய வழிவகைகளை அந்தந்த நாட்டின் இஸ்லாமியத்துறைகளைத் தொடர்பு கொண்டு முயலலாம்.

2. தினமலத்தின் இணைய தளத்தை அந்தந்த நாடுகளில் முடக்க முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

இவ்விரு வழிகளையும் வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம்கள் உடனடியாக செய்யுங்கள்.

இப்புனித ரமலான், நாயகம் காட்டிய வழியில் போராட்டத்தின் மாதமாக, தியாகத்தின் மாதமாக, வெற்றியின் மாதமாக நமக்கு அமையட்டும்.

இறைவன் நமது போராட்டத்தில் வெற்றியைத் தந்தருள்வானாக. ஆமீன்.

உங்கள் சொந்தம்
இறை நேசன்.

Anonymous said...

//எது கல்லெறிவதா குண்டு வைப்பதா ?//

பார்ப்பனீயத்தின் குரலே,

எதைச் செய்ய வேண்டும் என நீ விரும்புகிறாய்?. எழுத்து வாள் மட்டும் போதும் என்று நாங்கள் நம்புகிறோம். அதில் சரியாகவில்லை எனில், நீ கொடுக்கும் ஆலோசனையை முயற்சித்துப் பார்க்கலாம்.

இறை நேசன்

Ibrahim said...

Strictly advicing Dhinamalar not to behave cilly like this. Muslims are basiclly calm,but due to somebody like dhinamalar, muslims are introduced like teror. but please dont try to look at true face of muslims. because we are following the way which we learn from our leader prophet, so we will not take arms instead we will take pen as arm which is power than all.

By ibrahim

அபூ அப்திர்ரஹ்மான் said...

அன்பான அபூமுகை அவர்களுக்கு, தினமலரைக் கண்டிக்கும் உங்கள் பதிவுகள் மிகவும் அருமை. நண்பர் சீரா கூறியது போன்று குறிப்பிட்ட படத்தை நீக்கி விடுங்கள். கார்டுன் வெளியானது அனைவருக்கும் தெரியும். கண்டனத்துக்கு கார்டூன் மேற்கோள் தேவையில்லை என்று நினைக்கிறேன். அதனை நீக்கி விடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.