மதீனாவிலிருந்து ஷாம் நாட்டை நோக்கிச் செல்லும் பாதையில் சுமார் 170 கீ.மீ தொலைவிலுள்ள ஒரு நகரத்தின் பெயர் தான் கைபர். இங்கு யூதர்கள் வசித்து வந்தனர். இவர்கள், மதீனா நகர்ப்புற யூதர்களுடன் சேர்ந்து கொண்டு முஸ்லிம்களுக்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்தனர்.
மதீனா மீது போர் தொடுக்கவும், முஸ்லிம்களைத் தாக்கவும் மக்கா இணைவைப்பாளர்களுக்கு எல்லா வகையிலும் உதவிகளும் செய்து வந்தனர். மதீனா புறநகர்ப் பகுதியிலிருந்து நாடு கடத்தப்பட்ட 'பனூ நளீர்' குலத்து யூதர்களும் கைபர் வாசிகளுடன் சேர்ந்து கொண்டு குழப்பம் விளைவித்து வந்தனர். இதனால் நபி (ஸல்) அவர்கள் 1500-க்கும் அதிகமான முஸ்லிம்களுடன் புறப்பட்டுச் சென்று 10 நாட்களுக்கும் அதிகமாக முற்றுகையிட்டு, போர் செய்து கைபர் நகரைக் கைப்பற்றினார்கள். கைபரில் தோல்வி கண்ட பிறகே யூதர்களின் விஷமத்தனம் அடங்கியது. இது கைபர் போர் காரணியின் சுருக்கமான வரலாறு.
ஆனால், இஸ்லாத்தை விமர்சிக்கும் ஒரு மன நோயாளி, கைபர் போரின் காரணத்தையே தலை கீழாக புரட்டிப் போடுகிறார். நபி (ஸல்) அவர்கள், ஒர் யூதப் பெண்ணை அடைவதற்காகவே படை திரட்டிக் கொண்டு கைபர் நகரத்தை நோக்கிச் சென்றதாகவும், ஸஃபிய்யாவின் கணவரையும், தந்தையையும் கொடுரமாகக் கொன்று விட்டு ஸஃபிய்யாவை, நபி (ஸல்) அவர்கள் பலவந்தமாக அடைந்ததாக பிதற்றியிருக்கிறார்.
இது தொடர்பாக வைத்த இரு ஹதீஸ்...
Volume 5, Book 59, Number 524:
Narrated Anas:
The Prophet stayed for three rights between Khaibar and Medina and was married to Safiya. I invited the Muslim to h s marriage banquet and there wa neither meat nor bread in that banquet but the Prophet ordered Bilal to spread the leather mats on which dates, dried yogurt and butter were put. The Muslims said amongst themselves, "Will she (i.e. Safiya) be one of the mothers of the believers, (i.e. one of the wives of the Prophet ) or just (a lady captive) of what his right-hand possesses" Some of them said, "If the Prophet makes her observe the veil, then she will be one of the mothers of the believers (i.e. one of the Prophet's wives), and if he does not make her observe the veil, then she will be his lady slave." So when he departed, he made a place for her behind him (on his and made her observe the veil.
http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/059.sbt.html#005.059.524
*****************
Volume 5, Book 59, Number 522:
Narrated Anas bin Malik:
We arrived at Khaibar, and when Allah helped His Apostle to open the fort, the beauty of Safiya bint Huyai bin Akhtaq whose husband had been killed while she was a bride, was mentioned to Allah's Apostle. The Prophet selected her for himself, and set out with her, and when we reached a place called Sidd-as-Sahba,' Safiya became clean from her menses then Allah's Apostle married her. Hais (i.e. an 'Arabian dish) was prepared on a small leather mat. Then the Prophet said to me, "I invite the people around you." So that was the marriage banquet of the Prophet and Safiya. Then we proceeded towards Medina, and I saw the Prophet, making for her a kind of cushion with his cloak behind him (on his camel). He then sat beside his camel and put his knee for Safiya to put her foot on, in order to ride (on the camel).
http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/059.sbt.html#005.059.524
கைபர் போர் நிகழ்ச்சிகள் சம்பந்தமாக வரும் பல அறிவிப்புகளில், புகாரியில் இடம்பெறும் மேற்கண்ட இரு ஹதீஸ்களை தனது புரட்டல்களுக்கு சாதகமாகத் தேர்ந்தெடுத்து மூடத்தனமாக உளறியிருக்கிறார் மனநோயாளி. ஒரு செய்தியை விமர்சிக்குமுன், அது தொடர்பாக அறிவிக்கப்படும் எல்லா செய்திகளையும் ஓரளவுக்கு ஆய்வு செய்ய வேண்டும் என்பதையாவது அறிந்திருக்க வேண்டாமா? இந்த நியாயத்தை துவேஷிகளிடம் எதிர்பார்க்க முடியாது.
கைபர் போர் பற்றி அதிகமான விபரங்களுடன் முஸ்லிம் நூலில் இடம்பெற்ற செய்தி...
Book 008, Number 3325:
Anas (Allah be pleased with him) reported that Allah's Messenger (may peace be upon him) set out on an expedition to Khaibar and we observed our morning prayer in early hours of the dawn. The Apostle of Allah (may peace be upon him) then mounted and so did Abu Talha ride, and I was seating myself behind Abu Talha. Allah's Apostle (may peace be upon him) moved in the narrow street of Khaibar (and we rode so close to each other in the street) that my knee touched the leg of Allah's Apostle (may peace be upon him). (A part of the) lower garment of Allah's Apostle (may peace be upon him) slipped from his leg and I could see the whiteness of the leg of Allah's Apostle (may peace be upon him). As he entered the habitation he called: Allah-o-Akbar (Allah is the Greatest). Khaibar is ruined. And when we get down in the valley of a people evil is the morning of the warned ones. He repeated it thrice. In the meanwhile the people went out for their work, and said: By Allah, Muhammad (has come). Abd al-'Aziz or some of our com- panions said: Muhammad and the army (have come). He said: We took it (the territory of Khaibar) by force, and there were gathered the prisoners of war. There came Dihya and he said: Messenger of Allah, bestow upon me a girl ont of the prisones. He said: Go and get any girl. He made a choice for Safiyya daughter of Huyayy (b. Akhtab). There came a person to Allah's Apostle (may peace be upon him) and said: Apostle of Allah, you have bestowed Safiyya bint Huyayy, the chief of Quraiza and al-Nadir, upon Dihya and she is worthy of you only. He said: Call him along with her. So he came along with her. When Allah's Apostle (may peace be upon him) saw her he said: Take any other woman from among the prisoners. He (the narrator) said: He (the Holy Prophet) then granted her emancipation and married her. Thabit said to him: Abu Hamza, how much dower did he (the Holy Prophet) give to her? He said: He granted her freedom and then married her. On the way Umm Sulaim embellished her and then sent her to him (the Holy Prophet) at night. Allah's Apostle (may peace be upon him) appeared as a bridegroom in the morning. He (the Holy Prophet) said: He who has anything (to eat) should bring that. Then the cloth was spread. A person came with cheese, another came with dates, and still another came with refined butter, and they prepared hais and that was the wedding feast of Allah's Messenger (may peace be upon him)
http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/muslim/008.smt.html#008.3325
கைபர் போரில் முஸ்லிம்கள் அணியில் 15 பேரும், யூதர்கள் அணியில் 93 பேரும் உயிரிழந்தனர். இந்தப் போரில் யூதப் பெண் ஸஃபிய்யாவின் (இரண்டாவது) கணவர் கினானா இப்னு அபில் ஹகீக் என்பவரும் கொல்லப்படுகிறார். நபி (ஸல்) அவர்களுக்கு, ஸஃபிய்யா என்ற யூதப் பெண் யாரென்றே தெரிந்திருக்கவில்லை. ஸஃபிய்யாவைப் பற்றிய எணணமும் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. போர் முடிந்து கைபர் நகரத்தைக் கைப்பற்றிய பின், திஹ்யா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! கைதிகளில் ஓர் அடிமைப் பெண்ணை எனக்குத் தாருங்கள்' என்று கேட்கிறார். ''நீங்கள் சென்று ஓர் அடிமைப் பெண்ணைப் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் திஹ்யா (ரலி) ஸஃபிய்யாவைப் பெற்றுக் கொள்கிறார்.
இந்நிலையில் ''அல்லாஹ்வின் தூதரே! பனூ குறைழா, பனூ நளீர் குலத்தாரின் தலைவரான ஹுயையின் மகள் ஸஃபிய்யாவை திஹ்யாவுக்கு வழங்கி விட்டீர்களே! என்று ஒருவர், யூதர்களின் அரச குடும்பத்துப் பெண்ணாக ஸஃபிய்யாவை அடையாளம் காட்டிய பிறகு, திஹ்யா (ரலி) அவர்களிடம் வேறு அடிமைப் பெண்ணை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி, நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவை விடுதலை செய்து மணமுடித்துக் கொள்கிறார்கள். (இன்னொரு அறிவிப்பில் ஏழு அடிமைகளைக் கொடுத்தார்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது)
அடிமைப் பெண்ணாகிய ஸஃபிய்யா அழகு படைத்தவர் என்றிருந்தாலும் அவரை அடிமையாகவே வைத்திருந்திருக்க முடியும். குறைழா, நளீர் குலத்தாரின் தலைவரின் மகள் என்று அவருடைய பாரம்பரியத்துக்காக ஸஃபிய்யா அவர்களை விடுதலை செய்து பிறகு நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
மணப் பெண்ணின் சம்மதமில்லாத திருமணம் செல்லாது என்பதால் ஸஃபிய்யா (ரலி) அவர்களின் சம்மதமில்லாமல் நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவை மணமுடிக்கவில்லை.
மாதவிடாய்க்கான காத்திருப்பு நிகழ்ந்திருக்கிறது. மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைந்த பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது மனைவி ஸஃபிய்யாவுடன் உடலுறவு கொண்டார்கள்.
ஆனால், நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவை வல்லுறவு கொண்டதாக கதையளக்கும் இந்த மன நோயாளியின் இஸ்லாம் பற்றிய விமர்சனம் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பெண்ணை வல்லுறவு கொண்டார் என்பது உண்மையாக இருந்திருப்பின் அன்றே இஸ்லாம் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். இன்று நேசமானவர்களுக்கு இஸ்லாத்தை விமர்சிக்கும் வாய்ப்பே இருந்திருக்காது.
//சஃபியாவின் கணவனைக் கொன்று விட்டு அன்றே அப்பெண்ணுடன் வல்லுறவு கொண்டது(ஒரு நாள் கூடத் தாமதிக்கவில்லை முகமது, அதுவும் சஃபியா அழகானவள் என்று கேள்விப்பட்டவுடன் கூப்பிட்டு பார்த்துவிட்டு ஆசை வந்தவுடன் அடைந்தார்),// - நேசகுமார் -
- மேற்கண்ட கருத்து வாசித்த நூல் எது சொல்ல முடியுமா?
அன்புடன்,
அபூ முஹை
16 comments:
Brother.. Assalaamu alaikkum
Good Work.. Keep itup..
--Shahul
வந்தியத் தேவன் உங்கள் வருகைக்கு நன்றி!
வலைப்பதிவில் இரண்டு வந்தியத் தேவர்கள் இருக்கிறீர்கள். இருவரும் ஒன்றா? வெவ்வேறா? தெரியல
அன்புடன்,
அபூ முஹை
ஸபிய்யா அவர்களின் பாரம்பரியம் மிகவும் வலுவானது. உயர்ந்தது. தந்தை வழியில் ஆரோன் நபியையும், தாய் வழியில், யூதர்களின் மிக உயர்ந்த குலமாகிய குரைஷா (Quraisa) தலைவர் வழி வந்தது. ஸபிய்யா அவர்களது இயற்பெயர் - ஜைனப். முதல் திருமணமாக, யூதர்களில் சிறந்த கவிஞராகிய சல்ம் பின் மிஷ்க்காம் என்பவரை முதலில் மணந்திருந்தார்கள். பின்னர் அவர்களுக்குள் ஒத்துப் போகவில்லை என்பதால், மணமுறிவு பெற்றுக் கொண்டார்கள். பின்னர் யூதர்களில் மிகச் சிறந்த வீரன் ஒருவனை மணந்து கொண்டார்கள்.
கைபர் யுத்தத்தில், கணவன் தந்தை மற்றும் ஏனைய ஆண்கள் பலரும் மறித்து விட, அநாதையான அவர், பங்கீட்டின் மூலம் நபித்தோழர் ஒருவருக்கு வழங்கப்பட்டார். அப்பெண்மணியின் பாரம்பாரியத்தை அறிந்திருந்த மற்ற சில தோழர்கள் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
என்ன இருந்தாலும், மிகச்சிறந்த குலம் ஒன்றில் தோன்றிய பெண், அவரது குலப் பெருமைக்கு தகுந்த ஒரு ஆணிடம் தான் ஒப்படைக்கப்படவேண்டுமே தவிர, மற்ற எவரிடத்திலும் கொடுக்கப்படலாகாது என்று வாதிட்டனர்.
ஸ்பிய்யா அவர்களும், தன் குலப் பெருமையை ஒத்திருக்கும் நபி பெருமானார் ஒருவர் மட்டுமே தனக்குத் தகுதியானவர் - அவரிடமே தன்னை ஒப்படைக்க வேண்டும் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டார். அதன் படியே அவர் விருப்பத்திற்கிணங்க, அவர் நபிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஒப்படைக்கப்பட்டதும், ஸபிய்யா அவர்கள் இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். நபிகள் தனது பத்தாவது மனைவியை - தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். வீட்டில் ஆயிஷா அவர்கள் இருந்தார்கள்.
ஆயிஷாவிடம் கேட்கிறார்கள் - " ஸபிய்யாவைப் பிடித்திருக்கிறதா?"
" ஆனால், அவர் யூதராயிற்றே..?" நபிகளிடம் மிகவும் உரிமையும், விமர்சனத்தை உள்ளபடிக்கு வைக்கும் திறமையும் பெற்றவர்கள் ஆயிஷா. மற்ற மனைவியர் அனைவரும் - அந்த உரிமையை மரியாதை என்னும் பண்பின்னுள் மறைத்தே வைத்து புழங்குவார்கள். ஆயிஷா மட்டும் தான் எல்லாவற்றையும் "பேசித் தீர்த்துக்" கொள்ளும் வகை.
ஒரு முறை, ஹஃப்ஸா அவர்கள், பெருமானாரைக் கடிந்து பேசி விட, அது அவர் அன்னையின் வழியாக, தந்தை உமர் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட, உடனே கோபமுற்று விரைந்து சென்ற உமர், தம் மகளை கடிந்து கொண்டார். அத்துடன் அவருக்கு ஒரு அறிவுரையும் கூறினார் - அது " ஆயிஷாவுடன் போட்டி போட முயலாதே" என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் ஆயிஷா அனைவரின் உள்ளத்திலும் பெற்றிருந்த பாசமிகு இடத்தை.
" ஆனால், அவர் யூதராயிற்றே..." என்றதும் நபிகள் அவர் இஸ்லாத்தில் இணைந்து விட்டாரென்றும், தன் குலப் பெருமைக்குத் தகுந்த இடம் கிட்டினால் மட்டுமே, தன் கௌரவம் பாதுகாக்கப்படும் - Hence to honor her dignity in accordance with her status in the Jews community , தான் மணந்து கொண்டதாக விளக்கம் கொடுத்தார் நபிகள் பெருமானார்.
இஸ்லாமியராகவே அவர் தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டாலும், தன் யூத இனத்தாருடன் உண்டான தொடர்பைத் துண்டித்துக் கொள்ளவில்லை. ஒரு முறை உமர் அவர்கள், ஸபியாவிடம் - "நீங்கள் இன்னமும் யூத பழக்கவழக்கங்களை பாதுகாக்கிறீகள் போலிருக்கிறதே.." என்று பூடகமாக கேள்வி வைத்ததும் - அதற்கு அவர் வெடுக்கென்று பதில் சொல்கிறார் - " எனக்கு சனிக்கிழமையை விட வெள்ளிக் கிழமை மிக்க உவப்பானது " என்று தொடரும் அவர்." என் இனத்தாருடன் தொடர்பு வைத்துக் கொள்வதை இஸ்லாம் தடை செய்ய இயலாது.." என்றதும் உமர் அவர்களுக்கு வாயடைத்துப் போயிற்று. இஸ்லாத்தைப் பற்றிய தெளிவான அறிவு ஸபிய்யா அவர்களுக்கு இருந்தது.
ஏக இறைத்துவத்தை ஏற்றுக் கொண்ட, "the people of the Book - வேதம் வழங்கப்பட்ட மக்களுடன் இணக்கம்" இஸ்லாம் இவ்வுலகிறகு வழங்கிய சமத்துவம். இங்கு கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் - ஒரு கேள்வி வைக்கப்படுகிறது - உன் மதத்தின் மூலம் தான் மக்கள் சொர்க்கம் புக முடியுமென்றால், மற்றவர்களின் கதி என்ன? என்ற கேள்வியை, தங்கள் தொடையைத் தட்டிக் கொண்டு வைக்கிறார்கள் - ஏதோ, இஸ்லாத்தை மடக்கி விட்டதாக நினைத்துக் கொண்டு.
ஏக இறைவனை வணங்கும் அனைவரும் சொர்க்கம் புகுவர் என்று தான் இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாமியர்களைத் தவிர வேறு எவரும் சொர்க்கம் புக முடியாது என்று சொல்லவில்லை. ஆனால், அதற்கான நிபந்தனை - ஏக இறைவன். உலகின் முதல் நபி - ஆதம் அவர்கள் ஏக இறைவனையே வணங்கினார்கள். சொர்க்கம் ஏகினார்கள். ஒவ்வொரு நபிமார்களும் ஏக இறைத்துவத்தைப் போதித்து விட்டுப் போக, பின் வந்தவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக பாதை விலகி, தாங்களாகவே பல உருவங்களை குறியீடுகளாக வடிவமைத்து அதன் பின்னர் அதனுள்ளே உறைந்து போய் ஏக இறைவனை மறந்து போனார்கள். அவ்வாறு போனவர்கள் சற்றே திரும்பி, தங்கள் ஆதி மூலத்தை உற்று நோக்கி அலசினார்கள் என்றால், அங்கும் ஏக இறைவனே இருப்பான் என்பதை அறிவார்கள்.
நிற்க, ஸ்பிய்யா அவர்கள், நபிகளின் மகள் ஃபாத்திமாவின் மீது மிகுந்த அன்பும் வாஞ்சையும் வைத்திருந்தார்கள். என்றாலும் நபிகளின் இறப்பிற்குப் பின்னால், யார் தலைவராக வருவது என்ற தேர்ந்தெடுப்பின் போது, ஸபிய்யா அவர்கள், பெரும்பான்மையினருடன் ஒத்துப் போய், அபூபக்கர் அவர்களைத் தான் ஆதரித்தார்கள்.
ஒவ்வொருத்தருக்கும் அத்துணை உரிமையும், தனித்துவமும் இருந்தது - பெண்களானாலும்.
வலையுலகில் எதெதெற்கோ போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில்,
இந்தப் பதிவு சிறப்பானதா இப்பதிவில் நண்பனின் பின்னூட்டம் சிறப்பானதா என்று ஒரு போட்டி வைக்கலாம் போலிருக்கிறது.
இருவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
தங்களின் சிறப்பான விளக்கத்தை கண்டு மகிழ்ந்தேன்.
அதற்கு கூடுதல் விளக்கமாக நண்பன் அவர்களின் மறுமொழி. ஜஸாகல்லாஹூ ஹைரா.
விளங்குபவர்களுக்கு விளங்கும். வீண் விவாதக்காரர்களுக்கு விளங்கினாலும்
அதை விடுத்து அடுத்த விவாதத்தை துவக்கத் தாவி விடுவார்கள்.
அபூமுஹை அவர்களின் பதிவும், நண்பன் அவர்களின் மேல்விளக்கப் பின்னூட்டமும் மிக அருமை.
இஸ்லாமியதுவேஷிகளை அவர்களுடைய எழுத்தினைக்கொண்டே அம்பலப்படுத்துகிறீர்கள். நன்றி.
அன்பின் நண்பன்,
விரிவான விளக்கத்திற்கு நன்றிகள்!
கைபர் போர் முடிவுக்கு வந்தபோது அங்கிருந்த யூதப் பெண் ஒருவர் விஷமூட்டப்பட்ட ஆட்டிறைச்சியை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். இவர் - ஸஃபிய்யா (ரலி) அவர்களின் முதல் கணவர் - சலாம் பின் மிஷ்கம் என்பவரின் இன்னொரு மனைவி.
மேலும்,
குடும்பத்தாருக்கு நான் பிரியமான பிள்ளையாக இருந்தேன் என்று ஸஃபிய்யா (ரலி) அவர்களே கூறுகிறார்கள்.
நான் எனது தந்தைக்கும் தந்தையின் சகோதரருக்கும் பிரியமான பிள்ளையாக இருந்தேன். அவர்களின் மற்ற பிள்ளைகளுடன் நான் இருந்தால் என்னையே தூக்கிக் கொஞ்சுவார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்து குபாவில் அம்ர் இப்னு அவ்ஃப் கிளையாரின் வீட்டில் தங்கினார்கள். அப்போது அதிகாலையிலேயே எனது தந்தை ஹுயாய் இப்னு அக்தபும், தந்தையின் சகோதரர் அபூ யாஸிர் இப்னு அக்தபும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று சூரியன் மறையும் வரை பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் வீட்டிற்குத் திரும்பும்பொழுது முகம் வாடியவர்களாக, களைத்தவர்களாக, சோர்ந்தவர்களாக வந்தார்கள். எப்போதும் போல் உற்சாகத்துடன் நான் அவர்களிடம் ஓடி வந்தேன். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்டிருந்த கவலையழனால் அவர்களில் எவரும் என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை.
சிறிய தந்தை: ''இவர் அவர்தானா?''
(அதாவது நாம் இப்போது சந்தித்தவர் நமக்கு தவ்றாத்தில் இறுதித்தூதர் என்று அறிவிக்கப்படடவர்தானா?)
எனது தந்தை: ''அல்லாஹ்வின் மீது
சத்தியமாக ஆம்!''
சிறிய தந்தை: ''அவரை நன்றாகத் தெரியுமா? உன்னால் அவர்தான் என்று உறுதியாகக் கூறமுடியுமா?''
எனது தந்தை: ''ஆம்!''
சிறிய தந்தை: ''அவரைப் பற்றி உனது உள்ளத்தில் என்ன இருக்கிறது?''
எனது தந்தை: ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் உயிரோடு இருக்கும் காலம் வரை அவரிடம் பகைமைக் கொள்வேன்.'' இவ்வாறு யூதராக இருந்த தனது தந்தையின் மன நிலையைப் பற்றி ஸஃபிய்யா (ரலி) அவர்கள் விவரிக்கிறார்கள்.
அன்புடன்,
அபூ முஹை
அன்பின் அழகு அவர்களே,
உங்கள் வருகைக்கும், பாராட்டு, வாழ்த்துக்கும் நன்றிகள்!
அன்புடன்,
அபூ முஹை
அன்பின் சுல்தான் உங்கள் வருகைக்கு நன்றி!
//அதை விடுத்து அடுத்த விவாதத்தை துவக்கத் தாவி விடுவார்கள்.//
நபியின் பலதார மணம் அதில் ஸைனப், ஜுவைரியா, ஸஃபிய்யா இவர்கள் கண்டிப்பாக இடம்பெற்றுவிடுவார்கள்.
பிறகு, பால்ய விவாகம் இதில் ஆயிஷா இடம்பெறுவார்.
அடுத்து, அடிமை முறைகளை வைத்து இஸ்லாத்தோடு முட்டிக் கொள்வார்கள்.
பிறகு ஜிகாதை கையிலெப்பார்கள்...
பிறகு மீண்டும் நபியின் பலதார மணம்...
இப்படியே இதிலிருந்தும் வேறெங்கும் தாவுவதில்லை அவர்களைப் பொறுத்தவரை இவைகளைத் தவிர இஸ்லாத்தில் வேறொன்றும் இல்லை!
**********************
சுட்டவிரல் உங்கள் வருகைக்கு நன்றி!
அன்புடன்,
அபூ முஹை
எல்லாம் வல்ல ஏக இறையோன் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்பு சகோதரர் அபூ முஹை அவர்களே!
சிறப்பானதொரு பதிலை தந்து சகோதரர் நேசக்குமாருடைய இஸ்லாமிய வெறுப்புணர்வின் மற்றுமொரு அடையாளத்தையும் அம்பலத்திருக்கிறீர்கள். இறைவனுக்கே எல்லா புகழும்.
என் கொள்கை சகோதரர்களே! இறைத்தூதர் முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!)அவர்கள் ஸபா மலைக் குன்றில் ஏறி ஏகத்துவத்தை எடுத்துரைத்த நாளிலிருந்தே இஸ்லாத்திற்கெதிரான தாக்குதல்களும் ஆரம்பித்து விட்டது என்பதை நமது வரலாறு நமக்கு சொல்லி தந்திருக்கிறது. மக்கத்து மக்களின் எதிர்ப்புகளை தாண்டி இஸ்லாம் வளர்ந்து, அதே மக்கமாநகரை இரத்தம் சிந்தாமல் தன் வயப்படுத்தியதோடு இன்று தொழுக்கைக்கு குரலொலி எழும்பாத இடம் உலகில் இல்லை என்று கூறுமளவுக்கு இஸ்லாம் இப் பூவுலகம் முழுதும் பரந்து இருக்கிறது என்றால், இஸ்லாம் எதிர்ப்புகளுக்கு இடையில் தான் பிரபல்யமாகிறது. நபியை வெட்ட வந்த உமரை, சொர்க்கத்துக்கு சொந்தக்கரர் ஆக்கிய மார்க்கம் இஸ்லாம். இறைத்தூதரே! முன்பு பெயர்களிலே மிகவும் எனக்கு வெறுப்பான பெயர் முஹம்மது தான். ஆனால் இன்றோ என்னுயிரை விடவும் எனக்கு பிரியமானது முஹம்மதாகும்" என கூற வைத்து சுமமாமாவை சுத்தப்படுத்தி சொர்க்கத்திற்கு சொந்தக்காராக்கியது இஸ்லாம். எனவே, இஸ்லாத்திற்கு எதிராக பிரச்சாரங்கள் முடுக்கப்படும் போது தான் இஸ்லாம் வேகமாக பலம் பெருகிறது என்பது தான் நமது வரலாறு நமக்கு சால்லித் தரும் பாடமாகும். எனவே சகோதரர் நேசக்குமார் போன்றவர்கள் நமது வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் துணை செய்கிறார்கள் என்பதே சரித்திரம் சொல்லும் உண்மை. ஆகவே, இஸ்லாத்துக்கு வரும் எதிர்ப்புகளை சரியான, முறையான, கண்ணியமான முறையில் எதிர் கொள்வோம். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக சகோதரர் அபூமுஹை அவர்களின் பதிவுகள் இருக்கிறது. எனவே இஸ்லாம் நமக்கு கற்று தந்திருக்கும் நாகரீகம், பண்பாடு, ஒழுக்க முறைகளை விட்டு விலகாமல் கண்ணியமாக முஸ்லிமல்லாத சகோதரர்களின் விமர்சனங்களுக்கு பதில் தர முன் வாருங்கள். இறைவன் நம்மை தீனல் இஸ்லாத்தில் உறுதி படுத்தி வைக்க பிராதித்தவனாக நிறைவு செய்கிறேன்.
நன்றி. வாழ்த்துக்களுடன்.
சகோரன் நெய்னா முஹம்மது
சகோதரர் முஹை,
இஸ்லாம் மீது அபாண்டம் சுமத்தும் மனவிகாரம் படைத்தவர்களை தனித்து இனங்காணுவதற்க்கு உங்களின் எழுத்துக்கள் பேருதவி புரிகின்றன.
சில கேள்விகள்:
போரில் சம்பந்தமில்லாத ஒரு பெண்ணை போரில் கிடைத்த வெற்றியின் பலனாக எவ்வாறு கருத இயலும்?
எந்தவொரு தனிமனிதருக்கும் (பெண் உள்பட) மற்ற மனிதருக்கு அடிமையாக இருப்பது என்பது எல்லா நிலைகளை விட கீழான ஒன்றல்லவா? போரில் கையகப்படுத்தப்பட்ட பெண்களை அடிமைகளாக ஒருவருக்கு தாரைவார்ப்பது என்பது சம்பந்தப்பட்டவருக்கு மட்டுமின்றி, எவருக்கும் ஜீரணம் ஆகாத விசயம் போல தோன்றுகிறது.
பெண்களின் பாதுகாப்புக்கு என்று சொன்னால், நபித்தோழர்கள், தோழியர்கள் சூழ்ந்த ஒரு பகுதியில் அப்பெண்கள் தனியாக (தானாக ஒரு துணையை ஏற்றுக் கொள்ளும் வரை) யாருக்கும் அடிமையாக இல்லாமல் வாழ பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டதா?
பெண்களின் உடல் தேவை நிறைவேறமென்று சொன்னால், அதை அந்தப் பெண்ணல்லவா முடிவு செய்ய வேண்டும்? இந்த அடிமையென்பது ஆண்களின் வசதிக்கு செய்தது போல தோன்றுகிறது?
போரில் பிடிக்கப்பட்ட, ஆனால் போருக்கு சம்பந்தமில்லாத ஆண்களின் (முதியவர், அணிசாராதவர்கள்) பாதுகாப்புக்கும், தேவைகளுக்கும் என்ன அளவுகோலை இஸ்லாம் பயன்படுத்தியது?
கேள்வியில் அறிவீனம் இருந்தால் மன்னிக்கவும்.
அன்பின் சகோதரர் நெய்னா முஹம்மது அவர்களே! உங்கள் வருகைக்கும், அருமையான விளக்கங்களுக்கும் நன்றிகள்!
அன்புடன்,
அபூ முஹை
அன்பின் சகோதரர் சல்மான் உங்கள் வருகைக்கு நன்றி!
மனிதர்களை அடிமைப்படுத்துவது போர்க் கைதிகளில் மட்டுமே ஏற்படும். சுதந்திரமான மனிதனை விற்பதை இஸ்லாம் தடை செய்திருக்கிறது.
அப்படியானால் போர்க்களம் தவிர்த்து சுதந்திர மனிதனை அடிமைப்படுத்துவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
அடிமைகள் பற்றிய உங்கள் கேள்விகளுக்கு விளக்கம் தனிப்பதிவில் எழுதுவோம் இறைவன் நாடட்டும்.
கடைசி வரிகள் ரொம்பவும் சங்கடப்படுத்தி விட்டது. கேள்விகள் கேட்பதை இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது. தெரிந்து கொள்ள கேள்விகளை எழுப்புவது அறிவீனம் இல்லை. நன்றி!
அன்புடன்,
அபூ முஹை
அன்பின் சுட்டுவிரல் உங்கள் பெயரை எழுதும்போது எழுத்துப் பிழை ஏற்பட்டிருப்பதை இப்போதுதான் பார்த்தேன். பொறுத்துக் கொள்ளுங்கள்.
பழைய பிளாக்கரில் மறுமொழியைத் திருத்தும் வசதி இருந்தது. புதிய பிளாக்கரில் மறுமொழியைத் திருத்தும் வசதியிருப்பதாகத் தெரியவில்லை.
அன்புடன்,
அபூ முஹை
// கடைசி வரிகள் ரொம்பவும் சங்கடப்படுத்தி விட்டது. கேள்விகள் கேட்பதை இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது. தெரிந்து கொள்ள கேள்விகளை எழுப்புவது அறிவீனம் இல்லை. நன்றி//
மதங்களையோ, சம்பிரதாயங்களையோ கேள்வி கேட்கும் சுதந்திரத்தை மதங்கள் தரவில்லை என்றும்,
நம்பிக்கையாளர்களாக இருக்கும் பட்சத்தில் ஆன்மீக தேடலுக்கு உறுதுணை செய்யும் கேள்விகளை ந்ம்பிக்கை என்ற வட்டத்துக்குள் இருந்து கொண்டு கேள்வி கேட்க இயலாது என்றும்,
ஒரு வாதம் சமீப காலமாக ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை போல பேசப்ப்டுகிறது (உதாரணத்திற்கு - பேராசிரியர் தருமி மற்றும் நண்பன் இடையே நடக்கும் உரையாடல்கள்)
அது எவ்வளவு தூரம் உண்மை என அறியும் ஒரு லிட்மஸ் டெஸ்டாகவே இதை உங்களிடம் கேட்டேன்.
இந்த கேள்விகளை அறிவீனம் என கருதுவதையே தங்களை சங்கடப்படுத்துவதாக சொல்லுவது எவ்வளவு தூரம் இஸ்லாமிய நம்பிக்கையாளர்கள் ஆன்மீகம் சார்ந்த தேடலில் வெளிப்படையாகயும், பரந்த மனதோடும் உள்ளனர் என்பதையே காட்டுகிறது.
இதே தொனியை நண்பன் அவர்களிடத்திலும், சுல்தான் அவர்களிடத்திலும் கண்டேன். மகிழ்ச்சி கொண்டேன்.
தங்களின் தனிப்பதிவுக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.
அன்பின் சுடர் மற்றும் சல்மான்,
உங்கள் மறுமொழிகள் என் மின்னஞ்சலுக்கு வராமல் மறுமொழி மட்டுறுத்தல் பகுதிக்கு வந்திருக்கிறது. நான் கவனிக்கவில்லை. தற்செயலாக சென்று பார்த்தபோது தெரிந்தது.
அன்புடன்,
அபூ முஹை,
Post a Comment