Tuesday, March 20, 2007

20/03/2007 ஆயிஷாவின் திருமணமும், மன நோயாளியின் கனவும்

அன்றைய அரபுலகில் பால்ய விவாகம் நடைமுறையிலிருந்த வழக்கமாகும். இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த பெண்கள் 21வயதில் பாட்டியாகி விடுவார்கள் (புகாரி) என்கிறது வரலாறு. 9வயதில் திருமணம் 10 அல்லது 11வயதில் மகப்பேறு, அந்த மகளுக்கு 9வயதில் திருமணம் 10 அல்லது 11வயதில் மகளுக்கு மகப்பேறு இப்படி அந்தக்காலத்துப் பெண்கள் மகள் வழி பாட்டி என்ற உறவு அந்தஸ்தை 21வயதிலேயே பெற்றுவிடுவார்கள்.

பெண்கள் 21 வயதில் பாட்டியாகி விடுவார்கள் என்பது சர்வ சாதாரணமான வழக்கமாக இருந்த காலத்தில் பருவமடைந்த ஒன்பது வயது மனைவியிடம் கணவன் உடலுறவு கொள்வதும் வழக்கமாக அன்றைய சமுதாயத்தில் நடத்திருக்கிறது. ஒன்பது வயதில் தாம்பத்திய உறவு கொண்ட பெண்களே 21 வயதில் பாட்டியாக முடியும்.

ஆயிஷா (ரலி) அவர்களின் திருமண சம்பந்தமாக அடிக்கடி கனவு கண்டுவரும் மனநோயாளி என்ன கூறுகிறார் என்று பாருங்கள்

//ஆயிஷா மீது ஆசைப்பட்டு, கடவுள் வந்து தனக்கு கனவில்(கனவில் வருவதும் வஹீதான்) ஆயிஷாவை மணமுடித்து விட்டார் என்று அபூபக்கரிடம் சொல்கிறார். அபூபக்கர் கனவுகளை நம்பக்கூடியவர், கனவுகளுக்கு அர்த்தம் சொல்லக்கூடியவர் என்பதை இங்கே கவனிக்க வேண்டும். அபூபக்கர் முதலில் மறுக்கிறார்(இது குறித்து ஏமாறாதவன் விரிவாக எழுதியிருப்பதால் நான் விளக்கமாக அவற்றை இங்கே சொல்லவில்லை, நிறைய இணைய தளங்களிலும் இவ்விஷயம் காணக்கிடைக்கின்றது)//

''நான் உன்னை இரண்டு தடவை கனவில் கண்டேன்'' என்ற கருத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறியது, ஆயிஷா (ரலி) அவர்களை திருமணம் முடித்த பிறகு தன் மனைவியிடம் கூறும் செய்தியாகும். நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவை திருமணம் செய்வதற்கு முன் கனவில் பார்த்ததை மனைவி ஆயிஷாவிடம் தெரிவிக்கிறார்கள்.

அபூ பக்ர் (ரலி) அவர்கள் கனவுகளுக்கு விளக்கம் சொல்லக்கூடியவர் என்பது தனி விஷயம். ஆனால், கடவுள் கனவில் வந்து தனக்கு ஆயிஷாவை மணமுடித்து விட்டார் என்று ஆபூ பக்ரிடம் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இந்த மன நோயாளி சொல்வது வெறும் உளறல். எங்கே அப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதை ஆதாரத்துடன் எழுதட்டுமே பார்க்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் அபூ பக்ரிடம் ஆயிஷாவைப் பெண் கேட்டது பற்றி பதிவெழுதிய மை கூட இன்னும் உலரவில்லை. அதைப் படித்த உணர முடியாத மன நோயாளியின் லட்சியக் கனவைப் பாருங்கள்.

அன்புடன்,
அபூ முஹை

1 comment:

சவூதி தமிழன் said...

அபூமுஹை,

தன் பிறப்புக்குக் காரணமான தாய் தந்தையரின் தாம்பத்தியத்திலும் தன் மன அழுக்கால் நீலப்படம் காணும் மன நோயாளிகளுக்குக் காணும் திசை எல்லாம் 'அது' தான் தெரியும்! இது தான் இவர்களின் பாலியல் ஒழுங்கு!!