இஸ்லாம் மார்க்கத்தின் இறைவேதம் திருக் ''குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்'' என்று சில பிற மத நண்பர்கள் திருக்குர்ஆனில் பிழையை (!?)க்கண்டு பிடித்துள்ளனர். திருக்குர்ஆனில் சில எழுத்துப் பிழைகள் உண்டு! அந்த எழுத்துப் பிழைகளை திருத்தம் செய்யாமலேயே கால காலமாக குர்ஆனில் நீடிப்பது அதிலும் திருத்தலும் செய்யக்கூடாது என்ற எண்ணத்திலேயே திருக்குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் தொடர்ந்து நீடித்து வருகிறது.
திருக்குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் பற்றி வரும் பதிவுகளில் தெரிந்து கொள்வோம்.
தற்போது, பிற மத நண்பர்கள் ''குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்'' என்று திருக்குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகளுக்கு சம்பந்தமில்லாதவற்றை குறிப்பிட்டுள்ளனர் அவற்றை இங்கு பார்ப்போம்,
குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்
Scribal errors in the Qur'an
கீழ் கண்டவற்றில் (1) என்று உள்ள பத்தியில்(Column) இருக்கும் வார்த்தைகள் இப்போது உள்ள குர்ஆனில் உள்ளவைகள் ஆகும். அதே போல (2) என்று உள்ள பத்தியில் இருக்கும் வார்த்தைகள் உண்மையில் அவ்வார்த்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்றும் மற்றும் அரபியில் அதனை எப்படி சரிபடுத்தினார்கள் எனபதையும் குறிக்கும்.
(2) (1) (2) (1)

மேலே குறிப்பிடப்பட்ட சில எழுத்து பிழைகள் பற்றி கீழ் கண்ட கட்டுரைகளில் விவாதிக்கப்படுகிறது.
மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 11ல் உள்ள குர்ஆன் வசனம் 21:88 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: page 141, section 3 (a).
மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 15ல் உள்ள குர்ஆன் வசனம் 27:21 பற்றிய
விவரங்கள் அறிய படிக்கவும்: page 96f, second last paragraph.
மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 17ல் உள்ள குர்ஆன் வசனம் 5:29 ஐ பற்றிய
விவரங்கள் அறிய படிக்கவும்: page 18f and page 133, section (d).
மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 19ல் உள்ள குர்ஆன் வசனம் 51:47 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: the middle of page 19 and the last half of page 125.
மேலே உள்ள வார்த்தைகளில் எழுத்துபிழைகள்(Scribal Errors) உள்ளது என்று இபின் கல்தன்(Ibm Khaldun – Classical Scholar) என்பவர் அங்கீகரித்துள்ளார் மற்றும் இவைகள் பிரச்சனைகள்(Problems) என்று ஹமிதுல்லா(Hamidullah – Modern Scholar) என்ற அறிஞரும் அங்கீகரித்துள்ளார்.
பிற மத நண்பர்களே!விமர்சனம் எதைப் பற்றி என்றாலும் அது அறிவுப்பூர்வமாக நன்கு நீங்கள் அறிந்ததை எடுத்து வைத்து விமர்சனம் செய்யுங்கள், அது வரவேற்கத்தக்கதாக அமையும். நீங்கள் அறியாதவற்றை இது இப்படித்தான் இருக்கும் என்று கோணலாக சிந்தித்து விமர்சிக்காதீர்கள், அது உங்களை கோமாளி பட்டியலில் சேர்த்துவிடும்.
மொழி எழுத்துக்களின் உருமாற்றம்மொழி எழுத்துக்கள் எல்லாக் காலங்களிலும் ஓர் உருவ அமைப்பில் இருந்ததில்லை.
ஆங்கில எழுத்தின் உருமாற்றங்கள் மற்றும் எழுத்துக்களின் பிற்சேர்க்கையும் அறிய,
இங்கு சொடுக்கவும்.தமிழ் எழுத்துக்களின் உருமாற்றங்கள் படத்தில்:

பண்டைய தமிழ் எழுத்துக்கள் பண்டைய கால மக்களுக்க பழக்கமாகியிருந்தது. இன்று நமக்கு அது குழந்தையின் கிறுக்கலாகத் தோன்றுகிறது. நம் காலத்தில், ''இப்படிக்கு'' என்று எழுதும் போது ''க்கு'' என்பதை முன்பு சேர்த்து எழுதுவோம். ''யானை'' என்று எழுத இந்த ''னை'' யை எழுத மாட்டோம் யானை தும்பிக்கையைத் தூக்கிப் பிளிரும் ஸ்டைலில் யானையின் தும்பிக்கை வடிவோடு ''ன'' வை சேர்த்து எழுதுவோம். இந்த முறை தமிழ் உருமாற்ற எழுத்துக்கள் மறைந்து, எழுத்தில் புதிய உருமாற்றங்கள் தோன்றுகின்றன.
இது எல்லா மொழி எழுத்துக்களுக்கும் உள்ள பொதுவான விதி. எழுத்துரு மாறும் போது சமூகம் அதை எதிர்ப்பதில்லை. பழையன கழிதல் புதியன புகுதல் என எழுத்துருவில் மட்டும் மாற்றங்கள் ஏற்படுவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். இன்று நாம் எழுதும் தமிழ் எழுத்துக்கள் நாளை மாறலாம். எனவே எழுத்துக்களில் மாற்றம் ஏற்படுவது தவறைத் திருத்துவதல்ல, எழுத்துருவில் தோற்றுவிக்கும் முன்னேற்றம் என்று சொல்லலாம்.
பிற மத நண்பர்கள் சுட்டியுள்ள படத்தைப் பார்க்கலாம்,

மேலே படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 11ல் உள்ள குர்ஆன் வசனம் 21:88 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: page 141, section 3 (a).
பிற மத நண்பர்கள் குறிப்பிட்டுள்ள, படத்தில் இடதுபுறம் 11 வது வரிசையில் நாம் கட்டம் வரைந்துள்ள வாசகத்தின் உச்சரிப்பு ''நுன்ஜி'' இரண்டு கட்டத்திலும் உள்ள வார்த்தை ''நுன்ஜி'' என்பது சிறிது அரபி அறிந்திருந்தாலும் புரிந்து கொள்ளலாம். இதற்கு பெரிய அரபுப்புலமை பெற்றிருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
ن+ن+ج+ي=ننجيந, ன, ண ஆகிய உச்சரிப்புக்கு அரபியில்
ن நூன் என்ற உச்சரிப்பில் இந்த ஓர் எழுத்து மட்டுமே உள்ளது. ந, நா, நி, நீ, ன, னா, ணா, னி, னீ, ணி, ணீ தமிழ் எழுத்துக்களில் நெடில் குறில்கள் இடும்போது எவ்வாறு உச்சரிப்புகள் மாறுகிறதோ அதுபோல், நூன் என்ற மேற்கண்ட அரபி எழுத்தில் தேவையான நெடில் குறில்களை இட்டால் ந, ந் நா, நி, நீ, நு. நூ என்ற உச்சிப்பைப் பெறலாம்.
அரபு எழுத்துகளில் இரண்டு நூன், ஒரு ஜீம், ஒரு ய இந்த நான்கு எழுத்துக்களை நெடில் குறிகளுடன் எழுதினால்
نُنْجِي -
''நுன்ஜி'' என்ற வாசிக்கலாம். நுன்ஜி என்ற பதங்கள் இடம்பெற்ற திருக்குர்ஆன் வசனங்கள் படத்தில்:
திருக்குர்ஆன், 010:103வது வசனம்

திருக்குர்ஆன் 019:072வது வசனம்

திருக்குர்ஆன் 021:088வது வசனம்

*****
திருக்குர்ஆன் 010:103
திருக்குர்ஆன் 019:72
திருக்குர்ஆன் 021:088
பிறமத நண்பர்கள் எடுத்துக் காட்டியுள்ள படத்தில் 11வது வரிசையில் நாம் வட்டமிட்ட இரண்டிலும் நுன்ஜி என்று சரியான அரபி எழுத்துக்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றுக்கொன்று எழுத்துருவின் மாடல் - ஸ்டைல் பழசே தவிர, புதிய மாடலில் - புதிய ஸ்டைலில் நுன்ஜி என்று குர்ஆன் வசனப் படங்களில் சிவப்பு, கருப்பு வண்ணத்தில் நாம் வட்டமிட்டுள்ள எழுத்துகளுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.
இதை அறிவுக் குருடுத்தனமாக - //உண்மையில் அவ்வார்த்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்றும் மற்றும் அரபியில் அதனை எப்படி சரிபடுத்தினார்கள்// - என்று விமர்சிக்கும் சத்தியவான் என்ற பெயரில் கயமைத்தனம் செய்யும் அசத்தியவான்கள் உணர வேண்டும். இறை வேதத்தில் கைவரிசையைக் காட்டும் கயமைத்தனத்தை தங்கள் வேதத்தோடு நிறுத்திக் கொள்ளட்டும்.
எங்கே பார்க்கலாம்,மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 11ல் உள்ள குர்ஆன் வசனம் 21:88 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: page 141, section 3 (a).
உங்கள் படத்தில் 11ம் வரிசையில் உள்ள 021:088வது குர்ஆன் வசனத்தை அரபியில் ஏற்கெனவே இருந்ததை பிற்காலத்தில் என்ன சரிபடுத்தினார்கள்? என்பதை மக்களுக்கு விளக்கி, உங்களை யோக்கியர்கள் என்பதை நிறுவுங்கள் பார்க்கலாம். இல்லையேல் உங்களை இஸ்லாத்திற்கு எதிரான ''வைரஸ்'' பட்டியலில் எழுதிவிடுவார்கள்.
மீண்டும்,
உங்கள் அயோக்கிய அசத்தியவான்கள் குறித்து அடுத்த பகுதியில்...
அன்புடன்,
அபூ முஹை