Thursday, October 05, 2006

மரண தண்டனை!

மரண தண்டனை என்பது மனித குலத்துக்கு நல்லதொரு பாடமாக இருந்து வருகிறது. தண்டனை பெறுவோம் என்ற மரண பயத்தால் பெரும்பான்மையினர் தவறிலிருந்து விலகிக் கொள்வார்கள். இதனால் வலியவனிடமிருந்து எளியவன் விடுதலையடைகிறான். அதாவது அகம்பாவம், ஆணவம், பணத்திமிர் கொண்டவனும் குற்றமிழைத்தால் தண்டனை உறுதி என்றாகும் பொழுது, எளியவன் மீது அடக்கு முறையுடன் ஓங்கும் கைகளை வலியவன் தவிர்த்துக் கொள்வான்.

அவனைக் கொன்றால் நானும் சட்டத்தால் கொல்லப்படுவேன் என்று - எவ்வளவு பணபலத்துக்கும் உடன்படாத - எந்த சக்திக்கும் வளைந்து கொடுக்காத - உறுதிமிக்க மரண தண்டனை விதியியிருந்தால் அது மனித வள மேம்பாட்டுக்கு மிகவும் உதவிக் கொண்டிருக்கும்.

ஆனால் துரதிஷ்டம் நமது இந்திய நாட்டில், வெகு சிரமத்துடன் குற்றாவாளிகளை அடையாளம் கண்டு, பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி, குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனைகள் விதித்தால், அந்த தண்டனை கூடாது என அரசியல் குறுக்கீடு, மற்றும் தன்னார்வலர்களின் பரிதாப சிபாரிசு என குற்றவாளிகளைக் காப்பாற்ற படையெடுத்து விடுகின்றனர்.

விளைவு, இச்செயல் குற்றவாளிகளை மேலும் தெம்பூட்டுகிறது. இந்த கதிக்கு, குற்றவாளிகளை பிடித்தது, நீதி விசாரணை நடத்தியது இவையனைத்தும் வீணாகி, வெறும் வெட்டி வேலையாகி விடுகின்றது. நியாயமான நீதி கிடைக்கும் என்று நம்பியவர்கள், சட்டம், நீதி விசாரணை என்பதெல்லாம் வெறும் மண்ணாங்கட்டி என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள்.

முஹம்மது அப்ஸல்

ஒரு குற்றவாளியை, குற்றவாளியாத்தான் பார்க்க வேண்டும். அதனால் எந்த நாட்டின் நட்பு போய்விடுமோ என்று கருதினால் தெரிந்து கொண்டே குற்றங்களுக்கு துணை போகிறோம்! பாராளுமன்றம் இந்திய அரசுக்குச் சொந்தமான இடம். பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் இந்திய நாட்டை ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள். பாராளும் மன்றத்தை தகர்க்கவும், ஆட்சியாளர்களைக் கொல்லவும் துணிந்தவர்கள் தேசத் துரோகிகள் எனும் போது அதற்கு உடந்தையாக இருந்தவனும் தேசத் துரோகியே!

நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவித்து அரசுக்கு எதிரான பெரும் நாச வேலையில் ஈடுபட்டு பொதுவுடமையை அழிக்கவும், ஆட்சியாளர்களைக் கொல்லவும் துணிந்தவர்கள் சட்டத்தால் கொல்லப்பட வேண்டும். முறையான நீதி விசாரணை நடத்தப்பட்டு அவர் குற்றவாளியென நிரூபிக்கட்டு நீதி மன்றங்கள் வழங்கிய மரண தண்டனை அவர் மீது நிறைவேற்றப்பட வேண்டும். இந்த மரண தண்டனை இன்னொரு பயங்கரவாதிக்கு பாடமாக இருக்கும்.

குற்றவாளிகளை தண்டிப்பதில் குறுக்கே நிற்கும் ''கருணை மனு'' மற்றும் ''பொது மன்னிப்பு'' போன்ற சமாச்சாரங்கள் குற்றவாளிகளை ஊக்கப்படுத்துமே தவிர குற்றங்களை குறைக்க உதவாது. நீதி தன் கடமையைச் செய்வதற்கு இதெல்லாம் தடைக்கல்லாகத்தான் இருக்கிறது!

பாதிக்கப்பட்டவன் இங்கிருக்க, சம்பவத்துக்கு சம்பந்தமே இல்லாதவர் குற்றவாளி மீது கருணை காட்டுவது சரியாகுமா..? நீதி மன்றங்கள் முறையான விசாரணையில் குற்றவாளிகளுக்கு நியாயமான மரண தண்டனை விதித்தால் அதை நிறைவேற்றும் முயற்சியில் நீதியுடன் கை கோர்ப்போம் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

27 comments:

இப்னு பஷீர் said...

மிக அவசியமானதொரு பதிவு. ஏற்றுக் கொள்ளத்தக்க கருத்துக்கள். நன்றி அபூமுஹை அவர்களே!

dondu(#11168674346665545885) said...

Bismillah ir rahman ir rahim

மிக நல்ல, நேர்மையான பதிவு அபூ முஹை அவர்களே. நன்றி.

சலாம் அலைக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பி.கு.: மேலே குறிப்பிட்ட அரேபிய சொற்றொடரைக் கேட்பதற்காகவே தில்லியில் இருந்த போது பாகிஸ்தான் டி.வி. நிகழ்ச்சிகளை பார்ப்பேன். எனக்கு அரேபிய மொழி தெரியாவிட்டாலும் அதன் இனிமை என்னை மிகவும் கவர்ந்தது.

அதை இந்தப் பின்னூட்டத்தில் சரியாகப் பயன்படுத்தியுள்ளேனா ஜனாப் அபு முஹை அவர்களே?

Amar said...

சபாஷ். கைகுடுங்க.

இன்று தான் எழுதிவைத்தேன் - முகமதி அப்சலை தூக்கில் போட இஸ்லாமியர்கள் குரல்குடுக்க வேண்டும் என்று.

"இஸ்லாமியர்களுக்காக" பேசுகிறேன் என்று எரிச்சல்லூட்டும் விதமாக அரசியல்வாதி பேசிவைப்பதால் தான் பிரச்சனைகள் பல ஏற்படுகின்றன. இஸ்லாமியர்களே நேரடியாக பேசிவிட்டால் நடுவே இவர்களுக்கு என்ன வேலை என்றேன்!

அபூ முஹை said...

இப்னு பஷீர் மற்றும் சமுத்ரா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Nakkiran said...

கஷ்மீரில் இஸ்லாமியர் எனும் போர்வையில் அஃபஸ்ல் தூக்குதண்டனையை எதிர்க்கும் மானங்கெட்ட தேச துரோகிகளை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தேன். நீங்கள் இப்பதிவிட்டு தேசபக்தியையும் இஸ்லாமியர் பெருமையையும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள்...

அபூ முஹை said...

ந. ராகவன் அவர்களே வருகைக்கு நன்றி!

வ அலைக்கும்!

''அஸ்ஸலாமு அலைக்கும்'' எனச் சொல்வதே சரியானது.

Bismillah ir rahman ir rahim

இது இறைவனின் மூன்று பெயர்களைக் குறிப்பிடுகிறது.

1. Bismillah - அல்லாஹ் - பெயர்.
2. Arrahman - அருளாளன் - இறைவனின் பண்பு.

3. Arrahim - அன்புடையோன் - இறைவனின் பண்பு.

இம் மூன்றையும் சேர்த்தே சொல்ல வேண்டும்.

Bismillahirrahmanirrahim

''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்''

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.. என்பதே இதன் பொருள்!

அன்புடன்,
அபூ முஹை

dondu(#11168674346665545885) said...

'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

சேர்த்தே சொல்ல வேண்டுமா. நல்லது. நான் பார்த்த கூகள் பக்கத்தில் தனித்தனியே எழுதியிருந்தார்கள். கூடவே அரபியிலும் எழுதியிருந்தார்கள் ஆனால் படமாக, ஆகவே அதை காப்பி பேஸ்ட் செய்ய இயலவில்லை.

உருது/அரபி செய்திகள் வாசிக்கும் போது வாசிப்பவர்கள் இதை மிருதுவான தொனியில் கூறிவிட்டு ஆரம்பிப்பார்கள். கேட்கவே இனிமையாக இருக்கும். உருது பற்றி நான் பதிவும் போட்டுள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மனதின் ஓசை said...

நான் நினைத்த அதே கருத்துக்களள உங்கள் கட்டுரையில் காண்கிறேன்...

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியர்வர்களே..

அவற்களுக்கு சாதி, மத, கட்சி ரீதியாக ஆதரவு கொடுப்பது அறியாமையின் விளைவுதான்.. அது எந்த நன்மையையும் அந்த சாதி, மத, கட்சிக்கு கொடுக்கவும் செய்யாது.
(நன்மை செய்தாலும் அது தவறானது தான்)

வஜ்ரா said...

//
ீதி மன்றங்கள் முறையான விசாரணையில் குற்றவாளிகளுக்கு நியாயமான மரண தண்டனை விதித்தால் அதை நிறைவேற்றும் முயற்சியில் நீதியுடன் கை கோர்ப்போம் நன்றி!
//

உங்கள் மற்ற கருத்துக்களுடன் நான் ஒத்துப் போகாவிடினும். இந்த தூக்கு தண்டனை விதிக்கப் பட்ட குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிரைவேற்றியே அகவேண்டும் என்று சொல்லும் இந்த பதிவுடன் முழுவதும் ஒத்துப் போகிறேன்.

Afzal guru should be hanged FULL STOP. There is no second thought on it.

தமிழ் பதிவர்களில் சில இஸ்லாமியர்கள் இதைப் பற்றி வாய் திரக்காத பட்சத்தில் முழு இஸ்லாமிய சமூகம் மீதும் சந்தேகம் எழும்...இந்த தேசத்தில் பிறந்துவிட்டு இந்த தேசத்துரோகிக்கே தூக்கு தண்டனை வழங்கக் கூடாது என்று சொல்பவர்கள் என்று...அந்த சந்தேகம் எழாமல் உண்மை நிலையை விளக்கியதற்கு என் நன்றிகள்.

நன்றி.

அட்றா சக்கை said...

நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் எவருக்கும், சமூக நல்லிணக்கத்துக்கு மதவெறியைத் தூண்டி கேடு விளைவிப்போருக்கும், காழ்ப்புணர்ச்சியால் உயிர்களைப் பலி வாங்குவோருக்கும், அப்பாவிப் பெண்கணின் மானத்தை சூறையாடுவோருக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை நிறைவேற்றப் படவேண்டும். அது யாராக இருந்தாலும்.

இஸ்லாம் இந்தக் கோணத்தில் தான் மரண தண்டனையை சில குற்றங்களுக்கு விதிக்கிறது. இஸ்லாம் விதிக்கும் மரண தண்டனையை கண்மூடித் தனமாக காட்டு மிராண்டித் தனம் என்றெல்லம் விமர்சனம் செய்வோர், இந்தப் பதிவிற்குப் பின் தங்கள் கண்ணாடியைக் கழற்றிவிட்டு, உண்மை உலகைக் காண்பார்கள் என நம்புவோம்.

கூத்தாடி said...

நீங்கள் சொல்லும் மரணத் தண்டனை விவகாரத்தில் நான் ஒத்துப் போவதில்லை ..

இருந்தாலும் அப்சல் விவகாரத்தில் காஷ்மீரில் நடந்தக் கூத்தும் அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதமும் இது மதவாதிகள் அப்சல் செய்த தப்பை சப்பைக் கட்டுகிறார்கள் என எண்ணினேன் .

வஜ்ரா சொன்ன மாதிரி இஸ்லாமிய நண்பர்கள் அமைதியாக இருந்தால் சமூகத்தின் மீதுள்ள அவதூறு மேலும் தொடரவேச் செய்யும் ..நீங்களும் இப்னுவும் அதைச் சரி செய்துள்ளதாகவேத் தெரிகிறது..

எது எப்படி இருந்தாலும் மரண தண்டனை தேவையா என்ற விவாதம் மதம் தாண்டி விவாதத்திற்கு வைக்கப் பட்டால் நல்லது .அப்துல் கலாம் தொடங்கி வைத்தார் ஆனால் யாருக்கும் ஆர்வமில்லை ..ஓட்டு விழாதில்ல

அபூ முஹை said...

நக்கீரன் வஜ்ரா, மற்றும் அட்றா சக்கை உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்!

மனதின் ஓசை உங்கள் கருத்துக்கு நன்றி!

குற்றம் புரிந்தவன் செல்வாக்கு மிக்க ஆளாயிற்றே, பணபலம் கொண்டவனாயிற்றே, இந்த மதத்தைச் சார்ந்தவனாக இருக்கிறானே என்றெல்லாம் பார்க்காமல், குற்றவாளியை, குற்றவாளியாகப் பார்க்க வேண்டும். என்பதுதான் என் கருத்து.

கூத்தாடி உங்கள் வருகைக்கு நன்றி!

//எது எப்படி இருந்தாலும் மரண தண்டனை தேவையா என்ற விவாதம் மதம் தாண்டி விவாதத்திற்கு வைக்கப் பட்டால் நல்லது .அப்துல் கலாம் தொடங்கி வைத்தார் ஆனால் யாருக்கும் ஆர்வமில்லை ..ஓட்டு விழாதில்ல//

உங்கள் கருத்து வரவேற்கத் தக்கது. நானும் மதம் கடந்து மரண தண்டனைக் கருத்தை ஆதரித்து எழுதியுள்ளேன். பாவம் இதற்குப் போய் இவ்வளவு பெரிய தண்டனையா? என்று தவறு செய்தவன் மீது பரிதாப்பட்டுப் பேசிப் பேசியே இன்று ஒரு பயங்கரவாதிக்கு மரண தண்டனையை நிறைவேற்றலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

அன்புடன்,
அபூ முஹை

╬அதி. அழகு╬ said...

புது டெல்லி: நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் காஷ்மீர் சிறப்பு அதிரடிப் படை (Special Task Force) அதிகாரிகள் சதி செய்து தன்னை வலையில் வீழ்த்தியதாக மரணதண்டனையை எதிர்பார்த்து நாட்களை கடத்தும் முஹம்மத் அஃப்ஸல் குரு கூறினார்.

சிறைச்சாலையில் இருந்து தனக்காக வாதாட முன் வந்த உச்சநீதிமன்ற முதிர்ந்த வழக்கறிஞர் சுஷீல் குமாருக்கு அனுப்பிய கடிதத்தில், ஸ்பெஷல் போலீஸின் துணை கமிஷ்னர் ரஜ்பீர் சிங் மிரட்டியும், அடித்தும் தன்னிடம் இருந்து வாக்குமூலம் எழுதி வாங்கினார் என்று அஃப்ஸல் கூறியுள்ளார்.

தனக்கெதிராக தீர்ப்பு கூறிய சிறப்பு பொடா நீதிமன்றம், காவல் துறை மற்றும் பத்திரிக்கைகளின் நெருக்குதலுக்கு உள்ளாகி தனக்கு மரணதண்டனை விதித்ததாக அக்கடிதத்தில் அஃப்ஸல் தெரிவித்துள்ளார். ஆறு பக்கங்கள் அடங்கிய அக்கடிதத்தை நேற்று வழக்கறிஞர் பத்திரிக்கைகளுக்கு அளித்தார்.

மேலும் ...
http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=256&Itemid=51

Jafar ali said...

உண்மையான குற்றவாளியை தூக்கில் போடுவதற்கு நாட்டின் மீது பாசம் கொண்ட எவருக்குமே ஆட்சேபனை என்பது கிஞ்சித்தும் கிடையாது. ஆனால் இந்த லிங்க் http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=256&Itemid=51 சரியான நீதி குறித்து சந்தேகம் கொள்ள வைக்கிறதே! கவனித்தீர்களா?

Amar said...

அழகு, ஜாபர் அலி.

குற்றவாளி அப்படிதான் சொல்லுவான். கொலைகாரன் எவனாச்சும் "என்னை மிகவும் நியாயமான முறையில் விசாரித்து தண்டனை கொடுத்தார்கள்" என்று சொல்வானா?

பல அடுக்கு நீதிமன்றங்களை தாண்டி தான் இந்த தண்டனை வழங்கபட்டுள்ளது என்பதால் இதில் conspiracyகளை பேசி பயனில்லை.

Krishna (#24094743) said...

அபூ முஹை அவர்களே - மிகத் தேவையான பதிவு. என்னுடைய 15 வருட இஸ்லாமிய நண்பர்களின் கருத்தும் இதுவே. ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருக்கும் சிலரும், அருந்ததி ராய் போன்ற சில மறை கழன்ற போலி மனித உரிமைவாதிகளும் இதை தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக மட்டுமே பயன்படுத்திக் கொள்வது நம் நாட்டின் சாபக்கேடு. மிகவும் வரவேற்க்கத் தக்க பதிவு.

அபூ முஹை said...

அழகு மற்றும் ஜாஃபர் சுட்டி வழங்கியதற்கு நன்றி!

இது நல்ல விஷயம்தான்.

நிரபராதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நான் சொல்லவில்லை! பயங்கர வாதிகளும், பயங்கர வாதிகளுக்கு உடந்தையா இருப்பவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்றே நான் சொல்லியிருக்கிறேன். நன்றி!


அன்புடன்,
அபூ முஹை

அபூ முஹை said...

காதிலே பூ வச்சவன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

நீதியுடன் கைகோர்ப்போம் என்று சொல்லியிருக்கிறேன் அநீதியுடன் அல்ல!

அன்புடன்,
அபூ முஹை

ஜடாயு said...

தேச நலன் கருதிய சரியான நிலைப்பாடு அபூ முஹை அவர்களே.

// எனவே அரசு தன் மூஞ்சியைக் காப்பாற்றிக் கொள்ளப் பெறப்பட்ட தீர்ப்பே இது. எனவேதான் குற்றமற்ற அப்பாவிக்கு ஆதரவாகக் காஷ்மீர் மக்களும் அரசியல் வாதிகளும் குரல் கொடுக்கின்றனர். //

நம் நாட்டில் இன்னும் மக்கள் கொஞ்ச நஞ்சம் நம்பிக்கை வைத்திருக்கும் அமைப்பு உச்சநீதி மன்றம். பல சமயங்களில் இதன் தீர்ப்புகள் அரசையே சங்கடத்திற்கு உள்ளாக்கியிருக்கின்றன. இவ்வளவு முக்கியமான வழக்கில் உ.நீ. மன்றம் இந்த தண்டைனையை வழங்கியிருக்கிறது.

காஷ்மீர் பிரிவினைவாதிகள் என்றுமே நம் நாட்டின் சட்டங்களை மதித்தது கிடையாது, எனவே அவர்கள் இதை எதிர்ப்பதில் ஆச்சரியமே இல்லை - "இந்தியா - நாங்கள்" என்றே அவர்கள் பேசுவார்கள். ஆனால் குலாம் நபி ஆசாத் போன்ற காங்கிரஸ் அரசியல்வாதிகளும் இதை ஆதரிப்பது கீழ்த்தரமான ஓட்டுவங்கி அரசியல் தவிர வேறில்லை.

ரவி ஸ்ரீநிவாஸ் தனது பதிவில் உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்கான இணைப்பைக் கொடுத்திருக்கிறார் -
http://judis.nic.in/supremecourt/qrydisp.asp?tfnm=27092

தீர விசாரித்த பின்னரே இந்தத் தீர்ப்பு வெளியாகிறது என்பது கண்கூடு.

அபூ முஹை said...

கிருஷ்ணா மற்றும் ஜடாயு உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சில அரசியல் கட்சித் தலைவர்களும், மனித உரிமை அமைப்புகளும், எழுத்தாளர் அருந்ததிராய் உள்பட பலரும் முஹம்மது அப்ஸலுக்கு தண்டனையே வழங்கக்கூடாது என்று சொல்லவில்லை. மரண தண்டனை வேண்டாம் என்றே குரலெழுப்புகிறார்கள்.

இது புதிதல்ல, இதற்கு முன்பும் வேறு வழக்குகளில் நீதி மன்றம் மரண தண்டனை விதித்த போது அதுவும் எதிர்க்கப்பட்டிருக்கிறது.

அன்புடன்,
அபூ முஹை

அழகப்பன் said...

இந்த வழக்கு நாட்டின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைக்கு சவாலாக அமைந்த ஒன்று என்பதால் இதன் விசாரணை வெளிப்படையாக மீண்டும் ஒரு முறை நடத்த வேண்டும்.

இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், இந்தியாவின் தலைமை நீதிபதி போன்றோரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்த நீதிபதிகளும் இந்தியாவில் இருக்கின்றனர் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

அபூ முஹை said...

அழகப்பன் உங்கள் வருகைக்கு நன்றி!

//இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், இந்தியாவின் தலைமை நீதிபதி போன்றோரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்த நீதிபதிகளும் இந்தியாவில் இருக்கின்றனர் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். //

ஏன்? பாபர் பள்ளிவாசல் இடிக்கப்படாமல் பாதுகாக்க, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கலாம் என்றும் நீதியான உத்தரவை நீதி மன்றம் வழங்கித்தான் இருந்தது ஆனால் அன்றைய ஆட்சியாளர்களோ...???

அன்புடன்,
அபூ முஹை

அபூ முஹை said...

ஹாபிழ் உங்கள் வருகைக்கு நன்றி!

//உங்கள் மற்ற கருத்துக்களுடன் நான் ஒத்துப் போகாவிடினும். இந்த தூக்கு தண்டனை விதிக்கப் பட்ட குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிரைவேற்றியே அகவேண்டும் என்று சொல்லும் இந்த பதிவுடன் முழுவதும் ஒத்துப் போகிறேன்.//

யாரும் யார் கருத்துடனும் ஓத்துப் போய் விட்டால் பிரச்சனையே இல்லையே! அப்படி ஓத்துப் போக முடியாமல் தான் குற்றவாளிக்கு மரண தண்டனை வேண்டும் என்று நாலு பேரும், மரண தண்டனை வேண்டாமென்று நாலு பேரும் என அப்படி, இப்படியுமாய் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.

அன்புடன்,
அபூ முஹை

தமிழ் செல்வன் said...

//ஆனால் அன்றைய ஆட்சியாளர்களோ...???//

யாரைக் கூறுகிறீர்கள்? அன்றைய மத்திய ஆட்சியை அல்லது மாநில ஆட்சியை?

மத்திய ஆட்சியை எனில் இதே காங்கிரஸ் தான் என்பதை நினைவில் கொள்க.

நியாயம் நீதிமன்றங்களின் மூலம் கொடுக்கப்பட வேண்டும். அதன் பின்னால் அரசியல் சித்துவிளையாட்டு இருப்பின் அத்தீர்ப்பில் சந்தேகம் எழுவது இயற்கையே.

பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியின் போது நடத்தப்பட்ட இத்தாக்குதல் சம்பவத்தின் மீது இருந்த சந்தேகம் இன்னும் முழுமையாக தீர்க்கப்படாமல் இருக்கும் பொழுது தெளிவான ஆதாரங்கள் எதுவும் இன்றி இவ்வளவு கடுமையான உச்சபட்ச தண்டனை வழங்குவது சரியல்ல.

அதைத் தான் திரு. அருந்ததி ராய் அவர்களும் கூறுகின்றார்கள்.

அதிபாதுகாப்பு நிறைந்த பாராளுமன்ற கட்டிட வளாகத்தினுள் தீவிரவாதிகள் நுழைந்தனர் என்பதும், நுழைந்தவரில் ஒருவர் கூட உயிரோடு இல்லாமல் அனைவரும் சாகடிக்கப்பட்டனர் என்பதும் அரசின் சரியான பூச்சுற்றல். காதைக் கொடுக்க மக்கள் தயாராக இருக்கும் பொழுது இன்னும் அதிகமாகத் தான் சுற்றுவார்கள்.

கேட்பவன் கேனையனாக இருந்தால்..... என்று ஏதோ சொல்வார்களே அது போல் உள்ளது.

எந்த குற்றவாளியும் தன் குற்றத்தை ஒத்துக் கொள்ள மாட்டான் என்பது சரி தான். ஆனால் இவ்வழக்கில் சில திட்டமிட்ட செயல்கள் நடந்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்சலின் கடிதம் சில வெளிவராத புதிய விஷயங்களையும் தெரிவிக்கிறது. அதனைக் குறித்து விசாரிப்பதில் தவறொன்றும் இல்லையே.

அவருக்காக முதலில் வாதாடிய அரசு நியமித்த வழக்கறிஞர் கூட அவருக்கு எதிராக அவர் கூறாத கருத்துக்களை நீதிமன்றத்தில் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். இதில் ஏதாவது உண்மையிருந்தால் அவருக்கு தண்டனை நிறைவேற்றியபின் ஒன்றும் செய்ய இயலாமல் போய்விடும்.

100 குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்ற உயர்ந்த இலட்சியத்தைக் கொண்ட நம் நாட்டின் இறையாண்மைக்கு களங்கம் ஏற்படும் விதத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்து விடக் கூடாது என எதிர்பார்ப்பதில் தவறொன்றும் இருப்பதாகவும் தெரியவில்லை.

எனவே முழுமைப்படுத்தப்படாத அல்லது முழுமையாக சந்தேகத்திரை விலக்கப்படாத தெளிவான ஆதாரங்கள் எதுவுமில்லாத ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு அதிகபட்ச தண்டனை நிறைவேற்றுவது மிகத் தவறான செயலே.

யாரையோ திருப்தி படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக நீங்கள் பதிவிட்டது போல் உள்ளது.

ஒருமுறை கூட உங்கள் பதிவின் வாசகங்களை திருப்பிப்பாருங்கள். ஏனோ உங்கள் பதிவோடு ஒத்துபோக முடியவில்லை.

தீவிரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் அதிக பட்ச தண்டனை வழங்குவதில் எவ்வித தயவு தாட்சண்யமும் தேவையில்லை.

ஆனால் குற்றவாளி என தெளிவாக நிரூபிக்கப்படாத ஒருவருக்கு தண்டனை வழங்குவது சரியா? அதனை சரி காண்பது போல் ஒரு பதிவும்...

மனதில் ஒட்டவில்லை.

தமிழ் செல்வன்

Unknown said...

நல்லடியார் பதிவில் பதிந்தது. அதையே இங்கேயும் பதிகிறேன்.

அப்ஸல் தவறு செய்திருக்கும் பட்சத்தில் அவருக்கு தண்டணை குறைக்கப்படவோ கருணை காட்டப்படவோ கூடாது என்பதுதான் முஸ்லீம்களின் நிலை. குறைந்த பட்சம் தமிழ் வலையுலகுக்கு வரும் முஸ்லீம்களின் நிலை.

இந்த நேர்மை வலையுலகுக்கு வரும் பிராமிணர்களுக்கு உண்டா? இதே போன்று அத்வானியும், மோடியும், தாக்கரேயும் மற்றவர்களும் விரைவான தனி தடா விசாரணை மூலம் விசாரிக்ப்பட்டு தவறிருந்தால் கடுமையாக தண்டிக்கப் படவேண்டும் என்று விரும்புவார்களா? அந்த விருப்பத்தை பொதுவில் வைப்பார்களா?

மிதக்கும்வெளி said...

i agree with kathil bu vachavan, azaku, azakabban, tamilselvan.y bhramins and hintutva forces celebrate yr 'pathivu'? pls think.

அபூ முஹை said...

தமிழ் செல்வன், சுல்தான் மற்றும் மிதக்கும் வெளி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!

ஆயிரம் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமேயல்லாது நிரபராதிகள் தண்டனை பெறவேண்டும் என்று எங்கும் நான் சொல்லவில்லை.

''குற்றவாளிகளைத் தண்டிப்பதில் கருணைக் காட்டக்கூடாது'' எனும் என் கருத்தையே பதிவு செய்துள்ளேன்! அதனால் நிரபராதியையும் நான் தண்டிக்கச் சொல்வதாக நீங்கள் பொருள் கொண்டால் அது என் தவறு இல்லை.

மேலும் இந்தப்பதிவு யாரையும் திருப்திப்படுத்துவதற்காக எழுதியதில்லை. மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு குற்றவாளி - அவன் குற்றம் உண்மையாக இருந்தால் அவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்பதை தெளிவுப் படுத்திக் கொள்கிறேன் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை