இஸ்லாம் இயற்றியுள்ளக் குற்றவியல் சட்டங்கள் மனிதாபிமானமற்றவை, கொடுரமானவை என்றும் குற்றம் புரிந்தவருக்குக் கடுமையான தண்டனையை இஸ்லாம் வழங்குகிறது. என்றெல்லாம் விமர்சிப்பவர்கள், இஸ்லாம் மட்டும் குற்றங்களுக்குத் தண்டனை வழங்கவில்லை, உலகநாடுகள் அனைத்தும் குற்றங்களுக்கான தண்டனைகளை நிர்ணயித்து குற்றவாளிகளை தண்டித்து வருகின்றன என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் செய்கின்றனர்.
குற்றவாளித் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாரிடமும் மாற்றுக் கருத்தில்லை. தண்டனை கூடுதல் என்பதில் தான் இஸ்லாம் முரண்படுகிறது. தண்டனை கூடுதல் போல் தோன்றினாலும் பாதிக்கப்பட்டவனின் தரப்பில் நின்று இஸ்லாம் தண்டனையை நிர்ணயிக்கிறது.
பாதிக்கப்பட்டவனின் பாதிப்பின் அழுத்தம் வெளியிலுள்ளவர்களுக்கு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்திவிடாது. அதனால் ''இதற்கு போய் இவ்வளவு பெரிய தண்டனையா..?'' என்று வெறும் அனுதாப ''அச்சச்சோ''க்களை உதிர்த்து விட்டு, அதே கையோடு இஸ்லாத்தையும் விமர்சிக்கத் தயாராகி விடுகிறார்கள்.
சரி, இதையெல்லாம் இங்கு எழுத என்ன காரணம்? தருமி என்பவர் தமது பழைய பதிவைப் புதுப்பித்து புதிதாக ஒரு கேள்வியும் கேட்டிருக்கிறார் இதோ அவருடைய புதிய கேள்வி...
//இந்த நிலையில் புதிதாக ஒரு கேள்வியும் சேர்ந்து விட்டது. அதை பட்டியலில் சேர்த்து விடுகிறேன். திருப்திகரமான பதில் கிடைத்த முதல் கேள்வியை விட்டுவிட்டு இந்தக் கேள்வியை என் அந்தப் பழைய பதிவில் சேர்த்துள்ளேன். just an updating.
அந்தக் கேள்வி:
குர்ஆன் 25 : 68: 'அவர்கள் எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள்.(காரணத்தோடு கொல்லலாம் என்று பொருள் படுகிறதே?' - கொலை செய்பவனுக்கு ஒரு காரணம் கண்டுபிடிப்பதா பெரிது?)
5:32: "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலுடைய மக்களின் மீது நாம் விதியாக்கினோம்.
5:33 அல்லாஹ்வுடனும், அவன் ரஸூலுடனும் போர் செய்து கொண்டு, பூமியில் குழப்பத்தை உண்டாக்கித் திரிபவர்களுக்குரிய தண்டனையானது அவர்கள் கொல்லப்படுதல், அல்லது அவர்கள் தூக்கிலிடப்படுதல்; அல்லது அவர்கள் மாறுகால் மாறுகை வாங்கப்படுதல் அல்லது அவர்கள் நாடு கடத்தப்படுதல்…
கிறித்துவத்தில் 'கொலை செய்யாதே' என்பது ஒரு கட்டளையாகக் கொடுக்கப்பட்டுள்ளது; சமணத்தில் நுண்ணுயிர்களைக் கூட கொல்லக் கூடாதென்ற தத்துவம்; பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்கிறது தமிழ்மறை; எல்லா உயிரும் ஒன்றே, உயிர்க்கொலை தவறு என்கிறது இந்து மதம். இந்த கோட்பாடுகளில் எந்த clasue, sub-clause-ம் கிடையாது, அதாவது இந்தந்த மாதிரி நேரங்களில் மட்டும் கொலை செய்யலாம் என்ற விலக்குகள் தரப்படவில்லை. கொலை என்பது ஒட்டுமொத்தமாக தவறு; பாவம் என்றுதான எல்லா மதங்களும் போதிக்கின்றன. இந்த இடத்தில், நாடுகளுக்கு நடுவில் நடக்கும் போர்களையும், மனிதர்களுக்கு நடுவில் நடக்கும் சண்டைகளையும் குழப்பிக் கொள்ளக் கூடாதென நினைக்கிறேன். நாடுகளுக்கு நடுவில் நடக்கும் போர் என்றால் அங்கு 'கீதையின் விதிகள்தான்' எங்கும் பொருந்தும் என்பதில் ஐயமில்லை. ஆனால் மனிதர்களுக்குள்ளும் அந்த விதிகள் பொருத்தமாகக் கூடாது.
இஸ்லாமியத்தில் மட்டும் கொலை செய்வதற்கு ஏன் சில விதிவிலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஏதாவது ஒரு சரியான காரணம் கொண்டு -
கொலைக்குப் பழியாக -
குழப்பத்தைத் தடுக்க -
அல்லாஹுடனும், அவன் ரஸுலுடன் போர் செய்பவர்களை -
குழப்பத்தை உண்டாக்குபவர்களை -
இந்த சமயங்களில் கொலை செய்வது சரியா?
கொடூரக் கொலைகாரர்கள்கூட தங்கள் கொலைக்குக் காரணம் சொல்ல முடியுமே. அப்படியானால் ஒவ்வொரு கொலையும் யாரோ ஒருவரால் - நிச்சயமாக கொலை செய்தவனால் - காரண காரியங்களோடு நியாயப்படுத்த முடியுமே! அதோடு பழி வாங்குவது, அதற்காகக் கொலை செய்வது அனுமதிக்கப்படுகிறதே! இவைகள் எப்படி சரியாகும்.
புரிதலுக்காகவே இந்தக் கேள்வி.//
இந்தக் கேள்விக்கான விளக்கத்தைப் பார்க்குமுன் வலைப்பூவில் இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் பற்றி எனக்கு சில கருத்துக்கள் சொல்ல வேண்டியுள்ளது.
இஸ்லாத்தின் மீதான விமர்சனங்கள் வலைப்பதிவில் தொடங்கிய நாளிலிருந்து, காஃபிர், ஜிஹாத், பால்ய விவாகம், பலதாரமணம், அடிமைகள் என இப்படி ஒரே விஷயங்கள் தான் விமர்சனமாக வலைப்பதிவில் வைக்கப்பட்டு வருகிறது. முஸ்லிம் வலைப்பதிவர்களால் இதற்கான விளக்கங்கள் எழுதப்பட்டால் கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் பழைய விமர்சனமே புதுப்பித்துப் பதியப்படுகிறது வெவ்வேறு பெயர்களில்.
கிராமங்களில் மாடு அல்லது ஆடு அடுத்தவரின் விளைச்சல் நிலத்தில் சென்று மேய்ந்துவிடும். இதனால் பிரச்சனைகள் ஏற்பட்டு, நிலத்துக்குச் சொந்தக்காரன் கிராமப் பஞ்சாயத்தில் முறையிட, மாட்டுக்குச் சொந்தக்காரன் பஞசாயத்துக்கு அழைக்கப்படுவான். பிறகு அபராதமாக ஒரு தொகையை, மாட்டுக்கு சொந்தக்காரன் செலுத்த வேண்டுமென்பதோடு சுமுகமாக அந்த வழக்கு முடிந்து விடும்.
இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், இவ்வளவு நடந்தது அந்த மாட்டுக்குத் தெரியாது. மறுநாள் அதே விளை நிலத்தின் பக்கம் போக நேர்ந்தால் மீண்டும் நிலத்திற்குள் புகுந்து மேய்ச்சலைத் தொடங்கிவிடும். மேயும்போது சப்தமிட்டு விரட்டினால் சத்தத்தைக் கேட்டு ஓடிவிடும். சப்தம் இல்லாதபோது மீண்டும் நிலத்தில் வந்து மேயும்.
சப்தமிட்டு விரட்டும் போது, விரட்டுகிறார்கள் என்பதை மாடு புரிந்து கொண்டு ஓடி விடுகிறது. ஆனால் எதற்காக விரட்டுகிறார்கள் என்பதை புரிய முடியாததால் மீண்டும் நிலத்தில் புகுந்து மேயத் தொடங்குகிறது. (யாரையும் குறிப்பிட்டு இவ்வுதாரணத்தை நான் சொல்லவில்லை என்பதை அறியவும்) இந்த உதாரணத்தையே இறைவன் திருக்குர்ஆன் 2:171வது வசனத்தில் சொல்லிக் காட்டுகிறான்.
2:171. அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால், ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையும் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள். அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.
இனி தருமியின் கேள்விக்கு வருவோம்.
இஸ்லாத்தின் குற்றவியல் சட்டங்கள் விமர்சிக்கப்படுவதை மேலே எழுதியுள்ளேன். கொலைக்குக் கொலை, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், மணமானவர் விபச்சாரம் செய்தால் - பெண்ணை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை. இது போன்ற குற்றவியல் சட்டங்களை இஸ்லாம் இயற்றியுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இஸ்லாமிய அரசு இத்தண்டனைகளை நிறைவேற்ற வேண்டும்.
25:68வது வசனத்தைப் பார்ப்போம்..
25:68. அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள். இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.
''நியாயமின்றி - காரணமின்றி எந்த மனிதரையும் கொல்ல மாட்டார்கள்'' என்றால், ஒருவன் இன்னொரு மனிதனைக் கொலை செய்திருந்து, அல்லது மேலே குறிப்பிட்டுள்ள மரண தண்டனை பெறும் குற்றங்களை செய்திருந்தால் அவன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு, அந்தக் குற்றமே கொலைக்குக் கொலை என கொலையாளிக்கும் மற்ற குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு அவன் கொல்லப்படுகிறான். அதாவது குற்றவாளி தான் செய்த குற்றத்திற்காகக் கொலை செய்யப்படுகிறான். இதுதான் ''காரணத்தோடு கொல்லலாம்'' என்பது.
இந்தக் காரணங்கள் இல்லையென்றால் ''அவர் தண்டனை அடைய நேரிடும்'' என்று வசனத்தின் இறுதி வாசகம் எச்சரிக்கிறதே, தருமி புரிந்து கொள்ளவும்.
5:32. இதன் காரணமாகவே, ''நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ...
(5:32 வது வசனத்திலும்,) ''கொலைக்குப் பதிலாகவேயன்றி'' யாரையும் கொலை செய்யக் கூடாது என்று காரணங்கள் சொல்லப்படுகிறது. இதையெல்லாம் முதுகுக்குப் பின்னால் தள்ளிவிட்டு காரணங்களைத் தேடுபவர்களை என்னவென்பது?
அடுத்து...
5:33. அல்லாஹ்வுடனும் அவன் துதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டணை இதுதான். (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல். இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.
குழப்பம் செய்வதை கொலையை விடக் கடுமையானக் குற்றமாக இஸ்லாம் பிரகடனப்படுத்துகிறது. ஏன்? எதற்காக? என்று கூடத் தெரியாமல் ஆங்காங்கே பயங்கரவாதங்களை செயல்படுத்தி, நாட்டின் இறையாண்மையை சீர் குலைத்து, மக்களின் நிம்மதியையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் எவரும் குழப்பவாதிகள் - தண்டனைக்குரியவர்கள். இவர்களின் பிணங்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே சில வாரங்களுக்கு முன் வலைப்பதிவின் வாதமாக இருந்தது.
அன்றும் நாட்டின் இறையாண்மையை சீர்குலைக்கும் குழப்பவாதிகள் இருந்தார்கள். அரசுக்குக் கட்டுப்படுவதாக சொல்லிக்கொண்டு, எதிரிகளுக்கு நாட்டின் ரகசியங்களை அறிவித்துக் கொடுத்துப் போர் செய்ய வரும்படியும் தகவல்களை வழங்கி, சுத்த நயவஞ்சகத் தன்மையில் ஈடுபட்டு குழப்பம் விளைத்துக் கொண்டிருந்தவர்களுக்குத் தான் 5:33 வது வசனத்தில் தண்டனைகள் சொல்லப்படுகிறது. தேசத் துரோகிகளைக் கொல்வதும், நாடு கடத்துவதும் தவறு என்றால் அந்தத் தவறைச் செய்யும்படி இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு இஸ்லாம் கட்டளையிடுகிறது.
(தருமி புரியும்படியா கேள்வியை வைக்கவில்லை, புரிந்ததை விளக்கியுள்ளேன்)
அன்புடன்,
அபூ முஹை
10 comments:
மிகவும் மேலோட்டமான பதிலாகவே தெரிகிறது. சில கிளைக் கேள்விகள் (தருமி எந்த நோக்கத்தில் கேட்கிராரோ அதே நோக்கத்தில்)
1. சின்ன வயசுல தெரியாம திருடிட்டீங்க அதுக்காக கடுமையா தண்டிக்கமுடியுமா?
2. தவறிழைப்பது மனிதப் பண்பு மன்னிப்பது இறைப் பண்பில்லையா?
3. தவறு செய்த ஒருவர் திருந்த வாய்ப்பளிப்பது தவறா? இதற்கு ஏதாவது வழி உள்ளதா?
4. இத்தனை தண்டனைகள் இருந்தும் இஸ்லாமிய நாடுகளில் குற்றம் குறைந்துள்ளதா?
சிறில் அலெக்ஸ், உங்கள் வருகைக்கு நன்றி!
//மிகவும் மேலோட்டமான பதிலாகவே தெரிகிறது.//
உங்களுக்கு இப்படித் தெரிவதில் ஆச்சரியம் இல்லை!
ஏன்னா? தருமியின் கேள்வியிலிருந்து நீங்கள் குறிப்பிட்டுள்ள நான்கு விஷயங்களையும் நான் ஊகித்து விளக்கம் சொல்லியிருக்க வேண்டும் என்கிறீர்களே அதுதான் அதிர்ச்சியான விஷயம்.
தருமி கேட்ட கேள்வியின் மொத்த சாரத்தையும், முக்கியமாக கடைசி பாராவை - மேலோட்டமாக அல்ல ஆழமாகக் - கவனியுங்கள். அதற்கான விளக்கங்களையே நான் எழுதியுள்ளேன்.
அதுவும் தருமி குறிப்பிட்ட திருக்குர்ஆன் வசனங்களையும், தடித்த எழுத்துக்களையும் கருத்தில் கொண்டு விளக்கம் சொல்லப்பட்டது. இதிலே முழு இஸ்லாத்தையும் சொல்ல முடியாது.
நீங்கள் கேட்ட நான்கு கேள்விக்கும் தருமியின் கேள்விக்கும் தொடர்பு இல்லையென்றாலும் அந்த நான்கு கேள்விக்கும் விளக்கம் சொல்கிறேன்.
********************
1. சின்ன வயசுல தெரியாம திருடிட்டீங்க அதுக்காக கடுமையா தண்டிக்கமுடியுமா?
விளக்கம்: பசியின் தேவைக்காக சில கவள உணவுகளை பருவமடைந்தவர்களே திருடித் தன்றாலும் அதுற்கு தண்டனையில்லை. எல்லாமிருந்தும் திருடுகிறானே அதுதான் தண்டனைக்குரியது.
சின்ன வயசு என்பது 10 வயதுக்குள் என்று கருத்து கொள்ள இஸ்லாத்தில் ஆதாரமிருக்கிறது. அதற்கு கீழேவுள்ள வயதுடையவர்கள் சிறுவர்கள் என்பதால் தண்டிக்கப்பட மாட்டார்கள்.
*************
2. தவறிழைப்பது மனிதப் பண்பு மன்னிப்பது இறைப் பண்பில்லையா?
விளக்கம்: இந்தக் கேள்விக்கு நடைமுறையாக ஒரு உதாரணம் சொல்கிறேன் ஒரு பேச்சுக்குத்தான்...
நான் உங்களை ஏசி விட்டேன் அல்லது அடித்து விட்டேன் என்று வைத்துக் கொள்வோம், இதை நீங்கள்தான் மன்னிக்க வேண்டும். நான் உங்களை துன்புறுத்தியதை தருமி மன்னிக்க வேண்டும் என்று சொல்வது எப்படி நியாயமில்லையோ அதுபோல்தான் தவறு செய்தவனை இறைவன் மன்னிக்க வேண்டுமென்று சொல்வதும்.
இறைவன், அவனுக்கு தவறு இழைத்தால் மன்னிப்பான். மனிதனுக்கு மனிதன் செய்யும் தவறுகளை மனிதர்களிடமே தீர்த்துக் கொள்ள வேண்டும். மன்னிப்பதே மேலானது என்றுதான் இறைவன் கூறுகிறான். ஆனாலும் மன்னிப்பதையும், தண்டிப்பதையும் பாதிக்கப்பட்ட மனிதனின் தனி உரிமையில் விட்டு விட்டான் இறைவன்.
*********************
3. தவறு செய்த ஒருவர் திருந்த வாய்ப்பளிப்பது தவறா? இதற்கு ஏதாவது வழி உள்ளதா?
விளக்கம்: என்ன ஜோஸ்யமா? தவறிழைத்தவன் தொடர்ந்து தவறிழைத்துக் கொண்டிருக்கிறான். தண்டனை போதாமல். இருந்தாலும் அந்த வாய்ப்பை பாதிக்கப்பட்டவன் தான் வழங்க வேண்டும்.
*********************
4. இத்தனை தண்டனைகள் இருந்தும் இஸ்லாமிய நாடுகளில் குற்றம் குறைந்துள்ளதா?
விளக்கம்: இஸ்லாம் வழங்கும் குற்றவியல் தண்டனை சரியா? தவறா? என்ற கருத்தோட்டத்தில் அதைப்பற்றி மட்டுமே பேச வேண்டும்.
இந்த சட்டங்களால் இஸ்லாமிய நாடுகளில் குற்றம் குறைந்துள்ளதா? என்றக் கணக்கெடுப்பு எனக்கு அவசியமில்லை. நன்றி!
அன்புடன்,
அபூ முஹை
திரு அபூமுஹை
நீங்களும் திரு நல்லடியார் அவர்களும் அழகிய விளக்கங்கள் அளித்திருந்தாலும் அதனை விதண்டாவாதமாக்கி மேற்கொண்டு செல்லும் அவருடைய நோக்கத்தைத் தான் ஐயுற வேண்டியுள்ளது.
சிறில் கேட்கும் கேள்வியோ ரொம்ப அப்பாவித்தனமாக இருக்கிறது.
ஐயா சிறில், இதற்கு முன் திரு நல்லடியார், திரு அபூ முஹை இவர்களது விளக்கங்கங்களைப் படித்து உள்ளீர்களா? இல்லை என்றால் சொல்லுங்கள் தருமி போன்றவர்கள் (அவர் இஸ்லாத்தைக் குறித்துக் கேள்வி எழுப்பும் போது மட்டும் தட்டிக் கொடுத்தவர்கள் அவர்கள் தருமியின் இந்து மதம் குறித்த கேள்விக்குத் தலை மறைவாகிவிட்டனர்) கேட்ட கேள்விகளுக்கெல்லாம் கொடுத்த பதில்களின் சுட்டிகளைத் தேடிப்பார்த்து தருகிறேன்.
சகோ அபூ முஹை
அருமையான விளக்கங்கள். உங்களுக்கு இறைவன் நற்கூலி தருவானாக.'இவர்களுக்கு' ஆயிரம் முறை விளக்கம் சொன்னாலும் எல்லாவற்றையும் திரும்பத் திரும்ப தெரியாதது போல இவர் மட்டுமல்ல இவரைப் போன்ற அனைவருமே கேட்பார்கள்.
அட்றா சக்கை, தமிழ் செல்வன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
//‘அவ்வா’ (AWWA) என்று பெயர் குரானில் சொல்லியுள்ளதாக விளக்கியுள்ளார்கள். விளக்கத்திற்கு நன்றி. )// >>இது தருமியின் கருத்து.
உலகளாவிய மதத்தை விமர்சிக்கும் தருமியின் ''அறிவு''!? எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு மேற்கண்ட, தருமியின் ஓப்புதல் சான்றாக இருக்கிறது.
பாவம் இவர் எதுவும் அறியாதவர். ஏதோ விமர்சிக்க வேண்டுமென்பதற்காக இஸ்லாத்தைப் பற்றி எதுவும் பரிசீலிக்காமலேயே கேள்விப்பட்டதை வைத்து விமர்சிக்கிறார் அவ்வளவுதான்.
அன்புடன்,
அபூ முஹை
இஸ்லாத்தைக் குறித்து கேள்வி/விமர்சனம் வைப்போர் மூன்று வகை:
இஸ்லாத்தின் அதிவேக பரவலைக் கண்டு,
1. ஆச்சரியத்துடன் இஸ்லாத்தைக் குறித்து தான் அறிந்தவைகள் சரிதானா என தெரிந்து கொள்வதற்காக கேட்பவர்கள்.
2. காழ்ப்புணர்ச்சியுடன் அதனை மக்கள் முன் மோசமானதாக சித்தரிக்க இஸ்லாத்தைக் குறித்து தெளிவாக அறிந்திருந்தாலும் உண்மைக்குப் புறம்பாக விஷயங்களைத் திரித்து விமர்சனம் புரிவோர்.
3. அதே காழ்ப்புணர்ச்சியுடன் இஸ்லாத்தைக் குறித்து ஒரு அடிப்படையும் தெரியாவிட்டாலும் சில இடங்களில் மேலோட்டமாக மேய்ந்து கொண்டு முந்திரிக்கொட்டை போன்று அவசரப்பட்டு தப்பும் தவறுமாக கேள்விகளை தொடுப்பவர்கள்.
இவற்றில் முதல் வகையினருக்கு விளக்கம் அளிப்பதில் நேரடியாகவே மிகுந்த பலன் உண்டு.
இந்த இரண்டாவது மூன்றாவது வகையினரைக் குறித்து என்ன கூற?
வாயில் வார்த்தைகளே வரவில்லை. இவர்களால் ஒரு பயன் மட்டும் உண்டு. இவர்களின் மூலமாக ஏற்கெனவே இஸ்லாமியராக உள்ள பலர் இஸ்லாத்தில் இருக்கும் நம்பிக்கையின் காரணமாக அவர்களுக்கு பதிலளிப்பதற்காகவே மேலும் மேலும் ஆழமாக இஸ்லாத்தை படிக்க முயலுகின்றனர்.
இதன் மூலம் கொடுக்கும் பதிலால் இந்த காழ்ப்புணர்வு கொண்டவர்கள் சிந்தித்து புரிந்து கொள்கிறார்களோ இல்லையோ நடுநிலையோடு சிந்திக்கும் பலர் இஸ்லாத்தைக் குறித்து மேலும் அதிகமாக அறிந்து கொள்கின்றனர்.
இதற்கு இப்பதிவே எடுத்துக்காட்டு.
மாய்ந்து மாய்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கியவர் ஒருவர். அதற்கு அதைவிட கூடுதலாக மாய்ந்து மாய்ந்து இங்கு விளக்கம் எழுதினால் அதனை படித்து பதில் அளித்து மேலும் புரிய விளக்கம் கேட்டவர் இன்னொருவர்.
கேள்விகளை எண்ணிட்டு அடுக்கியவரை மட்டும் காணோம்.
என்ன சொல்ல.
இப்பொழுதெல்லாம் இணையத்தில் இஸ்லாத்தின் மீது அவசியமில்லாமல் வார்த்தைகளை தவறாக புரிந்து கொண்டோ புரியாமலோ சேறு வாரி அடிப்பவர்கள் ஏராளம் மலிந்து விட்டனர்.
அவை அனைத்திற்கும் முறையாக பதிலளிக்கும் பொழுது கேள்வி கேட்டவர்களை அங்கு காணமுடிவதில்லை. அப்படியே வந்தாலும் கொடுக்கப்பட்ட விளக்கத்தைக் குறித்து எந்த பதிலும் தருவதில்லை.
எப்படியோ இவர்களால் என்னைப் போன்ற இஸ்லாமை முழுமையாக படிக்காத பலருக்கு இஸ்லாத்தை முழுமையாக புரிய வழி பிறக்கிறது. அந்த வகையில் இவர்களுக்கு என்னைப்போன்றவர்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
சகோதரர் அபூ முஹை அவர்களுக்கு நன்றிகள் பல.
இறைவன் உங்களுக்கு மேலும் மேலும் ஞானத்தை வழங்குவானாக.
அன்புடன்
இறை நேசன்
அன்பு அபூமுகை
தருமியின் கேள்விகளுக்கு நீங்க மெனக்கெட்டு கொடுத்திருக்கும் பதில பாக்கும்போ உங்க மேல மதிப்பு கூடுது.
புரிந்து கொள்ள கேள்வி கேக்கக்கூடியவருக்கு பதிலளிப்பதில தப்பொண்ணுமில்ல. ஆன இவரு புரிந்து கொள்ளவோ வெசயங்கள அறியவோ கேள்விகள கேப்பது போல எனக்கு தெரியல.
கேள்வி மட்டும் கேப்பேன். பதில தந்தாலோ எதிர் கேள்வி கேட்டாலோ அத நா கண்டுக்கவே மாட்டேன்னு இருக்கிற ஆளுக்கு பதிலு கொடுப்பதில அர்த்தம் இல்ல.
இவரு இப்படி ஒவ்வொரு மதத்தக் குறித்தும் கேள்விகள் கேக்க அடிப்பட காரணம் என்ன?
அத அவரு "நான் ஏன் மதம் மாறினேன்னு" தொடரு பதிவு போட்டு வெளக்கீட்டாரு.
அதுல அவரு இருந்த கிறிஸ்தவ மதத்த விட்டு மாறுதுக்கு சொன்ன காரணத்துல முக்கிய காரணம் "யேசு சிலுவைல மரணிச்சது".
பைபிள்ல "இயேசு சிலுவைல கொல்லப்பட்டதா வருவது முரணா இருக்குன்னும் ஒரு கடவுளுக்கே தன்னை காப்பாத்த முடியாதது முரணா அறிவு ஏற்றுக்கொள்ள மறுப்பதாட்டும்" தான் மதம் மாறுனதுக்கு அவரு அடுக்குன காரணங்கள்ல முக்கிய காரணமா குறிப்பிட்டாரு.
ஆனா பைபிளுல "சிலுவைல அறையப்பட்ட யேசு கர்த்தரால காப்பாத்தப்பட்டதா" வருதேன்னு நா அவருட்ட கேள்வி கேட்டு அத வெளக்க அவரு பதிவுல போட்ட பின்னூட்டத்த இது வரக்கும் அவரு வெளிவிடவே இல்ல. அது மட்டுமல்ல பல பேருடய பதிவுகள்ல இதக்குறிச்சு நா கேள்வி கேட்டும் நானே "நான் ஏன் நிறம் மாறினேன்னு" பதிவு போட்டும் இதுவர அதுக்கு அவருகிட்டேருந்து ஒரு அனக்குமும் இல்ல.
அவருடைய மத வேதபுத்தகத்த குறிச்சே முழுமையான அறிவில்லாம இல்லேன்னா முழுசா படிக்காம, இல்லாத ஒரு காரணத்த சொல்லி மதம் மாறுனவருக்கு மத்த மதங்களப்பத்தி எவ்வளவுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு? அப்பிடீன்னு உள்ளது கேள்விக்குறியே!
இதுக்கு "இஸ்லாமிய மதத்துல மொதப்பெண்ணுக்கு பேரு இல்லன்னு" அவரு கண்டுபிடிச்ச அதிமுக்கிய கண்டுபிடிப்பு மற்றொரு சாட்சி.
அடிப்படைல ஒரே தந்தைலருந்து வந்ததா கூறிக்கொள்ளும் இஸ்லாமிய கிறித்தவ மத அடிப்படைகளக் கூட தெரிஞ்சிக்கிடாத இவரு உண்மைல கிறிஸ்த்தவரா இருந்தவரு தானான்னே சந்தேகமா இருக்கு.
மொத்தமா அரக்குற கேள்விஞானத்த வச்சிக்கிட்டு தீர்மானம் எடுத்து அது ஏதோ அவரு 45 55 வருசமா ஆராய்ச்சி செஞ்சு அனுபவத்துல எடுத்த முடிவு போல பீத்திக்கிட்டு பதிவுகள போடூத பாக்கும் போது வெறும் வெளம்பரத்துக்கு இல்லேன்னா யாருக்காகவோ எதுக்காகவோ உலக இரு பெரிய மதங்கள் மேல இல்லாத குறைகள வீசிக்கிட்டு போவது போல தெரியுது.
அதுனால மொதல்ல அவரு மத்தவரு கேக்கக்கூடிய கேள்விக்கு பதிலு சொல்லட்டும்.
பைபிள்ல "யேசுவ கர்த்தர் காப்பாத்துனதா வருதே" இதுக்கு தருமியோட பதுலு என்ன?
இதக்குறிச்சு என்னோட விவாதிக்க அவரு தயாரா?
பகுத்தறிவாளன்.
//Dharumi said...
raaja,
உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்த பிறகே அபுமுஹை ஒரு பதில் பதிவளித்திருப்பது தெரிந்து அங்கே போனேன். மற்றபடி எனக்கு என்ன ஜோசியமா தெரியும்! குறிப்பிட்டமைக்கு நன்றி.
கோபத்தில் அங்கு சிலர் குமுறிக்கொண்டிருப்பது பார்த்தேன்.களம் பிடிக்கவில்லையாதலால் அதைப் பற்றி ஏதும் கூற விளையவில்லை.
9/15/2006 10:43:05 PM //
இது தருமி என்பவர் அவருடைய பழைய பதிவை புதுப்பித்து, செப்டம்பர் 7,2006ன் பதிவில் பின்னூட்டிக் கொண்டது. இதில் என்ன விசேஷமென்றால்...
//கோபத்தில் அங்கு சிலர் குமுறிக்கொண்டிருப்பது பார்த்தேன்.களம் பிடிக்கவில்லையாதலால் அதைப் பற்றி ஏதும் கூற விளையவில்லை.//
தருமியின் நேர்மை எப்படியிருக்கிறது என்று பாருங்கள். தருமியின் ''67.நான் ஏன் மதம் மாறினேன்...?..6 என்ற பதிவின் பின்னூட்டத்தில் ஒரு கூட்டமே கோபத்தில் கும்மியடித்துக் கொண்டிருந்தது. அது மட்டமல்ல மிகவும் கீழ்த்தரமானப் மறுமொழியையும் அனுமதித்து ரசித்து, மகிழ்ந்து கொண்ட தருமி, இன்று என்னுடைய பதிவில் இரண்டு மறுமொழிகளை (மட்டுமே) நான் அனுமதித்ததை படித்து விட்டு ''கோபத்தில் குமுறுவதால் களம் பிடிக்கவில்லை'' என்கிறார். அடடா.. என்னே நேர்மை!?
ஒரு மனிதர் தனக்குத் தானேவா முரண்படுவார்...?
இறைநேசன், மற்றும் பகுத்தறிவாளன் உங்கள் வருகைக்கு நன்றி! உங்கள் இருவரின் பின்னூட்டமும் பதிவுக்கு சம்பந்தமில்லாமல் இருக்கிறதே என்று எண்ணி, அனுமதிக்கத் தயங்கினேன். ஆனாலும் தருமியின் தலைகீழ் திசை மாறலுக்கு இது தேவலாம் என்று அனுமதித்தேன். இது அவரை அடையாளம் காண ஒரு வாய்ப்பாக இருந்தது, மீண்டும் நன்றி!
அன்புடன்,
அபூ முஹை
//கோபத்தில் அங்கு சிலர் குமுறிக்கொண்டிருப்பது பார்த்தேன்.களம் பிடிக்கவில்லையாதலால் அதைப் பற்றி ஏதும் கூற விளையவில்லை.//
அடா அடா அடா!
நழுவல்னா இதுல்லா நழுவல். இப்படியொரு சப்பக்கட்ட என் வாழ்நாளில பாத்ததில்லப்பா.
கோபத்துல குமுறுறாங்களாம். என்ன எங்குடும்பச்சொத்த தருமி அய்யா கொள்ள அடுச்சுப்புட்டாரா? இல்லேன்னா எங்கிட்டயிருந்து ஒரு 50 லட்சத்த கடம் வாங்கிட்டு வாங்கவே இல்லயின்னு சத்தியம் பண்ணுனாரா?
அவரு மதம் மாறுனதுக்கு அவரு சொன்ன காரணம் சரியில்லன்னு சுட்டிக்காட்டுனா கோவப்படுறாங்களாம்.
எனக்கென்னமோ ஆசிரியர் தருமி இந்த பதில சொல்லியிருக்க மாட்டாருன்னு தோணுது. நீங்க ஒரு மொறக்கூட நல்லா பாத்துக்கிடுங்க.
இல்ல அவரு தான் இப்படி சொல்லியிருக்காருன்னா என்னத்த சொல்ல. அவரோட சாமர்த்தியமே சாமர்த்தியம் தான் போங்க.
அவரு மதம் மாறுனதுக்கு சொன்ன காரணம் தப்பு. அதப்பத்தி விவாதிக்க தயாரான்னு(அவருக்கு தெரியாத குரானைப்பத்தி கூட இல்ல. அவரு நல்லா கரச்சு குடிச்ச அவரோட முன்னாள் மதப்புத்தகமான பைபிளப்பத்தி தான்) கேட்டேன்.
இது அவருக்கு நா கோபப்படூதா தெரியுதாக்கும். செலப்போ இறை நேசனப்பத்தி சொன்னாரா இருக்கும்.
அவரு விசயங்கள அறிந்து கொள்ளத்தான் தேடுகிறாருன்னா உண்ம எங்கிருந்தாலும் ஏத்துக்கிடக் கூடிய நல்ல ஆசிரியருடைய மன முதிர்ச்சி அவருக்கு இருக்குதுன்னா நிச்சயமா என் சவால அவரு ஏத்துக்கிடுவாரு.
பாப்போம். என்ன பதிலு கொடுக்காருன்னு.
பகுத்தறிவாளன்.
அன்பின் பகுத்தறிவாளன் அவர்களே!
உங்கள் பின்னூட்டத்தில் சில கருத்துக்களை மட்டுறுத்தி அனுமதித்துள்ளேன், பொறுத்துக் கொள்ளவும் நன்றி!
அன்புடன்,
அபூ முஹை
Post a Comment