Monday, September 18, 2006

மதமாற்றம் ஏன்? -5

இஸ்லாம் பற்றிய சந்தேகம் கேட்டு, 67.நான் ஏன் மதம் மாறினேன்..? என்ற தலைப்பின் தருமி என்பவர் ஒரு பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில் 21கேள்விகள் வைக்கப்பட்டிருந்தது. கேள்விகள் மட்டுமில்லை, கேள்விகளுக்கு முன் ஒரு முன்னுரை மாதிரி, ''இதெல்லாம் எனக்குத் தெரியும்'' என்ற தோரணையில் இஸ்லாத்தை பற்றியும் சில விளக்கங்களை எழுதியிருந்தார்.

நமது பார்வையில் அது விமர்சனமாகப்பட்டது. ஏனென்றால் எழுத்தின் சாயலில் விமர்சனம் இருந்தது. மிகையாகச் சொல்லவில்லை இதோ அவர் எழுதியது...

//மூன்று திருமணங்கள் மட்டுமே (என்னைப் பாதித்தவை) குறிப்பிடத் தக்கவை.

1 ஆயிஷா - முகமது இப்பெண்ணை மணம் முடிக்கும்போது அவரது வயது 50-க்கு மேல்;
2. Zaynab bint Jahsh- ஜேனாப் என்ற இந்தப் பெண்மணி முகமதின் வளர்ப்பு மகனின் மனைவி;

3. ஜுவேரியா - இந்தப் பெண்ணின் கதை மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமாயிருந்தது.//
>தருமி.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்களின் எண்ணிக்கையைப் பட்டியலிட்டு அதில் மூன்று திருமணங்களால் இவர் பாதிக்கப்பட்டதாகவும், (எப்படி பாதிக்கப்பட்டாரோ?) அதிலும் ஜுவைரியா (ரலி) அவர்களுக்கு நிகழ்ந்தது இவர் மனதை கஷ்டப்படுத்தியதாகவும் (எதனால் கஷ்டமடைந்தாரோ?) குறிப்பிட்டிருந்தார். இது விமர்சனம் என்பதில் சந்தேகமில்லை.

இந்த விமர்சனத்தை மனதில் கொண்டு, அன்னை ஆயிஷா, அன்னை ஸைனப், அன்னை ஜுவைரியா (ரலி-அன்ஹுமா) இந்த மூவர் முஹம்மது (ஸல்) அவர்களை மணந்து அதனால் எவ்வித பாதிப்புக்கும் ஆளாகவில்லை. மாறாக மகிழ்ச்சியாகவே வாழ்ந்தார்கள் என்பதை இரண்டு பதிவுகளில் விளக்கியிருந்தோம்.

அப்படிப் பாதிக்கப்பட்டிருந்தால், அது சமகால இஸ்லாத்தின் எதிரிகளால் விமர்சிக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற திருமணங்கள் அச்சமூகங்களிடையே தடை செய்யப்பட்டிருந்தால் அதுவும் எதிரிகளால் விமர்சிக்கப்பட்டிருக்கும். என்று எழுதி, இத்திருமணத்தால் எங்களின் வாழ்க்கை பாழாகி விட்டதாக யாரும் சொல்லவில்லை மாறாக மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் வரலாறு. என்று சொல்லி...

//நபியை மணந்த ஆயிஷா (ரலி)யின் வாழ்க்கையில் சிறு கீறல்கூட இல்லாமல் மிக்க மகிழ்ச்சியாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று அவர்கள் சொல்லியே வரலாற்றிலிருந்து அறிய முடிகிறது. ஆனாலும் தருமி போன்றவர்கள் புகுந்து இது கொடுமையென்று தொடர்ந்து புலம்பிக் கொண்டிருப்பதுதான் மிகக் கொடுமை. 53வயதான நபி(ஸல்) அவர்களை மணந்ததால் என் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று ஆயிஷா (ரலி) எங்காவது சொல்லியிருக்கிறார்களா? இந்த பால்ய விவாகத்திற்கும் தருமி மதமாறியதற்கும் என்ன சம்பந்தம்?

59வயதான நபி(ஸல்) அவர்களை மணந்ததால் என் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று ஜுவைரியா (ரலி) எங்காவது சொல்லியிருக்கிறார்களா?//
> இப்படிக் கேட்டிருந்தோம்.

அதாவது சம்பந்தப்பட்டவர்கள் மிக சந்தோஷமாக நபி (ஸல்) அவர்களோடு இல்லற வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள். இது ஏன் தருமியை பாதிக்க வேண்டும்? அப்போதிருந்தே, தருமிதான் எனக்கு விளக்கம் சொல்லும் இடத்தில் இருக்கிறார்.

ஆனால் பதில் சொல்லாமல், 175.நான் ஏன் மதம் மாறினேன்..? என்ற பதிவில், அவருடைய கேள்விகளில் சிலவற்றை அவரே தள்ளுபடி செய்கிறார். மேலும் தான் விமர்சித்த பகுதிக்கு விளக்கம் கொடுத்த போது, நான் அதைக் கேள்வியாக வைக்கவில்லை என்று நாணயத்தை மாற்றுகிறார், பூவா, தலையா போட சுண்டியதில் பூ விழுந்ததும், உடனடியாக நாணயத்தை தலைப் பக்கம் திருப்பிக் போட்டுக் கொள்வார்களே! அது போல.

//ஆக, என் 21 கேள்விகளில், முதல் கேள்வி, கேள்வியே தவறானது என்று ஒப்புக்கொள்கிறேன். இரண்டாவது, மூன்றாவது, ஆறாவது கேள்விகளுக்குப் பதில் தரப்பட்டுள்ளன. அந்தப் பதில்களை நான் ஏற்றுக் கொண்டுவிட்டேனா என்பது வேறு விஷயம்.// >தருமி.

இங்கே தருமிக்கு சில வார்த்தைகள்: எந்தவொரு விளக்கத்தையும் ஏற்றுக் கொள்வதும், புறக்கணிப்பதும் அவரவர் சுதந்திரமான கருத்திற்குட்பட்டது. ஏற்றுக் கொண்டேயாக வேண்டுமென்று இங்கு யாரும் வற்புறுத்தவில்லை. ஏற்காததால் பூமியின் சுழற்சி நின்று விடப்போவதில்லை ஆனால்...

ஒரு விமர்சகனின் எழுத்தில் நேர்மை இருக்க வேண்டும். தான் விமர்சித்ததை விளக்கும் போது 'இதை நான் கேள்வியாக வைக்கவில்லை' என்றால் கேள்விகளுக்கு முன்பு அந்த விமர்சனங்கள் ஏன் எழுதப்பட்டது? என்பதையாவது உண்மையுடன் உரைக்க வேண்டும். 21 கேள்விகளுக்கு மட்டுமல்ல அதற்கு அப்பாலுள்ள கேள்விகளுக்கும் மணி மணியான விளக்கங்கள் இஸ்லாத்தில் இருக்கிறது.

அது பற்றி பேசுவதற்கு முன்,

//மூன்று திருமணங்கள் மட்டுமே (என்னைப் பாதித்தவை) குறிப்பிடத் தக்கவை.

1 ஆயிஷா - முகமது இப்பெண்ணை மணம் முடிக்கும்போது அவரது வயது 50-க்கு மேல்;

2. Zaynab bint Jahsh- ஜேனாப் என்ற இந்தப் பெண்மணி முகமதின் வளர்ப்பு மகனின் மனைவி;

3. ஜுவேரியா - இந்தப் பெண்ணின் கதை மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமாயிருந்தது.//
>தருமி.

இந்த மூவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள் என்று கூட வேண்டாம் - பாதிக்கப்பட்டார்கள் என்பதற்கான சம்பந்தப்பட்டவர்களின் வாக்கு மூலம், அல்லது சமகாலத்தில் யாராவது இவர்களின் பாதிப்பைப் பற்றி பேசியுள்ளதாக ஏதேனும் ஒரு ஆவணத்தை தருமி சமர்ப்பிக்க வேண்டும், அதன் பிறகு அவருடைய மற்ற கேள்விகளையும் அது சம்பந்தமான விவாதங்களையும் அழகிய முறையில் சந்திப்போம். நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

8 comments:

அட்றா சக்கை said...

//ஒரு விமர்சகனின் எழுத்தில் நேர்மை இருக்க வேண்டும். தான் விமர்சித்ததை விளக்கும் போது 'இதை நான் கேள்வியாக வைக்கவில்லை' என்றால் கேள்விகளுக்கு முன்பு அந்த விமர்சனங்கள் ஏன் எழுதப்பட்டது? என்பதையாவது உண்மையுடன் உரைக்க வேண்டும். //

மிகச் சரியான வார்த்தைகள் சகோ அபூமுஹை அவர்களே,

இதே போன்று போகிற போக்கில் சேறு வாரி இறைத்துச் சென்ற நேசகுமார் என்பவர் இப்படி கேள்விகள் வைத்தவுடன் தலை மறைவாகிவிட்டது நினைவுக்கு வருகிறது.

விமர்சனம் நேர்மையாக இருக்க வேண்டும். சும்மா எளிதில் பிரபலம் ஆவதற்காக்வும், இஸ்லாஅத்தின் மீதுள்ளா காழ்ப்ப்ழித் தீர்த்துக் கொள்ளவும் தான் தருமியோ, வேசம் போடும் நேசகுமாரோ மீண்டும் மீண்டும் சொன்ன பொய்களை சொல்கிறார்கள்.

உங்களின் இந்தப்பதிவில் உள்ள எந்தக் கேள்விக்கும் பதில் வரப்போவதில்லை.

நேசகுமார் தருமி போன்றவர்கள் தங்கள் அறியாமையையும் கயமைத் தனத்தையும் தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர்

Jafar Ali said...

அருமையான விவாத அழைப்பு!

தமிழ் செல்வன் said...

//இந்த மூவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள் என்று கூட வேண்டாம் - பாதிக்கப்பட்டார்கள் என்பதற்கான சம்பந்தப்பட்டவர்களின் வாக்கு மூலம், அல்லது சமகாலத்தில் யாராவது இவர்களின் பாதிப்பைப் பற்றி பேசியுள்ளதாக ஏதேனும் ஒரு ஆவணத்தை தருமி சமர்ப்பிக்க வேண்டும்,//

இது நடப்பது போல் தெரியவில்லை.

பெரியவர் தருமி அவர்கள் ஆங்காங்கே நழுவிச் செல்வது அவர் கருத்துக்கள் மற்றும் கருத்துக்களை வைக்கும் நோக்கங்களின் மீது சந்தேகத்தை வலுக்க வைக்கிறது.

இங்கு இருவிதமான விவாத அழைப்புகளை காண்கிறேன்.

ஒன்று தருமி அவர்களின் இஸ்லாம் மீதான சில விமர்சனக்களுக்கு தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்கான நண்பர் அபுமுகையின் அழைப்பு.

மற்றொன்று நண்பர் அபுமுகை அவர்களின் இப்பதிவிற்கு முந்தைய பாகத்தில் பெரியவர் தருமி அவர்களின் மதம் மாறியதற்கு கூறிய காரணம் தவறு என பைபிளை குறித்து விவாதிக்க திரு. பகுத்தறிவாளன் அவர்களின் அழைப்பு.

இவ்விரண்டிற்கும் இது வரை பெரியவர் தருமி அவர்கள் பதிலளிக்காதது வியப்பை தருகிறது.

அவர் வலைப்பூவில் "கேள்வி கேட்க மட்டுமே தெரியும்" என அவர் முகப்பில் போட்டிருக்கும் வாசகத்தை பார்க்கும் பொழுது அபுமுகை மற்றும் பகுத்தரிவாளனின் அழைப்புக்கு பதில் கிடைக்கும் என எனக்கு தோண்றவில்லை.

தமிழ் செல்வன்

Bun Butter Jam said...

தருமிக்கு? கேள்விகள்? மட்டும்தான் கேட்கத் தெரியும்னு டிஸ்க்ளைமர் போட்டு சொல்லிட்டாருல்ல?.தயவுசெய்து இனி யாரும் தருமியை விவாதத்திற்கு அழைத்து அவரின் 'தனி? மனித??' உரிமையில் தலையிடக் கூடாது.

இப்படிக்கு?
கேள்வி கந்தசாமி??
கேளாம் பாக்கம்???

koothaadi said...

தருமி அவருடைய கேள்வியையும் கருத்தையும் சொன்னார் ..
அதற்கான உங்கள் விளக்கம் நிஜமாகவே காமடியாகத் தான் இருந்தது ..இன்னொருமுறைப் படித்துப் பாருங்கள் ..

குரானிலும் / ஹதீசிலுமே மட்டுமே ஆதாரம் பார்த்துக் கொண்டு இருப்பவர்களை விட தருமியின் சுய சிந்தனை எந்த விடத்திலும் குறைந்தது அல்ல ..அவரின் எந்தக் கேள்விக்கும் பதில் கொடுக்க முடியாது உங்களால் ..
நீங்கள் திரும்ப திரும்ப உங்கள் நம்ப்பிக்கயும் அது சார்ந்த புத்தகத்தயும் மட்டுமே விளக்கம் கொடுப்பீர்கள் ..அது வெற்று நம்ப்பிக்கை மட்டுமே ..

அபூ முஹை said...

வாங்க கூத்தாடி உங்க வருகைக்கு நன்றி!

நம்பிக்கை சம்பந்தமாக நான் என் கேள்வியை வைக்கவில்லை. வரலாற்றுத் தகவலாக தருமி அறிந்த மூன்று பெண்கள் சம்பந்தமான செய்திகள் அவரை கஷ்டப்படுத்துவதாக எழுதியிருந்தார்.

சம்பந்தப்பட்ட பெண்களே அதை மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்கள் எனும்போது அது ஏன் தருமியைக் கஷ்டப்படுத்த வேண்டும்? ஒருவர் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் செயல்கள் - சட்ட விரோதமான செயல்கள் தவிர - அவரோடு தொடர்புடையது. இதில் பிற மனிதன் தலையிட்டு கஷ்டப்படுவதுதான் ''சுய சிந்தனை''!? என்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது.

கேள்விக்கு பதில் கொடுக்கும் இடத்தில் தருமி தான் இருக்கிறார், எம்மால் பதில் கொடுக்க முடியுமா? என்பது அதற்கு பிறகு உள்ள ''சுய சிந்தனை''

//நீங்கள் திரும்ப திரும்ப உங்கள் நம்ப்பிக்கயும் அது சார்ந்த புத்தகத்தயும் மட்டுமே விளக்கம் கொடுப்பீர்கள் ..அது வெற்று நம்பிக்கை மட்டுமே ..//

எமக்கேனும் வழிகாட்டியாக நம்புவதற்கு - எமது நம்பிக்கைபடி - இறை வேதம் என்ற புத்தகம் இருக்கிறது. எமது நம்பிக்கையை பழிக்கும், உங்கள் நம்பிக்கையோ ''வெறும் சிந்தனைதான் வெற்று சிந்தனை!''

அன்புடன்,
அபூ முஹை

koothaadi said...

//எமக்கேனும் வழிகாட்டியாக நம்புவதற்கு - எமது நம்பிக்கைபடி - இறை வேதம் என்ற புத்தகம் இருக்கிறது. எமது நம்பிக்கையை பழிக்கும், உங்கள் நம்பிக்கையோ ''வெறும் சிந்தனைதான் வெற்று சிந்தனை!''//

எங்கள் சிந்தனைக்கு தீனி போட பல வழிகாட்டிகள் இருக்கிறார்கள் ..பலப் புத்தகங்களும் பல ஞானிகளும் இருக்கிறார்கள்..எங்கள் சிந்தனைக்கு மதமும் நம்ப்பிக்கைகளும் தடைகல்லாக இருப்பதில்லை ..உங்களிடம் உள்ள குறைபாடே எங்களூக்கு எல்லாம் தெரியும் ..எங்கள் புத்தகம் ஒன்றுதான் சரியானது என்ற மனப்போக்கில் காலத்திற்கு ஒவ்வாதக் கருத்துக்களை தூக்கிப் பிட்ப்பது தான் ..எனக்கு முகமது நபி மேல் எந்த வெறுப்பும் இல்லை ..நீங்கள் இஸ்லாமைப் பற்றி நல்ல எண்ணம் வளர்க்க வேண்டும் என்றால் பல நல்ல சூபிக்களைப் பற்றியும் குரானிலுள்ள நல்லக் கருத்துக்களையும் சொல்ல முடியும்

எனக்கு என்றைக்கும் உதவும் ரூமிப் போன்றவர்களைப் பற்றி எத்தனை இஸ்லாமிய நண்பர்கள் எழுதியுள்ளார்கள் எத்தனைப் பேருக்குத் தெரியும் ..என்னால் பல இஸ்லாமிய ஞானிகளை அடையாளம் காட்ட முடியும் ..என்க்கு கருத்தின் மேல் தான் அக்கறை அது யார் சொல்வதில் என்றுப் பார்ப்பதில்லை ..நீங்கள்ள் அதற்குப் பின் உள்ள அரசியலை மட்டும் பார்க்கிறீர்கள் ..அது உங்களுக்கு உங்கள் நம்ப்பிக்கையின் மேல் உள்ள மூட நம்ப்பிக்கை ..உங்கள் நம்ப்பிக்கையை கேள்வி கேட்டு உண்மையை உணரச் செய்யுங்கள் அதுவே உங்கள் நம்ப்பிக்கைக்கு நீங்கள் செய்யும் மரியாதை ...
எங்கள் சிந்தனை வெற்றுச் சிந்தனையாகவே இருந்து விட்டுப் போகட்டும் ..எங்கள் சிந்தனை ஒரு நாள் உயர்ந்ததாய் மாறக்கூடும் ஆனால் வெற்று நம்ப்பிக்கைகள் ?????

அபூ முஹை said...

//எங்கள் சிந்தனைக்கு தீனி போட பல வழிகாட்டிகள் இக்கிறார்கள் ..பலப் புத்தகங்களும் பல ஞானிகளும் இருக்கிறார்கள்..//

புத்தகங்கள் வழியாக பிறர் சிந்தனைகளை வாசித்து உள்வாங்கும் நீங்கள். அதை ''சுய சிந்தனை'' என்கிறீர்கள்!

திருக்குர்ஆன், ஹதீஸ் என்ற புத்தகங்களை படித்து நான் உள் வாங்கினால் அது மூடநம்பிக்கை என்கிறீர்களே..?

ஞானிகளை வழிகாட்டியாகப் பெற்ற நீங்கள்,

தீர்க்கத்தரிசிகளை வழிகாட்டியாக ஏற்ற நான்,

நம்மிடையே என்ன வித்தியாசம்..?

இதில் நீங்கள் மட்டும் சுய சிந்தனாவாதி என்பது வியப்பாக மட்டுமில்லை, வினோதமாகவும் இருக்கிறதய்யா.

அன்புடன்,
அபூ முஹை