Wednesday, July 12, 2006

இதெல்லாம் ஒரு பொழப்பு.

மனிதர்களுக்கு சேவை புரிவதும் அவர்களுடன் நல்லமுறையில் நடந்து கொள்வதும் ஒழுக்கப் பண்பாடடின் ஒரு முக்கிய அம்சமாகும். ஒழுக்கவியலுடன் தொடர்புள்ள சிந்தனையாளர்கள் அனைவருமே தம் அறிவுரைகளில் மனிதகுல சேவைகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாறே உலகத்தின் எல்லா மதங்களும் அதன் முக்கியத்துவத்தை ஒப்புக் கொண்டுள்ளன. இதை அம்மதங்களின் வேதங்களிலும், ஆகமங்களிலும் காணலாம்.

படைப்பினங்களுக்கு பணி செய்வது இறைவனுக்குச் செய்யும் சேவையாக இஸ்லாம் கருதுகிறது - இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு செய்யும் உதவி இறைவனுக்கு செய்யும் உதவியாகவும், மனிதர்களுக்கு ஒத்துழைப்பு செய்வதை, இறைவனுக்கு செய்யும் ஒத்துழைப்பாகவும் கருதுகிறது இஸ்லாம்.

விசுவாசிகளே! - நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம், அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (திருக்குர்ஆன், 5:2)

பிற மனிதர்களின் உயிர், உடமை, மானம், மரியாதைகளை, தனது உயிர், உடமை, மானம், மரியாதைகளைப் பாதுகாப்பது போல் காத்திட வேண்டுமெனக் கட்டளையிடுகிறது இஸ்லாம். மனித வாழ்வின் அனைத்து நன்மையான அம்சங்களிலும், பயபக்தி விஷயங்களிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து, உறுதுணையாக இருக்க வலியுறுத்துகிறது. பாவமென வகுக்கப்பட்ட அநியாயச் செயல்களில், வரம்பு மீறி ஈடுபடுபவர்களுக்கு, எவ்விதத்திலும் உதவியாக - உறுதுணையாக இருக்கக் கூடாது எனவும் எச்சரிக்கிறது. பாவம் செய்பவனையும், பாவம் செய்பவனுக்கு உதவியாக இருப்பனையும் - ''நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.'' இறைவனின் இந்த எச்சரிக்கைகளுக்கு செவி கொடாதவன் எவனும் வெறும் பெயர் தாங்கி முஸ்லிம்களே!

இறைவனுக்கு இணைவைத்தலுக்கு அடுத்தபடியாக, இஸ்லாம் மனிதக் கொலையை இரண்டாவது பெரும் பாவமாகக் கருதுகிறது. கொலை செய்பவன் எவனும் இஸ்லாத்தை அறிந்த உண்மை முஸ்லிமாக இருக்க மாட்டான்.

நபிமொழிகள்

''மனித குலம் முழுவதும் அல்லாஹ்வின் குடும்பமாகும். மனிதகுலத்திற்கு அதிக நன்மை செய்வர்கள்தான் அல்லாஹ்விடத்தில் அதிக அன்பிற்குரியவர்கள்''. (நபிமொழி, மிஷ்காத்)

''எவன் மனிதர்கள் மீது கருணை புரிவதில்லையோ அவன் மீது இறைவன் கருணை புரிவதில்லை'' (நபிமொழி, புகாரி)

கருணை புரிபவர்கள் மீது கிருபையுள்ள இறைவன் கருணையைப் பொழிகின்றான். (எனவே நீங்கள்) பூமியில் இருப்பவர் மீது கருணை புரியுங்கள், வானத்தில் இருப்பவன் உங்கள் மீது கருணையைப் பொழிவான்''. (நபிமொழி திர்மிதி)

''இங்கு கருணைபுரிவது என்பது, பரஸ்பரம் அனுதாபம் கொள்வது, உங்களுக்கு மத்தியில் - உங்களுக்கு நெருக்கமானவர்களிடையே நீங்கள் புரியும் கருணையைக் குறிப்பிடவில்லை. மாறாக மனித இனத்தின் ஒவ்வொரு பொது மனிதனுடனும் நீங்கள் கருணை புரிய வேண்டும்'' (நபிமொழி, தப்ரானி) என்பதுதான் இங்கு வலியுறுத்தப்படுகிறது.

நாங்கள் அமர்ந்திருக்கும் பொழுது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். ''உங்களில் சிறந்தவர் யார்? தீயவர் யார்? என அறிவிக்கட்டுமா'' என்று கேட்டார்கள். நாங்கள் மெளனமாக இருந்தோம். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை மீண்டும் மீண்டும் இந்தக் கேள்வியைக் கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே! எங்களில் நல்லவர் யார், தீயவர் யார் என்பதை அவசியம் அறிவியுங்கள்'' என்று எங்களில் ஒருவர் பதிலளித்தார்.

''உங்களில் எவரிடம் மக்கள் நன்மையை எதிர்பார்க்கிறார்களோ, மேலும் உங்களிடமிருந்து எந்தத் தீமையும் ஏற்படாது - நாம் பாதுகாப்பாக இருப்போம் என மக்கள் கருதும் அளவுக்கு எவருடைய நடத்தை அமைந்திருக்குமோ அவர்தான் உங்களில் சிறந்தவர்''
''மேலும் எவர்களிடமிருந்து நன்மை எதிர்பார்க்கப்படவில்லையோ, எவருடைய தீங்கிலிருந்து மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்களோ அவர்தான் உங்களில் தீயவர். (நபிமொழி - அஹமத், திர்மிதி)

மனிதர்களைக் கொன்று குவித்து குருதி ஓட்டுபவனின் இதயத்தில் கருணை - இரக்கம் என்பது துளியும் இருக்காது. கருணை - இரக்கமற்ற எவனும் உண்மை முஸ்லிமாக இருக்க மாட்டான்.

//இதில் என்ன கொடுமை என்றால், இதைச் செய்தது இந்திய இராணுவம், ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, யூதர்கள், அவர்களே குண்டு வைத்துக் கொண்டார்கள், ஆதாரம் இருக்கிறதா என்றெல்லாம் இஸ்லாமிஸ்ட் கும்பல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும்.// - பிணங்களின் மீது ஏறி நின்று, மத வண்ணம் பூசும் இதெல்லாம் ஒரு பொழப்பு. அனாதைப் பிணங்களை சாலையில் கிடத்தி, வசூலித்து வயிறு வளர்ப்பவர்களை நினைவூட்டுகிறது.

நன்றி: கோவி.கண்ணன்

நடுநிலையாளர்களுக்கு.

30 comments:

அபூ முஹை said...

மும்பை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஜயராமன் said...

இந்த செயல் மதங்களை மீறி எல்லோராலும் கண்டிக்க வேண்டியது.

குறைந்த பட்ச மனித நேயமுள்ள எந்த ஒருவனுக்கும் இக்கொடூர செயலை நியாயப்படுத்த முடியாது. அது எப்படிப்பட்ட தீவிரவாத மனம் பிறண்டவர்களாக இருந்தாலும்.

சமீபத்திய செய்தி படி இது ஒரு புது லோகல் க்ரூப் ஆம். பேர் SIMI என்று சொல்கிறார்கள். இம்மாதிரி குழுக்கள் எப்படி எல்லாம் முளைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இதில் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி பாம்பே தாதாவும் சம்பந்தம் என்று பேசிக்கொள்கிறார்கள். அவர் லோகல் நெட்வொர்க் வைத்து இதை செய்தாரா என்று சந்தேகமாம். மிகவும் மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.

விவரம் இங்கே பார்த்தேன்.

http://www.ibnlive.com/news/hunt-for-blast-plotters-zeroes-in-on-let-simi/15323-3.html

அதாவது.... இப்படி போட்டிருக்கிறார்கள்...

The investigating agencies are
also zeroing in on a politician with considerable following among the minorities in Mumbai, who may have played a crucial role in the blasts.


Police suspects the man has developed a well-knit terrorist sleeper cell in Mumbai.

நன்றி

புதுச்சுவடி said...

அப்பாவிகளை அநியாயமாகக் கொல்லும் யாராகவிருந்தாலும் சரி, அவர்கள் படைத்தவனின் பகைவர்கள் என்பதில் ஐயமில்லை.

அவனவன் வீட்டில் இழவு விழுந்தால்தான் அவனவனுக்குப் புரியும்.

ஒரு அநியாய இழவுக்குப் பழிவாங்க மற்றொரு இழவு என்பதும் சரியன்று.

தீவிரவாதம் என்பது இருபக்கமும் வெட்டும் கத்தி.

தீவிரவாதிகள் -மதம், இனம், மொழி, நாடு எதன் பேரால் ஆனாலும் சரி- மனிதகுலத்தவரல்லர்.

ஆனால் சில 'அவசர அறிவுசீவிகள்' "வக்கிர நேசத்துடன் ஜெயராமசிவா" கோஷமிட்டு, காவல்துறை விசாரணை துவங்குமுன்பே முஸ்லிம்கள் மீது பழிபோட்டு அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்றனர்.
இவர்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு.

நல்லடியார் said...

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சக இந்தியச் சகோதரன் என்ற உரிமையில் நிகழ்ந்த சோகத்தை தாங்கிக் கொள்ளும் மனோதிடத்தைக் கொடுக்க வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

குண்டுவைத்த கயவர்களை எந்த மதத்தவனாக இருந்தாலும் தயவு தாட்சன்யமின்றி கண்டிப்போமாக!

கருப்பு said...

கண்டிக்கப்பட வேண்டிய நிகழ்வு இது.

விரைவில் எழுதுவேன்.

VSK said...

Sir,
You haven't posted my reply. Request!

அபூ முஹை said...

//இந்த செயல் மதங்களை மீறி எல்லோராலும் கண்டிக்க வேண்டியது.

குறைந்த பட்ச மனித நேயமுள்ள எந்த ஒருவனுக்கும் இக்கொடூர செயலை நியாயப்படுத்த முடியாது. அது எப்படிப்பட்ட தீவிரவாத மனம் பிறண்டவர்களாக இருந்தாலும்.//

ஜயராமன் சார்,
உங்கள் கருத்துக்கு நன்றி,

தனிப்பட்ட ஒருவன், அல்லது பலர் கூட்டு சேர்ந்த குழுமங்கள் இவர்கள் செய்யும் வன்முறைச் செயல்களை அந்த முழு சமூகத்தை நோக்கித் திருப்பக்கூடாது. வன்முறை செய்பவர்களை வன்மையாகக் கண்டிக்கபட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நானறிந்து வலைப்பூவில் எழுதும் முஸ்லிம்கள் எவரும் வன்முறைகளை ஆதரித்து எழுதுவதில்லை. பெரும்பான்மை முஸ்லிம்கள் வன்முறைகளை ஆதரிப்பதில்லை. மாறாக எதிர்க்கவே செய்வார்கள் இது இஸ்லாத்துக்கு முரண் என்பதால்.

இணையத்தள செய்திகளை ஆவணங்களாக்கி, அத்தகவலைக் கொண்டும் ஒரு சமூகத்தைப் பற்றிய முடிவுக்கு வருவது சரியில்லை. தனியொரு மனிதனால் எதைக் குறித்தும் யாரைப்பற்றியும், எப்படிப்பட்ட அவதூறுகளையும் இணையத்தில் ஏற்றமுடியும் என்பதால் இங்கே நாம் ''மெய்ப்பொருள்'' காண்பது மிக அவசியம்.

அன்புடன்,
அபூ முஹை

ஜயராமன் said...

அபூ ஐயா,

தங்கள் கருத்துக்கும் ஏற்புக்கும் நன்றி.

இந்த வன்முறையை தாங்கள் கண்டிப்பது குறித்து மகிழ்ச்சி.

நன்றி

Amar said...

//நானறிந்து வலைப்பூவில் எழுதும் முஸ்லிம்கள் எவரும் வன்முறைகளை ஆதரித்து எழுதுவதில்லை//

Abu,

I live in Coimbatore.I lived through the horrified days of Feb'98 when 13 bombs ripped apart the city I so loved.

And yet, what do I see today?
Kerala State Legislative Assembly wants TN Government to release the pig Madani.

TMMK demonstrates in the front of Coimbatore Prison.They want the bombers of Coimbatore to be released.

Bloggers have written in support of these scum in Coimbatore jail.

And yet, when Mumbai blasts happen dime a dozen bloggers show up stating they condemn the blasts and want the perpetuators killed.

Why?
Is the life of a Mumbaikar somehow more valuable than that of my Coimbatoreans?

I'm sorry, I aint in any mood to forgive the bastards who bombed my city.

And those callows who wrote in support of the scum are, in my opinion, pigs.

Dont show me any secular nonsense.

All I see about secularism is Karunanidhi forbidding the Coimbatore police from taking evasive action to garner Moslem votes,Mulayam Singh secretly supporting SIMI and ofcourse, a STATE Assembly passing resolution for release of a Terrorist who bombed my city.

If this is secularism I'm all for declaring a Hindu country or an Islamic Caliphate(You can make that rowdy Bukari your Caliph).

அபூ முஹை said...

//அபூ முஹை அவர்களே,
தங்கள் விளக்கத்துக்கு நன்றி.

அப்படியே அந்த 'ஜிஹாத்தில் மரித்தால் 64 கன்னிப்பெண்கள் உனக்காக மேலுலகில் காத்திருப்பார்கள்' என ஒரு வசனம் இருக்கிறதாமே, அதைப் பற்றிய தங்கள் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

இதனைச் சொல்லியே தீவிரவாதிகளை உருவாக்குகிறார்கள் எனவும் சொல்லுகின்றனர்.

நான் வணங்கும் முருகன் மேல் ஆணையாக சத்தியாமகத் தெரிந்து கொள்ளவே இதைக் கேட்டேன். மற்றபடி வேறு உள்நோக்கம் எதுவுமில்லை.
நன்றி.//

SK அவர்களே உங்கள் வருகைக்கு நன்றி! உங்கள் பின்னூட்டத்தை இங்கே மாற்றியுள்ளேன்.

//'ஜிஹாத்தில் மரித்தால் 64 கன்னிப்பெண்கள் உனக்காக மேலுலகில் காத்திருப்பார்கள்' என ஒரு வசனம் இருக்கிறதாமே,// - ''இருக்கிறதாமே'' என்று சொல்லாமல் அந்த வசனம் இடம் பெறும் அத்தியாயத்தையும், எண்களையும் குறிப்பிட்டு எழுதினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

சுவனத்தில் பெண் துணைகள் உண்டு என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. சுவனத்துப் பெண் துணைகளை அடைய வேண்டுமானால் முதலில் சுவர்க்கத்தில் பிரவேசிக்க வேண்டும். மனிதக் கொலைகளை செய்பவன் சுவர்க்கத்துக்குள் நுழைய முடியாது எனும்போது, கன்னிப் பெண்களுக்காக ஜிஹாத் என்ற பெயரில் மனித உயிர்களை கருவறுப்பது முட்டாள் தனம் என்று சாதாரணமாக சிந்தித்தாலே விளங்கிவிடும்.

சுவனத்தில் நுழைவதென்பது மிகுந்த கடின நிபந்தனைக்குட்பட்டது. இறைவன் தனக்குச் செய்யும் கடமைகளில் மனிதன் குறைவுகள் ஏற்படுத்தினால் அதை மட்டுமே மன்னிப்பான். மனிதனுக்கு, மனிதன் செய்யும் அக்கிரமங்களில் இறைவன் தலையிடுவதில்லை. அதற்கான பரிகாரத்தை இவ்வுலகிலேயே சம்பந்தப்பட்டவர்களிடம் தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும் இல்லையேல் மேலுலகில் பெரும் கைசேதத்துக்கு ஆளாக நேரிடும்.

தனக்கு அநீதி இழைத்தவனைப் பழிவாங்கும் உரிமை தனியொருவனுக்கு இல்லையெனும்பொழுது, ஜிஹாத் என்ற பெயரில், சம்பந்தமேயில்லாத குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என மனிதர்களை, வெடிகுண்டு வைத்து சிதைத்து மனிதநேயத்தை குழி தோண்டிப் புதைக்கும் பாவிகளை நாமே மன்னிக்க மாட்டோமே, பின் எப்படி இவர்களை இறைவன் சுவனத்தில் புகுத்தி கன்னிப் பெண்களை பரிசளிப்பான்? சிந்தியுங்கள், நன்றி.

அன்புடன்,
அபூ முஹை

இப்னு பஷீர் said...

//ஜிஹாத் என்ற பெயரில், சம்பந்தமேயில்லாத குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என மனிதர்களை, வெடிகுண்டு வைத்து சிதைத்து மனிதநேயத்தை குழி தோண்டிப் புதைக்கும் பாவிகளை நாமே மன்னிக்க மாட்டோமே, பின் எப்படி இவர்களை இறைவன் சுவனத்தில் புகுத்தி கன்னிப் பெண்களை பரிசளிப்பான்? சிந்தியுங்கள்,//

அருமையான விளக்கம்.. நன்றி அபூமுஹை.

அபூ முஹை said...

சமுத்ரா அவர்களே,
உங்கள் வருகைக்கு நன்றி!

தயவுசெய்து நீங்கள் சொல்ல வருவதை தமிழில் எழுதும்படி கேட்டுக்
கொள்கிறேன்.

அன்புடன்,
அபூ முஹை

அட்றா சக்கை said...

அபூமுஹை,

சமுத்ரா என்ற பெயரில் மேலே நரகல் நடையில் எழுதியிருப்பவர் பின்னூட்டம் மொழிபெயர்க்க இயலாத கேவலமான முறையில் இருக்கிறது. சுருக்கமாக கோயமுத்தூர் காரங்களை விட மும்பை காரங்க என்ன உசத்தி? இதை மட்டும் கண்டிக்கிறீர்களே என்று கேட்டிருக்கிறார்.

அதே கோபத்தை குஜராத்தில் சாரைசாரையாக மக்களைக் கொன்றுகுவித்த சட்டத்தின் பிடியில் அகப்படாமல் திரியும் மோடி போன்றவர்களை நோக்கியும் திரும்பினால் அவரது கோபம் நியாயமானது என புரிந்து கொள்ளலாம்.

இல்லாவிட்டால் இவர் போடுவது வெறும் தேசபக்தி வேசம் என்று தான் புரிந்துகொள்ளப்படும்.

நன்றி

Amar said...

அபு,

இன்று மும்பை குன்டுவெடிப்புக்கு காரனமானவர்களை கொல்ல வேன்டும் என்று சொல்பவர்கள் ஏன் கோவையில் குன்டு வைத்த தீவிரவாதிகளை மட்டும் விடுவிக்க வேன்டும் என்கிறார்கள்?

அவர்களை மட்டும் கைதி செய்து சிறையில் அடைக்க போலீசாருக்கும் அவர்களுக்கும் என்ன குடும்ப சன்டையா இல்லை எதாவது சொத்து பிரச்சனையா?

உன்மையை சொல்ல போனால் போலீசாரின் உயிருக்கு நிறைய ஆபத்துள்ளது இவர்களை கோவை சிறையில் அடைத்து வைத்துள்ளதால்.

மும்பையில் குன்டு வைத்தவனுக்கு ஒரு நீதி, கோவையில் குன்டு வைத்தவனுக்கு ஒரு நீதியா?

மதானியை மட்டும் எதற்க்கு சிகிச்சை கொடுத்து சோறு போட்டு வளர்க்க வேன்டும் அபு?

மன்னிக்கவும், உங்கள் ஊரிலும் இப்படி குன்டுகள் வெடித்து இருந்து இரன்டு வருடங்கள் மொத்த தொழிலும் முடங்கி போயிருந்தால் நீங்களும் இப்படி தான் பேசுவீர்கள்.

அபூ முஹை said...

சமுத்ரா அவர்களே, இப்படி அழகாக உங்கள் கருத்தை தமிழிலேயே வைத்திருக்கலாம். நீங்கள் படித்தவராக இருந்தும், மனிதனைப் பன்றி எனக் குறிப்பிட்டு பண்பிழந்தவராகக் காட்டிக் கொண்டீர்களே!

வன்முறைச் சம்பவங்கள் எங்கு நடந்தாலும், நடத்தியவர்கள் தண்டனைக்குரியவர்கள். எங்க ஊர், உங்க ஊர், கோவைக் குண்டு வெடிப்புக்கு ஒரு சட்டம், மும்பை குண்டு வெடிப்புக்கு இன்னொரு சட்டம் என்ற பாகுபாடு இல்லாமல் சர்வதேச அளவில், வன்முறையில் ஈடுபட்டு மனிதர்களை கொத்து கொத்தாக பிணங்களாக்குபவர்கள் பிடிக்கப்பட்டு, அவர்கள் மீது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, உடன் தண்டிக்கப்பட வேண்டும். இதற்கு குறுக்கே நிற்கும் எவரும் மக்கள் நல விரோதிகளே!

அன்புடன்,
அபூ முஹை

Amar said...

மன்னிக்க வேன்டும் அபு.

மதானி போன்ற சில "மனிதர்களுக்கு" எல்லோரும் தேவையான அளவு மரியாதையை கொடுத்துவிட்டார்கள்.

நான் என்னை மிக பெரிய புனிதனாக காட்டிகொள்ள விரும்பவில்லை.எனது மனதில் ஓடும் என்னங்களை அப்படியே எழுதிவிடுகிறேன். மதானி ஹிந்துவாக இருந்து இருந்தாலும்

வாசகன் said...

அன்பு அபூமுஹை.,
பிறிதொரு மதம் பற்றி அறியக் கேட்ட சகோதரர் SK அவர்களுக்கும், பிறிதொரு மதத்தவர் பற்றிய தன் எண்ணத்தால் 'இது ஏன் இப்படி? அது ஏன் அப்படி?' என்று கேட்ட சகோதரர் சமுத்ராவுக்கும் நீங்கள் அளித்த பதில்கள் சிறப்பு. சிந்திக்கவைக்கிற பதில்கள் சிந்திப்பவர்களுக்காக!

VSK said...

உண்மையிலேயே தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன். பொறுமையுடன் விளக்கியதற்கு மிக்க நன்றி, ஐயா.

அபூ முஹை said...

சமுத்ரா,

//மதானி ஹிந்துவாக இருந்து இருந்தாலும்// - பன்றி என்று சொன்னதற்கு இப்படியே நானும் கண்டித்திருப்பேன்.

அன்புடன்,
அபூ முஹை

Amar said...

அபு,

நான் சொல்ல வந்தது இது தான்.

மதானி என்பவன் ஹிந்துவாக இருந்தாலும் அதே வார்த்தையை தான் பிரயோகித்து இருப்பேன்.

உங்கள் அளவுக்கு எனக்கு பக்குவமோ பொருமையோ கிடையாது.

எவன் ஒருவன் எனது நகரயும், நாட்டையும் சீரழிக்க முயன்று அதில் அப்பாவில் மக்களை சாகடிக்கிறானோ அந்த மனிதனுக்கு என் மனம் மரியாதை தர ஒப்பவில்லை.

ஹிந்துவாக மதானி இருந்து இருந்தாலும் நீங்கள் கண்டிப்பேன் என்று சொன்னது உங்கள் பெருந்தன்மை.வாழ்த்துகிறேன்.

Muse (# 01429798200730556938) said...

மதிப்பிற்குரிய அபு முஹை,

>>>> மனிதர்களைக் கொன்று குவித்து குருதி ஓட்டுபவனின் இதயத்தில் கருணை - இரக்கம் என்பது துளியும் இருக்காது. கருணை - இரக்கமற்ற எவனும் உண்மை முஸ்லிமாக இருக்க மாட்டான். <<<<

தங்களின் வார்த்தைகள் ஸந்தோஷமளிக்கிறது. இந்தக் கீழ்த்தரமான செயலைச் செய்தவர்கள் முஸ்லீம்கள் இல்லை என்று நீங்கள் கருதுவதாக நான் எடுத்துக்கொள்கிறேன்.

இந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்களை போலீஸ் உயிருடன் பிடிக்கும் என்று நம்புவோம். அப்படியில்லாமல், அவர்களைக் கொன்று விட்டாலோ, அல்லது மரண தண்டனை விதித்துவிட்டாலோ அந்த இழிபிறவிகளின் சடலத்தை இஸ்லாமிய ஸமாதியில், இஸ்லாமிய முறையில் புதைக்க அனுமதிக்கக் கூடாது. இதை நீங்களும் ஒத்துக்கொள்கிறீர்களா?

இப்படி இறந்த இந்த மனிதர்களின் உடம்பை பன்றியின் தோலினால் சுற்றிப் புதைக்கவேண்டும்.

இந்த இரண்டும்தான் இந்த இழிபிறவிகளுக்கு சரியான பாடமாக இருக்க முடியும். ஒவ்வொரு நல்ல இஸ்லாமியரும் இவற்றைத்தான் ஆதரிப்பர்.

உங்களது கருத்து என்ன, ஸகோதரரே?

Amar said...

//'இது ஏன் இப்படி? அது ஏன் அப்படி?' என்று கேட்ட சகோதரர் சமுத்ராவுக்கும் நீங்கள் அளித்த பதில்கள் சிறப்பு//

ராஜா,

குறிபிட்ட சிலர் ஏன் எப்படி என்று கேள்வி கேட்காமல் நடந்து கொண்டதால் தான் கோவை குண்டுவெடிப்புகள் நடந்தன்.

அந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியதால் யாருக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டது?

தினமும் வியாபாரம் நடந்தால் தான் சாப்பாடு கிடைக்கும் என்ற நிலையில் இருந்த முஸ்லிம்களுக்கு.

வெகு நாட்கள் சிலர் தங்கள் இஸ்லாமிய அடையாளங்களை மறைத்து கொண்டு வியாபாரத்துக்கு சென்றுள்ளார்கள்.இவைகள் நான் என் கன்னால் கண்ட உன்மைகள்.

கோவையில் இஸ்லாமியர்கள் பட்ட கஷ்டங்களை பற்றி இங்கே எழுதும் எந்த தலிபான் அடிவருடிக்கும் தெரியாது.

தாங்கள் பிறந்த சமுதாயத்து இத்தனை கஷ்டங்களை தேடித்தந்த சிலருக்கு இங்கே வக்காலத்து வாங்கும் போது நியாயமாக முஸ்லிம்களுக்கு தான் முதலில் கோபம் வர வேண்டும் நன்பரே.

ஏன் என்றால் கோவையில் நடந்த கலவரங்கள்,குண்டு வெடிப்புகளால அதிகம் பாதிக்கபட்டது இஸ்லாமியர்கள் தான்.

It is time to call their bluff and end this hypocrisy!

கதிர் said...

அன்பு அபு

மும்பை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களுடன் அவர்கள் அதிலிருந்து மீண்டு வர ஆண்டவனை வேண்டிக்கொள்வோம்

உங்கள் பொறுப்பான பதில்களே உங்களை அடையாளம் காட்டுகிறது.

அன்புடன்
தம்பி

அபூ முஹை said...

மதிப்பிற்குரிய Muse அவர்களே உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

//இரக்கமற்ற எவனும் உண்மை முஸ்லிமாக இருக்க மாட்டான்.//-

-இஸ்லாத்தை முறையாக விளங்காமல், அரைகுறையாக விளங்கிச் செயல்பட்டு அதனால் இஸ்லாத்தைக் களங்கப்படுத்தி, ஏனைய முஸ்லிம்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தும் பெயர் தாங்கி முஸ்லிம் என்றாலும், ''நாம் அறுத்ததை புசித்து நமது கிப்லாவை நோக்குபவன் முஸ்லிம்'' என்று இஸ்லாம் சொல்வதால் ் இவனை முற்றாக இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு வெளியேற்றும் அதிகாரம் எவருக்கும் இல்லை.

//உங்களது கருத்து என்ன, ஸகோதரரே?//-

-இரக்கமற்றவனுக்குத் தண்டனையாக, ஆன்மாவை அவனிடமிருந்து பிரித்த பின், சடலத்தை இழிவுபடுத்துவது தேவைதானா? - தண்டனை வழங்கப்பட்ட பின், சடலம் எங்காவது குற்றவாளியாகுமா? - மனித நேயமற்றவனின் சடலத்தின் மீது நாம் கருணை காட்டினால் என்ன?

குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து முடிந்த பின், மதபாகுபாடின்றி எந்த மனித சடலத்தையும் இழிவுபடுத்த வேண்டுமென்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Sundar Padmanaban said...

அன்புள்ள அபூ அவர்களுக்கு,

//வன்முறைச் சம்பவங்கள் எங்கு நடந்தாலும், நடத்தியவர்கள் தண்டனைக்குரியவர்கள். எங்க ஊர், உங்க ஊர், கோவைக் குண்டு வெடிப்புக்கு ஒரு சட்டம், மும்பை குண்டு வெடிப்புக்கு இன்னொரு சட்டம் என்ற பாகுபாடு இல்லாமல் சர்வதேச அளவில், வன்முறையில் ஈடுபட்டு மனிதர்களை கொத்து கொத்தாக பிணங்களாக்குபவர்கள் பிடிக்கப்பட்டு, அவர்கள் மீது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, உடன் தண்டிக்கப்பட வேண்டும். இதற்கு குறுக்கே நிற்கும் எவரும் மக்கள் நல விரோதிகளே! //

அவ்வளவேதான்! மிகச்சரியாகச் சொன்னீர்கள். இதற்குப்போய் இருக்கிற மதங்களையெல்லாம் இழுத்து முலாம் (லேசாக வேறுபட்டு ஒலிக்கும் இன்னொரு மூன்றெழுத்து வார்த்தை ஏகமாக வலைப்பதிவுகளில் 'மணத்துக்' கொண்டிருக்கிறது - நமக்கு வேண்டாம்!) பூசி, சேற்றாலடித்து, தான் தலையிலேயே எல்லாரும் மண்ணை வாரிப்போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

திருடனும் கொள்ளைக்காரனும் கொலைகாரனும் 'அல்லாவே, ஏசுவே,ஹே ராம்' என்று சொல்லிக் கொண்டு 'மனமுருகி' பிரார்த்தித்துவிட்டுக் குற்றங்களைச் செய்வதால் உடனே அந்தந்த மதங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது தவறு.

மதத்தின் பெயரால் தீவிரவாதிகள் நிகழ்த்தும் குற்றங்களுக்கு, உண்மையிலேயே வாழ்வுநெறியாக அந்தந்த மதங்களைப் பற்றியிருப்பவர்கள் என்ன செய்வார்கள்? ?

இன்னும் சில பதிவுகளில் இம்மாதிரி மத முலாம் பூசுவதைக் கண்டித்த பதிவர்கள், சாதி முலாம் பூசப்படுவதை உட்கட்சிப் பூசல் என்ற வகையில் சேர்த்து மழுப்பியிருக்கிறார்கள். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. மதத்தின் பெயரால் தவறு செய்பவர்களைக் காரணம் காட்டி அம்மதத்தவர் அனைவரையும் குற்றம் சொல்வது தவறு என்பதைப் போல, சாதியின் பெயரால் தீங்கிழைத்தவர்களைக் காரணம் காட்டி அச்சாதியைச் சேர்ந்தவர்களனைவரையும் தீயவர்களாகச் சித்தரித்து முத்திரை குத்துவதும் தவறே.

பதிவுக்கு நன்றி. பாராட்டுகள்.

புதுச்சுவடி said...

சமூத்ரா ம'அதனியைப் பற்றி ஒரு பதிவிட்டிருக்கிறார். அதில் வழக்கம்போல்,'எழுதி வைத்த' கண்டனங்களை முஸ்லிம்கள்மேல் சுமத்தி 'அவர்கள்' பின்னூட்டமிட்டுள்ளார்கள்.

இங்கு உங்கள் பதிவில் வேறு மாதிரி பின்னூட்டியுள்ளார்கள்.

ம'அதனியோ மற்றவர்களோ குற்றவாளிகள் என்று இதுவரை வழக்கு நடத்தி, நீதி மன்றம் தீர்ப்பளித்து விடவில்லை. இவர்கள் விசாரணைக் கைதிகளாக, "அரசால் சோறு போட்டு வளர்க்கப்படுகிறார்கள்" அதாவது;- ஏறத்தாழ எட்டாண்டுகளாக இவர்கள் மீது "விசாரணை" மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது; வழக்கு நடக்கவில்லை.

வழக்கை விரைந்து நடத்திக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கு; குற்றமற்றவர்களையும் சேர்த்து ஆண்டுக் கணக்கில் சிறையில் வைத்துச் சோறு போடாதே என்றுதான் சமூத்ரா சொன்ன இயக்கத்தினர் போராடுகிறார்களே தவிர குற்றவாளிகளை விட்டுவிடச் சொல்லவில்லை. பன் பட்டர் ஜாமும் இக்கருத்தச் சொல்லியுள்ளார்.

கோவையில் குண்டு வைத்த சில 'அறிவற்ற அவசரக்காரர்'களால் கோவையில் இந்துமதத் தீவிரவாதிகளால் அநியாயமாகக் கொல்லப் பட்ட என் சமுதாயத்தின் பத்தொன்பது பேரின் கொடூரக் கொலை மறக்கடிக்கப் பட்டுவிட்டது.என் சமுதாயத்துச் செல்வந்தன் முதல் ஏழை வரை தம் தொழிலையும் வருமானத்தையும் இழந்தனர்.

குண்டு வைத்தவர்களால்- அது மும்பையோ கோவையோ- என் சமுதாயத்துக்குத்தான் இழப்பும் அவமதிப்பும தொடர்கதையாய்......

அபூ முஹை said...

அன்புத் தம்பி அவர்ககளே வருகைக்கு நன்றி, உங்கள் வேண்டுதலில் நானும் சேர்ந்து கொள்கிறேன்.

அன்புடன்,
அபூ முஹை

Amar said...

புதுச்சுவடி,

குன்டுவெடிப்பு வழக்கு நடந்து கொன்டு இருக்கிறது.சமீபத்தில் தான் இரு தரப்பு வக்கீல்கள் வாதங்கள் முடிந்தன.


//ஜெயிலிருந்து ஜாமின்ல வர்ரவங்களால காவல்துறைக்கு அச்சுருத்தனு சொல்றது தமிழக காவல்துறைய குறைச்சு மதிப்பிடுரார்.//


சிறையின் உள்ளேயே கத்திகுத்துகளும் கலாட்டாக்களும் நடந்தன நன்பரே.நடந்து கொன்டு இருக்கிறது என்று சொல்வது சரியாக இருக்கும்.

இதற்க்கு மேல் இந்த விவகாரத்தை பற்றி வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை.

//இத சமுத்திரா ஒப்புக் கொள்வாரா?//

ஒப்புக்கொள்வார்.

அபூ முஹை said...

அன்பின் சுந்தர் அவர்களே, வருகைக்கு நன்றி!

//திருடனும் கொள்ளைக்காரனும் கொலைகாரனும் 'அல்லாவே, ஏசுவே,ஹே ராம்' என்று சொல்லிக் கொண்டு 'மனமுருகி' பிரார்த்தித்துவிட்டுக் குற்றங்களைச் செய்வதால் உடனே அந்தந்த மதங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது தவறு.//

சத்தானக் கருத்துக்களையேச் சொல்லியுள்ளீர்கள், எவரும் மறுக்க இயலாது.

//மதத்தின் பெயரால் தீவிரவாதிகள் நிகழ்த்தும் குற்றங்களுக்கு, உண்மையிலேயே வாழ்வுநெறியாக அந்தந்த மதங்களைப் பற்றியிருப்பவர்கள் என்ன செய்வார்கள்? ?//

இந்தக் கேள்வி - அவதூறுப் பேச்சினால் விம்மிக் குமுறும் நல்லுள்ளங்களின் மொத்த பிரதிபலிப்பு, மீண்டும் நன்றிகள் பல.

அன்புடன்,
அபூ முஹை

╬அதி. அழகு╬ said...

சுந்தர்,

மிக நடுநிலையான மெய்ப்பொருள் அறிந்து இடப்பட்ட உங்கள் பின்னூட்டத்திற்குப் பாராட்டுகள்!

'பெட்ரோ டாலருக்கு' விலைபோய்விட்ட 'திம்மி' பட்டம் விரைவில் உங்களுக்கு வந்து சேரும். அதற்கும் தயாராயிருந்து கொள்ளுங்கள்!