Friday, June 27, 2008

அபூ முஹையின் வாதத்தில் என்ன தவறு?

இஸ்லாம் மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்ற கருத்தில் அமைந்த திருக்குர்ஆன், 002:256 வது வசனம் இரத்து செய்யப்பட்டது என்ற தவறானப் பிரச்சாரத்தின் அடிப்படையில் பிற மத நண்பர்கள் வாதம் எழுப்பியிருந்தனர். திருக்குர்ஆன் 002:256வது வசனம் இரத்து செய்யப்படவில்லை அதில் கூறப்படும் கருத்து இன்றும் நடைமுறைப்படுத்தத்தக்கது என்று நாம் எழுதியிருந்தோம்.

இறைவன் ஒரு வசனத்தை மாற்றினால்

இம்மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை

இந்த இருபதிவுகளும், ஒருவர் இஸ்லாத்தில் இணையவோ இணைந்தபின் இஸ்லாத்தை நிராகரித்து வெளியேறுவதையே இஸ்லாம் தடுக்கவில்லை என்பதையே ''இம்மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை'' என்ற வசனம் உரைக்கின்றது. அந்த வசனத்தை முழுமையாகப் படித்தால் இதை விளங்கலாம் என்று கூறியிருந்தோம்.

இதை உணராமல் பிற மத நண்பர்கள் பின் வருமாறு எழுதியுள்ளனர்.

அபுமுஹை வாதம் தவறு-பி.ஜெய்னூல் ஆபிதீன் - அபுமுஹை அவர்கள் எழுதிய நான்கு கட்டுரைகளின் வாதத்தை பிரபல இஸ்லாமிய அறிஞர் பி.ஜெய்னூல் ஆபிதீன் அவர்கள் மறுக்கிறார்.

அபுமுஹை வாதம்

மதம் மாறினால் மரண தண்டனை-1

மதம் மாறினால் மரண தண்டனை-2

மதம் மாறினால் மரண தண்டனை-3

மதம் மாறினால் மரண தண்டனை-3 A

பி.ஜைனூல் ஆபிதீன் மறுப்பு

http://www.onlinepj.com/idal/ega/2008_aprl/2008_4_10.asp


சுட்டியில் உள்ள கருத்து நாம் எழுதிய நான்கு கட்டுரைகளின் வாதத்தை மறுக்கின்றது என்று சொல்பவர்கள், வெறும் சுட்டியைக் காட்டிச் சுட்டாமல் எங்கு? எவ்வாறு? மறுக்கின்றது என்பதை ஒப்பீடு செய்து விபரங்களுடன் எழுதி விமர்சிக்க வேண்டும் செய்வீர்களா?

இதோ மதம் மாறுவதுக் குறித்து நாம் எழுதிய பதிவுகள்,

மதம் மாறினால் மரண தண்டனை-1

மதம் மாறினால் மரண தண்டனை-2

மதம் மாறினால் மரண தண்டனை-3

மதம் மாறினால் மரண தண்டனை-3 A

இறைவன் ஒரு வசனத்தை மாற்றினால்

இம்மார்க்கத்தில் நிர்பந்தமில்லை

ஜிஸ்யா எனும் காப்பு வரி

இஸ்லாம் மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்ற வசனம் இரத்து செய்யப்பட்டது என்ற தவறானப் பிரச்சாரத்தை உடைத்தாலே இஸ்லாத்திலிருந்து வெளியேறுபவரையும் இஸ்லாம் நிர்ப்பந்திப்பதில்லை என்ற உண்மை புரிந்துவிடும். இதையே வேறு தடத்தில் நாம் எழுதி வருகிறோம்.

இம்மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை என்ற பதிவில் நயவஞ்சகர் குறித்து சுருக்கமாகத் தெளிவுபடுத்தியிருந்தோம்,

''இறை நிராகரிப்புச் சொல்லை அவர்கள் கூறியிருந்தும் (அவ்வாறு) கூறவில்லை என்று சத்தியம் செய்கின்றனர். இஸ்லாத்தை ஏற்ற பின் நிராகரித்தனர்'' (திருக்குர்ஆன், 009:074)

இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாகக் காட்டிக்கொண்ட நயவஞ்சகர்கள் ''இஸ்லாத்தை ஏற்ற பின் நிராகரித்தனர்'' என இறைமொழிக் குறிப்பிடுகிறது. நிராகரித்தனர் என்றால் மதம் மாறினர் என்பதே பொருளாகும் எனச் சிற்றறிவு உள்ளவர்க்கும் விளங்கும். இஸ்லாத்தை நிராகரித்த நயவஞ்சகரை இஸ்லாமிய அரசு ஏன் கொல்லவில்லை? இந்த உண்மை விளங்க வேண்டும் என்றால், ஓர் அறிஞன் சொன்னது போல் கோப்பையில் உள்ள கசடுகளைக் காலி செய்து விட்டு விமர்சனங்களை அணுக வேண்டும்.

''நம்பிக்கை கொண்டு பின்னர் மறுத்து (ஏக இறைவனை) மறுத்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பின்னர் மறுத்து பிறகு (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. அவர்களுக்கு வழி காட்டுபவனாகவும் இல்லை'' (திருக்குர்ஆன், 004:137)

திருக்குர்ஆன், 009:074வது வசனம் என்ன கருத்தை உரைக்கின்றதோ அதையே திருக்குர்ஆன், 004:137வது வசனமும் - இஸ்லாத்தை ஏற்று பின்னர் நிராகரித்தவர் குறித்து - பேசுகிறது.

இம்மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை என்ற பதிவில் நாம் எழுதிய கருத்தும், பிற மத நண்பர்கள் நமக்கு மறுப்பு என்று எடுத்து வைக்கும் சுட்டியில் உள்ளக் கருத்தும் ஓர் அச்சில் வார்த்தக் கருப் பொருளாக இருக்கின்றது. பிறகு எப்படி அது நமக்கு மறுப்பாகும் என்று பிற மத நண்பர்கள் விளக்குவீர்களா?

பிற மத நண்பர்களுக்கு இன்னொரு தகவல்,

திருக்குர்ஆன், 009:074வது வசனம் நயவஞ்சகரைக் குறிப்பிடுவது போல் திருக்குர்ஆன், 004:137வது வசனமும் நயவஞ்சகர்கள் குறித்தேப் பேசுகிறது. நயவஞ்சகர்கள் இஸ்லாத்தை ஏற்று, நிராகரித்தவர்களாக - மதம் மாறியவர்களாக இருந்தும் அவர்களைக் கொல்லும்படி இறைவன் கட்டளையிடவில்லை. மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்பதற்கு எதிராக திருக்குர்ஆனில் இன்னும் பல வசனங்கள் இடம்பெற்றுள்ளன, அவையும் அறியத்தருவோம்.

எனவே, வெறும் சுட்டிகளைக் காண்பித்து கண் துடைப்புக்காக இதுக்கு அது முரண்படுகிறது என்று சொல்லாமல் உங்கள் பார்வையில் முரண்பாடு எனக் கருதுவதை விளக்கமாக எடுத்தெழுதுங்கள். தெரியவில்லையெனில் அவகாசமெடுத்து ஆய்வு செய்து எழுதுங்கள்!

குறிப்பு: யூத, கிறிஸ்தவருக்கு மட்டும் தான் ஜிஸ்யா எனும் காப்பு வரி வசூலிக்கப்படும் என்ற கருத்து, யூத கிறிஸ்தவரல்லாத பிற மத மக்களை நிர்ப்பந்தப்படுத்தி இஸ்லாத்தில் இணைக்க வேண்டும் என்ற பிற மத நண்பர்களின் தவறானக் கோணத்தை - முஸ்லிம் நாடுகளில் வாழும் முஸ்லிமல்லாத பிற மதத்தவர் அனைவரும் ஜிஸ்யா வரி செலுத்த வேண்டும் என்பதை - விளக்கவே ''ஜிஸ்யா எனும் காப்பு வரி'' என்ற பதிவு.

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

4 comments:

anbarasan said...

Friday, June 27, 2008
சௌதி மன்னர் சவ அடக்கம் கண்டு, இத்தாலி பாதிரியார் இஸ்லாமை தழுவியது உண்மையா? பொய்யா?

THE ABOVE QUESTION FROM
THIS SITE

http://isakoran.blogspot.com/2008/06/blog-post_27.html
---------------------
உண்மை
Moved by Simplicity of Royal Funeral, Priest Embraces Islam
P.K. Abdul Ghafour, Arab News

SITE:

http://www.arabnews.com/?page=1§ion=0&article=68768&d=21&m=8&y=2005

THIS CHRISTIAN BLOGGERS ARE SICK IN
THEIR BODY AND SOUL.

BEST THING IS, NOT TO ANSWER THEM
DIRECTLY

BUT CARRY ON WRITING IN YOUR BLOG.

THESE CHRISTIANS SHOULD READ
ALL THE ARTICLES UNDER
" கிறிஸ்தவம் " IN

http://idhuthanunmai.blogspot.com/

IT WILL KEEP SHUT ALL THE HOLES IN THEIR BODY.

REGARDS

அபூ முஹை said...

raj உங்கள் வருகைக்கும், தகவலுக்கும் நன்றி!

//THIS CHRISTIAN BLOGGERS ARE SICK IN
THEIR BODY AND SOUL.//

:(

''ஓமன் நாட்டு மன்னருக்கு முகமது அனுப்பிய கடிதம்''

பதில் எழுதுவோம் உபயம்: raj

சவூதி தமிழன் said...

அன்புச் சகோதரர் அபூமுஹை,

நான் முன்பு ஒருமுறை சொன்னது போல, என்றோ எங்கோ எவனோ எடுத்த வாந்தியை மறு வாந்தி எடுப்பதுதான் அந்த சீலர்களுக்குத் தெரிந்தது.

அவர்கள் ஒரே ஓர் ஆக்கம் சொந்தமாக எழுதியதைத் தேடினாலும் கிடைக்கவில்லை. இந்த லட்சணத்தில் ஏகப்பட்ட வலைப்பூக்களில் ஒரே வாந்தியை மீண்டும் மீண்டும் பிரசுரித்து தங்கள் நாற்றத்தை நுகர்ந்து கொள்கிறார்கள்!

மனநிலை பிறழ்ந்த இக்கூட்டம் வெவ்வேறு பெயர்களில் இதற்கு முன் வந்தவர்கள் தான் என்பது இன்னும் எமக்கு மறந்துவிடவில்லை.

உங்கள் பணிசிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

அபூ முஹை said...

சவூதி தமிழன் உங்கள் வருகைக்கு நன்றி!

''அவர்களுக்காவும் இறைவனிடம் வேண்டுங்கள்''