மதம் மாறிய 80ஆயிரம் முஸ்லிம்களுக்கும் மரண தண்டைனை விதிக்கப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதா? என்று நாம் கேட்க மாட்டோம். சமீபத்தில் பழனியில் மதம் மாறிய ராசிமுஹம்மது, நாசர்ஹஸன் இரு முஸ்லிம்கள் மதம் மாறியும், அவர்கள் தண்டனை பெறவில்லை என்பதை அனைவரும் அறிவோம்.
கொலைக்குக் கொலை எனவும் விபச்சாரத்துக்கும் இஸ்லாம் மரண தண்டனை விதிக்கிறது. இம்மரண தண்டனை அவ்வளவாக விமர்சிக்கப்படுவதில்லை. ஆனால், மதம் மாறினால் மரண தண்டனை என்பதை ஆஹா, ஓஹோவென அபாரமாக விமர்சிக்கின்றனர். ஒருவேளை, மதம் மாறினால் மரண தண்டனை விதியைக் குறித்து அறிந்திராத முஸ்லிம்களை எச்சரிக்கும் நல்லெண்ணமாக இருக்கலாம், இருக்கட்டும்.
இதில் இஸ்லாத்தின் கருத்து என்ன? என்பதை தொடர்ந்து எழுதுமுன், தர்க்க ரீதியாக இவர்கள் சொல்லும் கருத்து சரியா? என்பதைப் பார்ப்போம்.
கணினியில் மென் பொருள், கெட்டிப் பொருள் தரவிறக்கம் செய்யுமுன், அதை உருவாக்கியவர்கள் Agree - ஒப்புக்கொள், இணங்கு என நிபந்தனை விதிப்பார்கள். அதற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே பொருளை பதிவிறக்கம் செய்ய முடியும். பெரும்பான்மையினர் நிபந்தனையை வாசிக்காமலேயே ஒப்புக்கொள்கிறேன் - Agree என்று சொடுக்கிவிடுவர். இதனால் ஒன்றும் குடி முழுகிவிடாது என்றாலும் நாளை பிரச்சனை என்று வந்தால் சிக்கலை ஏற்படுத்தும்.
வலைப்பூ திரட்டிகள், மன்றங்கள், இணையங்கள் இவைகளில் சேரும் போது அங்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை படிக்காமல் சம்மதம் தெரிவித்து, சேர்ந்தபின் நிபந்தனை என்னவென்று தெரியாமலேயே அதை மீற நேர்ந்தால் அங்கு வல்லு வழக்கு ஏற்படுவதை அனுபவமாக தெரிந்து கொள்கிறோம்.
இந்த அனுபவம் கணினித் துறையில் மட்டுமில்லை, எல்லாத் துறைகளிலும் உள்ளன. ஒவ்வொரு துறையிலும் Agree - ஒப்புக்கொண்டு சேர்ந்தபின் விதிகளை மீறுவதால் அங்கு பணியாற்றுபவர்கள் தற்காலிக நீக்கம், நிரந்தர நீக்கம் செய்யப்படுகிறார்கள். இது ராணுவம், நீதி, காவல், அரசு, அரசியல், தொழில் மற்றும் தனியார் துறைகளிலும் உள்ள அனுபவம்.
இனி விஷயத்துக்கு வருவோம், ஒரு பிறமத நண்பர் இவ்வாறு எழுதுகிறார்...
இனி யாராவது முஸ்லீமாக மாறினால், ... நீங்கள் ஒரு ஸ்டாம்ப் காகிதத்தில்(Stamp Paper):
"ஜான் ஜோசப் என்பவரின் மகனாகிய மத்தேயு என்னும் பெயர் கொண்ட நான் இன்று இஸ்லாமை ஏற்றுக்கொள்கிறேன், பின்பு ஒரு வேளை நான் இஸ்லாமை விட்டு வெளியேறினால், என் பழைய மதத்தை பரப்ப உதவி செய்தால், என் மனைவி விதவையாகும்படியாக, என் பிள்ளைகள் அனாதைகள் ஆகும் படியாக என் பெற்றோருக்கு உதவி செய்வார் யாரும் இல்லாமல் போகும் படியாக, எல்லாரையும் அம்போ என்று விட்டு விட்டு, என் இந்த நம்பிக்கைத்துரோக குற்றத்திற்காக முதல் தண்டனையாக நான் மரண தண்டனையை இஸ்லாமிய சட்டம் படி ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன், அதே நேரத்தில் இதே குற்றத்திற்காக இரண்டாம் தண்டனையாக அல்லா என்னை நரக நெருப்பில் வாதிக்கவும் எனக்கு சம்மதமே"
இப்படிக்கு,
முஸ்லீமாக மாறிய முனியாண்டி (அல்லது) முஸ்லீமாக மாறிய மத்தேயு
சாட்சி 1:
சாட்சி 2:
என்று எழுதி கையெழுத்து பெற்றுக்கொண்டு இஸ்லாமில் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்படி நீங்கள் செய்வீர்களானால், இனி யாராவது "ஏன் இஸ்லாம் அவரை கொன்றது?" என்று கேள்வி கேட்டால், அந்த நபர் கையெழுத்து போட்ட காகிகத்தை காட்டலாம், உங்களுக்கு இஸ்லாமின் சட்டத்தின் தண்டனையை நியாயப்படுத்த காபிர்களின் சட்டத்தில் உள்ள தண்டனையை எடுத்துக்காட்டாக காட்டவேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது.
பிறமத நண்பரின் மேற்கண்ட விமர்சனம் புத்திசாலித்தனமாகத் தோன்றினாலும், ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி வாங்க அறிவுரை சொல்வது கவ்வைக்குதவாத வாதம். ஒருவன் எந்த மதத்தைத் தழுவினாலும், மதத்தில் இணையும் போதே அம்மதத்தின் விதிகளை Agree - மனப்பூர்வமாக ஒப்புக்கொண்ட பின்பே அம்மதத்தைத் தழுவுகிறான்.
முனியாண்டியும், மத்தேயும் இஸ்லாத்தைத் தழுவும் போது ''வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறுயாருமில்லை என்று சாட்சி கூறுகிறேன். முஹம்மது இறைவனின் அடியாரும், தூதருமாவார் என்று சாட்சி கூறுகிறேன்'' என்று உறுதிமொழி எடுத்த பின்பே இஸ்லாத்தில் இணைகின்றனர். இங்கு இஸ்லாத்தின் அனைத்து விதிகளுக்கும் கட்டுப்படுகிறேன் என Agree - ஒப்புதல் தெரிவித்து, இஸ்லாத்தின் இணைந்தபின் மதம் மாறினால் மரண தண்டனை என்ற விதியையும் ஏற்றுக்கொண்டே இஸ்லாத்தைத் தழுவுகின்றனர். பிறகு எதற்கு ஸ்டாம்ப் பேப்பர்?
ஸ்டாம்ப் பேப்பர் பிற மதத்தைத் தழுவும் பிற மத நண்பர்களுக்கு வேண்டுமானால் தேவைப்படலாம். இஸ்லாத்துக்கு அவசியமில்லை. முனியாண்டியும், மத்தேயும் இஸ்லாத்தில் நுழையும்போதே மதம் மாறினால் மரண தண்டனை என்ற பிரமாணத்தையும் ஏற்று மதம் மாறுகின்றனர். என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ளட்டும்.
அடுத்து, மதம் மாறி மரண தண்டனை விதிக்கப்பட்டவனின் மனைவியின் நிலை என்ன? என்று மிகவும் அக்கறையோடு ஆலோசனை எழுதியுள்ளனர். முனியாண்டியும், மத்தேயும் இஸ்லாத்தைத் தழுவுமுன்பு இருவர் மனைவியின் நிலை என்ன? என்பதற்கான தீர்வையும் இவர்கள் எழுதியிருக்கலாம். எழுதியிருந்தால் சார்பற்றதாக இருந்திருக்கும்.
பரவாயில்லை, அடுத்த பதிவில் அது குறித்து நாம் விளக்குவோம் நன்றி!
அன்புடன்,
அபூ முஹை
5 comments:
எந்த ஒரு ஒப்பந்தமாயினும் அதைப் பற்றி முழுமையாக தெரிந்து,புரிந்து கொண்டு கையெழுத்திட்டால் மட்டுமே செல்லும்.முஸ்லிமாக மாறும் ஒருவருக்கு நீங்கள் மதம் மாறினால்
மரண தண்டனை உண்டு என்று கூறி,
அதற்கு அவர் ஒப்புக் கொண்ட பின்னரே மதம் மாற்றம் நடைபெறுகிறதா.
இந்தியாவில் உள்ள அடிப்படை உரிமைகளில் மதம் மாறுதலும்
ஒன்று. அதற்கு முரணான எதுவும்
சட்டப்படி செல்லதக்கதல்ல.
மேலும் இப்படி மரண தண்டனை
விதிப்போம், கொல்வோம் என்பவை
மிரட்டல்கள்.ஒருவரை கொல்வதாக
மிரட்டுவது சரிதானா.
Please See this Videos
http://www.youtube.com/watch?v=OXwYIikeAWQ
http://www.youtube.com/watch?v=zEsEpR7q8a4
http://www.youtube.com/watch?v=NVZKQpFBTR4
its true or not?
M. John
"சமீபத்தில் பழனியில் மதம் மாறிய ராசிமுஹம்மது, நாசர்ஹஸன் இரு முஸ்லிம்கள் மதம் மாறியும், அவர்கள் தண்டனை பெறவில்லை என்பதை அனைவரும் அறிவோம்."
அதற்குக் காரணம் இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பது.
மலேசியாவில் ரேவதி எப்படி மதம் மாற கட்டாயப்படுத்தப்பட்டார் என்பதையும் அறிந்திருப்பீர்கள்.
அதுவும் நியாயம்தான் என்று
நீங்கள் வாதிடலாம்.பாகிஸ்தானில்
இறை நிந்தனையே மரண தண்டனைக்குரிய குற்றம் என்பது
குறித்த ஒரு கட்டுரை கடந்த
வாரம் ஹிந்துவில் வெளியானது.
இதனால் முஸ்லீம்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது
அந்தக் கட்டுரை.
//ஸ்டாம்ப் பேப்பர் பிற மதத்தைத் தழுவும் பிற மத நண்பர்களுக்கு வேண்டுமானால் தேவைப்படலாம். இஸ்லாத்துக்கு அவசியமில்லை. முனியாண்டியும், மத்தேயும் இஸ்லாத்தில் நுழையும்போதே மதம் மாறினால் மரண தண்டனை என்ற பிரமாணத்தையும் ஏற்று மதம் மாறுகின்றனர். என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ளட்டும்.
//
இவ்வளவு வெளிப்படையாக 'மதம் மாறினால் கொல்லுவோம்' என்று நீங்கள் சொல்லுவது அதிர்ச்சியளிக்கிறது.
இஸ்லாமை ஏற்றுக்கொள்வது one way-யா?
//இவ்வளவு வெளிப்படையாக 'மதம் மாறினால் கொல்லுவோம்' என்று நீங்கள் சொல்லுவது அதிர்ச்சியளிக்கிறது.//
இஸ்லாத்திற்கு முன் வேறு மதம் இது பற்றி ஒன்றும் சொல்லாதது போல் போலி அதிர்ச்சியில் மூழ்க வேண்டாம் நண்பரே!
Post a Comment