Sunday, May 04, 2008

மதம் மாறினால் மரண தண்டனை-2

இஸ்லாம் மார்க்கத்தை ஏற்று, இஸ்லாத்தில் இணைந்து கொள்ள விரும்பும் பிற மதத்தினர் எவரும் - ''வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறுயாருமில்லை என்று சாட்சி கூறுகிறேன். முஹம்மது இறைவனின் அடியாரும், தூதருமாவார் என்று சாட்சி கூறுகிறேன்''  என்ற - உறுதி மொழியைக்கூறி இஸ்லாத்தில் தம்மை இணைத்துக்கொள்கிறார்.

இஸ்லாத்தைத் தழுவிய அவ்வினாடியிலிருந்து இறைவணக்கம், திருமணம், விவாகரத்து, பாகப்பிரிவினை, கடன் கொடுக்கல், வாங்கல் போன்ற இஸ்லாத்தின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படும் முஸ்லிம்களில் ஒருவராகி, முஸ்லிம்களுக்குள்ள கடமைகளும், உரிமைகளும் இவருக்கும் ஏற்பட்டுவிடும். அதனால் இஸ்லாத்துக்கு மதம் மாறுபவர் இஸ்லாத்தின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்ற உறுதி மொழியை வழங்கிய பின்னரே இஸ்லாத்தைத் தழுவுகிறார். இதுவே உறுதியான உடன்படிக்கையாக இருப்பதால், பிற மத நண்பர்கள் விமர்சிப்பது போல் ஸ்டாம்ப் பேப்பரில் ஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. பார்க்க: மதம் மாறினால் மரண தண்டனை-1

முனியாண்டியும், ஜான் ஜோசப் மகன் மத்தேயுவும்.

மத்தேயுவும், முனியாண்டியும் தங்கள் தாய் மதத்திலிருந்து வெளியேறி, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் இருவர் மனைவியரின் நிலை என்னவோ, அதுவே இருவரும் இஸ்லாத்தை விட்டு வெளியேறும் போதும் ஏற்படும் நிலையாகும். அதாவது, முனியாண்டி தனது மனைவியுடன் இஸ்லாத்தை ஏற்றால் இருவரும் முஸ்லிமாகி இல்லற வாழ்க்கையைத் தொடரலாம். மத்தேயு இஸ்லாத்திலும், மத்தேயுவின் மனைவி தாய் மதத்திலும் இருந்தால் இருவரும் இல்லறத்தில் தொடர முடியாது.
ஏனெனில், மதக் கொள்கையால் வேறுபட்டவர்கள் மணமுடித்துக் கொள்ளக்கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.

அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை - நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். ஆவாள், அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள். இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன். (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான். மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (திருக்குர்ஆன், 002:221)

நம்பிக்கைக் கொண்டவரும், நிராகரித்தவரும் மணமுடித்துக் கொள்ளக்கூடாது என்பதால், இஸ்லாத்திலிருந்து வெளியேறிய முனியாண்டியின் மனைவி, இஸ்லாத்திலிருந்து வெளியேறாத முஸ்லிமாகவே இருப்பார் - வெளியேறிய முனியாண்டியின் மனைவியாக இருக்க மாட்டார். இஸ்லாத்தை விட்டு வெளியேறிய முனியாண்டி உயிருடன் இருந்தாலும், மரணித்தாலும் இரண்டும் ஒன்றுதான். அதனால் முனியாண்டியின் மனைவியாக இருந்த முஸ்லிம் பெண்மணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இஸ்லாமிய அரசு அவரை நிர்கதியாக விட்டுவிடாது. அவர் மறுமணம் செய்து கொள்ளும் வரை அரசு பொறுப்பேற்றுக் கொள்ளும்.

(மரணித்த) ஒருவர் செல்வத்தை விட்டுச்சென்றால், அது அவருடைய வாரிவுகளுக்குரியதாகும். ஒருவர் (திக்கற்ற) மனைவி மக்களை விட்டுச்சொன்றால் அவர்களைப் பராமறிப்பது (ஆட்சித் தலைவரான) எமது பொறுப்பாகும். (புகாரி, முஸ்லிம்)

மூஃமின்களில் யாரேனும் கடனை விட்டு மரணித்தால் அதை நிறைவேற்றவது என்னைச் சேர்ந்ததாகும். யாரேனும் செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவரது வாரிசுகளுக்கு உரியதாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத்)

ஒரு முஸ்லிம் மரணித்து விட்டால், திக்கற்ற அவரது குடும்பத்தை பராமரிக்கும் பொறுப்பை இஸ்லாமிய அரசு ஏற்றுக்கொள்ளும். ஒரு முஸ்லிம் இஸ்லாத்திலிருந்து வெளியேறியதால் திக்கற்ற அவன் குடும்பத்துக்கும் இஸ்லாமிய அரசு ஆதரவு அளிக்கும். எனவே இஸ்லாத்திருந்து வெளியேறிய முஸ்லிம் தண்டிக்கப்படடால் அவரின் முஸ்லிம் மனைவி மறுமணம் செய்து கொள்ளும்வரை அக்குடும்பத்துக்கு அந்நாட்டின் இஸ்லாமிய அரசின் ஆதரவு இருக்கும். என்பதை இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்கள் உணர்ந்து, தேவையெனில் ஸ்டாம்ப் பேப்பர் தயாரித்துக் கொள்ளுங்கள் உங்கள் மதத்தைத் தழுவ வருபவர்களுக்காக!

அடுத்து, காஃபிர்களின் சட்டங்களை முஸ்லிம்கள் உதாராணமாக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எது இஸ்லாத்தின் சட்டம்? எது காஃபிர்களின் சட்டம்? என்பது பற்றி அடுத்த பகுதியில், நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

8 comments:

சத்திய நேசன் said...

நல்ல விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி அய்யா!

அபூ முஹை said...

மறுமொழியிடும் அன்பர்களே!

உங்களை அடையாளப்படுத்த வெட்கமாக இருந்தால் வேண்டாம், மறுமொழியிடாதீர்கள்.

நன்றி!

Indian said...

please furnish the list/numbers of such muslim destitutes in Saudi, malaysia, indonesia who got state support in the past (say) 3 years. that will be more convincing.

Unknown said...

முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர் பின்னர் மதம் மாறினால் அவருக்கும்
உங்கள் மார்க்கத்தில் மரண தண்டனைதானா?
இப்படி மதம் மாறினால் மரண தண்டனை என்பது மனித உரிமைக்கு
முரணாக இல்லையா. ஒருவர் ஒரு மதத்திலிருந்து விலகி எந்த மதத்தையும் சாராமல் இருக்கலாமே.
ஒருவர் மதம் மாறும் போது அல்லது
பிறப்பால் முஸ்லிமாக இருக்கும் போது மதம் மாறினால் மரண தண்டனை என்பது அவருக்கு தெரிவிக்கப்படுகிறதா?
இப்படி மரண தண்டனை விதிப்பது
சரி என்று நீங்கள் கருதுகிறீர்களா இல்லை இதுதான் இஸ்லாமிய
நியதி எனவே அது எக்காலத்திற்கும்
எங்கும் பொருந்தும் என்று வாதிடுகிறீர்களா.
இந்தியாவில் முஸ்லிமாகப் பிறந்த
ஒருவர் இஸ்லாத்தினை துறந்து
வேறு மதத்தினைப் பின்பற்றினால்
அவருக்கும் மரண தண்டனையா?
அப்படியாயின் அவரைக் கொல்லும்
உரிமையை சம முஸ்லீம்(களுக்கு)
இஸ்லாம் வழங்குகிறதா.

Unknown said...

தெளிவான விளக்கங்கள். நன்றி அபூமுஹை

அபூ முஹை said...

சுல்தான் உங்கள் வருகைக்கு நன்றி!

அபூ முஹை said...

மறுமொழியிடும் அன்பர்களே!

ஏற்கெனவே எழுதியதுதான். உங்களை அடையாளம் காட்ட நீங்கள் வெட்கப்பட்டால் மறுமொழிய வேண்டாம்.

உங்கள் கேள்விகளில் உள்ள சில உண்மைகளுக்கு வரும் பதிவுகளில் விளக்கங்களைப் பெறலாம் நன்றி!

Unknown said...

you are justifying anything in islam because you guys r unable think due to your religious bullies.