Tuesday, September 05, 2006

1.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்

மக்கத்துக் காஃபிர்களா..? பக்கத்துக் காஃபிர்களா..?


இஸ்லாத்தின் மீது களங்கம் கற்பிப்பவர்கள் திருக்குர்ஆன் 2:191 வசனத்தில் ''அவர்களைக் கொல்லுங்கள்'' என்ற வாசகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, ''முஸ்லிமல்லாதவர்கள் அனைவரையும்'' கொன்று விடும்படி திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுகிறது என்று தவறானப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இந்த அவதூறுப் பிரச்சாரம் இந்தியாவிலும் உலக அளவிலும் அரங்கேற்றப்படுகின்கிறது. முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாத்தின் கொள்கைகளின் பால் கவரப்பட்டு விடக்கூடாது, இஸ்லாத்தை விஷமென வெறுக்க வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு இத்தகையப் பிரச்சாரம் நடத்தப்படுகின்றது. இதை நாம் மிகையாகச் சொல்லவில்லை. உள்ளதை உள்ளபடி விளங்க வேண்டும் என்ற திறந்த, பரந்த மனப்பான்மை இவர்களிடம் இல்லை. சிந்திக்கும் திறனும் இவர்களிடத்தில் இல்லையென்பதை இவர்களின் போலியான வாதங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

இவர்கள் எந்த வசனத்தை ஆதாரமாகக் கொண்டு இத்தகைய வாதத்தை வைக்கிறார்களோ, அதற்கு முன்னர் கூறப்பட்டது என்ன? தொடர்ந்து வரும் வசனங்களில் சொல்லப்படுவது என்ன? என்பதையும் சற்று நிதானத்துடன் கவனித்தால் தமது வாதங்களிலுள்ள அபத்தங்களை உணர்ந்து கெண்டிருப்பார்பார்கள்.

''இவர்கள்'' என்று நாம் குறிப்பிட்டது, இஸ்லாத்தின் மீது களங்கத்தை சுமத்த அவதூறுப் பிரச்சாரங்களை மேற்கொண்டவர்களை மட்டுமே அடையாளப்படுத்தும், முஸ்லிமல்லாத அனைவரையும் சுட்டிக் காட்டவில்லை என்பதை புரிபவர்கள் புரிந்து கொள்ளட்டும். அதுபோல், இவர்கள், அவர்கள். அவன், இவன். அது, இது. அவை, இவை. போன்ற சொற்களை பிரயோகிக்கும்போது தனியாகப் பயன்படுத்த முடியாது. ஏற்கெனவே எது பற்றியாவது, எவரைப் பற்றியாவது பேசியிருந்தால் மீண்டும் அதைக் குறிப்பிடுவதற்காகவே இது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படும்.

''இன்று காலை 9 மணிக்கு வருவதாக முஹம்மதும், முஹைதீனும் நேற்று சொல்லிச் சென்றார்கள், இன்னும் 'அவர்கள்' வரவில்லையே என்று சொன்னால் 'அவர்கள்' என்ற வாசகம் யாரைக் குறிக்கும் என்பதை விளங்க என்ன சிரமம் இருக்கிறது. அவர்கள் என்றால் யார்? எத்தனை பேர்கள்? என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குப் புரியும். ஆனாலும் இந்த இடத்தில் இது பற்றி எதையும் விளங்காதவர்கள் ''அவர்கள்'' என்றால் மொத்த ஊரிலுள்ளவர்களையும் குறிக்கும் என்பதுதான் அசட்டுத்தனம்.

திருக்குர்ஆன் 2:191வது வசனத்தை விமர்சிப்பவர்களிடம் நியாயமான பார்வையிருந்தால் ''அவர்களைக் கொல்லுங்கள்'' என்று சொல்வதில் இந்த ''அவர்கள்'' என்பவர்கள் யார்? என்பதை முன், பின் வசனங்களிலிருந்து விளங்கியிருப்பார்கள். நேர்மையில்லாதவர்களிடம் நியாயமான பார்வையை எதிர்பார்க்க முடியாது. எனினும் இவர்களின் நேர்மையற்ற விமர்சனம் இங்கு அடையாளம் காட்டப்படுகிறது.

இனி விஷயத்துக்கு வருவோம்.

2:190.உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

2:191. (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள், ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள். ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.

2:192. எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

2:193. ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள். ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.

2:194. (போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும். இதே போன்று, எல்லாப் புனிதப் பொருட்களுக்கும் ஈடு உண்டு - ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்பு மீறுங்கள். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


மேற்காணும் ஐந்து வசனங்களும் போர் பற்றியே பேசுகிறது. இவ்வசனங்கள், போர் தொடர்பாக மதீனாவில் அருளப்பட்ட முதல் வசனங்களாகும். போர் பற்றிய வரம்புகள் இங்கு விளக்கமாகச் சொல்லப்படுகின்றது. போர் செய்ய நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

முதலில் திருக்குர்ஆன் 2:190 இறை வசனம் என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம்.

2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

9:13. அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?


உங்களுடன் போருக்கு வருபவர்களுடன், நீங்களும் போர் செய்யுங்கள் என்று 2:190, 9:13 ஆகிய வசனங்கள் கூறுகிறது. வம்புச் சண்டைக்கு, அதாவது வலியப் போருக்குச் செல்லும்படி இஸ்லாம் சொல்லவில்லை. நியாயமான காரணங்கள் இருந்தால் மட்டுமே முஸ்லிம் அரசாங்கம் போர் செய்ய வேண்டும். (இது பற்றிய விளக்கம் வரும் பகுதிகளில்)

இஸ்லாத்தின் ஆரம்பகாலப் பிரச்சாரத்தை மக்காவில் துவக்கியபோது, இறைத்தூதர் (ஸல்) அவர்களும், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட குறைந்த அளவிலான முஸ்லிம்களும், மக்கா குரைஷிகளால் - மக்கத்துக் காஃபிர்களால் மிகவும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்களை கொடூரமாகக் கொலை செய்தும் வந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உயிருக்கு உலை வைக்கும் திட்டமும் குரைஷிகளால் தீட்டப்பட்டது. இந்தக் கொடுமைகளிலிருந்து மீள, இறைத்தூதரும் - முஸ்லிம்களும், தமது உடமைகளையெல்லாம் இழந்து சொந்த ஊரையும் துறந்து வெளியேறினார்கள். வெளியேற இயலாத - வழி தெரியாத பலவீனமான முஸ்லிம்கள் மக்காவிலேயே தங்கி விட்டார்கள். இவர்களின் மீதும் குரைஷிகளின் அடக்கு முறை மேலும் தொடர்ந்து கொண்டிருந்தது.

மக்காவைத் துறந்து சென்ற முஸ்லிம்களுக்கு மதீனா அடைக்கலம் தந்து ஆதரித்தது. இறைவன் காட்டிய வழியில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் மதீனாவில் ஒரு அரசு உருவாகியது. இந்த நேரத்தில் மக்காவில் ஏக இறைவனை மறுத்துக் கொண்டிருந்த ''மக்கத்துக் காஃபிர்கள்'' முஸ்லிம்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்தேத் தீருவோம் என்ற மூர்க்கத்தனத்தில் செயல்பட்டு, முஸ்லிம்களின் மீது வலிய போருக்கு வந்தார்கள். அதனால் மதீனாவில் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்ட முஸ்லிம்களுக்கு ''உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்'' என்று இறைவனின் போர் பற்றிய முதல் கட்டளைகள் பிறப்பிக்கப்படுகிறது. கட்டளையிடும் அதே நேரத்தில் போரில் வரம்புகளை மீறி விடக்கூடாது என்றும் எச்சரிக்கப்படுகிறது. (புரிந்து கொள்ள இந்த வரலாற்றுப் பின்னணி உதவியாக இருக்கும் என்பதால் சிறு விளக்கம்.)

2:191. (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள், ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள். ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.

190லிருந்து 194வரையுள்ள, போர் பற்றி அறிவிக்கும் வசனங்களில், 191வது வசனத்தை மட்டும் உருவியெடுத்துக் கொண்டு விமர்சிப்பது இவர்களின் நோக்கம் என்னவென்பதை வெள்ளிடை மலையாக விளக்கி விடுகிறது. இந்த வசனத்தில் (போர்க் களத்தில்) சந்திக்கும் போது ''அவர்களைக் கொல்லுங்கள்'' என்றே சொல்லப்பட்டுள்ளது. போர்க் களமென்று இங்கு சொல்லவில்லையே? என்ற கேள்வியெழுந்தாலும், ''உங்களை எதிர்த்து போர் புரிபவர்களுடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்'' என்ற 190வது வசனத்தின் தொடர்ச்சியாகவே 191வது வசனமும் அமைந்திருக்கிறது.

இஸ்லாத்தின் எதிரிகள் எடுத்து வைக்கும் (191வது) வசனத்திற்கு முந்தைய வசனத்தில் ''உங்களுடன் போரிட வருபவர்களை எதிர்த்து போரிடுங்கள்'' என்று கூறிவிட்டு, அடுத்த 191வது வசனத்தில் முஸ்லிம்களுடன் போருக்கு வருபவர்களேயே ''அவர்கள்'' என்று சுட்டுகிறது. 'அவர்கள்' என்றால் உங்களுடன் போர் செய்ய வருபவர்கள் என்பது எவருக்கும் விளங்கும். அதாவது முஸ்லிம்களை அழித்தொழிக்க படை திரட்டிக் கொண்டு வரும் எதிரிகளோடு போரிட்டு ''அவர்களைக் கொல்லுங்கள்'' என்றே இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

மேலும்,191வது வசனத்தின் தொடர் வாசகங்கள் இவர்களின் தவறான வாதத்தை தகர்த்தெறிகிறது. ''அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு, நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்'' என்று கூறுகிறது, மக்காவிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது ''மக்கத்துக் காஃபிர்களா?'' அல்லது ''பக்கத்துக் காஃபிர்களா?'' (சிந்திக்கவும்)

1.''அவர்களை''க் கொல்லுங்கள்'' 2.''அவர்கள்'' உங்களை ஊரை விட்டு வெளியேற்றியவாறு'' என 191வது வசனத்தில் இரண்டு முறை அவர்கள் என்று சொல்லப்படுகிறது. இரண்டும் மக்கத்துக் காஃபிர்களைத்தான் குறிப்பிடுகின்றது என்பதை விளங்கலாம்.

9:13. ''தமது, உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவங்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?''

ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டதற்காக முஸ்லிம்களை ஊரை விட்டு வெளியேற்றிய மக்கத்துக் காஃபிர்களே, முஸ்லிம்களுக்கெதிராக போரிடவும் வந்தார்கள். ''அவர்களுடன்'' போர் செய்ய வேண்டாமா? என, 9:13வது வசனத்தில் சொல்லப்படுகிறது. 2:190,191 ஆகிய இரு வசனங்களுக்கு, 9:13வது வசனம் விளக்கமாக அமைந்துள்ளது.

மேலும், முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுங்கள் என்று திருக்குர்ஆன் எந்த இடத்திலும் சொல்லவில்லை. அவர்களைக் கொல்லுங்கள் என்பதும் முஸ்லிமல்லாதவர்கள் அனைவரையும் கொல்லச் சொல்வதாக பொருள் கொள்வது தவறான புரிதல்.

(விளக்கங்கள் தொடரும்)

அன்புடன்,
அபூ முஹை

13 comments:

அபூ முஹை said...

test

நிர்வாகி (Admin) said...

How a God can be God when he orders to 'kill' someone? I do not understand..

வாசகன் said...

//''அவர்கள்'' என்றால் மொத்த ஊரிலுள்ளவர்களையும் குறிக்கும் என்பதுதான் அசட்டுத்தனம்.//
அசட்டுத்தனம் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

முஸ்லிம்களை அன்னியப்படுத்தவும், அவதூறு பரப்பவும் இவர்கள் ('இவர்கள்' என்றால் புரிகிறதல்லவா?) செய்கிற காழ்ப்பு மறைத்த தொலைநோக்குத் திட்டங்களாகவே பொதுவாக, பொதுவான அனைவரும் உணர்கிறோம்.

வாசகன் said...

//How a God can be God when he orders to 'kill' someone? I do not understand..//

ஐயா kelvi அவர்களே!
'தாக்கிக் கொல்லவருபவர்களை என்ன செய்வது?" என்ற கேள்வி (நிஜமான கேள்வியைச் சொல்கிறேன்) வரும்போது GOD என்ன பதிலைச் சொல்லியிருக்க வேண்டும் என்று உங்கள் 'பேரறிவை' உபயோகித்துச் சொல்ல முடியுமா?

தருமி said...

kelvi-யின் கேள்விக்கு நீங்கள் அளித்துள்ள பதிலைப் படித்தபின் தற்செயலாக - நம்புவீர்கள் என்றுதான் நினைக்கிறேன் - பார்த்த பதிவின் லின்க்: http://thoma4india.blogspot.com/2006/09/blog-post.html

Unknown said...

தெளிவான விளக்கங்கள். உங்களது இதுபோன்ற சிறந்த பணிகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

புரிந்து கொண்டே புரியாத மாதிரி (அல்லது மற்றவர்களைக் குழப்பும் நோக்கத்தில்) ஒரு குரூப் கூகிளிலிருந்து யாரோ ஒரு யூதன் எழுதியதை ஆதாரமாகத் தரும் பாருங்கள்.

யாராவது சொந்த புத்தியை உபயோகித்து ஏதேனும் புரிந்து கொண்டால் தங்களுக்கு இருக்கின்ற (?!) அல்லது இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்ற கொஞ்ச நஞ்ச மேலாண்மையும் போய் விடும் என்கிற பயம். பாவம்.

அபூ முஹை said...

//How a God can be God when he orders to 'kill' someone? I do not understand..//

ஒரு மனிதன் வேறெந்த மனிதனையும் கொல்லக்கூடாது என்பதுதான் இறைவனின் நியதி.

''ஒரு மனிதனைக் கொன்றவன் மனித சமுதாயத்தையே கொன்று விட்டான்.'' (திருக்குர்ஆன்,5:32) என்று, இஸ்லாம் கொலை செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆனால் போர் என்று வந்து விட்டால் என்ன செய்வது? ஒரு சாரார் ஆயுதங்கொண்டு தாக்கும் போது, எதிரணியினர் தாக்குதலை தடுக்காமலும், எதிர் தாக்குதல் செய்யாமலும் இருக்க வேண்டுமென்று நீங்களும் சொல்ல மாட்டீர்கள். போர்க் களத்தில் உயிரிழப்புகள் தவிர்க்க முடியாதது.

போர்கள் தவிர்க்கப்பட வேண்டுமென்பதில் நானும் உடன்படுகிறேன். போர்க் களத்தில் எதிர்த்துப் போரிட்டவர்களை கொல்லக்கூடாது என்பது சரியல்ல நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

நிர்வாகி (Admin) said...

'தாக்கிக் கொல்லவருபவர்களை' the so called கடவுளால் கட்டுப்படுத்த முடியாதா? முடியாதெனில்,
again, how can he be a God?

btw, இதை யோசிக்க பேரறிவு தேவையில்லை. உங்களாலேயே முடியும். முயற்சித்துப் பாருங்கள்.

அபூ முஹை said...

kelvi, உங்கள் கருத்து வேறு பக்கம் திரும்புகிறதே?

அன்புடன்,
அபூ முஹை

அட்றா சக்கை said...

திரு. அபூமுஹை

நீங்கள் எவருடைய புரட்டை எல்லாம் உடைத்து இதுவரை உண்மையை நிரூபித்து வருகிறீர்கள் என்று வலைப்பூவுலகம் அறியும். மேற்படி 'இவர்கள்' தான் வேறு வேறு அவதாரம் எடுத்து இப்படிப் பிதற்றுகிறார்கள் அதில் லேட்டஸ்ட் தான் 'கெல்வி'

எப்படிப் பதில் சொன்னாலும் அதை விட்டு வேறு எதையாவது திசை திருப்பி குழப்பத்தான் முயலுவார்கள் அதைச்சரியாக இனம் கண்டிருக்கும் உங்களுக்குப் பாராட்டுகள்.

உங்களின் இஸ்லாமியப் போர்கள் குறித்த தொடரை எதிர்பார்க்கிறேன்.

ஒரு வேண்டுகோள்:
word verification-ஐத் தூக்கிவிடுங்களேன். எரிச்சலாக உள்ளது.

தமிழ் செல்வன் said...

//kelvi-யின் கேள்விக்கு நீங்கள் அளித்துள்ள பதிலைப் படித்தபின் தற்செயலாக - நம்புவீர்கள் என்றுதான் நினைக்கிறேன் - பார்த்த பதிவின் லின்க்:

http://thoma4india.blogspot.com/2006/09/blog-post.html//

அய்யா தருமி அய்யா, எதற்கு என்ன பதிலை கொடுக்கிறீர்கள். புரியவே இல்லையே.

நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியில் சென்று பார்த்தேன். இங்கே வைத்துள்ள கேள்விக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இருப்பது போல் தெரியவில்லையே. அது பகைவர்கள், சபிப்பவர்கள், சத்ருக்கள் போன்றவர்களை நேசிப்பதற்கும் அவர்களுக்காக பிரார்த்திப்பதற்கும் கூறுகிறது. அதில் நேருக்கு நேர் கொல்ல வருபவர்களை என்ன செய்ய வேண்டும் எனக் கூறவில்லையே?

இதிலிருந்து நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்பதையாவது சற்று கூறுங்களேன்.

தமிழ்செல்வன்

அபூ முஹை said...

அட்றா சக்கை, உங்கள் வருகைக்கு நன்றி! நீங்கள் எழுதியிருப்பது மிகையல்ல. இது பற்றி பிறகு எழுதுகிறேன்.

//ஒரு வேண்டுகோள்:
word verification-ஐத் தூக்கிவிடுங்களேன். எரிச்சலாக உள்ளது.//

இது சம்பந்தமாக அருணகிரி என்பவர் ஏற்கெனவே எழுதியிருந்தார். இப்போது நீங்களும் எழுதியுள்ளீர்கள்.

பதிவுகளையும், பின்னூட்டங்களையும் உள்ளிடும்போது ஒவ்வொரு முறையும் நானும் word verification பிரச்சனையைச் சந்திக்கவே செய்கிறேன்.

இருந்தாலும் எரிதப் பின்னூட்டங்களை தவிர்ப்பதற்காகவே word verification னை அனுமதித்தேன் இதனால் எரிச்சல் ஏற்படத்தான் செய்கிறது. நீக்கி விடுகிறேன் நன்றி!

அருணகிரி அவர்கள் பொறுத்துக் கொள்க!

அன்புடன்,
அபூ முஹை

அபூ முஹை said...

//அபூமுஹை சார்,
விவாதம் வேறு பக்கம் திரும்பிவிடக்கூடாதென்று கருதுகிற உங்கள் நுண்ணுணர்வுக்கு நன்றியும் பாராட்டுக்களும். நீங்கள் விரும்பினால் கெல்விக்குரிய இந்த மறுமொழியை அனுமதிக்கலாம்.//>> சொன்னவர் கருத்து.

கருத்து சார்!
இந்த கருத்துக்களோடு, kelvi சாருக்கும் நீங்கள் எழுதிய ''கடவுள் கொள்கை'' விளக்கம் சுருக்கமாக, ஏற்றுக் கொள்ளும்படி இருந்தது.

ஆனாலும் நீங்கள் கேட்டக் கொண்டதற்கெதிராக, உங்கள் பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லை. இது இப்படியே நீண்டுவிடுமோ என்ற எண்ணத்தில் தவிர்த்து விட்டேன். பொறுத்துக் கொள்க!

மேலும் பின்னூட்டிய kelvi, raaja, சுல்தான், asalamone ஆகியோருக்கும் நன்றிகள்!

அன்புடன்,
அபூ முஹை