Friday, August 17, 2007

கொல்கத்தா இமாமின் வன்முறைப் பேச்சு.

இந்தியா, அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தமாக நாடாளுமன்றம் அல்லோலப்பட்டு வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங் மீது முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்ட்ஸ் பாய்ச்சல் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது.

"இந்த பொய்க்கு மன்மோகன் மீது தோட்டா பாய்ந்திருக்கும்!"

புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்டு 2007 ( 13:39 IST )

"அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக கூறிய பொய்யை, சீனாவில் சொல்லியிருந்தால் மன்மோகன் மீது தோட்டா பாய்ந்திருக்கும் " என பிரதமரை கடுமையாக விமர்சித்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுக்கு எதிராக, காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்த விவகாரத்தில், இந்திய மக்களை பிரதமர் மன்மோகன் சிங் ஏமாற்றிவிட்டார் என்றும், இதுவே சீனாவாக இருந்தால், அவர் மீது தோட்டா பாய்ந்திருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரம் தொடங்கிய சில நிமிடங்களில், ஃபெர்னாண்டஸ்சின் பேட்டிக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

'ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோர வேண்டும்' என்று அவர்கள் வலியுறுத்தினர். மேலும், அந்தப் பேட்டி இடம்பெற்றிருந்த செய்தித்தாள்களைக் காட்டிய அவர்கள், 'இது மாபெரும் அவமதிப்புச் செயல்'என்று குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து ஃபெர்னாண்டஸுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால், அவையை பிற்பகல் 2.30 வரை சபாநாயகர் ஹமீத் அன்சாரி ஒத்திவைத்தார்.

செய்தியின் சுட்டி

நாடாளுமன்றத்தில் பிரதமரை நோக்கி எழுந்த இந்த வன்முறையானப் பேச்சு எவ்வாறு கண்டிக்கத்தக்கதோ அதுபோல் தஸ்லிமாவின் மீதான கொல்கத்தா இமாமின் வன்முறையைத் தூண்டும் பேச்சும் கண்டிக்கத்தக்கது.

பிறரை வன்முறைக்குத் தூண்டுவதைவிட கொல்கத்தா இமாம் ரோஷமுள்ளவராக இருந்தால் நேரில் சென்று தஸ்லிமாவை வதம் செய்யலாமே.

ஒரு ஜனநாயக நாட்டில் இருந்து கொண்டு, ஜார்ஜ் ஃபெர்னாண்ட்ஸும், கொல்கத்தா இமாமும் பேசியது கண்டிக்கத்தக்கது. எல்லாம் ஜனநாயகம் வழங்கும் சலுகை.

கொல்கத்தா இமாமின் பேச்சுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த ஒட்டுமில்லை!

கொல்கத்தா இமாம் பேசியது இங்கே

12 comments:

╬அதி. அழகு╬ said...

ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை அவ்வாறு பேசத் தூண்டியது பிரமரின் பொய்.

கொல்கத்தா இமாமை அவ்வாறு பேசத் தூண்டியது, இஸ்லாத்தைப் பற்றிய எவ்வித அறிவுமற்ற அமுஸ்லிம் தஸ்லீமாவின் தான்தோன்றிக் கருத்துகள்.

இமாமுடைய பரிசு அறிவிப்பு எவ்வளவு அறிவீனமோ அதே அளவு அறிவீனம்தான் இமாமைக் கண்டித்து ப்ளாக்கில் பதிவர்கள் பதிவுகள் எழுதிக் கொண்டிருப்பதும்.

'கொலை செய்யத் தூண்டுதல்' என்று நம்முடைய குற்றவியல் சட்டத்தின் பிரிவின்கீழ் அவர் மீது வழக்குத் தொடருங்கள்; அது ஆண்மை!

G.Ragavan said...

அழகின் கருத்தில் பெருமளவில் ஒத்துப் போகிறேன். மன்மோகன் சிங் உளறிக் கொட்டியது மிகக் கொடுமை. அவரென்ன விடுமுறைக்கு இந்தியாவிற்கு வந்துவிட்டுப் போகிறவரா....இந்த நாட்டை நடத்திச் செல்கிறவர். அவரது பேச்சும் கண்டிக்கத்தக்கது. ஜார்ஜ் பெர்ணாண்டஸ் பேச்சும் வன்முறைதான். இமாமின் பேச்சு மடத்தனம். அவர் மீது சட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சரியாக இருக்கும். ஆனால் அது நடக்கும் என்று நினைக்கவில்லை. அரசும் யோசிக்கும். அப்படிக் கைது செய்தாலும் கலவரம் கண்டிப்பாக உண்டாகும்.

அபுமுஹை, இமாமின் பேச்சுக்குக் கண்டிப்பு சொல்லும் உங்கள் பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது. ஜார்ஜ் பெர்ணாண்டசைச் சொல்லித்தான் இமாமைச் சொல்ல வேண்டுமென்றில்லை. இமாமை மட்டுமே கூடச் சொல்லியிருந்திருக்கலாம். இமாமின் கருத்தை நீங்கள் ஒப்புக்கொள்ளாதது சிறப்பு. நன்றி.

மரைக்காயர் said...

//கொல்கத்தா இமாமின் பேச்சுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த ஒட்டுமில்லை!//

ரொம்ப சரிங்க. இதே செய்தியை வச்சு 'சற்றுமுன்' பதிவுல சிலர் குமுறிட்டு இருக்காங்க. சந்தடி சாக்குல ஒருத்தர் சந்துல சிந்து பாடுறாரு.. "போ(பொ)டா"-ன்னு உள்ள தள்ளி வாணாள் முழுக்க களி திங்க வெக்கணும் இந்த வக்கிரம் புடிச்ச காட்டுமிராண்டி கும்பலை.
என்ன துணிச்சல் இருந்தா ஒரு சுதந்தர ஜனநாயக தேசத்துல இப்படில்லாம் பொறுப்பே இல்லாம அறிக்கை விடத்தோணும் ?
செட்டிநாட்டு கவிஞன்தாங்க சரி.
ஜனநாயகத்தை சற்றே நிறுத்தி சவுக்கெடுக்கணும். கோல் எடுத்தாதான் குரங்காடும்."

'ராமர் பாலத்தை மீட்க உயிரையும் எடுப்போம்' என்று இந்துத்துவ துறவி செல்வி உமாபாரதி திருச்சியில பேசுனப்போ இவங்களெல்லாம் எங்கேத்தான் போயிருந்தாங்களோ..!

http://maricair.blogspot.com/2007/07/blog-post.html

எல்லா வக்கிரம் புடிச்ச காட்டுமிராண்டி கும்பல்களையும் உள்ள தள்ளி வாணாள் முழுக்க களி திங்க வைக்கணுங்க.. என்ன நாஞ்சொல்றது?

╬அதி. அழகு╬ said...

அப்படியே, 'வன்முறையைத் தூண்டுதல்' பிரிவில் நமது பிரமரையும் தஸ்லீமாவையும் எதிர்த்து வழக்குப் பதிந்து விடுங்கள்.

அபூ முஹை said...

அழகு உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி!

அபூ முஹை said...

ராகவன் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள்!

நம்ம பிரதமர் மன்மோகன் சிங் எதற்காக முன்னாள் முந்திரியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாரோ, அதே மாதிரி தன்னுடைய வன்முறைப் பேச்சுக்களால் தஸ்லிமாவும் தவணை முறையில் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.

ஒரு முந்திரிக்கே நாடாளுமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் வன்முறையாகப் பேசியிருக்கும் பொழுது ஜனநாயகம் என்ற முறையில் அறிவு கெட்டத்தனமாக கொல்கத்தா இமாமும் உளறியிருக்கிறார்.

இமாம் என்றால் என்னவோ இஸ்லாத்தையே வழி நடத்தும் இமாம் என எண்ணிக்கொண்டு, கொல்கத்தா இமாம் உளறியதை இஸ்லாத்தின் ஃபத்வா எனக் கருதி விடக்கூடாது.

பள்ளிவாசலில் தொழவரும் முஸலிம்களுக்கு முன்னின்று தொழுகை நடத்துபவர் அவ்வளவுதான். இவர் இஸ்லாதை வழி நடத்திச் செல்லும் இமாம் இல்லை!

வன்முறையாகப் பேசுபவர்களை சிறையிலடைக்க முதுகெலும்பில்லாத அரசாங்கம் பிரச்சனைக்குரிய ஒருவரை இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்கு முன்பு சற்று நிதானமாக யோசித்திருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்திலேயே, ஒரு பிரதம மந்திரியின் மீது வன்முறைப் பேச்சை வீசுவதைத் தவிர்க்க முடியவில்லை. யார், எது வேண்டுமானாலும் பேசலாம் என அப்படியொரு ஜனநாயக சலுகையை இந்தியா வழங்கியிருப்பதால் இமாமால் வன்முறைப் பேச்சைப் பேசமுடிகிறது என்பதற்காகவே இரண்டு செய்தியும் ஒன்றாக எனக்குத் தோன்றியது. மற்றபடி எதையும் நியாயப்படுத்தும் உள்நோக்கம் இல்லை! நன்றி!

அட்றா சக்கை said...

//'ராமர் பாலத்தை மீட்க உயிரையும் எடுப்போம்' என்று இந்துத்துவ துறவி செல்வி உமாபாரதி திருச்சியில பேசுனப்போ இவங்களெல்லாம் எங்கேத்தான் போயிருந்தாங்களோ..! //

ஹி ஹி அதுவா? அப்டிலாம் ஒரு விசயம் நடந்துச்சா?

அது சற்றுமுன்ல வச்சு கும்மி அடிக்கத் தகுதி இல்லாதது ஆச்சே..!

எங்களுக்கு இந்த விசயம்லாம் கண்ணுக்குப் படாதுங்க,

இஸ்லாம் குறித்து யார் எந்தக் குப்பை சொன்னாலும் இஸ்லாமியப் பெயர் சொண்டவர் என்ன செஞ்சாலும் அதவச்சு கும்மி அடிக்கத் தானே எங்களுக்கு காசு கொடுக்கிறானுங்க?

மரைக்காயர் அய்யா உங்களுக்கு இவ்ளோ வெவரம் தெரியாம பூடிச்சே!

G.Ragavan said...

// 'ராமர் பாலத்தை மீட்க உயிரையும் எடுப்போம்' என்று இந்துத்துவ துறவி செல்வி உமாபாரதி திருச்சியில பேசுனப்போ இவங்களெல்லாம் எங்கேத்தான் போயிருந்தாங்களோ..!

http://maricair.blogspot.com/2007/07/blog-post.html //

மரைக்காயர், அப்படிச் சொல்லியிருந்தால் அதுவும் கொடூரம்தான். அதில் எந்த ஐயமும் இல்லை. உமாபாரதியும் இந்த விஷயத்தில் இமாம் எவ்வளவு கண்டனத்துக்கும் தண்டனைக்கும் உரியவரோ அதற்கும் உரியவர். சில பல சமயங்களில் சில செய்திகள் நமது கவனத்திற்கு வருவதில்லை. அலுவலகப் பணி அது இது என்று ஏதாவது வந்து விடும். அந்த நேரத்தில் கருத்து சொல்ல முடியாமலும் போயிருக்கலாம்.

உமாபாரதி உடைத்ததும் பொன்குடமே. இமாம் உடைத்ததும் பொன்குடமே.

ஒருவேளை அபுமுஹை சொல்வது போல இமாம் சொல்வதை இஸ்லாம் சொல்வதாக எடுத்துக்கொள்வதாகக் கூடாது என்றே வைத்துக் கொள்வோம். அதே போல உமாபாரதி சொல்வதும் இந்து மதம் சொல்வதாக ஆகாது. ஆனால் இவர்கள் இருவர்களின் கருத்தும் வன்முறை என்ற வகையில் எதிர்க்கப்பட வேண்டியதுதான்.

அபூ முஹை said...

//இங்கேயும்தான் போய் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்களேன்...//

உங்கள் வருகைக்கும், தொடுப்பிற்கும் நன்றி!

//முதுகெலும்பில்லாத அரசாங்கம்//

என்று நான் சொல்லியிருந்தேன்.

//மானங்கெட்ட மத்திய அரசு//

உலவி அவர்கள் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் நன்றி!

அபூ முஹை said...

மரைக்காயர் உங்கள் வருகைக்கும், தகவல்களுக்கும் நன்றி!

//'ராமர் பாலத்தை மீட்க உயிரையும் எடுப்போம்' என்று இந்துத்துவ துறவி செல்வி உமாபாரதி திருச்சியில பேசுனப்போ இவங்களெல்லாம் எங்கேத்தான் போயிருந்தாங்களோ..!//

அப்போ களி தின்னப் போயிருந்தார்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

அபூ முஹை said...

அட்ற சக்கை உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!

அபூ முஹை said...

ராகவன் உங்கள் மீள் வரவுக்கு நன்றி!

//உமாபாரதி உடைத்ததும் பொன்குடமே. இமாம் உடைத்ததும் பொன்குடமே.//

உங்கள் நடுநிலைக் கருத்திற்கு நன்றி!