Sunday, May 01, 2005

அள்ளிப்போட்டதை விமர்சிக்காமல்!

பெயரில்லாதவரின் (அனானிமஸ்) பின்னூட்டத்திற்கு பதிலளிப்பது போல் நேசகுமார் சில கருத்துக்களை தமது பதிவின் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார். ''இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்'' எனத் தொடங்கிய இவ்விவாதம் நேசகுமார் - ஸலாஹூத்தீன் என்ற இருவருக்கு மட்டும் சம்மந்தமுடையதல்ல. 03.12.2004ன் முதல் பதிவிலேயே ''அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கு குறிப்பிட விரும்வது இதுதான்'' என்றே தனது பொய்ப் பிரச்சாரத்தைத் துவங்கினார்.

//*நான் ஆரம்பத்திலேயே சலாஹ¤த்தீனுக்கு (9.02.2005 பதிவு) சொல்லியிருந்தது போன்று இது போன்றவைகளுக்கு நான் உடனடியாக பதில் அளிக்க விரும்பவில்லை.*//

03.12.2004ல் துவங்கிய வலைப்பதிவு இரண்டு மாதம் கழித்து 09.02.2004ல் எழுதப்பட்டது ஆரம்பத்திலேயே சொல்லியதாகாது. இதற்கிடையில் நிறையக் கருத்துக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. தாம் என்ன எழுதுகிறோம் - தனது கருத்துக்கு எதிரணியில் என்ன விளக்கங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதையெல்லாம் புரிந்தும், புரியாதது மாதிரி தன்னைக் காட்டிக்கொள்கிறார்.

அள்ளிப்போட்டதை விமர்சிக்காமல், அள்ளிப்போடும் போது சிந்தியதை (ஹாமீத் ஜாஃபரின் கருத்தை) விமர்சிப்பதே நேசகுமாரின் வாடிக்கை. முஸ்லிம்கள் எதிலேனும் சறுக்கட்டும் என்ற இவரின் காத்திருப்புக்குப் பந்தாவாக ''நான் உடனடியாக பதிலளிக்க விரும்பவில்லை'' என்று போலியாக காலரை நிமிர்த்தி விட்டுக்கொள்வார். இவரைப்பற்றி ஜாஃபர் அலி என்பவர் எனது பதிவின் பின்னூட்டத்தில் எழுதியது,

சகோதரரே! நான் இதுவரை அவர் வலைப்பதிவை பார்வையிட்ட வகையில் (நேச குமார்) அவர் இஸ்லாத்தை குறை கூறும் நோக்கோடு மட்டுமே வாதிடுகிறார். இவருக்கு பதிலளித்து நம் நேரத்தை தான் விரயமாக்கி வருகிறோம், அறிந்து கொள்ளவோ. இல்லை அடுத்தவருக்கு எடுத்து சொல்லவோ அவர் இஸ்லாத்தின் மீது குற்றம் சொல்ல வரவில்லை. அவர் நோக்கம் இஸ்லாத்தை மற்றவர்களுக்கு ஒரு தவறான புரிதலுடன் விளங்க வைப்பது. (ஜாஃபர் அலியின் கருத்து நூற்றுக்கு நூறு சரி என்பதையே நேசகுமார் நிரூபித்து வருகிறார்)

இதுவரை நேசகுமார் முன்வைத்த, இஸ்லாத்தின் வரலாற்றுப் புரட்டலுக்கு, முஸ்லிம்கள் சரியான - உண்மை வரலாற்றுச் சான்றுகளை முன்வைத்திருக்கிறார்கள். வரலாற்று ஆவணங்களை வைக்கும் போது - கட்டுரை எழுத வேண்டிய அவசியம் என்ன? கட்டுரையாக எழுத வேண்டும் என்கிறார் - ஒருவேளை இஸ்லாத்தின் மீது களங்கத்தை சுமத்தி தனது பதிவுகளை நிறைப்பது போல், நாமும் அவ்வாறு விளக்கம் என்ற பெயரில் எழுத வேண்டும் என்று அவர் எண்ணினால் அது அவரின் அறியாமை. இஸ்லாத்திற்கு வெளியிலிருந்து ஒருவன் இஸ்லாத்தைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் அவனுக்கு வரம்பெதுவும் கிடையாது. இஸ்லாத்திற்கு உள்ளேயிருந்து ஒருவன் இஸ்லாத்தை எழுதும் போது அவன் விருப்பத்துக்கு இஸ்லாத்தை எழுத முடியாது - எழுதக்கூடாது.

பெயரில்லாதவரின் (அனானிமஸ்) பின்னூட்டத்திற்கு நேசகுமார் எழுதியது.
//*அபூ முஹை தெரிவித்திருக்கும் கருத்துக்களில் எனது கூற்றுக்களை உடைத்தெறியுமாறு அமைந்திருக்கும் சிறந்த 2,3 கருத்துக்களை நீங்களே தெரிவு செய்து இங்கே பின்னூட்டமாக உள்ளிடுங்கள். அடுத்த பதிவில் அவற்றுக்கு பதிலளிக்கிறேன்.*//

நேசகுமார் கேட்டுக் கொண்டதற்காக.
1. நபி (ஸல்) அவர்கள், ஜைனப் (ரலி) இருவரின் திருமணம் பற்றிய அவதூறுச் செய்திகள் முழுக்க. முழுக்கக் கட்டுக்கதை என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது - அதாவது புனையப்பட்ட செய்தியின் அடிப்படையில் அப்பட்டமாக நபி (ஸல்) அவர்களின் மீது நேசகுமார் அவதூறைச் சுமத்தியிருக்கிறார்.

2. நபி (ஸல்) அவர்கள், ஜைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது, நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் அதிர்ச்சியடைந்து எதிர்ப்பாயிருந்தார்கள் என்று நேசகுமார் கதையளந்திருக்கிறார்.

3. 24:3ம் வசனம் மாற்று மதப்பெண்டிர்களையெல்லாம் ''விபச்சாரிகள்'' என்று சொல்வதாக - நேசகுமார் திருக்குர்ஆன் மீது களங்கம் சுமத்தியிருக்கிறார். இந்த வசனத்திற்கு இதுதான் பொருள் என்பதை அவர் நிரூபிக்கட்டும்.

இதற்கு நேசகுமார் பதிலளிக்கட்டும் மேலும் தொடர்வோம்.

பெயரில்லாதவர் பின்னூட்டிய நேசகுமாரின் பதிவு.
http://islaamicinfo.blogspot.com/2005/04/ii.html

குறிப்பு:- நாம் ஏற்கெனவே சொன்னது போல், நேசகுமாரின் பதிவுகளில் பின்னூட்டமிடுவதை வெறுக்கிறோம். முன்பு பின்னூட்ட வாசலை அடைத்து தன்னை நாகரீகமற்றவர் என்று அவர் அடையாம் காட்டிக் கொண்டார்.

6 comments:

அதிரைக்காரன் said...

நேசகுமார், தன் அதி மேதாவித்தனமான வாதத்தால் "இஸ்லாமும் மற்ற மதங்களைப்போல் விமரிசனத்திற்குட்பட்டது" என இஸ்லாத்தைப் பற்றி இணையத்தில் தேடுவோருக்கு தவறான தகவலை கொடுக்கும் நோக்கத்தில் உள்ள ஒரு குழுவின் அல்லது நபர்களின் அவதூறுகளை பதிந்துள்ளார்.

அவரின் நோக்கம் இஸ்லாத்தை நோக்கி வருபவர்களை எந்த வகையிலாவது திசை திருப்ப வேண்டுமென்பதே. அதனால்தான் அவரின் தளத்திற்கு "இஸ்லாமிக் இன்ஃபோ" என பதிந்து தவறான வழி நடத்துகிறார்.

குழப்பவாதிகளுக்கு ஆதாரங்கள் தேவையில்லை. முஹம்மது நபி மீது தனக்கு இருக்கும் காழ்ப்புகளை மேலோட்டமாக எடுகோல்களை காட்டி தன் வழியில் அவதூறு செய்துள்ளார்.

தான் நேர்மையான விமரிசகன் எனில் முதலில் அவர் வைக்கும் இஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு, மறுமலர்ச்சி அடந்து கொண்டிருப்பதாக நம்பும் அவர் மதத்தில் என்ன தீர்வு சொல்லப் பட்டுள்ளது என சொல்லட்டும்.

சுட்டுவிரல் said...

நேச குமார் என்பவர் தன்னுடைய இஸ்லாம் குறித்த பதிவுகளில் வெளிப்படுத்துவதெல்லாமே இஸ்லாம் மீதான அவருடைய வன்மத்தைத் தான்.

எப்படியாவது இஸ்லாத்தின் மீதும் அதன் நபி மீதும் களங்கம் சுமத்த வேண்டும் என்பதே அவருடைய முயற்சியாக இருக்கிறது.இதற்கான மனவியல் ரீதியான காரணங்கள் ஆராயப்படவேண்டுமென்பது ஒரு புறமிருக்க, இதை உணர்ந்துத் தானோ என்னவோ நிறைய பேர் 'பதிலளித்துப் பிரயோசனமில்லை' என்று மவுனமாக!


சில முஸ்லிம் அன்பர்களும் பல முஸ்லிமல்லாத அன்பர்களும் இதே கருத்தையே என்னிடம் சொன்னார்கள்:
'விவாதத்துக்கு பதில் தரலாம். வீம்புக்கு பதில் தந்து ஏன் டயத்தை வேஸ்ட் பண்றீங்க'

ஆனால் அவருக்கு என்று இல்லாவிட்டாலும் அவரால் வழி மாற்றப்படுகிறவர்கள் (சொற்ப அளவு) யாரேனும் இருந்தால் அவர்களுக்கு பயனளிக்கும் என்பதே நேச குமாருக்கான எதிர்பதிவுகளின் நோக்கமாக அமைய வேண்டும். ஆகவே தான் என் சமிபத்திய பதிவினை விமர்சகர் பெயர் குறிப்பிடாமல் எழுதினேன். (உண்மைக்கு வித்திடும் அறியாமைகள்)

எனவே நாம் நேச குமார்களுக்கு பதிலளிக்க முனைவதை விட, அவர் எழுத்தால் மாற்றப்படுகிற அந்த சொற்ப பேர்களை கவனத்தில் கொள்வது தான் நல்லது என்பது என் கருத்து. என்ன சொல்றீங்க?

(ஓன்று உறுதி: அவருடைய பதிவுகளை சரியென்றும் ஆஹா ஓஹோ என்றும்
சொல்பவர்கள் ஏற்கனவே அதே மன நிலையில் இருக்கிற 'பரிவாரங்கள்' மட்டுமே).

தவிர, பின்னூட்டஙளுக்கு அளிக்கிற கவனத்தை எதிரான தனிப்பதிவுகளுக்கு அவர் அளிப்பதில்லை (முழுமையாக படிப்பதுக் கூட இல்லை) என்பது சமீபத்தில் பின்னூட்டங்களுக்கு அவர் அளித்த பதில்களின் வேகத்திலிருந்தும் அதற்கான முனைப்பிலிருந்தும் அறிய முடிகிறது.

மேலும் அதிரைக்காரன் குறிப்பிட்டுள்ளது போல் 'இஸ்லாமிக் இன்ஃபோ' என்று அவர் பெயர் வைத்துள்ளதிலிருந்தே அவருடைய நோக்கம் தெளிவாகிவிடுகிறதே.!

Jafar ali said...

அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் சுட்டு விரல் அவர்கள் குறிப்பிட்டது போல் அவருடைய எழுத்தால் மாற்றப்படுகிற அந்த சொற்ப நபர்களுக்காக பதிலளிப்பது என்பது நம் கடமையாகிறது. ஆனால் எவரேனும் நேசகுமாருக்கு மட்டும் பதிலளிப்பதாக நினைத்து கொண்டு எழுதினால் அவரும் அவரைச் சார்ந்தவரே! ஏனெனில் விளங்கவும், விளக்கவும் இஸ்லாத்தை ஆராயும் ஒருவருக்கு இஸ்லாத்தின் உள்ளே உள்ள நாம் பதிலளிக்க முடியும். குளக்கரையில் உட்கார்ந்து கொண்டு குளத்தின் நீருக்குள் இத்தனை மீன் தான் இருக்கிறது என்று வம்படிப்பவருக்கு எதைக் கொண்டு விளங்க வைப்பது. மறைவான விசயங்களை நம்பிக்கைக் கொண்ட நாம் அவர் கேட்கும் அத்தனை விசயங்களையும் விளக்க முடியும் என்று நினக்கிறீர்களா?

அபூ முஹை said...

அதிரையாருக்கு!

இஸ்லாமிக் இன்ஃபோ - இஸ்லாம் ஓர் முழு அறிமுகம் என்று தனது வலைப்பதிவின் தலைப்பை அர்த்தப்படுத்திக் கொண்டு, முஸ்லிம்களின் குறைபாடுகளையே எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார். இது நேசகுமாரின் அறியாமையா? அல்லது விஷமத்தனமா? என்றால் விஷமத்தனம் என்பதே சரி. இஸ்லாத்தையும் - முஸ்லிம்களையும் கலந்து - குழப்பி, கலக்கிய குட்டையில் மீன் பிடிக்கும் நோக்கம்.

இஸ்லாமிக் இன்ஃபோ அனைத்தும் இவரின் விரல் நுனியின் கட்டுப்பாட்டில் இருப்பது போல் இவரின் தற்பெருமையையும் - தலைக்கணத்தையும் பாருங்கள்.

//*இஸ்லாம் விஷயத்தில் ஒன்றைச் சொல்வதற்கு, செய்வதற்கு முன் நிறைய யோசிக்கவேண்டியிருக்கிறது. நேசகுமாரே இஸ்லாத்தைப் பற்றி இப்படிப் புகழ்ந்து சொல்லியிருக்கிறார் என்று ஒற்றை வரியில் மிஸ்கோட் செய்துவிட்டு, மணலாக மற்ற எல்லாவற்றையும் தட்டிவிட்டுப் போய்விடுவார்கள்.*//

நேசகுமாரே.... என்பதில் தன்னடக்கம் துளியுமில்லை.- நேசகுமாரே இஸ்லாத்தைப் பற்றி இப்படிப் புகழ்ந்து சொல்லியிருக்கிறார் - அதை சுயசிந்தனையில்லாமல் அப்படியே ஏற்றுக் கொள்வதற்கு அவர் அகில உலகும் அறிந்த தீர்க்கத்தரிசியா(?) - தன்னை பல்சமய சிந்தனையாளராக(?) பிற்றிக் கொள்ளும் இவர் தமிழுலகம் முழுவதும் அறியப்பட்டவரா? - அறியப்பட்டிருந்தாலும் அவரின் எழுத்துக்கு தமிழுலகம் அடிமைப்பட்டுக் கிடக்கிறதா?

வலைப்பூக்களை நாரில்லாமல் தொடுத்து - மொத்த முஸ்லிம்களின் காதுகளில் சுத்தப் பார்க்கிறார்.

அவர் இகழ்ந்தாலும், புகழ்ந்தாலும் இஸ்லாம் விரிவடைவதைத் தடுக்க முடியாது. நேசகுமார் பிறப்பதற்கு முன்பும் இஸ்லாம் இருந்தது. நேசகுமாரும், நானும் மறைந்தாலும் இஸ்லாம் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

அபூ முஹை said...

சுட்டு விரலுக்கு!

நேசகுமாரின் முனைப்பெல்லாம் இஸ்லாத்தைக் களங்கப்படுத்துவதுதான். இதில் தன் பங்குக்காக அணில் போல் மண் சுமந்திருக்கிறார் - பாகிஸ்தான் வரை சென்று ''மலம்'' சுமக்கிறார். இவரின் இன்னொரு பொய் முகம் முஸ்லிம்கள் திருந்த வெண்டுமென நீலிக்கண்ணீர் வடிப்பது - முஸ்லிம்கள் மட்டுமே இன்னும் திருந்தாமல் இருக்கிறார்கள் என்பது இந்த மேதாவியின் கணிப்பு(?)

அபூ முஹை said...

ஜாஃபர் அலிக்கு!

இந்த விவாதம் பொது இடத்தில்தான் நடந்து கொண்டிருக்கிறது. தனியொரு மனிதனுக்காக நடக்கவில்லை.