Monday, June 06, 2005

பூமியில் முதல் ஆலயம் காஃபா.

மக்காவில் இருக்கும் காஃபா என்னும் ஆலயத்தின் வரலாற்றுச் சான்றைச் சொல்லும் நபிமொழியை எடுத்தெழுதி அதில் குறிப்பிட்டிருக்கும் வரலாற்றுத் தகவல் தவறானது என்று நிரூபிக்கும் நோக்கத்தோடு முன் வைக்கப்பட்ட நபிமொழி இது..

நான் நபி(ஸல்) அவர்களிடம்) 'இறைத்தூதர் அவர்களே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?' என்று கேட்டேன். அவர்கள் 'அல் மஸ்ஜிதுல் ஹராம் - மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்'' என்று பதிலளித்தார்கள். நான் 'பிறகு எது?' என்று கேட்டேன். அவர்கள் ('ஜெரூஸத்தில் உள்ள) ''அல் மஸ்ஜிதுல் அக்ஸா'' என்று பதிலளித்தார்கள். நான் 'அவ்விரண்டுக்கு மிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது'' என்று கேட்டேன். அவர்கள் 'நாற்பதாண்டுகள்'' (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப்பட்டது) பிறகு 'நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே அதைத் தொழுதுவிடு. ஏனெனில் நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில் தான் சிறப்பு உள்ளது'' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர், அபூதர் (ரலி) தமிழ் புகாரி 3366)

இந்நபிமொழியில், பூமியில் முதலாவதாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் மக்காவில் அமைந்த காஃபா என்னும் ஆலயம், பூமியில் இரண்டாவதாக அமைக்கப்பட்டது ஜெருஸத்தில் உள்ள அக்ஸா பள்ளிவாசல், இரண்டுக்கும் உள்ள கால வித்தியாசம் நாற்பது ஆண்டுகள் என்றும் விளக்குகிறது. இதில் முரண்பாடு காண்பவர்கள் கீழ் காணும் கருத்தை வைக்கிறார்கள்.

//**குறிப்பு:
பிரச்னை என்னவென்றால், காபா (அல் மஜிதுல் ஹரம்) கட்டப்பட்டது ஆபிரஹாமால் என்று கூறிக்கொள்கிறார்கள். அவர் இருந்தது 2000 கிமு என்று சுமாராகச் சொல்லலாம். சாலமன் கட்டிய கோவில் கட்டப்பட்ட வருடம் என்று சுமார் 958 கிமு என்று கூறுகிறார்கள். இடையே ஆயிரம் வருடங்கள். முகம்மது கூறுவதோ 40 வருடங்கள்!*//


ஆப்ரஹாம், (நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தான் பூமியில் முதன் முதலாக காஃபா பள்ளிவாசலைக் கட்டினார்கள் என்பது தவறு. காஃபாவை மறு நிர்மாணம் செய்தார்கள் என்பதே சரி.

ஆப்ரஹாம் தமது இரண்டாவது மனைவி ஹாஜர் (அலை) அவர்களையும், தாய்ப்பால் அருந்தும் பருவத்திலிருந்த தமது மகன் இஸ்மவேல் (நபி இஸ்மாயீல் (அலை) அவர்களையும் இறைவனின் கட்டளைப்படி, அன்று யாருமே வசிக்காத - தண்ணீரைக் காண முடியாத, பறிதவிப்பான நிலையில் மக்காவில் குடியமர்த்திவிட்டுச் சென்று விடுகிறார். இந்த வரலாற்று சம்பவத்தில்தான் வானவர் ஜிப்ரீல் மூலம் ஸம் ஸம் நீருற்றை அங்கு இறைவன் ஏற்படுத்துகிறான். ''நீங்கள் (கேட்பாரற்று) வீணாகி விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டாம். இங்கு அல்லாஹ்வின் ஆலயம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சிறுவரும் (இஸ்மவேலும்) அவருடைய தந்தையும் (ஆப்ரஹாமும்) சேர்ந்து கட்டுவார்கள். அவருடைய குடும்பத்தை அல்லாஹ் வீணாக்கி விட மாட்டான்'' என்று ஹாஜர்(அலை) அவர்களிடம் வானவர் ஜிப்ரீல் கூறினார். அப்போது காஃபா ஆலயம், தரையிலிருந்து உயரமாக ஒரு மேட்டைப் போன்று அமைந்திருந்தது. வெள்ளம் வந்து அதன் வலப் பக்கமாகவும் இடப் பக்கமாகவும் (வழிந்து) சென்றுவிடும். (தமிழ் புகாரி 3364, நீண்ட ஹதிஸிலிருந்து)

இந்த செய்திலிருந்து ஏற்கெனவே இருந்த காஃபா ஆலயம் சிதிலமடைந்து விட்டதால் அதே இடத்தில் மீண்டும் இறைத்தூதர் ஆப்ரஹாம் என்ற இப்ராஹீம் (அலை) அவர்களால் காஃபா மறு நிர்மாணமாகக் கட்டப்பட்டது அதுவும் இறைவனின் கட்டளைப்படி.

திருக்குர்ஆன் கூறுவது.
3:96. (இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான். அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.

முதல் மனிதர் படைக்கப்பட்டு அவர் இறைவனை வணங்குவதற்காக எழுப்பிய ஆலயம்தான் காஃபா என்பதை 3:96 வசனத்திலிருந்து விளங்கலாம். மேலும் முதல் மனிதர் ஆதாம் என்ற ஆதம் (அலை) அவர்கள் மக்காவில் தான் இறக்கப்பட்டார்கள் என்பதையும் இவ்வசனம் கூறுகிறது. சுவனத்திலிருந்து கொண்டு வந்த கருப்புக் கல் (ஹஜருல் அஸ்வத்) காஃபாவின் ஒரு மூலையில் பதிக்கப்பட்டிருப்பதும் இதை உறுதி செய்கிறது.

இறைவனை வணங்குவதற்காக முதன் முதலாக ஆலயத்தை எழுப்பிவர் ஆப்ரஹாம் என்பது - ஆப்ரஹாம் காலத்திற்கு முன் பல்லாயிரம் ஆண்டுகளாகவே மனிதயினம் இருந்திருக்கிறது, நபிமார்களும் இருந்திருக்கிறார்கள். இவர்களெல்லாம் இறைவழிபாட்டிற்காக ஆலங்களை ஏற்படுத்திக் கொண்டதில்லை என்ற தவறானக் கருத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே புகாரி 3366 வது ஹதீஸில் சொல்லப்படும் வரலாற்றுக் குறிப்புகளில் முரண்பாடு இல்லை. மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமும், ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவும் முதலில் எழுப்பப்பட்ட ஆலங்களில் மிகப் பழமையான இரு ஆலயங்கள்.

முஹம்மது (ஸல்) அவர்கள் நபி ஆவதற்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பு - அவர்களின் 35வது வயதில், மக்காவாசிகள் காஃபாவை அடிமட்டம் வரை இடித்து விட்டு மீண்டும் கட்டியிருக்கிறார். முஹம்மது (ஸல்) அவர்கள் மறைவுக்குப் பின்னும் மக்காவை ஆட்சி செய்தவர்கள் காஃபாவை இடித்து விட்டு மீண்டும் கட்டியிருக்கிறார்கள் என்பது வரலாறு. அதுபோல் மஸ்ஜிதுல் அக்ஸாவும் நபி சுலைமான் (சாலமன்) அவர்களால் மறு நிர்மாணம் செய்யப்பட்டது என்பதே சரியாகும்.

4 comments:

அபூ முஹை said...

முஹம்மது நபி (ஸல்)அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக!

ஆரோக்கியம் அவர்களின் பதிவின் பின்னூட்டத்தில் எழுதியது..

//*அபு முஹை என்பவரது பதிவை படிக்கவும். முகம்மதை காப்பாற்ற இன்னொரு கற்பனை.
சாலமன் கோவில் கட்டுவதற்கு முன்பே அங்கு ஒரு கோவில் இருந்திருக்கலாம் என்று கற்பனை செய்கிறார்.

அதை விட இன்னொரு நகைச்சுவை. அல்-அக்ஸா என்ற மசூதியைப் பற்றி முகம்மது பேசும்போது அங்கு தரை மட்டமாக்கப்பட்ட யூதக்கோவில்தான் இருந்தது. அதனை அல்-அக்ஸாவாக கட்டியவர் உமர். இந்த ஹதீஸ் கூட பின்னாளில் ஒரு இட்டுக்கட்டப்பட்ட ஹதீசாக இருக்கலாம். ஆனால், முகம்மதை பொய் சொல்லியாவது காப்பாற்றுவது என்று இறங்கியாய் விட்டாயிற்று. ஒரு பொய்யை காப்பாற்ற இன்னொரு பொய்..

**
மற்ற கருத்துகளைப் பாருங்கள் தமிழர்களே. இதுதான் அமைதி மார்க்கத்தின் வழிமுறை.*//

நான் கற்பனை செய்வதாகவும் - முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் காப்பாற்றுவதற்காகப் பொய் மேல் பொய் சொல்வதாகவும் போகிற போக்கில் என்னைக் குற்றப்படுத்தியிருக்கிறார்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன் மஸ்ஜிதுல் அக்ஸா எந்த சமூகத்தினரிடம் இருந்தது - முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த சம காலத்தில் மஸ்ஜிதுல் அக்ஸா யாரிடம் இருந்தது - முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் யாரிடம் இருந்தது - இன்று யாரிடம் இருக்கிறது - எதிர்காலத்தில் யாரிடம் இருக்கும் - அல்லது சிதைக்கப்படும் என்பது பற்றி, விவாதத்துக்குரிய (புகாரி 3366) ஹதீஸில் சொல்லப்படவில்லை. இந்த ஹதீஸையொட்டி அவையெல்லாம் தேவையில்லாத வாதம்.

பூமியில் முதல் ஆலயம் காஃபா, இரண்டாவது ஆலயம் அக்ஸா. இரண்டு ஆலயங்களுக்குமுள்ள கால இடைவெளி நாற்பது ஆண்டுகள் என்று நபிமொழி கூறுகிறது. இதை மறுத்து ஆப்ரஹாம், சாலமன் என்ற இரு தீர்க்கத்தரிசிகளின் முன், பின் கால இடைவெளி வரலாறுகளை முன் வைத்தபோது, மறுத்து நாம் எழுதினோம். அதைக் கற்பனை, பொய் என்று கூறுபவர்கள், அதற்கானத் தக்க ஆவணங்களை முன் வைக்கட்டும்.

பாபு said...

I would like to echo Raaj 's comments on baseless critics.

Naturally there are two type of critics on any issue:

1). The first type is like Br. nandalaalaa and other rational critics who are having views on all sides and it is useful to argue and debate with them. They are more welcomeable as there are good chances of mutual understanding.

2) The other type is full of hatred and baseless arguments like Br.nesakumars and they are pretending with the mask of scholars. Because of their writing skills and styles they are misleading to have misconceptions on Islam.
There arguements are very absurd and a good example is:

To mention the incident of sexual intercourse of the prophet with his wife zainab, they (critics of hate) are purposely dropping-out the word 'wife' in their narrations and using an unwanted word 'pulled her' (which is not in the original text) to mislead the readers to have a wrong conception.

The best reply is to ignore them, but not the spread of their poisonous thoughts.

In such a way, this article is remarkable.

அபூ முஹை said...

சிங்கை, இஸ்மாயில் அவர்களுக்கு! பிறர் கண்ணியமில்லாமல் - தரக்குறைவாக எழுதுவதை நான் பொருட்படுத்துவதில்லை. தமிழ்மணம் வலைப்பதிவில் சமீபமாக, இஸ்லாம் பற்றிய விவாதத்தில் இரு தரப்பினரும் எழுதிவரும் பின்னூட்டங்கள் நாகரீகமாக இல்லை. இதில் எனக்கு உடன்பாடு இல்லை. புனைப் பெயரால் இச்செயலில் ஈடுபட்டிருப்பவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாது, அதனால் இதை எழுதுபவர்கள் யார்? என ஒருவர் மற்றவரின் மேல் போடும் பழியைத் தவிர, குறிப்பிட்டுச் சொல்லும் நம்பகத்தன்மை இதில் இல்லை.

இச்செயலில் முஸ்லிம்கள் ஈடுபட்டிருந்தால் இது போன்ற கண்ணியமில்லலாத செயல்களிலிருந்து அவர்கள் விலகிக்கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

தொழிலின் காரணமாகவே நாம் எழுதுவது சற்றுத் தடைபட்டது. இன்ஷா அல்லாஹ், இனி தொடர்ந்து எழுதுவோம்,

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பனூ முஸ்தலிக் கூட்டத்தினரை அவர்கள் தங்களின் கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டிக் கொண்டிருக்கும்போது அவர்கள் அறியாமலேயே போர் தொடுத்தார்கள். இதற்கான விளக்கம் அடுத்த பதிவில் இடம் பெறும்.

பாபு அவர்கள் எழுதியது மிகச் சரியே!

என்னவென்று தெரியவில்லை, நேற்றிலிருந்து தமிழ் மணம் வலைப்பதிவு திறப்பதில்லை.

பாபு said...

What happened to thamizmanam site?
Anybody here to explain?